கொ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 2
கொக்கு_இறகும் 1
கொங்கு 2
கொங்கை 8
கொங்கைகள் 2
கொங்கையர் 1
கொட்க 1
கொட்டாமோ 20
கொடி 8
கொடியான் 2
கொடியேற்கு 1
கொடியேன் 3
கொடியோன் 1
கொடிறும் 1
கொடு 4
கொடுத்த 1
கொடுத்தி 1
கொடுத்து 2
கொடுத்தும் 1
கொடும் 1
கொடுமை 1
கொடை 1
கொடையே 1
கொண்ட 11
கொண்டது 2
கொண்டருள் 1
கொண்டருளி 1
கொண்டருளும் 4
கொண்டலே 1
கொண்டவன் 1
கொண்டன்றே 10
கொண்டாடும் 1
கொண்டாய் 2
கொண்டார் 1
கொண்டால் 1
கொண்டான் 2
கொண்டிருந்த 1
கொண்டிலையோ 1
கொண்டீர் 1
கொண்டு 35
கொண்டோ 1
கொண்டோர் 1
கொத்து 1
கொந்து 2
கொம்பர் 2
கொம்பில் 1
கொம்பின் 1
கொம்பினையே 1
கொம்பு 1
கொம்மை 1
கொய்து 2
கொய்யாமோ 20
கொல் 1
கொலார் 1
கொவ்வை 1
கொழித்து 2
கொழு 2
கொழுந்து 2
கொழுநற்கு 1
கொழும் 2
கொள் 10
கொள்-மின் 1
கொள்கின்ற 1
கொள்கை 1
கொள்கையும் 5
கொள்கையே 1
கொள்வர் 1
கொள்வாய் 1
கொள்வோம் 1
கொள்ள 1
கொள்ளவும் 1
கொள்ளாய் 1
கொள்ளியின் 1
கொள்ளும் 2
கொள்ளும்-கில் 1
கொள்ளும்-அது 1
கொள்ளேன் 1
கொள்ளையில் 1
கொள 2
கொளப்பட்ட 1
கொளினும் 1
கொளும் 1
கொளுவும் 1
கொற்ற 3
கொன்ற 1
கொன்றான் 1
கொன்று 1
கொன்றை 15
கொன்றையான் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

கொக்கு (2)

குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள் – திருவா:11 20/1
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
மேல்


கொக்கு_இறகும் (1)

குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள் – திருவா:11 20/1
மேல்


கொங்கு (2)

கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி – திருவா:7 17/3
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி – திருவா:16 9/5
மேல்


கொங்கை (8)

விராவு கொங்கை நல்_தடம் படிந்தும் – திருவா:2/16
இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே – திருவா:5 75/4
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி – திருவா:6 27/1
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் – திருவா:6 46/1
எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க – திருவா:7 19/4
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க – திருவா:9 8/1
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 14/4
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற – திருவா:14 11/3
மேல்


கொங்கைகள் (2)

கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க – திருவா:7 13/7
முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட – திருவா:9 10/1
மேல்


கொங்கையர் (1)

கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
மேல்


கொட்க (1)

கொட்க பெயர்க்கும் குழகன் முழுவதும் – திருவா:3/12
மேல்


கொட்டாமோ (20)

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 1/4
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 2/4
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 3/4
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 4/4
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 5/4
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 6/4
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 7/4
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 8/4
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 9/4
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 10/4
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 11/4
தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 12/4
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 13/4
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 14/4
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 15/4
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 16/4
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 17/4
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 18/4
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 19/4
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 20/4
மேல்


கொடி (8)

சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி – திருவா:4/95
கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே – திருவா:6 20/1
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின் – திருவா:9 3/2
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள் உறை கோயில் – திருவா:18 3/2
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் – திருவா:19 10/2
கோது_இலா ஏறு ஆம் கொடி – திருவா:19 10/4
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 1/4
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி – திருவா:33 2/2
மேல்


கொடியான் (2)

ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே – திருவா:5 53/4
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/3
மேல்


கொடியேற்கு (1)

கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே – திருவா:32 10/4
மேல்


கொடியேன் (3)

தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை – திருவா:3/171
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே – திருவா:50 3/4
கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே – திருவா:50 6/1
மேல்


கொடியோன் (1)

கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும் – திருவா:25 1/1
மேல்


கொடிறும் (1)

கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும் – திருவா:4/63
மேல்


கொடு (4)

குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன் – திருவா:33 1/1
குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன் – திருவா:33 1/1
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:50 4/3
பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி – திருவா:51 7/2
மேல்


கொடுத்த (1)

கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 6/4
மேல்


கொடுத்தி (1)

அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால் – திருவா:5 89/2
மேல்


கொடுத்து (2)

கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால் – திருவா:21 5/3
பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும் – திருவா:29 8/2
மேல்


கொடுத்தும் (1)

கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று-அதனில் வழுக்காது இருந்தும் – திருவா:2/88,89
மேல்


கொடும் (1)

கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே – திருவா:6 19/4
மேல்


கொடுமை (1)

கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக – திருவா:5 85/3
மேல்


கொடை (1)

சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே – திருவா:36 7/4
மேல்


கொடையே (1)

முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே – திருவா:36 8/4
மேல்


கொண்ட (11)

குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும் – திருவா:2/8
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் – திருவா:2/72
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ – திருவா:3/125
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய் – திருவா:8 3/3
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான் – திருவா:8 9/2
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை – திருவா:9 8/3
கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் – திருவா:13 11/2
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை – திருவா:33 3/1
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே – திருவா:38 9/4
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/3
மேல்


கொண்டது (2)

கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும் – திருவா:4/63
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர் – திருவா:22 10/1
மேல்


கொண்டருள் (1)

குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி – திருவா:4/220
மேல்


கொண்டருளி (1)

உருவந்து பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளி
கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த – திருவா:11 5/2,3
மேல்


கொண்டருளும் (4)

கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/5,6
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 12/3,4
கோ ஆகி வந்து எம்மை குற்றேவல் கொண்டருளும்
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/3,4
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே – திருவா:48 1/3
மேல்


கொண்டலே (1)

கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறை கொண்டலே
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி – திருவா:30 5/1,2
மேல்


கொண்டவன் (1)

நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் – திருவா:42 3/1,2
மேல்


கொண்டன்றே (10)

ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 1/4
அடியேன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 2/4
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 3/4
அறியும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 4/4
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 5/4
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 6/4
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 7/4
அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 8/4
ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 9/4
அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 10/4
மேல்


கொண்டாடும் (1)

பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர் – திருவா:19 3/3,4
மேல்


கொண்டாய் (2)

இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே – திருவா:22 5/4
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே – திருவா:22 10/4
மேல்


கொண்டார் (1)

ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/3,4
மேல்


கொண்டால் (1)

குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால்
என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 3/3,4
மேல்


கொண்டான் (2)

செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது – திருவா:35 9/3
ஊர் ஆக கொண்டான் உவந்து – திருவா:47 11/4
மேல்


கொண்டிருந்த (1)

இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான் – திருவா:13 14/2
மேல்


கொண்டிலையோ (1)

குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே – திருவா:33 7/2,3
மேல்


கொண்டீர் (1)

நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/1,2
மேல்


கொண்டு (35)

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில் – திருவா:1/75
குதிரையை கொண்டு குடநாடு-அதன் மிசை – திருவா:2/27
வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும் – திருவா:2/64,65
மெய்க்காட்டிட்டு வேண்டு உரு கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் – திருவா:2/66,67
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு
இந்திரஞாலம் போல வந்தருளி – திருவா:2/93,94
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து – திருவா:3/128
கோல்_தேன் கொண்டு செய்தனன் – திருவா:3/157
குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய – திருவா:3/173
சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும் – திருவா:4/71
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் – திருவா:5 7/2
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல் கொண்டு உழிதருமே – திருவா:5 7/4
அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 54/4
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே – திருவா:5 84/4
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே – திருவா:5 88/4
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் – திருவா:5 94/2
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும் – திருவா:5 94/3
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ – திருவா:6 12/1,2
பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின் – திருவா:6 23/1
கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே – திருவா:6 33/4
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 6/6
மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு – திருவா:8 8/5
குற்றங்கள் நீக்கி குணம் கொண்டு கோதாட்டி – திருவா:8 20/3
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி – திருவா:9 18/1
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை – திருவா:12 1/3
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய் – திருவா:13 19/2
உய்ய வல்லார் ஒரு மூவரை காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற – திருவா:14 4/1,2
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று – திருவா:14 6/1
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் – திருவா:20 1/1,2
பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய் – திருவா:24 4/1,2
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் – திருவா:36 3/3
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி – திருவா:37 6/1
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 3/3
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான் – திருவா:42 3/3
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 3/4
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம் – திருவா:50 1/2
மேல்


கொண்டோ (1)

அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும் – திருவா:5 50/2
மேல்


கொண்டோர் (1)

உள்ளம் கொண்டோர் உரு செய்து ஆங்கு எனக்கு – திருவா:3/176
மேல்


கொத்து (1)

கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி – திருவா:6 30/3
மேல்


கொந்து (2)

கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ – திருவா:18 10/1
கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் விழுவேனை – திருவா:51 6/2
மேல்


கொம்பர் (2)

கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/2
கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே – திருவா:6 20/1
மேல்


கொம்பில் (1)

கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி – திருவா:40 6/1
மேல்


கொம்பின் (1)

கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி_நாதனை கூவாய் – திருவா:18 6/4
மேல்


கொம்பினையே (1)

கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே – திருவா:6 19/4
மேல்


கொம்பு (1)

கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு – திருவா:40 10/1
மேல்


கொம்மை (1)

கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு – திருவா:40 10/1
மேல்


கொய்து (2)

இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும் – திருவா:42 6/2
மேல்


கொய்யாமோ (20)

புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 1/4
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 2/4
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 3/4
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 4/4
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ – திருவா:13 5/4
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 6/4
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 7/4
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 8/4
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 9/4
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/4
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 11/4
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 12/4
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/4
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 14/4
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/4
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/4
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/4
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 18/4
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 19/4
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/4
மேல்


கொல் (1)

கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை – திருவா:12 3/1
மேல்


கொலார் (1)

நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
மேல்


கொவ்வை (1)

கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
மேல்


கொழித்து (2)

பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து
சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து – திருவா:3/84,85
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை – திருவா:6 47/3
மேல்


கொழு (2)

குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/4
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி – திருவா:6 27/1
மேல்


கொழுந்து (2)

குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து போற்றி – திருவா:5 68/2
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/2
மேல்


கொழுநற்கு (1)

எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 3/4
மேல்


கொழும் (2)

அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே – திருவா:6 36/4
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே – திருவா:22 5/1
மேல்


கொள் (10)

மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து – திருவா:20 5/3
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/3
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/3
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே – திருவா:31 1/4
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய – திருவா:42 5/3
மேல்


கொள்-மின் (1)

சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின்
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 1/3,4
மேல்


கொள்கின்ற (1)

சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் – திருவா:20 10/2
மேல்


கொள்கை (1)

கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே – திருவா:5 45/4
மேல்


கொள்கையும் (5)

குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும் – திருவா:2/8
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தர்ப்பணம்-அதனில் சாந்தம்புத்தூர் – திருவா:2/30,31
குதிரை சேவகன் ஆகிய கொள்கையும்
ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக – திருவா:2/45,46
குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும்
பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு – திருவா:2/61,62
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலை திருவாரூரில் – திருவா:2/72,73
மேல்


கொள்கையே (1)

கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே – திருவா:5 45/4
மேல்


கொள்வர் (1)

சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
மேல்


கொள்வாய் (1)

எம்-தமை உய்ய கொள்வாய் போற்றி – திருவா:4/206
மேல்


கொள்வோம் (1)

வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
மேல்


கொள்ள (1)

எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள
செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற – திருவா:3/76,77
மேல்


கொள்ளவும் (1)

உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் – திருவா:3/112
மேல்


கொள்ளாய் (1)

தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே – திருவா:24 10/3,4
மேல்


கொள்ளியின் (1)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த – திருவா:6 9/1
மேல்


கொள்ளும் (2)

உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம் – திருவா:11 3/3
மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன் – திருவா:47 5/2
மேல்


கொள்ளும்-கில் (1)

கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி – திருவா:5 46/1
மேல்


கொள்ளும்-அது (1)

துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ – திருவா:12 2/2
மேல்


கொள்ளேன் (1)

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும் – திருவா:5 2/1
மேல்


கொள்ளையில் (1)

கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் – திருவா:4/35
மேல்


கொள (2)

களம் கொள கருத அருளாய் போற்றி – திருவா:4/171
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/2
மேல்


கொளப்பட்ட (1)

புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார் – திருவா:36 9/3
மேல்


கொளினும் (1)

வெருவரேன் வேட்கை வந்தால் வினை கடல் கொளினும் அஞ்சேன் – திருவா:35 2/1
மேல்


கொளும் (1)

எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 7/4
மேல்


கொளுவும் (1)

மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும்
விடங்க என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேரொடும் – திருவா:6 19/1,2
மேல்


கொற்ற (3)

குலம் களைந்தாய் களைந்தாய் என்னை குற்றம் கொற்ற சிலை ஆம் – திருவா:6 29/1
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார் – திருவா:8 20/2
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 16/3,4
மேல்


கொன்ற (1)

பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


கொன்றான் (1)

கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ – திருவா:12 16/4
மேல்


கொன்று (1)

கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி – திருவா:9 18/2
மேல்


கொன்றை (15)

தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம் – திருவா:5 12/3
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/2,3
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி – திருவா:7 14/5
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள் – திருவா:8 17/1
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் – திருவா:13 5/1
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/3,4
தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள் – திருவா:16 6/2
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி – திருவா:16 9/5
கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும் – திருவா:17 10/1
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் – திருவா:34 10/3
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி – திருவா:35 7/3
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


கொன்றையான் (1)

கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான்
நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும் – திருவா:5 46/2,3

மேல்