சா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாகரம் 1
சாடிய 1
சாத்தலுமே 1
சாத்தாய் 1
சாத்திரம் 2
சாத்திரன் 1
சாத்தினன் 1
சாத்தினோடும் 1
சாத்தோடு 1
சாதல் 1
சாதல்சாதல் 1
சாதலை 1
சாதி 3
சாதியும் 1
சாந்தம் 1
சாந்தம்புத்தூர் 1
சாந்தின் 1
சாந்தினர் 1
சாந்து 1
சாந்தும் 1
சாம் 1
சாய்ந்து 1
சாயல் 1
சாயா 1
சார்கிலா 1
சார்தலினால் 1
சார்தலுமே 1
சார்ந்தவர் 1
சார்ந்திலேன் 1
சார்ந்து 1
சார்வானே 1
சார 2
சாரா 1
சாராமே 1
சாரும் 2
சால 4
சாலவும் 1
சாவ 1
சாவதுவே 1
சாவாது 2
சாவார் 1
சாவேன் 1
சாவேனே 1
சாழலோ 20
சாற்றி 1
சாற்றிய 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

சாகரம் (1)

துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும் – திருவா:4/25
மேல்


சாடிய (1)

சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள் – திருவா:14 5/1
மேல்


சாத்தலுமே (1)

தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே
சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு – திருவா:15 10/2,3
மேல்


சாத்தாய் (1)

சதிர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும் – திருவா:2/28
மேல்


சாத்திரம் (2)

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் – திருவா:4/51
உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் – திருவா:11 17/1
மேல்


சாத்திரன் (1)

சந்திரதீபத்து சாத்திரன் ஆகி – திருவா:2/97
மேல்


சாத்தினன் (1)

தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ – திருவா:12 2/4
மேல்


சாத்தினோடும் (1)

சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று – திருவா:43 10/3
மேல்


சாத்தோடு (1)

உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின் – திருவா:45 5/2
மேல்


சாதல் (1)

சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறி – திருவா:51 8/1
மேல்


சாதல்சாதல் (1)

சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என – திருவா:30 6/3
மேல்


சாதலை (1)

தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் – திருவா:35 7/1
மேல்


சாதி (3)

சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும் – திருவா:31 5/1
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே – திருவா:49 8/2
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/3
மேல்


சாதியும் (1)

சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும் – திருவா:15 7/2
மேல்


சாந்தம் (1)

சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி – திருவா:41 2/2
மேல்


சாந்தம்புத்தூர் (1)

தர்ப்பணம்-அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும் – திருவா:2/31,32
மேல்


சாந்தின் (1)

சந்தன சாந்தின் சுந்தர போற்றி – திருவா:4/203
மேல்


சாந்தினர் (1)

தாளி அறுகினர் சந்தன சாந்தினர்
ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும் – திருவா:17 8/1,2
மேல்


சாந்து (1)

தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே – திருவா:6 30/4
மேல்


சாந்தும் (1)

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/2
மேல்


சாம் (1)

சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே – திருவா:5 14/4
மேல்


சாய்ந்து (1)

முழுவதும் கண்டவனை படைத்தான் முடி சாய்ந்து முன் நாள் – திருவா:5 7/1
மேல்


சாயல் (1)

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து – திருவா:4/31
மேல்


சாயா (1)

சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர் – திருவா:4/86
மேல்


சார்கிலா (1)

சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா
கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 8/3,4
மேல்


சார்தலினால் (1)

தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த – திருவா:7 13/3,4
மேல்


சார்தலுமே (1)

சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு – திருவா:10 9/2
மேல்


சார்ந்தவர் (1)

சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
மேல்


சார்ந்திலேன் (1)

சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம் – திருவா:30 2/2,3
மேல்


சார்ந்து (1)

மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே – திருவா:21 7/4
மேல்


சார்வானே (1)

சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே – திருவா:5 14/4
மேல்


சார (2)

தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே – திருவா:45 2/4
மேல்


சாரா (1)

ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட – திருவா:11 13/2
மேல்


சாராமே (1)

மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே
கள்ள புல குரம்பை கட்டழிக்க வல்லானே – திருவா:1/87,88
மேல்


சாரும் (2)

சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரம_அதிசயம் ஆக – திருவா:4/71,72
சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா – திருவா:30 8/3
மேல்


சால (4)

சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து – திருவா:16 8/2
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 6/4
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே – திருவா:33 9/4
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய – திருவா:37 9/1
மேல்


சாலவும் (1)

கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும் – திருவா:19 10/2,3
மேல்


சாவ (1)

சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி – திருவா:5 4/1
மேல்


சாவதுவே (1)

தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே – திருவா:5 3/4
மேல்


சாவாது (2)

சாவாது இருந்தான் என்று உந்தீ பற – திருவா:14 6/2
செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும் – திருவா:51 10/1
மேல்


சாவார் (1)

சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ – திருவா:50 6/3
மேல்


சாவேன் (1)

தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
மேல்


சாவேனே (1)

தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே – திருவா:5 18/4
மேல்


சாழலோ (20)

ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ – திருவா:12 1/4
தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ – திருவா:12 2/4
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ – திருவா:12 3/4
சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ – திருவா:12 4/4
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ – திருவா:12 5/4
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ – திருவா:12 6/4
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ – திருவா:12 8/4
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ – திருவா:12 9/4
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ – திருவா:12 10/4
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ – திருவா:12 11/4
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ – திருவா:12 12/4
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ – திருவா:12 13/4
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ – திருவா:12 14/4
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ – திருவா:12 15/4
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/4
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ – திருவா:12 17/4
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ – திருவா:12 18/4
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ – திருவா:12 19/4
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ – திருவா:12 20/4
மேல்


சாற்றி (1)

சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
மேல்


சாற்றிய (1)

பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை – திருவா:14 8/1

மேல்