ச – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கர 1
சக்திகள் 1
சகம் 2
சகம்-தான் 1
சங்கம் 4
சங்கமத்துள் 1
சங்கரன் 1
சங்கரனை 1
சங்கரா 6
சங்கு 2
சச்சையனே 2
சட்ட 1
சட்டோ 1
சடை 16
சடைக்கு 1
சடைமுடியான் 1
சடையவனே 1
சடையற்கே 1
சடையன் 1
சடையனே 1
சடையாய் 4
சடையான் 2
சடையானே 1
சடையிடை 1
சடையில் 2
சடையுளே 1
சடையோன் 2
சண்டமாருதம் 1
சத்தியும் 1
சதிர் 2
சதிர்-தான் 1
சதிர்பட 1
சதிராலே 1
சதிரை 1
சதுர்முகன் 1
சதுர 1
சதுரர் 1
சதுரன் 1
சந்தன 2
சந்திரதீபத்து 1
சந்திரனும் 1
சந்திரனை 2
சந்தின் 1
சமயங்கள் 1
சமயத்து 2
சமயம் 2
சமயவாதிகள் 1
சயசய 4
சயம் 2
சரடா 1
சரண் 3
சரண 1
சரணங்களே 1
சரதம் 1
சரிந்திட 1
சலந்தரன்-தன் 1
சலம் 1
சலமுகத்தால் 3
சலித்திடும் 1
சலிப்பு 2
சலியா 1
சவலை 1
சவலையாய் 1
சழக்கனேன் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

சக்கர (1)

சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு – திருவா:15 10/3
மேல்


சக்திகள் (1)

ஆறு கோடி மாயா_சக்திகள் – திருவா:4/44
மேல்


சகம் (2)

சகம் பேய் என்று தம்மை சிரிப்ப – திருவா:4/68
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/3
மேல்


சகம்-தான் (1)

சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:21 3/2
மேல்


சங்கம் (4)

சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்ப – திருவா:7 13/6
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட – திருவா:9 14/1
கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு – திருவா:20 3/1,2
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 10/3
மேல்


சங்கமத்துள் (1)

செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள் – திருவா:1/30
மேல்


சங்கரன் (1)

சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு – திருவா:15 10/3
மேல்


சங்கரனை (1)

சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை
கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை – திருவா:10 7/1,2
மேல்


சங்கரா (6)

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான – திருவா:5 61/1
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/4
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம் – திருவா:23 3/2
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் – திருவா:44 2/2
மேல்


சங்கு (2)

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும் – திருவா:7 8/2
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே – திருவா:49 8/1
மேல்


சச்சையனே (2)

தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம் – திருவா:6 31/1
மேல்


சட்ட (1)

சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன் – திருவா:30 2/2
மேல்


சட்டோ (1)

சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை – திருவா:10 7/1
மேல்


சடை (16)

நதி சேர் செம் சடை நம்பா போற்றி – திருவா:4/109
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/4
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே – திருவா:8 11/4
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும் – திருவா:9 2/1
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே – திருவா:9 14/3
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேரறுப்பவனே – திருவா:24 2/2,3
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற – திருவா:26 5/3
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 2/3
படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே – திருவா:34 6/4
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி – திருவா:35 1/2
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம் – திருவா:38 1/3
மேல்


சடைக்கு (1)

தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் – திருவா:13 5/1
மேல்


சடைமுடியான் (1)

தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர் – திருவா:34 5/3
மேல்


சடையவனே (1)

சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே – திருவா:6 1/4
மேல்


சடையற்கே (1)

கோல சடையற்கே உந்தீ பற – திருவா:14 17/2
மேல்


சடையன் (1)

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா – திருவா:35 8/2
மேல்


சடையனே (1)

சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா – திருவா:30 8/3
மேல்


சடையாய் (4)

வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய் – திருவா:5 21/1
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய்
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 9/2,3
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று – திருவா:33 1/3
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர் – திருவா:38 4/1
மேல்


சடையான் (2)

தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள் – திருவா:16 6/2
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி – திருவா:16 9/5
மேல்


சடையானே (1)

சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல – திருவா:39 2/1
மேல்


சடையிடை (1)

சடையிடை கங்கை தரித்தாய் போற்றி – திருவா:4/146
மேல்


சடையில் (2)

சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ – திருவா:12 7/2
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் – திருவா:12 7/3
மேல்


சடையுளே (1)

சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி – திருவா:5 64/4
மேல்


சடையோன் (2)

தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் – திருவா:10 15/2
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய் – திருவா:18 8/4
மேல்


சண்டமாருதம் (1)

சண்டமாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து – திருவா:4/55
மேல்


சத்தியும் (1)

சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின் – திருவா:9 1/2
மேல்


சதிர் (2)

சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும் – திருவா:4/71
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ – திருவா:12 19/2
மேல்


சதிர்-தான் (1)

ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ – திருவா:12 8/2
மேல்


சதிர்பட (1)

சதிர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும் – திருவா:2/28
மேல்


சதிராலே (1)

சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே – திருவா:5 14/4
மேல்


சதிரை (1)

சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
மேல்


சதுர்முகன் (1)

சதுர்முகன் தாதை என்று உந்தீ பற – திருவா:14 6/3
மேல்


சதுர (1)

தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே – திருவா:24 3/2
மேல்


சதுரர் (1)

தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/1,2
மேல்


சதுரன் (1)

சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 10/3
மேல்


சந்தன (2)

சந்தன சாந்தின் சுந்தர போற்றி – திருவா:4/203
தாளி அறுகினர் சந்தன சாந்தினர் – திருவா:17 8/1
மேல்


சந்திரதீபத்து (1)

சந்திரதீபத்து சாத்திரன் ஆகி – திருவா:2/97
மேல்


சந்திரனும் (1)

செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும்
பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய – திருவா:13 15/2,3
மேல்


சந்திரனை (2)

சந்திரனை தேய்த்தருளி தக்கன்-தன் வேள்வியினில் – திருவா:8 15/1
அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை
வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ – திருவா:12 4/1,2
மேல்


சந்தின் (1)

சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ் – திருவா:3/89
மேல்


சமயங்கள் (1)

உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் – திருவா:11 17/1
மேல்


சமயத்து (2)

அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும் – திருவா:3/17
இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை – திருவா:3/79
மேல்


சமயம் (2)

புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம்
தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க – திருவா:15 6/1,2
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம்
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த – திருவா:43 3/1,2
மேல்


சமயவாதிகள் (1)

சமயவாதிகள் தம்தம் மதங்களே – திருவா:4/52
மேல்


சயசய (4)

ஊழி முதல்வ சயசய என்று – திருவா:4/8
போற்றி போற்றி சயசய போற்றி – திருவா:4/225
பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும் – திருவா:5 1/3
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி – திருவா:5 62/4
மேல்


சயம் (2)

தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து – திருவா:2/58
சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ – திருவா:12 4/4
மேல்


சரடா (1)

மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா
தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ – திருவா:12 2/3,4
மேல்


சரண் (3)

சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல – திருவா:5 65/1
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
மேல்


சரண (1)

விரை சேர் சரண விகிர்தா போற்றி – திருவா:4/105
மேல்


சரணங்களே (1)

சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு – திருவா:10 9/2
மேல்


சரதம் (1)

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் – திருவா:4/51
மேல்


சரிந்திட (1)

சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள் – திருவா:14 5/1
மேல்


சலந்தரன்-தன் (1)

சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி – திருவா:12 18/1
மேல்


சலம் (1)

சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி – திருவா:12 18/1
மேல்


சலமுகத்தால் (3)

சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ – திருவா:12 6/4
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ – திருவா:12 7/2
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் – திருவா:12 7/3
மேல்


சலித்திடும் (1)

சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே – திருவா:49 8/2
மேல்


சலிப்பு (2)

இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் – திருவா:2/139
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு – திருவா:11 18/2
மேல்


சலியா (1)

தப்பாமே தாம் பிடித்தது சலியா
தழல்-அது கண்ட மெழுகு-அது போல – திருவா:4/59,60
மேல்


சவலை (1)

சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும் – திருவா:11 17/2
மேல்


சவலையாய் (1)

தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே – திருவா:50 5/1,2
மேல்


சழக்கனேன் (1)

சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன் – திருவா:30 2/2

மேல்