தொ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 1
தொக்கென 2
தொகுதி 1
தொகை 2
தொகையொடு 1
தொடக்கு 1
தொடங்கின 1
தொடர் 1
தொடர்-மின் 1
தொடர்ந்த 1
தொடர்ந்தாரோடும் 1
தொடர்ந்து 4
தொடர்வு 3
தொடர்வு_அரியாய் 1
தொடராதே 1
தொடற்கு 1
தொடி 1
தொண்ட 1
தொண்டர் 4
தொண்டர்க்கு 2
தொண்டர்காள் 1
தொண்டரிடை 1
தொண்டரில் 1
தொண்டரை 2
தொண்டரொடும் 1
தொண்டனேற்கு 1
தொண்டனேற்கும் 1
தொண்டு 1
தொண்டை 1
தொல் 5
தொல்லை 1
தொல்லோன் 2
தொலைத்தது-தான் 1
தொலைத்தருளி 1
தொழ 2
தொழில் 1
தொழு-மின் 2
தொழுகுலமே 1
தொழுகையர் 1
தொழுகோம் 1
தொழுத 2
தொழுது 6
தொழுதும் 1
தொழுதே 2
தொழுப்பு 1
தொழும் 4
தொழும்பர் 1
தொழும்பர்க்கு 1
தொழும்பரில் 1
தொழும்பரை 1
தொழும்பரோடு 1
தொழும்பனேன் 1
தொழும்பாய் 1
தொழும்பாளர் 1
தொழும்பில் 2
தொழும்பின் 1
தொழும்பு 2
தொழும்பையும் 1
தொழுவனோ 1
தொழுவார் 2
தொன்மை 3
தொன்மையும் 3

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

தொக்க (1)

சூலமும் தொக்க வளையும் உடை தொன்மை – திருவா:10 18/3
மேல்


தொக்கென (2)

தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ – திருவா:12 5/2
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு – திருவா:12 5/3
மேல்


தொகுதி (1)

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 6/2,3
மேல்


தொகை (2)

விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல் – திருவா:7 18/2
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே – திருவா:44 1/3
மேல்


தொகையொடு (1)

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் – திருவா:3/7
மேல்


தொடக்கு (1)

துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
மேல்


தொடங்கின (1)

வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி – திருவா:4/45,46
மேல்


தொடர் (1)

வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
மேல்


தொடர்-மின் (1)

சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின் – திருவா:3/144
மேல்


தொடர்ந்த (1)

தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற – திருவா:14 10/3
மேல்


தொடர்ந்தாரோடும் (1)

தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே – திருவா:5 88/3
மேல்


தொடர்ந்து (4)

தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே – திருவா:25 4/2
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 9/4
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே – திருவா:44 4/4
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே – திருவா:49 7/2
மேல்


தொடர்வு (3)

தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
சுற்றிய சுற்ற தொடர்வு அறுப்பான் தொல் புகழே – திருவா:8 20/4
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து – திருவா:47 11/2
மேல்


தொடர்வு_அரியாய் (1)

தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
மேல்


தொடராதே (1)

தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே – திருவா:5 88/3,4
மேல்


தொடற்கு (1)

தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/3
மேல்


தொடி (1)

பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள் – திருவா:9 12/3
மேல்


தொண்ட (1)

தொண்ட உழவர் ஆர தந்த – திருவா:3/94
மேல்


தொண்டர் (4)

ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் – திருவா:7 10/5
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
சூடகம் தோள் வளை ஆர்ப்பஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்பஆர்ப்ப – திருவா:9 7/1
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/2
மேல்


தொண்டர்க்கு (2)

விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய் விழு தொண்டர்க்கு அல்லால் – திருவா:6 32/2
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 8/3,4
மேல்


தொண்டர்காள் (1)

தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர் – திருவா:46 2/1
மேல்


தொண்டரிடை (1)

துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து – திருவா:32 8/1
மேல்


தொண்டரில் (1)

கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய் – திருவா:23 8/2
மேல்


தொண்டரை (2)

சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா – திருவா:30 8/3
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் – திருவா:36 3/3
மேல்


தொண்டரொடும் (1)

கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு – திருவா:45 3/3
மேல்


தொண்டனேற்கு (1)

தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் – திருவா:5 42/3
மேல்


தொண்டனேற்கும் (1)

தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல் – திருவா:32 4/3
மேல்


தொண்டு (1)

கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக – திருவா:48 1/2
மேல்


தொண்டை (1)

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை – திருவா:14 15/1
மேல்


தொல் (5)

ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க – திருவா:3/31
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் – திருவா:4/40
சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள் – திருவா:4/48
சுற்றிய சுற்ற தொடர்வு அறுப்பான் தொல் புகழே – திருவா:8 20/4
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி – திருவா:16 6/3
மேல்


தொல்லை (1)

தொல்லை வினை கெட உந்தீ பற – திருவா:14 13/3
மேல்


தொல்லோன் (2)

சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க – திருவா:3/40
சொல்_பதம் கடந்த தொல்லோன்
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் – திருவா:3/111,112
மேல்


தொலைத்தது-தான் (1)

தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ – திருவா:12 5/2
மேல்


தொலைத்தருளி (1)

தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு – திருவா:12 5/3
மேல்


தொழ (2)

தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி – திருவா:5 16/2
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ
பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம் – திருவா:15 7/3,4
மேல்


தொழில் (1)

வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
மேல்


தொழு-மின் (2)

கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன் – திருவா:9 2/3
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
மேல்


தொழுகுலமே (1)

துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே – திருவா:6 28/4
மேல்


தொழுகையர் (1)

துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
மேல்


தொழுகோம் (1)

ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 1/2,3
மேல்


தொழுத (2)

தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – திருவா:4/131
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு – திருவா:42 8/3
மேல்


தொழுது (6)

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ – திருவா:4/1
தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து – திருவா:4/61
தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/3
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு – திருவா:25 8/1
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே – திருவா:31 10/4
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/3
மேல்


தொழுதும் (1)

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி – திருவா:27 8/2
மேல்


தொழுதே (2)

தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே – திருவா:5 88/3
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து – திருவா:47 3/1,2
மேல்


தொழுப்பு (1)

விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள் – திருவா:20 9/1
மேல்


தொழும் (4)

வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் – திருவா:15 8/2
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே – திருவா:31 2/4
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே – திருவா:31 8/4
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 9/2
மேல்


தொழும்பர் (1)

சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே இ முழுதையுமே – திருவா:6 43/3,4
மேல்


தொழும்பர்க்கு (1)

சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே – திருவா:6 38/3
மேல்


தொழும்பரில் (1)

தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் – திருவா:6 44/3
மேல்


தொழும்பரை (1)

ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம் – திருவா:10 7/3
மேல்


தொழும்பரோடு (1)

துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/2
மேல்


தொழும்பனேன் (1)

ஏழை தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம் – திருவா:15 13/1
மேல்


தொழும்பாய் (1)

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம் – திருவா:7 9/6
மேல்


தொழும்பாளர் (1)

துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில் – திருவா:5 98/3
மேல்


தொழும்பில் (2)

போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே – திருவா:1/43,44
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும் – திருவா:8 14/5
மேல்


தொழும்பின் (1)

விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் நின் விழு தொழும்பின்
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 2/2,3
மேல்


தொழும்பு (2)

பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து – திருவா:6 47/1
சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து – திருவா:27 1/1
மேல்


தொழும்பையும் (1)

சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற்கு என்று – திருவா:6 49/1
மேல்


தொழுவனோ (1)

தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய் – திருவா:28 10/3
மேல்


தொழுவார் (2)

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி – திருவா:4/218
புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர் – திருவா:45 10/1
மேல்


தொன்மை (3)

பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே – திருவா:6 22/4
சூலமும் தொக்க வளையும் உடை தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 18/3,4
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/3,4
மேல்


தொன்மையும் (3)

சொக்கது ஆக காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் – திருவா:2/34,35
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி – திருவா:2/41,42
தூ வண மேனி காட்டிய தொன்மையும்
வாதவூரினில் வந்து இனிது அருளி – திருவா:2/51,52

மேல்