ஒ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 1
ஒக்கும் 1
ஒட்டா 1
ஒட்டாத 1
ஒட்டு 1
ஒட்டேனே 1
ஒட்டோம் 1
ஒடுக்கினன் 1
ஒடுங்க 2
ஒண் 1
ஒண்கிலை 1
ஒண்ணா 3
ஒண்ணான் 1
ஒண்மையனே 2
ஒணா 3
ஒணாத 4
ஒணாதது 2
ஒத்த 5
ஒத்தன 2
ஒத்தால் 1
ஒத்திருந்து 1
ஒத்திருந்தேன் 1
ஒத்து 5
ஒப்ப 1
ஒப்பது 2
ஒப்பனே 2
ஒப்பாம் 1
ஒப்பாய் 6
ஒப்பாரை 1
ஒப்பு 9
ஒப்பு_இல் 3
ஒப்பு_இலா 1
ஒப்பு_இலாதவனே 1
ஒப்பு_இலாதன 1
ஒப்புவித்த 1
ஒர் 16
ஒரு 22
ஒரு-பால் 1
ஒருங்கிய 1
ஒருங்கு 3
ஒருத்தரும் 1
ஒருத்தன் 2
ஒருத்தனே 2
ஒருத்தி 2
ஒருப்படு-மின் 3
ஒருப்படுகின்றது 1
ஒருப்படுகின்றேனை 2
ஒருபால் 5
ஒருமையில் 1
ஒருவ 3
ஒருவர் 3
ஒருவரை 2
ஒருவன் 9
ஒருவனுமே 2
ஒருவனே 5
ஒருவனை 1
ஒருவா 1
ஒல்கா 1
ஒல்லகில்லேன் 1
ஒல்லை 5
ஒலி 4
ஒலிக்கே 1
ஒலிதரு 1
ஒலிப்ப 2
ஒவ்வாத 1
ஒழிக்கும் 1
ஒழித்தருளி 1
ஒழித்திடு 1
ஒழித்து 1
ஒழிந்த 2
ஒழிந்த-கால் 1
ஒழிந்தனனேல் 1
ஒழிந்தார் 1
ஒழிந்தால் 2
ஒழிந்தான் 1
ஒழிந்து 2
ஒழிந்தே 1
ஒழிந்தேன் 5
ஒழிந்தோம் 1
ஒழிய 2
ஒழியவும் 1
ஒழியாய் 1
ஒழியாவண்ணம் 2
ஒழியான் 1
ஒழிவதே 1
ஒழிவித்திடும் 1
ஒழிவு 3
ஒழிவு_அற 3
ஒழுகிய 1
ஒள் 11
ஒள்ளிய 1
ஒளி 30
ஒளிக்கும் 3
ஒளித்தாய்க்கு 1
ஒளித்து 1
ஒளித்தும் 9
ஒளியாய் 2
ஒளியானே 1
ஒளியே 3
ஒளியை 2
ஒளிர்கின்ற 2
ஒளிவந்த 1
ஒற்றி 2
ஒற்றுமை 1
ஒற்றை 2
ஒறுத்தால் 1
ஒறுத்து 2
ஒன்பதில் 1
ஒன்பது 1
ஒன்ற 2
ஒன்றனுக்கு 1
ஒன்றாய் 1
ஒன்றி 2
ஒன்றினொடு 1
ஒன்று 26
ஒன்றும் 18
ஒன்றும்வண்ணம் 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

ஒக்க (1)

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் – திருவா:5 71/1
மேல்


ஒக்கும் (1)

வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது – திருவா:23 4/3
மேல்


ஒட்டா (1)

பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே – திருவா:6 24/3,4
மேல்


ஒட்டாத (1)

ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம் – திருவா:10 7/3
மேல்


ஒட்டு (1)

ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஒட்டு உகந்து – திருவா:8 14/3
மேல்


ஒட்டேனே (1)

பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/4
மேல்


ஒட்டோம் (1)

நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி – திருவா:9 5/2,3
மேல்


ஒடுக்கினன் (1)

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்
தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் – திருவா:3/161,162
மேல்


ஒடுங்க (2)

வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடி போது-அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர் – திருவா:6 25/2,3
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து – திருவா:15 12/2,3
மேல்


ஒண் (1)

ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் – திருவா:46 2/2
மேல்


ஒண்கிலை (1)

பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் – திருவா:5 42/2,3
மேல்


ஒண்ணா (3)

ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 1/3,4
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா – திருவா:51 11/3
மேல்


ஒண்ணான் (1)

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
நரியை குதிரை ஆக்கிய நன்மையும் – திருவா:2/35,36
மேல்


ஒண்மையனே (2)

ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே – திருவா:6 21/4
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் – திருவா:6 22/1
மேல்


ஒணா (3)

காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 4/4
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான் – திருவா:42 1/2
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான் – திருவா:42 1/3
மேல்


ஒணாத (4)

வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ – திருவா:5 95/1
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா – திருவா:5 95/2
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும் – திருவா:30 4/3
மேல்


ஒணாதது (2)

பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
மேல்


ஒத்த (5)

பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை – திருவா:18 6/3
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் – திருவா:30 1/3
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
மேல்


ஒத்தன (2)

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் – திருவா:5 3/3
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் – திருவா:5 3/3
மேல்


ஒத்தால் (1)

நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே – திருவா:32 10/2
மேல்


ஒத்திருந்து (1)

இரு கை யானையை ஒத்திருந்து என் உள – திருவா:5 41/1
மேல்


ஒத்திருந்தேன் (1)

புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி – திருவா:25 5/2
மேல்


ஒத்து (5)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த – திருவா:6 9/1
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே – திருவா:6 21/3,4
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய – திருவா:8 14/4
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன் – திருவா:21 5/2
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே – திருவா:26 4/2
மேல்


ஒப்ப (1)

ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே – திருவா:25 8/3,4
மேல்


ஒப்பது (2)

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி – திருவா:5 29/1
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின் – திருவா:10 4/1
மேல்


ஒப்பனே (2)

ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர் – திருவா:5 98/2
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே – திருவா:29 6/2
மேல்


ஒப்பாம் (1)

பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே – திருவா:45 7/2
மேல்


ஒப்பாய் (6)

மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே – திருவா:6 16/2
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 16/3
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/4
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே – திருவா:6 16/4
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண் – திருவா:6 46/1,2
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லாமும் – திருவா:7 7/4,5
மேல்


ஒப்பாரை (1)

தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம் – திருவா:27 7/2
மேல்


ஒப்பு (9)

விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல் – திருவா:5 61/2
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே – திருவா:6 29/3
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும் – திருவா:8 11/5
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி – திருவா:10 4/2
ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும் – திருவா:19 6/2
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே – திருவா:37 5/1
மேல்


ஒப்பு_இல் (3)

விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை – திருவா:5 61/2,3
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி – திருவா:10 4/2
மேல்


ஒப்பு_இலா (1)

அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே – திருவா:37 3/1
மேல்


ஒப்பு_இலாதவனே (1)

அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே – திருவா:6 29/3,4
மேல்


ஒப்பு_இலாதன (1)

ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
மேல்


ஒப்புவித்த (1)

ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும் – திருவா:8 11/5
மேல்


ஒர் (16)

வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என – திருவா:5 44/2
கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே – திருவா:5 45/4
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால் – திருவா:5 78/3
தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே – திருவா:5 78/4
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே – திருவா:6 28/1
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு – திருவா:22 2/2
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே – திருவா:22 9/4
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான் – திருவா:30 4/2
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே – திருவா:30 6/1
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும் – திருவா:30 7/2
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி – திருவா:36 8/1
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால் – திருவா:36 10/2
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார் – திருவா:43 7/1
விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 1/7
ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே – திருவா:49 2/1
மேல்


ஒரு (22)

சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு – திருவா:2/93
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன – திருவா:3/4
இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை – திருவா:3/79
ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் – திருவா:4/15
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் – திருவா:5 17/2
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 9/3
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழு பொருளை – திருவா:7 4/5
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் – திருவா:7 10/5
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான் – திருவா:7 15/1
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர – திருவா:7 15/2
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப – திருவா:7 15/3
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள் – திருவா:7 15/4
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் – திருவா:11 1/3
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி – திருவா:12 7/1
உய்ய வல்லார் ஒரு மூவரை காவல் கொண்டு – திருவா:14 4/1
புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி – திருவா:14 9/1
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா – திருவா:23 10/3
உறவினொடும் ஒழிய சென்று உலகு உடைய ஒரு முதலை – திருவா:31 6/2
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு – திருவா:34 2/1
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும் – திருவா:44 2/1
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 8/3
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை – திருவா:51 10/3
மேல்


ஒரு-பால் (1)

பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன் – திருவா:7 10/3
மேல்


ஒருங்கிய (1)

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து – திருவா:4/31
மேல்


ஒருங்கு (3)

ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் – திருவா:2/105
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற – திருவா:14 1/3
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம் – திருவா:38 1/3
மேல்


ஒருத்தரும் (1)

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் – திருவா:3/161
மேல்


ஒருத்தன் (2)

ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன்
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/3,4
ஒருத்தன் பெருக்கும் ஒளி – திருவா:47 7/4
மேல்


ஒருத்தனே (2)

ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை – திருவா:5 61/3
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன் – திருவா:29 2/2
மேல்


ஒருத்தி (2)

பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/2
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ – திருவா:12 7/1,2
மேல்


ஒருப்படு-மின் (3)

ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின்
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே – திருவா:45 1/3,4
உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின்
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே – திருவா:45 5/2,3
நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/3,4
மேல்


ஒருப்படுகின்றது (1)

ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு – திருவா:20 3/2
மேல்


ஒருப்படுகின்றேனை (2)

செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 4/3,4
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே – திருவா:26 6/3,4
மேல்


ஒருபால் (5)

இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் – திருவா:20 4/1
இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/1,2
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 4/2,3
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே – திருவா:20 4/3
மேல்


ஒருமையில் (1)

இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் – திருவா:4/16
மேல்


ஒருவ (3)

உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி – திருவா:4/124
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி – திருவா:4/215
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி – திருவா:5 67/4
மேல்


ஒருவர் (3)

பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/5
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் – திருவா:7 15/6
என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து – திருவா:47 2/4
மேல்


ஒருவரை (2)

ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி – திருவா:36 1/2
ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே – திருவா:36 1/4
மேல்


ஒருவன் (9)

தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் – திருவா:2/67
ஒருவன் என்னும் ஒருவன் காண்க – திருவா:3/43
ஒருவன் என்னும் ஒருவன் காண்க – திருவா:3/43
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து – திருவா:4/75
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல் – திருவா:4/129
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் – திருவா:5 99/1
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான் – திருவா:7 7/2
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான் – திருவா:8 6/1,2
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி – திருவா:44 2/3
மேல்


ஒருவனுமே (2)

உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 6/3,4
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 5/3,4
மேல்


ஒருவனே (5)

ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே – திருவா:5 41/4
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர் – திருவா:5 68/1
சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய – திருவா:22 9/1
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும் – திருவா:28 2/2
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே – திருவா:37 5/1
மேல்


ஒருவனை (1)

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 8/7,8
மேல்


ஒருவா (1)

பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால் – திருவா:25 10/3
மேல்


ஒல்கா (1)

ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே – திருவா:21 10/4
மேல்


ஒல்லகில்லேன் (1)

விழுங்கியும் ஒல்லகில்லேன்
செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து – திருவா:3/167,168
மேல்


ஒல்லை (5)

உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி – திருவா:5 64/3
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே – திருவா:5 89/4
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 5/6
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற – திருவா:14 18/2
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே – திருவா:32 8/4
மேல்


ஒலி (4)

பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும் – திருவா:2/53
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 10/3
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
மேல்


ஒலிக்கே (1)

சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ – திருவா:13 18/1,2
மேல்


ஒலிதரு (1)

ஒலிதரு கைலை உயர் கிழவோனே – திருவா:2/146
மேல்


ஒலிப்ப (2)

மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப
செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா – திருவா:8 13/2,3
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட – திருவா:9 14/1
மேல்


ஒவ்வாத (1)

உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் – திருவா:11 17/1
மேல்


ஒழிக்கும் (1)

இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்
அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே – திருவா:40 10/3,4
மேல்


ஒழித்தருளி (1)

ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி
அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர் – திருவா:2/129,130
மேல்


ஒழித்திடு (1)

ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே – திருவா:5 66/4
மேல்


ஒழித்து (1)

ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன் – திருவா:23 5/1
மேல்


ஒழிந்த (2)

மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே – திருவா:11 14/1
மூவரும் முப்பத்துமூவரும் மற்று ஒழிந்த
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி – திருவா:47 9/1,2
மேல்


ஒழிந்த-கால் (1)

நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே – திருவா:50 4/4
மேல்


ஒழிந்தனனேல் (1)

உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும் – திருவா:12 13/3
மேல்


ஒழிந்தார் (1)

உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே – திருவா:22 4/1
மேல்


ஒழிந்தால் (2)

அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு – திருவா:21 8/1
தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் – திருவா:50 5/1
மேல்


ஒழிந்தான் (1)

வள்ளல் வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே – திருவா:10 19/2
மேல்


ஒழிந்து (2)

நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை – திருவா:4/69
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 4/3,4
மேல்


ஒழிந்தே (1)

உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன் – திருவா:32 7/3
மேல்


ஒழிந்தேன் (5)

பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே – திருவா:21 2/2
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர – திருவா:44 5/1
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே – திருவா:44 5/4
மேல்


ஒழிந்தோம் (1)

உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 11/7,8
மேல்


ஒழிய (2)

அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள் – திருவா:3/118
உறவினொடும் ஒழிய சென்று உலகு உடைய ஒரு முதலை – திருவா:31 6/2
மேல்


ஒழியவும் (1)

கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே – திருவா:6 2/4
மேல்


ஒழியாய் (1)

பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா – திருவா:32 6/3
மேல்


ஒழியாவண்ணம் (2)

உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம் – திருவா:10 19/3
உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான் – திருவா:34 6/2
மேல்


ஒழியான் (1)

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் – திருவா:21 10/1
மேல்


ஒழிவதே (1)

அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே – திருவா:33 1/4
மேல்


ஒழிவித்திடும் (1)

புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று – திருவா:42 8/1,2
மேல்


ஒழிவு (3)

ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை – திருவா:3/116
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி – திருவா:4/215
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு – திருவா:37 1/1
மேல்


ஒழிவு_அற (3)

ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை – திருவா:3/116
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி – திருவா:4/215
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு – திருவா:37 1/1
மேல்


ஒழுகிய (1)

பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை – திருவா:26 7/1
மேல்


ஒள் (11)

அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள் – திருவா:3/118
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் – திருவா:4/56
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து – திருவா:5 39/1
உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம் – திருவா:5 42/1
பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ – திருவா:6 31/3
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ – திருவா:7 4/1
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/3
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி – திருவா:18 8/2
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து – திருவா:26 1/3
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே – திருவா:49 8/5
மேல்


ஒள்ளிய (1)

அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை – திருவா:3/177,178
மேல்


ஒளி (30)

தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய் – திருவா:1/80
திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய – திருவா:3/69
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர – திருவா:3/72
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ – திருவா:3/125
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ – திருவா:3/125
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி – திருவா:4/202
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி – திருவா:5 15/1
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே – திருவா:6 11/4
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும் – திருவா:6 22/1
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல – திருவா:7 18/4
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த – திருவா:8 4/5
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் – திருவா:8 16/4
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ – திருவா:8 18/5
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ – திருவா:8 18/5
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து உளம் புகலும் – திருவா:15 14/1
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு – திருவா:20 3/2
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு – திருவா:20 3/2
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே – திருவா:22 8/1
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம் – திருவா:25 4/3
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண – திருவா:25 6/3
வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே – திருவா:26 1/1
சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே சுரி குழல் பணை முலை மடந்தை – திருவா:29 1/1
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே – திருவா:29 5/2
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி – திருவா:31 9/2
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய – திருவா:37 9/2
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி – திருவா:41 8/2
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் – திருவா:43 7/2
ஒருத்தன் பெருக்கும் ஒளி – திருவா:47 7/4
மேல்


ஒளிக்கும் (3)

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே – திருவா:1/68
ஒளிக்கும் சோரனை கண்டனம் – திருவா:3/141
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே – திருவா:6 42/4
மேல்


ஒளித்தாய்க்கு (1)

பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன் – திருவா:6 45/1
மேல்


ஒளித்து (1)

உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே – திருவா:14 12/1
மேல்


ஒளித்தும் (9)

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் – திருவா:3/126,127
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து – திருவா:3/127,128
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் – திருவா:3/129,130
மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்
இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு – திருவா:3/130,131
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனி வர கௌவி – திருவா:3/132,133
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின் – திருவா:3/135
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் – திருவா:3/138,139
ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும்
பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும் – திருவா:3/139,140
பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும்
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை – திருவா:3/145,146
மேல்


ஒளியாய் (2)

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் – திருவா:1/23,24
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 7/1
மேல்


ஒளியானே (1)

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே – திருவா:1/68,69
மேல்


ஒளியே (3)

காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற – திருவா:1/78,79
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 4/3
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே – திருவா:37 5/1,2
மேல்


ஒளியை (2)

தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம் – திருவா:5 58/1
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை – திருவா:31 10/3
மேல்


ஒளிர்கின்ற (2)

ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 4/3
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே – திருவா:37 5/1
மேல்


ஒளிவந்த (1)

ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 15/3
மேல்


ஒற்றி (2)

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் – திருவா:3/127
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால் – திருவா:6 18/1
மேல்


ஒற்றுமை (1)

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து – திருவா:3/128
மேல்


ஒற்றை (2)

மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை
கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும் – திருவா:6 40/2,3
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே – திருவா:36 10/3
மேல்


ஒறுத்தால் (1)

உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே – திருவா:33 2/4
மேல்


ஒறுத்து (2)

ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 6/3
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/4
மேல்


ஒன்பதில் (1)

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் – திருவா:4/23
மேல்


ஒன்பது (1)

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை – திருவா:1/54
மேல்


ஒன்ற (2)

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் – திருவா:2/131
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் – திருவா:2/131
மேல்


ஒன்றனுக்கு (1)

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் – திருவா:3/3
மேல்


ஒன்றாய் (1)

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி – திருவா:4/141
மேல்


ஒன்றி (2)

நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி – திருவா:4/82
உணக்கு பசை அறுத்தான் உயிர் ஒன்றி நின்ற – திருவா:15 15/2
மேல்


ஒன்றினொடு (1)

ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே – திருவா:49 2/1
மேல்


ஒன்று (26)

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் – திருவா:1/25
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் – திருவா:3/3
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க – திருவா:3/36
ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் – திருவா:3/139
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் – திருவா:4/219
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் – திருவா:5 28/1
தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே – திருவா:5 31/4
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/2
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/2
அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் – திருவா:5 86/3
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி – திருவா:5 97/1
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 4/2,3
பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட – திருவா:6 7/1
பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன் – திருவா:7 10/3
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் – திருவா:7 19/3
ஒன்று ஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடு விட்டு – திருவா:10 8/1
உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம் – திருவா:10 19/3
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் – திருவா:11 8/2
சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 7/3
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால் – திருவா:22 10/2
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் – திருவா:32 9/1
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் – திருவா:33 5/3
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே – திருவா:33 6/4
மேல்


ஒன்றும் (18)

தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:5 51/4
மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி – திருவா:6 43/1
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க – திருவா:7 19/6
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் – திருவா:11 1/3
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற – திருவா:14 2/3
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய் – திருவா:18 1/4
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே – திருவா:22 7/4
விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு – திருவா:31 8/2
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை – திருவா:31 9/1
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே – திருவா:32 4/4
உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே – திருவா:33 2/4
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை – திருவா:33 3/1
ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி – திருவா:36 1/2
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு – திருவா:40 7/3
ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே – திருவா:49 2/1
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன் – திருவா:50 2/2
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/4
குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு – திருவா:51 2/3
மேல்


ஒன்றும்வண்ணம் (1)

இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே – திருவா:5 77/4

மேல்