ஞா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

ஞாயிறு (2)

எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 19/8
சுந்தரத்து இன்ப குயிலே சூழ் சுடர் ஞாயிறு போல – திருவா:18 5/1
மேல்


ஞாயிறே (1)

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று – திருவா:22 7/1
மேல்


ஞாலத்துள் (1)

நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட – திருவா:45 2/3
மேல்


ஞாலத்துள்ளே (1)

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே – திருவா:5 28/2
மேல்


ஞாலம் (6)

ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே – திருவா:13 11/3
ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான் – திருவா:16 8/3
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய் – திருவா:18 3/4
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய் – திருவா:23 9/1
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய – திருவா:36 5/2
நரியை குதிரை பரி ஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து – திருவா:50 7/1
மேல்


ஞாலம்-அதனிடை (1)

ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் – திருவா:43 2/2
மேல்


ஞாலமே (3)

ஞாலமே விசும்பே இவை வந்து போம் – திருவா:5 43/3
ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 5/4
ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும் – திருவா:30 5/3
மேல்


ஞான (4)

ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே – திருவா:5 95/4
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா – திருவா:9 15/1
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/2
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின் – திருவா:46 1/1
மேல்


ஞானங்கள் (1)

நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் – திருவா:10 2/1
மேல்


ஞானம் (2)

புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா – திருவா:24 1/3
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் – திருவா:38 5/1
மேல்


ஞானம்-தன்னை (1)

ஞானம்-தன்னை நல்கிய நன்மையும் – திருவா:2/74
மேல்


ஞானிகள்-தம்மொடு (1)

நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே – திருவா:26 6/2

மேல்