மூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 10
மூ_வேதனையை 1
மூ_இயல் 1
மூ_இரு 1
மூக்கீச்சரத்து 1
மூக்கே 1
மூக்கை 1
மூட்ட 1
மூட்டி 2
மூட்டு 2
மூட்டுக்கும் 1
மூட்டுகின்றீர் 1
மூட்டை 3
மூட்டைப்பூச்சியும் 1
மூட்டையினும் 1
மூட்டையை 1
மூட 16
மூட_பிள்ளை 1
மூடம் 3
மூடர் 3
மூடர்கள் 1
மூடர்கள்-தமக்குள் 1
மூடர்களில் 1
மூடரிடம் 1
மூடரில் 2
மூடருக்குள் 1
மூடருள் 1
மூடரை 2
மூடல் 1
மூடன் 3
மூடனும் 1
மூடனேன் 4
மூடனேன்-தனை 2
மூடனேனுக்கு 1
மூடாள் 1
மூடி 16
மூடிக்கொண்டது 1
மூடிக்கொண்டன 1
மூடிக்கொண்டு 1
மூடிக்கொள்ளுவது 1
மூடிட 1
மூடிடுமே 1
மூடிநின்ற 1
மூடு 3
மூடுதியோ 1
மூடுதே 1
மூடுவித்தீர் 1
மூடேன் 1
மூடேனோ 2
மூண்டதுவோ 1
மூத்த 1
மூத்தவளாய் 1
மூத்தவன் 1
மூத்தானை 1
மூத்து 1
மூதறிவன் 1
மூதறிவாளன் 1
மூதறிவு 1
மூதாண்ட 2
மூதீச்சரம் 1
மூது 1
மூப்பில் 1
மூப்பின் 1
மூப்பினில் 1
மூப்பு 8
மூப்பு_இலானை 1
மூப்பும் 1
மூர்க்கரும் 1
மூர்க்கரேனும் 1
மூர்க்கனும் 1
மூர்த்தம் 2
மூர்த்தம்-அதாய் 1
மூர்த்தம்-அது 1
மூர்த்தமே 1
மூர்த்தர்கள் 1
மூர்த்தி 11
மூர்த்திகள் 5
மூர்த்திகளும் 3
மூர்த்திமான் 1
மூர்த்தியாய் 1
மூர்த்தியே 5
மூர்த்தியை 1
மூரி 1
மூல 7
மூலத்தின் 1
மூலத்தை 2
மூலம் 1
மூலமாம் 2
மூலை 2
மூவர் 10
மூவர்-தம் 2
மூவர்-தமையும் 1
மூவர்க்கு 4
மூவர்க்கும் 2
மூவர்கட்கும் 1
மூவர்கள் 1
மூவர்களின் 1
மூவர்களும் 3
மூவர்களோ 2
மூவராயினும் 1
மூவருக்கும் 2
மூவரும் 10
மூவரே 3
மூவரேயாம் 1
மூவரை 2
மூவா 4
மூவாண்டு-அதனில் 1
மூவாத 4
மூவாமல் 1
மூவானை 1
மூவிட 1
மூவிடத்து 1
மூவிதமாய் 1
மூவிரண்டு 1
மூவிரு 5
மூவிரு_காலே 1
மூவுரு 1
மூவுருவின் 1
மூவுலகு 1
மூவுலகும் 6
மூழ்க 4
மூழ்கி 10
மூழ்கியிட 1
மூழ்கியே 1
மூழ்கினனேனும் 1
மூழ்கினால் 1
மூழ்குதற்கு 1
மூழை 1
மூள் 1
மூளாது 1
மூளுகின்ற 1
மூளும் 1
மூளை 1
மூன்றலர் 1
மூன்றா 1
மூன்றாம் 1
மூன்றாய் 1
மூன்றானை 1
மூன்றில் 2
மூன்றின் 2
மூன்றினார் 1
மூன்றினும் 1
மூன்று 54
மூன்று_கண்ணனை 1
மூன்று_நான்கு 1
மூன்று_உடையார் 1
மூன்று_உடையான் 1
மூன்று_உடையீர் 2
மூன்றும் 22
மூன்றொடு 1
மூன்றொடு_அரை_கோடி 1

மூ (10)

பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/3
மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 8/4
மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி – திருமுறை5:50 5/1
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:29 8/1
மூ வகை சித்தியின் முடிபுகள் முழுவதும் – திருமுறை6:65 1/239
தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல – திருமுறை6:65 1/441
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:76 10/2
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – கீர்த்தனை:41 1/27
கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – தனிப்பாசுரம்:24 1/27
தனி சிவஞானம்-தன்னை மூ ஆண்டில் – தனிப்பாசுரம்:30 2/13

மேல்


மூ_வேதனையை (1)

மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 8/4

மேல்


மூ_இயல் (1)

தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல – திருமுறை6:65 1/441

மேல்


மூ_இரு (1)

மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:29 8/1

மேல்


மூக்கீச்சரத்து (1)

சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய் – திருமுறை1:2 1/138

மேல்


மூக்கே (1)

சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இ தூய் நெறி ஒன்றாம் – திருமுறை2:7 5/3

மேல்


மூக்கை (1)

முத்தம்தரல் போல் மூக்கை கடிப்பன் – திருமுகம்:4 1/166

மேல்


மூட்ட (1)

மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன – திருமுறை6:99 5/3

மேல்


மூட்டி (2)

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் – திருமுறை6:13 55/3
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 130/2

மேல்


மூட்டு (2)

மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை1:3 1/654
இ கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு என கேட்டும் – திருமுறை1:3 1/995

மேல்


மூட்டுக்கும் (1)

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புற பசிக்கின்றீர் – திருமுறை6:24 67/1

மேல்


மூட்டுகின்றீர் (1)

முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி – திருமுறை6:96 7/2

மேல்


மூட்டை (3)

மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:86 9/1
என் மூட்டை தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும் – தனிப்பாசுரம்:16 3/2
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே – தனிப்பாசுரம்:16 3/4

மேல்


மூட்டைப்பூச்சியும் (1)

வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய் கொள்ளியால் – தனிப்பாசுரம்:16 3/1

மேல்


மூட்டையினும் (1)

தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர் – தனிப்பாசுரம்:16 3/3

மேல்


மூட்டையை (1)

முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி – திருமுறை6:96 7/2

மேல்


மூட (16)

முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/2
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1
மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:26 9/1
முந்தை ஏழ் பவ மூட மயக்கு அற – திருமுறை2:28 8/3
முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே – திருமுறை2:57 4/2
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:59 4/2,3
முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மன சிறியேன் நான் நாட வரும் பொழுது – திருமுறை4:6 4/2
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை4:7 10/3
மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 1/3
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை5:19 7/3
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை5:27 8/1
மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானை பின்னானை மூட நெஞ்சில் – திருமுறை6:47 8/2
முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:98 17/1
முற்றும் அஞ்ஞான மூட_பிள்ளை – திருமுகம்:4 1/40
உவகை ஊட்டுவர் உறு செவி மூட
திட்டுவர் பலவாய் திரண்டு திரண்டே – திருமுகம்:4 1/292,293

மேல்


மூட_பிள்ளை (1)

முற்றும் அஞ்ஞான மூட_பிள்ளை
ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்றனால் – திருமுகம்:4 1/40,41

மேல்


மூடம் (3)

மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் – திருமுறை1:3 1/1228
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை2:78 3/1
முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே – திருமுறை5:47 7/4

மேல்


மூடர் (3)

என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் – திருமுறை1:6 12/2
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை5:55 10/2
எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை – திருமுறை5:55 18/1

மேல்


மூடர்கள் (1)

நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும் நரக இல்லிடை நடப்பதை ஒழிக – திருமுறை2:7 9/1

மேல்


மூடர்கள்-தமக்குள் (1)

மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை5:38 1/1

மேல்


மூடர்களில் (1)

முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன் – திருமுறை4:7 13/2

மேல்


மூடரிடம் (1)

முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் – திருமுறை5:46 10/1

மேல்


மூடரில் (2)

மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலா துயர் மூல இல் ஒழுக்கில் – திருமுறை2:38 6/1
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 5/3

மேல்


மூடருக்குள் (1)

மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை1:2 1/736

மேல்


மூடருள் (1)

பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 10/2

மேல்


மூடரை (2)

வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:39 1/3
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3

மேல்


மூடல் (1)

பானுவின் ஒளியை படர் இருள் மூடல் போல் – திருமுகம்:4 1/42

மேல்


மூடன் (3)

முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:10 7/1
முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ – திருமுறை2:68 1/4
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட – தனிப்பாசுரம்:3 4/1

மேல்


மூடனும் (1)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1

மேல்


மூடனேன் (4)

முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:11 6/1
முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு – திருமுறை2:20 3/3
மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனை – திருமுறை2:76 11/1
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 12/4

மேல்


மூடனேன்-தனை (2)

முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:46 3/1
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை5:9 27/1

மேல்


மூடனேனுக்கு (1)

முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ – திருமுறை2:25 3/3

மேல்


மூடாள் (1)

முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே – திருமுறை3:2 7/4

மேல்


மூடி (16)

மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை – திருமுறை1:3 1/670
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது – திருமுறை1:3 1/725,726
வாய் மூடி கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் – திருமுறை1:6 62/1
முன்_மழை வேண்டும் பருவ பயிர் வெயில் மூடி கெட்ட – திருமுறை1:6 97/1
முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர் – திருமுறை1:6 222/1
உடுக்கும் பெரியவரை சிறிய ஒரு முன்தானையால் மூடி
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 132/3,4
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:20 14/3,4
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:40 4/2
முந்த புகுந்து புளகமுடன் மூடி குளிர கண்டு அலது – திருமுறை3:8 7/3
துலைபுரிந்து ஓடி கண்களை மூடி துயர்ந்ததும் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 18/4
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் – திருமுறை6:63 24/3
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:96 3/3
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:96 4/3
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 5/4
வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடி சென்றனர் – கீர்த்தனை:25 6/1
அங்கையால் மூடி அலக்கழிப்பான் எனை – திருமுகம்:4 1/44

மேல்


மூடிக்கொண்டது (1)

பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையை – திருமுறை1:6 62/2

மேல்


மூடிக்கொண்டன (1)

மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் – திருமுறை6:90 9/1

மேல்


மூடிக்கொண்டு (1)

சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை – திருமுறை1:6 62/3

மேல்


மூடிக்கொள்ளுவது (1)

தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே – திருமுறை1:6 62/4

மேல்


மூடிட (1)

எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை2:78 2/1

மேல்


மூடிடுமே (1)

முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே – திருமுறை1:6 96/4

மேல்


மூடிநின்ற (1)

நாணவத்தினேன்-தனையோ நாயேனை மூடிநின்ற
ஆணவத்தையோ நான் அறியேனே வீண் அவத்தில் – திருமுறை1:4 55/1,2

மேல்


மூடு (3)

இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – கீர்த்தனை:39 3/4
இந்த கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன் – கீர்த்தனை:39 4/4
இந்த கதவை மூடு இரட்டை தாள்கோலை போடு – கீர்த்தனை:39 5/4

மேல்


மூடுதியோ (1)

மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை – திருமுறை1:3 1/670

மேல்


மூடுதே (1)

பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே
பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே – கீர்த்தனை:29 88/1,2

மேல்


மூடுவித்தீர் (1)

செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:33 1/3

மேல்


மூடேன் (1)

புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன்
பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை5:27 5/2,3

மேல்


மூடேனோ (2)

முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே – திருமுறை5:18 7/4
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ – திருமுறை5:22 3/3

மேல்


மூண்டதுவோ (1)

முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் – திருமுறை2:63 2/1

மேல்


மூத்த (1)

மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி – திருமுறை4:2 37/1

மேல்


மூத்தவளாய் (1)

தந்த மாயைக்கு தனி மூத்தவளாய்
அகங்காரம் எனும் அடங்கா காளை – திருமுகம்:4 1/224,225

மேல்


மூத்தவன் (1)

முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை – திருமுகம்:4 1/230

மேல்


மூத்தானை (1)

இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 6/4

மேல்


மூத்து (1)

அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த – திருமுறை1:3 1/900

மேல்


மூதறிவன் (1)

மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல் – தனிப்பாசுரம்:2 52/3

மேல்


மூதறிவாளன் (1)

மூதறிவாளன் முத்துசாமி என்று – திருமுகம்:4 1/14

மேல்


மூதறிவு (1)

மூதறிவு சிறிது என்னுள் முளைத்தது அது பயிராக முழுதும் கல்வி – தனிப்பாசுரம்:2 40/3

மேல்


மூதாண்ட (2)

மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை1:5 4/3
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2

மேல்


மூதீச்சரம் (1)

மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்கேதீச்சரத்தில் – திருமுறை1:2 1/385

மேல்


மூது (1)

மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 9/4

மேல்


மூப்பில் (1)

மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:98 25/2

மேல்


மூப்பின் (1)

அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை – திருமுறை2:51 1/3

மேல்


மூப்பினில் (1)

தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:49 10/1

மேல்


மூப்பு (8)

நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை1:6 97/3
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 6/4
நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் – திருமுறை6:65 1/1329
நரை அற்று மூப்பு அற்று இறப்பு அற்று இருக்கவும் நல்கியதே – திருமுறை6:78 4/4
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:96 2/3
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:97 4/3
நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் – திருமுறை6:97 7/1
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:98 25/3

மேல்


மூப்பு_இலானை (1)

இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 6/4

மேல்


மூப்பும் (1)

பிணி மூப்பும் காணார் காண் நீடு நினை – திருமுறை1:4 76/2

மேல்


மூர்க்கரும் (1)

வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் – திருமுறை1:6 12/1

மேல்


மூர்க்கரேனும் (1)

காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் – திருமுறை1:2 1/375

மேல்


மூர்க்கனும் (1)

முதியன்_அல்லன் யான் எ பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் – திருமுறை2:54 6/3

மேல்


மூர்த்தம் (2)

அணி ஆதவன் முதலாம் அட்ட_மூர்த்தம் அடைந்தவனே – திருமுறை5:5 26/4
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:98 10/4

மேல்


மூர்த்தம்-அதாய் (1)

இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1

மேல்


மூர்த்தம்-அது (1)

அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலா திறத்தை – திருமுறை2:4 2/1

மேல்


மூர்த்தமே (1)

முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில் – திருமுறை1:2 1/534

மேல்


மூர்த்தர்கள் (1)

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் – திருமுறை6:65 1/1223

மேல்


மூர்த்தி (11)

தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை1:1 2/43
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை1:1 2/43
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை1:1 2/43
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் – திருமுறை1:1 2/43
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/54
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல் – திருமுறை1:3 1/279
ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர் – திருமுறை1:3 1/280
அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் – திருமுறை2:68 3/3
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை2:94 47/4
போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை5:50 8/4
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத – திருமுறை6:24 16/3

மேல்


மூர்த்திகள் (5)

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் – திருமுறை6:65 1/149
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் – திருமுறை6:65 1/1223
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் – திருமுறை6:106 80/2
அமர் மற்று உள அமல மூர்த்திகள்
பூங்கழல் வணங்கி ஓர் புறத்து இருந்தரோ – தனிப்பாசுரம்:3 50/3,4

மேல்


மூர்த்திகளும் (3)

மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:25 17/2
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் – திருமுறை6:60 12/2
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே – திருமுறை6:60 52/1

மேல்


மூர்த்திமான் (1)

மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே – திருமுறை6:45 9/3

மேல்


மூர்த்தியாய் (1)

ஆர்த்தியாய் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_மூர்த்தியாய் – திருமுறை1:3 1/261

மேல்


மூர்த்தியே (5)

முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே – திருமுறை2:13 2/2
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3
வெண்ணிலா முடி புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 7/4
முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே – திருமுறை5:55 30/2
அட்ட வட்டம் நட்டம் இட்ட சிட்ட வட்ட மூர்த்தியே – கீர்த்தனை:1 60/2

மேல்


மூர்த்தியை (1)

மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியை தீர்த்தனை பெரிய – திருமுறை2:39 2/1

மேல்


மூரி (1)

முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:43 7/1

மேல்


மூல (7)

வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல
ஆணவத்தினாலே அழிந்தனையே ஆணவத்தில் – திருமுறை1:3 1/1103,1104
மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலா துயர் மூல இல் ஒழுக்கில் – திருமுறை2:38 6/1
பொத்திய மூல மல பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்கு – திருமுறை4:9 6/1
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 2/3
பகுதி மூன்று ஆகிய ஜோதி மூல
பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி – கீர்த்தனை:22 11/1,2
தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே – கீர்த்தனை:29 37/3
மூல மெய் திரு_பணி முதல ஆற்றியே – தனிப்பாசுரம்:3 53/4

மேல்


மூலத்தின் (1)

நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் – திருமுறை6:101 23/3

மேல்


மூலத்தை (2)

விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:4 2/2
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:76 7/3

மேல்


மூலம் (1)

விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் – திருமுறை6:101 22/3

மேல்


மூலமாம் (2)

சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் – திருமுறை6:65 1/1323
வரு நெறி மூலமாம் மந்திரத்தினை – தனிப்பாசுரம்:3 51/1

மேல்


மூலை (2)

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் – திருமுறை1:3 1/683
இருள் இரவில் ஒரு மூலை திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனை தேடி வந்தே – திருமுறை6:60 48/1

மேல்


மூவர் (10)

வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை1:5 84/1
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர்
கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:34 5/2,3
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:39 6/2
மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் – திருமுறை2:40 1/3
முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர் – திருமுறை3:15 1/2
மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங்கே – திருமுறை5:6 9/2
மூவர் முதல்வரே வாரும் – திருமுறை5:54 9/3
மூவர் முதல்வரே வாரும் – கீர்த்தனை:16 9/3
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1
இ மனை_தலைவராய் எழுந்த மூவர்
தறுகண் கடையர் தயவே_இல்லார் – திருமுகம்:4 1/347,348

மேல்


மூவர்-தம் (2)

நாட நல் இசை நல்கிய மூவர்-தம்
பாடல் கேட்கும் படம்பக்கநாதரே – திருமுறை2:19 7/1,2
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/3

மேல்


மூவர்-தமையும் (1)

மூவர்-தமையும் அ மூவரும் அறியார் – திருமுகம்:4 1/283

மேல்


மூவர்க்கு (4)

மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை5:15 7/3
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை5:46 5/3
மூவர்க்கு அரிய மருந்து செல்வ – கீர்த்தனை:20 30/1
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே – கீர்த்தனை:29 41/4

மேல்


மூவர்க்கும் (2)

முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா – திருமுறை2:12 7/1
சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும்
ஆதியே நின் அருள் ஒன்றும் இல்லையேல் – திருமுறை2:72 8/2,3

மேல்


மூவர்கட்கும் (1)

இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே – திருமுறை1:5 33/4

மேல்


மூவர்கள் (1)

நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
பாடும் எம் படம்பக்கநாதன் தாள் – திருமுறை2:21 2/2,3

மேல்


மூவர்களின் (1)

பொற்பு அதிகம் என்று எண்ணி போற்றி ஒரு மூவர்களின்
சொல் பதிகம் கொண்டு துதிப்போரும் சொற்பனத்தும் – திருமுறை1:3 1/1327,1328

மேல்


மூவர்களும் (3)

மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம் – திருமுறை6:43 3/1
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு – கீர்த்தனை:1 175/1

மேல்


மூவர்களோ (2)

மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:101 4/2
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:106 37/2

மேல்


மூவராயினும் (1)

மூவராயினும் முக்கண நின் அருள் – திருமுறை2:72 5/2

மேல்


மூவருக்கும் (2)

செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும் – திருமுறை1:2 1/567
மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி – திருமுறை4:2 37/1

மேல்


மூவரும் (10)

மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை1:2 1/457
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை5:11 9/2
விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே – திருமுறை5:25 10/2
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:65 1/1305
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் – திருமுறை6:65 1/1581
மூவரும் காணா முழு_முதல் பாதம் – கீர்த்தனை:24 7/3
அற்றம்_இல் சண்பையர் ஆதி மூவரும்
சொல் தமிழ் பதிகங்கள்-தோறும் சேர்வது – தனிப்பாசுரம்:2 3/1,2
குருமகள் மூவரும் கூடி வாழ்வது – தனிப்பாசுரம்:2 10/2
முதல் பெரும் தேவர் மூவரும் பணிய – திருமுகம்:4 1/2
மூவர்-தமையும் அ மூவரும் அறியார் – திருமுகம்:4 1/283

மேல்


மூவரே (3)

மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் – திருமுறை5:31 3/2
அணியே நின்னை பாடும் அடியர் தாமோ மூவரே
அவரை கண்டார் அவரை கண்டார் அவர்கள் மூவரே – கீர்த்தனை:29 89/3,4
அவரை கண்டார் அவரை கண்டார் அவர்கள் மூவரே – கீர்த்தனை:29 89/4

மேல்


மூவரேயாம் (1)

இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும் – திருமுறை6:24 64/3

மேல்


மூவரை (2)

மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியை தீர்த்தனை பெரிய – திருமுறை2:39 2/1
முன் உள மூவரை முடுகி ஈர்த்தே – திருமுகம்:4 1/232

மேல்


மூவா (4)

செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை2:94 4/1,2
மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 1/3
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 4/3
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி – திருமுறை6:88 5/2

மேல்


மூவாண்டு-அதனில் (1)

மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழ – திருமுகம்:2 1/37

மேல்


மூவாத (4)

முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய் சுத்த – திருமுறை2:88 10/3
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத
பொன் அப்பா ஞான பொருள் அப்பா தந்து அருளே – திருமுறை6:24 16/3,4
முளையானை சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானை – திருமுறை6:48 6/1
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:7 6/2

மேல்


மூவாமல் (1)

முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல்
சகம் மேல் இருக்க புரிந்தாயே தாயே என்னை தந்தாயே – திருமுறை6:17 19/3,4

மேல்


மூவானை (1)

உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்ப – திருமுறை6:48 10/1

மேல்


மூவிட (1)

மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில் – திருமுறை6:65 1/807

மேல்


மூவிடத்து (1)

மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில் – திருமுறை6:65 1/805

மேல்


மூவிதமாய் (1)

விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய்
உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும் – திருமுறை6:101 43/2,3

மேல்


மூவிரண்டு (1)

முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 4/4

மேல்


மூவிரு (5)

மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே – திருமுறை2:17 1/3
கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ – திருமுறை5:49 7/1
முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி – திருமுறை5:50 10/1
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:42 12/1
மூவிரு நிலையின் முடி நடு முடி மேல் – திருமுறை6:65 1/883

மேல்


மூவிரு_காலே (1)

கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ – திருமுறை5:49 7/1

மேல்


மூவுரு (1)

முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே – திருமுகம்:4 1/281

மேல்


மூவுருவின் (1)

மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே – திருமுறை1:5 21/1

மேல்


மூவுலகு (1)

பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை2:78 3/1

மேல்


மூவுலகும் (6)

தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் – திருமுறை1:2 1/377
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல – திருமுறை1:2 1/763,764
மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர் – திருமுறை1:3 1/1149
தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகை – திருமுறை2:101 3/3
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை – தனிப்பாசுரம்:1 1/3
மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழ – திருமுகம்:2 1/37

மேல்


மூழ்க (4)

சுக வேலை மூழ்க திருவொற்றியூரிடம் துன்னி பெற்ற – திருமுறை1:7 73/3
வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந்திலனேல் – திருமுறை5:5 22/3
மூழ்க பிடிக்க முன்னம் கொய்திட – திருமுகம்:4 1/216
முடி மூழ்க வாரி முடித்திட்டேனால் – திருமுகம்:4 1/301

மேல்


மூழ்கி (10)

அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே – திருமுறை1:6 52/4
வையகத்தே இடர் மா கடல் மூழ்கி வருந்துகின்ற – திருமுறை2:73 7/1
மெலிவேன் துன்ப_கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் – திருமுறை2:80 5/3
கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி
ஓவு அற மயங்கி உழலும் இ சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ – திருமுறை5:1 10/1,2
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன் – திருமுறை5:5 15/1
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை5:27 7/2,3
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – திருமுறை6:11 1/4
அரு தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாக பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே – கீர்த்தனை:41 19/4
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3
மோக_கடலில் மூழ்கி மயங்குவன் – திருமுகம்:4 1/145

மேல்


மூழ்கியிட (1)

முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை4:3 7/1

மேல்


மூழ்கியே (1)

எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை5:10 1/3

மேல்


மூழ்கினனேனும் (1)

முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும்
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:66 6/1,2

மேல்


மூழ்கினால் (1)

மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே – திருமுறை2:32 9/3,4

மேல்


மூழ்குதற்கு (1)

முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு – திருமுறை2:69 8/1

மேல்


மூழை (1)

முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை
இளையவன் காளை எனும் இலக்கியமாய் – திருமுகம்:4 1/230,231

மேல்


மூள் (1)

மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் – திருமுறை1:3 1/654

மேல்


மூளாது (1)

மூளாது பாழ்த்த முகம் – திருமுறை1:4 27/4

மேல்


மூளுகின்ற (1)

நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற
வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை – திருமுறை1:3 1/356,357

மேல்


மூளும் (1)

மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும் – திருமுறை1:3 1/355

மேல்


மூளை (1)

மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் – திருமுறை6:65 1/1455

மேல்


மூன்றலர் (1)

வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே – திருமுறை5:5 2/4

மேல்


மூன்றா (1)

மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா – திருமுறை1:4 28/2

மேல்


மூன்றாம் (1)

&3 மூன்றாம் திருமுறை – திருமுறை3:103 2/5
அம் கண் மூன்றாம் அருள் சத்திமானாம் – திருமுகம்:4 1/59

மேல்


மூன்றாய் (1)

பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:101 33/3

மேல்


மூன்றானை (1)

மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானை பின்னானை மூட நெஞ்சில் – திருமுறை6:47 8/2

மேல்


மூன்றில் (2)

நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை – திருமுறை1:3 1/1240
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை4:9 11/3

மேல்


மூன்றின் (2)

அ மூன்றின் உள்ளே அடுக்கி வரும் ஒன்று அகன்ற – திருமுறை1:3 1/91
துரிய தலம் மூன்றின் மேலே சுத்த – கீர்த்தனை:23 9/1

மேல்


மூன்றினார் (1)

கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:35 1/1

மேல்


மூன்றினும் (1)

தகும் முறை கடை மூன்றினும் சுவசியுற்றிலேன் சதுர்_இலேன் பஞ்சம் நயவேன் – திருமுகம்:3 1/53

மேல்


மூன்று (54)

ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே – திருமுறை1:3 1/155
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை1:5 68/4
மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி – திருமுறை1:8 3/3
கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி – திருமுறை1:8 35/2
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை1:8 61/2
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய – திருமுறை1:8 88/1
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை1:8 135/1
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை1:8 141/1
உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை1:8 144/1,2
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே – திருமுறை2:12 4/1
கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் – திருமுறை2:24 7/3
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:24 9/3
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 4/4
ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் – திருமுறை2:29 8/1
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:39 7/1
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:41 4/3
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3
அமரிடை புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினை தொழல் மறந்தேன் – திருமுறை2:47 6/2
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:50 7/4
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை2:71 9/1
மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் – திருமுறை2:81 10/3
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை2:85 3/3
ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் – திருமுறை3:2 5/1
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும் – திருமுறை3:3 14/1
அம் தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரம் மூன்று அவை அனலின் – திருமுறை3:4 2/1
கச்சை இடுவார் பட வரவை கண் மூன்று உடையார் வாமத்தில் – திருமுறை3:5 2/1
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை3:9 9/3
அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார் – திருமுறை3:15 3/1
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை4:9 7/4
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை5:2 1/3
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் – திருமுறை5:5 2/1
மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணி குன்றமே – திருமுறை5:5 2/2
திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே – திருமுறை5:5 2/3
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை5:29 2/3
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை5:39 6/1
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை5:46 9/3
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே – திருமுறை6:24 64/4
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:25 23/3
நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் – திருமுறை6:101 23/3
நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் – திருமுறை6:101 23/3
கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே – கீர்த்தனை:2 8/1,2
கைப்பொருள் ஆன மருந்து மூன்று
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து – கீர்த்தனை:21 16/3,4
அன்றி மூன்று ஆன மருந்து நான்கு – கீர்த்தனை:21 30/3
முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை – கீர்த்தனை:22 10/1
பகுதி மூன்று ஆகிய ஜோதி மூல – கீர்த்தனை:22 11/1
அழுந்திய சற்பத்தியுடன் மூன்று முறை வலம்செய்து அங்கு அதற்கு பின்னர் – தனிப்பாசுரம்:3 8/4
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – தனிப்பாசுரம்:10 17/2
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 17/4
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே – தனிப்பாசுரம்:11 10/1
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை – தனிப்பாசுரம்:12 4/2
நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர் – தனிப்பாசுரம்:14 2/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – தனிப்பாசுரம்:25 4/1
மண் மூன்று அற கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம் – தனிப்பாசுரம்:25 4/2
மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள் – திருமுகம்:4 1/323

மேல்


மூன்று_கண்ணனை (1)

கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:39 7/1

மேல்


மூன்று_நான்கு (1)

திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே – திருமுறை5:5 2/3

மேல்


மூன்று_உடையார் (1)

கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும் – திருமுறை3:3 14/1

மேல்


மூன்று_உடையான் (1)

கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – தனிப்பாசுரம்:25 4/1

மேல்


மூன்று_உடையீர் (2)

கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை1:8 135/1
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை1:8 141/1

மேல்


மூன்றும் (22)

கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை1:2 0/3
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய் தம் ஊன்றி – திருமுறை1:3 1/92
தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் – திருமுறை1:5 64/3
வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும்
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 43/3,4
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – திருமுறை1:8 61/2
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை1:8 135/3
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:25 28/4
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும்
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:25 30/2,3
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் – திருமுறை6:65 1/705
பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/707,708
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:76 7/2
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:78 8/1
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன் – திருமுறை6:93 27/3
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:106 75/4
மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே – கீர்த்தனை:3 13/2
பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி – கீர்த்தனை:22 11/2
மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/2
புற்று அரவம் அரைக்கசைத்த ஒற்றி நகர் பெருமானை போது மூன்றும்
நற்றகை அன்புடன் தரிசித்து அவன் கோயில் பணியாற்றி நாளும் நம்-பால் – தனிப்பாசுரம்:2 49/2,3
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிக – தனிப்பாசுரம்:10 17/2
நடை திறம் மூன்றும் நடாஅய் பிறங்கிய – தனிப்பாசுரம்:30 2/4
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழ – திருமுகம்:4 1/226
முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே – திருமுகம்:4 1/281

மேல்


மூன்றொடு (1)

முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை1:3 1/711

மேல்


மூன்றொடு_அரை_கோடி (1)

முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை1:3 1/711

மேல்