சீ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

சீ (2)

சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் – திருவா:10 12/3
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய – திருவா:25 3/1
மேல்


சீசீ (1)

சீசீ இவையும் சிலவோ விளையாடி – திருவா:7 2/4
மேல்


சீத (2)

சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி – திருவா:7 14/3
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 8/4
மேல்


சீதம் (1)

சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து – திருவா:20 5/3
மேல்


சீர் (52)

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – திருவா:1/15
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் – திருவா:1/24,25
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து – திருவா:2/79
சீர் ஆர் திருவையாறா போற்றி – திருவா:4/148
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என் – திருவா:5 11/3
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட – திருவா:5 53/3
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால் – திருவா:5 79/1
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
சீர் அடியார் அடியான் என்று நின்னை சிரிப்பிப்பனே – திருவா:6 48/4
உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம் – திருவா:7 9/3
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர – திருவா:7 15/2
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான் – திருவா:8 3/4
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில் – திருவா:8 18/3
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/4
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 1/4
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான் – திருவா:13 7/2
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே – திருவா:13 8/1
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான் – திருவா:13 10/2
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/4
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே – திருவா:13 18/1
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி – திருவா:15 2/3
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம் – திருவா:15 3/2
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக – திருவா:16 1/1
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் – திருவா:17 6/1
தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய் – திருவா:18 7/4
சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன் – திருவா:18 9/2
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன் – திருவா:19 1/2
ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும் – திருவா:19 6/2
தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே – திருவா:22 2/4
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 8/3
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 1/3,4
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 2/3,4
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 3/3,4
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 4/3,4
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 5/3,4
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 6/3,4
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 7/3,4
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 8/3,4
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே – திருவா:29 9/3,4
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றுஎன்று – திருவா:29 10/1,2
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா – திருவா:32 9/3
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ – திருவா:33 4/1
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர்
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே – திருவா:34 5/3,4
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும் – திருவா:36 7/3
செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே – திருவா:37 1/3
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல் – திருவா:44 1/2
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம் – திருவா:45 6/3
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் – திருவா:47 7/2
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான் – திருவா:47 8/1
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே – திருவா:47 11/3
சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே – திருவா:49 8/6
மேல்


சீர்கள் (1)

பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே – திருவா:5 99/4
மேல்


சீரான் (1)

உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய் – திருவா:7 7/2,3
மேல்


சீரிய (1)

சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/4
மேல்


சீரொடு (1)

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:28 1/2
மேல்


சீரோன் (1)

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – திருவா:1/10
மேல்


சீலம் (5)

சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை – திருவா:16 8/4
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை – திருவா:18 3/3
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி – திருவா:30 5/2
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 2/4
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி – திருவா:50 3/1
மேல்


சீலமும் (1)

சீலமும் பாடி சிவனே சிவனே என்று – திருவா:7 5/6
மேல்


சீற்றம் (1)

கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் – திருவா:35 10/1
மேல்


சீறும் (1)

சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற்கு என்று – திருவா:6 49/1

மேல்