ஞா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 2
ஞாபகமே 2
ஞாய 2
ஞாயம் 2
ஞாயமும் 1
ஞாயமோ 1
ஞாயவாதியே 1
ஞாயிறு 1
ஞால 8
ஞாலத்தவர்கள் 1
ஞாலத்தார் 1
ஞாலத்தார்-தமை 1
ஞாலத்திடை 1
ஞாலத்தில் 2
ஞாலத்து 2
ஞாலத்தே 1
ஞாலம் 18
ஞாலம்-அதில் 1
ஞாலமும் 1
ஞாலமே 1
ஞாலர் 1
ஞான்ற 1
ஞான்றிய 1
ஞான்றுகொள்வேன் 1
ஞான்றே 2
ஞான 404
ஞான_கடலே 2
ஞான_கண் 1
ஞான_சிகாமணியே 3
ஞான_நாடகம் 1
ஞான_நாயகி 1
ஞான_பால் 1
ஞான_போனகரை 1
ஞான_மலரே 1
ஞான_மலையே 1
ஞான_மலையை 1
ஞான_மழை 1
ஞானசத்தி 1
ஞானசபை 2
ஞானசபையான் 1
ஞானசம்பந்த 10
ஞானசம்பந்தர் 1
ஞானசம்பந்தன் 1
ஞானத்தின் 1
ஞானத்து 1
ஞானத்தை 2
ஞானபந்தன் 1
ஞானம் 29
ஞானம்-அது 1
ஞானம்_இலேன் 1
ஞானம்_உடையார் 1
ஞானமயமான 1
ஞானமாம் 1
ஞானமும் 4
ஞானமே 6
ஞானமொடு 1
ஞானவான் 2
ஞானாகர 1
ஞானாதீதம் 1
ஞானாமுதம் 1
ஞானானந்த 1
ஞானானந்தம் 1
ஞானானுபவ 1
ஞானி 4
ஞானிகள் 5
ஞானியர் 1
ஞானியர்-தம் 2
ஞானியரே 1
ஞானோதய 1

ஞாங்கர் (2)

நாரண தலமே நாரண வலமே நாரணாகாரத்தின் ஞாங்கர்
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 20/3,4
நவ நிலை ஞாங்கர் நண்ணிய அனுபவ – தனிப்பாசுரம்:30 2/12

மேல்


ஞாபகமே (2)

நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் – திருமுறை1:2 1/444
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – கீர்த்தனை:1 191/1

மேல்


ஞாய (2)

ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 190/2
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண – கீர்த்தனை:1 200/3

மேல்


ஞாயம் (2)

சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 9/3
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம்
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ – தனிப்பாசுரம்:16 10/1,2

மேல்


ஞாயமும் (1)

நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே – திருமுறை2:62 9/2

மேல்


ஞாயமோ (1)

நடு தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் – திருமுறை6:61 6/3

மேல்


ஞாயவாதியே (1)

ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே
தூயவாய காய தேய தோய மேய ஜோதியே – கீர்த்தனை:1 52/1,2

மேல்


ஞாயிறு (1)

அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃதின் – திருமுறை1:8 72/3

மேல்


ஞால (8)

காடு போல் ஞால கடு நடையிலே இரு கால் – திருமுறை1:2 1/639
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:22 5/3
ஞால கிடங்கரினை நம்பாதே நீல – திருமுறை2:30 25/2
ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன் – திருமுறை2:49 8/1
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 7/1
ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்து – திருமுறை4:2 12/1
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை5:38 3/1
ஞால துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம் – திருமுறை5:56 6/3

மேல்


ஞாலத்தவர்கள் (1)

ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ – திருமுறை3:1 5/3

மேல்


ஞாலத்தார் (1)

ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு – கீர்த்தனை:1 101/2

மேல்


ஞாலத்தார்-தமை (1)

ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு – திருமுறை2:90 2/1

மேல்


ஞாலத்திடை (1)

குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே – திருமுறை2:44 6/4

மேல்


ஞாலத்தில் (2)

கோல சடைக்கு அணிந்த கோமளமே ஞாலத்தில்
அந்தோ சிறியேன் அருள் இன்றி வாடுவது – திருமுறை2:89 3/2,3
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே – திருமுறை6:13 15/1

மேல்


ஞாலத்து (2)

நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து
நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் – திருமுறை1:2 1/194,195
நக்கற்கு இயைந்த பெண்ணே நான் ஞாலத்து எவையும் நயவேனே – திருமுறை3:8 10/4

மேல்


ஞாலத்தே (1)

அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ – கீர்த்தனை:29 25/2,3

மேல்


ஞாலம் (18)

நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/39
ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர் – திருமுறை1:2 1/502
ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசை – திருமுறை1:2 1/812
சீலமாய் சிற்பரமாய் சின்மயமாய் ஞாலம்
பொருந்தா பொருளாய் பொருந்தும் பொருளாய் – திருமுறை1:3 1/20,21
ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு – திருமுறை1:3 1/362
ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற – திருமுறை1:5 29/1
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை1:6 61/4
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற – திருமுறை1:8 48/1
ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும் – திருமுறை1:8 85/1
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் – திருமுறை2:3 3/1
ஞாலம் மேவும் நவையை அகற்ற முன் – திருமுறை2:19 3/3
ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே – திருமுறை2:36 8/4
ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை – திருமுறை2:70 7/2
ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே – திருமுறை3:10 29/2
ஞாலம் எலாம் படைத்தவனை படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் – திருமுறை5:44 8/1
ஞாலம் மேலவர்க்கு காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே – திருமுறை6:9 1/3
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசை – திருமுறை6:43 2/2
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் – தனிப்பாசுரம்:10 4/1

மேல்


ஞாலம்-அதில் (1)

என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில்
பெண் என்றால் யோக பெரியோர் நடுங்குவரேல் – திருமுறை1:3 1/782,783

மேல்


ஞாலமும் (1)

ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் – கீர்த்தனை:22 31/3

மேல்


ஞாலமே (1)

ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற – திருமுறை1:5 29/1

மேல்


ஞாலர் (1)

ஞாலர் ஆதி வணங்கும் ஒற்றி_நாதர் நீரே நாட்டமுறும் – தனிப்பாசுரம்:11 8/1

மேல்


ஞான்ற (1)

வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1

மேல்


ஞான்றிய (1)

ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் – கீர்த்தனை:1 122/3

மேல்


ஞான்றுகொள்வேன் (1)

ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே – திருமுறை2:73 2/4

மேல்


ஞான்றே (2)

இடர் தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த – திருமுறை6:85 3/1
சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது – திருமுறை6:85 3/2

மேல்


ஞான (404)

சீர்காழி ஞான திரவியமே ஓர் காழி – திருமுறை1:2 1/30
சிராப்பள்ளி ஞான தெளிவே இரா பள்ளி – திருமுறை1:2 1/140
வாழ் ஞான போதமே இன்பு உள்ளி – திருமுறை1:2 1/214
திரு_அம்பர் ஞான திரட்டே ஒருவந்தம் – திருமுறை1:2 1/238
இளங்கோயில் ஞான இனிப்பே வளம் கோவை – திருமுறை1:2 1/244
நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர் – திருமுறை1:2 1/272
ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த – திருமுறை1:2 1/391
சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடில – திருமுறை1:2 1/440
ஞான களஞ்சியமே ஆள் அத்தா – திருமுறை1:2 1/510
இன்பம் மிகு ஞான இலக்கணமே துன்பம் அற – திருமுறை1:2 1/520
மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில் – திருமுறை1:2 1/528
தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் – திருமுறை1:2 1/536
சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும் – திருமுறை1:3 1/117
நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞான
செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த – திருமுறை1:3 1/317,318
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனை தந்து நமக்கு – திருமுறை1:3 1/373
என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான
இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே – திருமுறை1:4 80/1,2
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் – திருமுறை1:5 0/2,3
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை1:5 2/2
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை1:5 11/4
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை1:5 19/3,4
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை1:5 24/1
மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே – திருமுறை1:5 27/1,2
நாதமே நாதாந்த நடமே அந்த நடத்தினை உள் நடத்துகின்ற நலமே ஞான
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை1:5 28/3,4
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை1:5 29/2
போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் – திருமுறை1:5 31/2,3
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை1:5 33/1
வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் – திருமுறை1:5 34/3
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை1:5 42/3,4
தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞான சோதி விரித்து ஒளிர்கின்ற சோதி தேவே – திருமுறை1:5 45/4
தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞான
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை1:5 48/3,4
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை1:5 55/4
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை1:5 67/2,3
மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 1/4
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே – திருமுறை1:7 41/2
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் – திருமுறை1:8 60/1,2
வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:1 3/1
நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே – திருமுறை2:12 8/1
இருந்த ஞான இயல் ஒளியே ஒற்றி – திருமுறை2:28 9/2
திகழ்கின்ற ஞான செழும் சுடரை வானோர் – திருமுறை2:30 16/1
தேசனை தலைமை தேவனை ஞான சிறப்பனை சேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 9/2
சுத்தனை ஒற்றி தலம் வளர் ஞான சுகத்தனை சூழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 10/2
ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ – திருமுறை2:45 14/4
நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1/4
நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 2/4
நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 3/4
நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 4/4
நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 5/4
நற இக்கு ஓங்கிய ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 6/4
நலியல் நீக்கிடும் ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 7/4
நையல் அற்றிட அருள் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 8/4
நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 9/4
நல்_விதத்தினர் புகழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 10/4
நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 11/4
பொன் போன்ற ஞான புது மலர் தாள் துணை போற்றுகிலேன் – திருமுறை2:58 1/2
நலம் சான்ற ஞான தனி முதலே தெய்வ நாயகனே – திருமுறை2:64 4/4
மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே – திருமுறை2:73 7/4
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை2:78 2/2
துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை – திருமுறை2:101 2/2
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை4:2 77/1
வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மாநாத – திருமுறை4:2 89/2
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை4:6 4/1
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை4:6 9/3
நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை4:6 9/4
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை4:6 10/4
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை4:6 12/1
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/3
பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை4:9 10/3,4
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை4:10 1/4
நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்பனே எம் – திருமுறை4:10 3/2
மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் – திருமுறை4:10 4/2
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/4
துளங்கு பெரும் சிவ நெறியை சார்ந்த ஞான துணையே நம் துரையே நல் சுகமே என்றும் – திருமுறை4:10 8/3
அருள் வழங்கும் திலகவதி அம்மையார் பின் அவதரித்த மணியே சொல்லரசே ஞான
தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை – திருமுறை4:10 9/1,2
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ – திருமுறை4:10 9/3
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை5:5 3/1
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 1/4
சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 2/4
செஞ்சந்தனம் சேர் தணிகை மலை தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 3/4
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 4/4
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 5/4
செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 6/4
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 7/4
சேண் தேன் அலரும் பொழில் தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 8/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 9/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 10/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 11/4
கூர் பூத்த வேல் மலர் கை அரசே சாந்த குண குன்றே தணிகை மலை கோவே ஞான
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை5:8 1/2,3
பொய்யாத பூரணமே தணிகை ஞான பொருளே நின் பொன் அருள் இ போது யான் பெற்றால் – திருமுறை5:8 5/2
வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் – திருமுறை5:8 8/1
கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் – திருமுறை5:8 10/1
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை5:9 1/3
சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞான தேனே அன்பர் – திருமுறை5:9 8/3
தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை5:9 9/3
மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை5:9 12/3
செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞான தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே – திருமுறை5:9 14/3
ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் – திருமுறை5:9 15/3
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை5:9 18/3
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை5:9 21/3
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே – திருமுறை5:13 8/4
அளியே தணிகை அருள்_சுடரே அடியர் உறவே அருள் ஞான
துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே – திருமுறை5:13 10/3,4
பொன்னே ஞான பொங்கு ஒளியே புனித அருளே பூரணமே – திருமுறை5:15 1/3
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை5:16 6/1
தோன்றா ஞான சின்மயமே தூய சுகமே சுயம் சுடரே – திருமுறை5:16 10/1
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை5:18 5/1,2
அள்ளல் பழன திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் – திருமுறை5:21 9/3
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை5:23 1/2
நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே – திருமுறை5:23 2/3
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 7/2
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே – திருமுறை5:37 5/3
தீரனை அழியா சீரனை ஞான செல்வனை வல்_வினை நெஞ்ச – திருமுறை5:40 6/2
ஞான_நாயகி ஒருபுடை அமர்ந்த நம்பனார்க்கு ஒரு நல் தவ பேறே – திருமுறை5:42 10/3
சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை5:44 8/3,4
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை5:44 9/3
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை5:44 10/1
மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை5:46 5/2
துறை எலாம் விளங்கு ஞான சோதியே போற்றி போற்றி – திருமுறை5:50 7/4
சத்துவ ஞான வடிவாண்டி சிவ – திருமுறை5:53 9/3
மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான
உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை5:55 1/2,3
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 1/1
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிர்_அதிசய இன்பம் ஞான சித்தி பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய் – திருமுறை6:2 4/3
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 8/4
போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 5/3
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 6/3
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – திருமுறை6:11 1/2
நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ – திருமுறை6:11 3/1
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 10/1
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:12 21/1
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 3/4
தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ – திருமுறை6:13 68/1
மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ – திருமுறை6:13 72/4
சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 84/1
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே – திருமுறை6:13 87/2
ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி – திருமுறை6:14 10/1
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 8/4
புரை சேர் துயர புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம் – திருமுறை6:16 2/1
நயந்த கருணை நடத்து அரசே ஞான அமுதே நல்லோர்கள் – திருமுறை6:17 11/1
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 13/1
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 16/2
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 17/1,2
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 17/2
நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள் – திருமுறை6:19 6/1
ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 2/3,4
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்து கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே – திருமுறை6:22 5/4
தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை6:23 4/1
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி – திருமுறை6:24 1/1,2
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:24 2/4
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞான
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:24 4/1,2
பொன் அப்பா ஞான பொருள் அப்பா தந்து அருளே – திருமுறை6:24 16/4
தேன் பாடல் அன்பு_உடையார் செய பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞான
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:24 20/1,2
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:24 31/3
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் – திருமுறை6:24 68/2
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:25 8/3
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:25 13/3
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:25 17/1
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய் பரமமே பரம ஞான
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:25 21/3,4
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:25 23/3
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:25 32/1
நவ நெறி கடந்ததோர் ஞான மெய் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே – திருமுறை6:26 22/2
உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்திபுரத்தவா – திருமுறை6:29 1/1
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் – திருமுறை6:29 2/3
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும் – திருமுறை6:29 3/2
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்து பூரண ஞான நோக்கு அளித்த – திருமுறை6:29 4/2
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:29 5/2
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:29 6/1
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே – திருமுறை6:29 7/4
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:29 9/4
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே – திருமுறை6:30 5/4
அழகனே ஞான அமுதனே என்றன் அப்பனே அம்பலத்து அரசே – திருமுறை6:30 9/1
தாயும் என் ஒருமை தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் – திருமுறை6:30 11/1
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான
சுந்தர வடிவ சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே – திருமுறை6:30 20/1,2
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:31 3/4
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:34 1/2
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:34 7/1
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே – திருமுறை6:35 3/4
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் – திருமுறை6:36 2/2
தனிப்படு ஞான வெளியிலே இன்ப தனி நடம் புரி தனி தலைவா – திருமுறை6:37 1/3
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 7/3,4
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே – திருமுறை6:38 2/2
ஞான அமுதம்-அது நான் அருந்த ஞான – திருமுறை6:38 8/2
ஞான அமுதம்-அது நான் அருந்த ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே – திருமுறை6:38 8/2,3
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான
தேகா கதவை திற – திருமுறை6:38 10/3,4
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி – திருமுறை6:41 1/1
நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த – திருமுறை6:41 2/3
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் – திருமுறை6:42 2/1
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே – திருமுறை6:42 4/3
சிற்பரம் சுடரே தற்பர ஞான செல்வமே சித்து எலாம் புரியும் – திருமுறை6:42 5/3
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:42 11/4
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே – திருமுறை6:42 18/2,3
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே – திருமுறை6:42 19/1
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை – திருமுறை6:43 9/3
திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞான
குருவாம் எனை காக்கும் கோவாம் பரு வரையின் – திருமுறை6:43 11/1,2
புயலானை மழையானை அதிர்ப்பினானை போற்றிய மின்_ஒளியானை புனித ஞான
செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:48 7/1,2
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் – திருமுறை6:49 7/3
கொன் செயல் ஒழித்த சத்திய ஞான கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 9/4
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியை – திருமுறை6:49 19/1
நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 26/4
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:49 27/3
உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை – திருமுறை6:49 28/1
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை – திருமுறை6:49 28/2
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும் – திருமுறை6:49 28/3
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 28/4
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞான பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளை – திருமுறை6:49 30/3
நடை அறியா திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் – திருமுறை6:50 4/3
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/3,4
தேற்றம் மிகு பசும்பொன்னை செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னை – திருமுறை6:52 5/3
தான் புனைந்தான் ஞான சபை தலைவன் தேன் புனைந்த – திருமுறை6:55 1/2
சவுந்தரிக்கு கண்_அனையான் ஞான சபை – திருமுறை6:55 2/3
இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து – திருமுறை6:55 9/3,4
தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 1/4
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 2/4
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 3/4
சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 4/4
செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 5/4
செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 6/4
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 7/4
செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 8/4
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 9/4
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 10/4
தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:56 11/4
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் – திருமுறை6:59 10/2
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:60 1/4
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே – திருமுறை6:60 21/1
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:60 27/2
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:60 49/4
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:60 80/3
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:60 87/3
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:64 24/2
ஞானாகர சுடரே ஞான மணி_விளக்கே – திருமுறை6:64 28/1
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார் – திருமுறை6:64 51/1
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் – திருமுறை6:65 1/35
தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர் – திருமுறை6:65 1/97
ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும் – திருமுறை6:65 1/245
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே – திருமுறை6:65 1/1052
தித்திக்கும் ஞான திரு_அருள் மருந்தே – திருமுறை6:65 1/1324
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே – திருமுறை6:65 1/1332
ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1506
நலம் கொள புரிந்திடு ஞான யாகத்திடை – திருமுறை6:65 1/1541
நாதமும் கடந்த ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1544
நண்ணிய புண்ணிய ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1546
நலம் எலாம் அளித்த ஞான மெய் கனலே – திருமுறை6:65 1/1548
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:66 3/1
நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே – திருமுறை6:66 4/4
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:66 10/1
சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே – திருமுறை6:68 2/4
நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே – திருமுறை6:68 6/2
துன்பு எலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே – திருமுறை6:70 1/2
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:70 4/1
சொல்லவா எனக்கு துணையவா ஞான சுகத்தவா சோதி அம்பலவா – திருமுறை6:70 6/2
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க – திருமுறை6:70 8/3
சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை – திருமுறை6:71 10/1,2
முத்தியும் ஞான மெய் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் – திருமுறை6:72 6/3
பரமான சிதம்பர ஞான சபாபதியே – திருமுறை6:75 8/1
நயத்தொடு வருவித்திடும் ஒரு ஞான நாட்டமும் கற்ப கோடியினும் – திருமுறை6:77 5/2
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:79 5/4
வாழி சிவ ஞான வழி – திருமுறை6:81 10/4
தடையே முழுதும் தவிர்த்து அருளி தனித்த ஞான அமுது அளித்து – திருமுறை6:82 1/2
வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் – திருமுறை6:82 5/2
புலையை தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா – திருமுறை6:82 10/1
காட்டினை ஞான அமுது அளித்தாய் நல் கனகசபை – திருமுறை6:84 3/1
கருத்து ஒழிய ஞான கருத்து இயைந்து நாதன் – திருமுறை6:85 5/3
ஞான அமுது எனக்கு நல்கியதே வான – திருமுறை6:85 6/2
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:86 2/4
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:86 13/4
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:86 14/2
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:88 2/2
தடையே தவிர்க்கும் கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:88 4/3
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:89 6/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:89 10/1
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:90 5/1
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:91 8/4
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:91 10/3
தனி நாயகனே கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:92 1/3
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசை கண்டுகொண்டேன் – திருமுறை6:92 6/3
ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும் – திருமுறை6:93 17/3
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:93 18/3
ஞான நாடக காட்சியே நாம் பெறல் வேண்டும் – திருமுறை6:95 7/2
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து – திருமுறை6:95 8/2
தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின் – திருமுறை6:95 12/4
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:97 9/4
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – திருமுறை6:98 1/2
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:98 5/3
அகம் அறிந்தீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:98 18/3
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:98 27/3
பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழை பேசுவீரே – திருமுறை6:99 3/4
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:101 5/2
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:101 44/1
மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர் சேவடியின் – திருமுறை6:101 45/3
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:103 4/1
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:106 27/4
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:106 36/4
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:106 87/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:106 89/4
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் – திருமுறை6:106 93/2
கருணை கொடியே ஞான சிவகாம கொடியே அருளுகவே – திருமுறை6:107 2/4
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:107 3/3
கோல கொடியே சிவ ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 4/4
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் – திருமுறை6:107 7/3
பாட்டை புனைந்து பரிசு அளித்த பரம ஞான பதி கொடியே – திருமுறை6:107 10/2
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:108 9/1,2
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் – திருமுறை6:108 28/3
பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல – திருமுறை6:108 35/2
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான
மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே – திருமுறை6:108 43/3,4
உத்தர ஞான சிதம்பரமே – கீர்த்தனை:1 28/1
வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா – கீர்த்தனை:1 85/2
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – கீர்த்தனை:1 86/2
ஞான சிதம்பர நாட்டாரே – கீர்த்தனை:1 91/2
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே – கீர்த்தனை:1 94/2
ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே – கீர்த்தனை:1 97/1
ஞான நடத்தவனே பர ஞானி இடத்தவனே – கீர்த்தனை:1 105/1
ஞான வரத்தவனே சிவஞான புரத்தவனே – கீர்த்தனை:1 105/2
ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே – கீர்த்தனை:1 106/1
சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே – கீர்த்தனை:1 113/1
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – கீர்த்தனை:1 114/1
துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே – கீர்த்தனை:1 115/1
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – கீர்த்தனை:1 116/1
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 188/2
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 188/2
நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 189/2
நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 189/2
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 190/2
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 190/2
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 191/2
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 191/2
நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 192/2
நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 192/2
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 193/2
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 193/2
நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 194/2
நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 194/2
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 195/2
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 195/2
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 196/2
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 196/2
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 197/2
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 197/2
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண – கீர்த்தனை:1 200/3
பரிபூரண ஞான சிதம்பர – கீர்த்தனை:1 206/1
சிவ ஞான பதாடக நாடக – கீர்த்தனை:1 207/1
ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி – கீர்த்தனை:1 213/1
ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 14/2
ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை – கீர்த்தனை:3 15/1
ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே – கீர்த்தனை:6 6/2
நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே – கீர்த்தனை:6 14/1
மன்று எனும் ஞான ஆகாயனடி – கீர்த்தனை:9 3/4
சத்துவ ஞான வடிவாண்டி சிவ – கீர்த்தனை:10 9/3
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான
பதி செயும் சித்திகள் பற்பலவாக பாரிடை வானிடை பற்பல காலம் – கீர்த்தனை:11 11/1,2
முத்தியை பெற்றேன் அ முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன் என்று உந்தீபற – கீர்த்தனை:12 10/1,2
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – கீர்த்தனை:13 4/1
ஞான நடேசரே வாரீர் – கீர்த்தனை:17 53/3
ஞான வெளியில் நடிக்கும் மருந்து – கீர்த்தனை:20 6/2
ஞான மருந்து இ மருந்து சுகம் – கீர்த்தனை:21 1/1
ஞான வெளியில் நடிக்கும் மருந்து – கீர்த்தனை:21 7/2
சத்திய ஞான தயாநிதி பாதம் – கீர்த்தனை:24 12/4
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் – கீர்த்தனை:25 5/1
நித்திய ஞான நிறை அமுது உண்டனன் – கீர்த்தனை:25 5/3
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது – கீர்த்தனை:25 9/2
ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்னவே – கீர்த்தனை:29 15/2
பரம ஞான அமுதம் அளிக்கின்றாய் தனிக்கவே – கீர்த்தனை:29 46/2
துட்ட வினையை தீர்த்து ஞான சுடர் உள் ஏற்றியே – கீர்த்தனை:29 49/3
எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ – கீர்த்தனை:29 90/4
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 93/2
நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே – கீர்த்தனை:31 10/1
பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞான கூத்தாடுகின்றார் – கீர்த்தனை:35 13/1
நமுதன் முதல் பல நன்மையுமாம் ஞான
அமுதர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 20/1,2
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் – கீர்த்தனை:38 5/1
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – கீர்த்தனை:41 12/3
உரு தகு நானிலத்திடை நீள் மல தடை போய் ஞான உரு படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத – கீர்த்தனை:41 19/2
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – கீர்த்தனை:41 35/4
நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று – கீர்த்தனை:41 40/2
ஞான யோகத்தினை நண்ணினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/1
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம் – தனிப்பாசுரம்:2 33/2
புறத்து அணுகி திரு_மதிலின் புறத்தினும் நல் திரு_குளத்தின் புறத்தும் ஞான
திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின் – தனிப்பாசுரம்:3 33/1,2
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் – தனிப்பாசுரம்:10 16/1,2
ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 2/4
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 1/4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 2/4
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – தனிப்பாசுரம்:13 3/3
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 3/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 4/4
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – தனிப்பாசுரம்:13 5/3
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 5/4
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – தனிப்பாசுரம்:13 6/1
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 6/4
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 7/4
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 8/4
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 9/4
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – தனிப்பாசுரம்:13 10/2
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 10/4
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – தனிப்பாசுரம்:16 6/1
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – தனிப்பாசுரம்:18 2/1,2
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – தனிப்பாசுரம்:22 1/3
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4
நலம்கொள் சிவயோக மணம் நால் திசையும் மணக்கும் ஞான மணம் கந்திக்கும் மோன மணம் நாறும் – தனிப்பாசுரம்:29 1/1
ஞான காரண ஞான மெய் சொருப – திருமுகம்:2 1/29
ஞான காரண ஞான மெய் சொருப – திருமுகம்:2 1/29
ஞான நாடக ஞானசம்பந்த – திருமுகம்:2 1/30
தே ஆண்ட ஞான தெள் அமுது அருந்திய – திருமுகம்:2 1/38
ஞான தேசிகனே – திருமுகம்:2 1/68

மேல்


ஞான_கடலே (2)

கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை4:10 1/4
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை4:10 4/4

மேல்


ஞான_கண் (1)

கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:66 5/1

மேல்


ஞான_சிகாமணியே (3)

திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 2/4
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 3/4

மேல்


ஞான_நாடகம் (1)

நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே – திருமுறை2:12 8/1

மேல்


ஞான_நாயகி (1)

ஞான_நாயகி ஒருபுடை அமர்ந்த நம்பனார்க்கு ஒரு நல் தவ பேறே – திருமுறை5:42 10/3

மேல்


ஞான_பால் (1)

பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை4:9 2/3

மேல்


ஞான_போனகரை (1)

பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:24 31/3

மேல்


ஞான_மலரே (1)

மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 1/4

மேல்


ஞான_மலையே (1)

வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே
நயமான உரையே நடுவான வரையே நடராஜ துரையே நடராஜ துரையே – கீர்த்தனை:1 116/1,2

மேல்


ஞான_மலையை (1)

ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – தனிப்பாசுரம்:12 2/4

மேல்


ஞான_மழை (1)

மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே – திருமுறை5:9 12/3

மேல்


ஞானசத்தி (1)

நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள் – திருமுறை6:60 11/1

மேல்


ஞானசபை (2)

சண்டாள கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபை தலைவன் உம்மை – திருமுறை6:99 4/3
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:106 17/1

மேல்


ஞானசபையான் (1)

நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே – கீர்த்தனை:1 166/1

மேல்


ஞானசம்பந்த (10)

திலக நல் காழி ஞானசம்பந்த தெள் அமுதாம் சிவ குருவே – திருமுறை4:9 1/4
சித்த நல் காழி ஞானசம்பந்த செல்வமே எனது சற்குருவே – திருமுறை4:9 3/4
உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே – திருமுறை4:9 5/4
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை4:9 11/4
சைவம் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்த
பேர் கொண்டு அழைத்தாண்டி – திருமுறை5:53 12/1,2
சைவம் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்த
பேர் கொண்டு அழைத்தாண்டி – கீர்த்தனை:10 12/1,2
ஞானசம்பந்த நாயகன் அருளால் – தனிப்பாசுரம்:30 2/38
இலகு சீர் கூடல் மடாலயத்து அமர்ந்த எழில் திரு_ஞானசம்பந்த – தனிப்பாசுரம்:30 3/3
ஞான நாடக ஞானசம்பந்த
தேவ தேவ சிவசிவசிவ என – திருமுகம்:2 1/30,31
ஆன சம்பந்த நல் ஆறு முக திரு_ஞானசம்பந்த – திருமுகம்:2 1/67

மேல்


ஞானசம்பந்தர் (1)

சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில் – திருமுறை1:4 41/3

மேல்


ஞானசம்பந்தன் (1)

எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை4:9 4/4

மேல்


ஞானத்தின் (1)

நூல் வகை ஞானத்தின் நுவலுகின்றதோர் – தனிப்பாசுரம்:2 24/2

மேல்


ஞானத்து (1)

போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை5:46 9/3

மேல்


ஞானத்தை (2)

பம்பு சீர் அருள் பொழிதரு முகிலை பரம ஞானத்தை பரம சிற்சுகத்தை – திருமுறை2:4 3/3
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:96 4/1

மேல்


ஞானபந்தன் (1)

பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை4:9 2/4

மேல்


ஞானம் (29)

பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை1:1 2/3
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/51
ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபிமானம் – திருமுறை1:2 1/703
நானும் ஒழியாது ஒழிந்து ஞானம் ஒழியாது ஒழிந்து – திருமுறை1:3 1/109
ஞானம் வந்தால் அன்றி நலியாதால் ஞானம்-அது – திருமுறை1:3 1/1252
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே – திருமுறை1:6 46/4
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால் – திருமுறை1:8 80/1
ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:51 8/1
ஞானம் என்பதில் ஓர் அணுத்துணையேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் – திருமுறை2:52 6/1
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம்
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 4/3,4
ஆர்ந்த ஞானம் உறும் அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே – திருமுறை5:16 7/4
பேறு முக பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை5:44 1/2,3
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2
ஞானம் மேவுதற்கு என் செய கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே – திருமுறை6:5 9/4
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும் – திருமுறை6:12 14/3
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 84/3
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என் – திருமுறை6:25 29/3
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே – திருமுறை6:31 6/2
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் – திருமுறை6:59 6/3
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் – திருமுறை6:85 4/2
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் – திருமுறை6:90 2/1
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:107 8/3,4
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 59/2
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது – கீர்த்தனை:12 5/1
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது – கீர்த்தனை:25 8/3
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/57

மேல்


ஞானம்-அது (1)

ஞானம் வந்தால் அன்றி நலியாதால் ஞானம்-அது
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை1:3 1/1252,1253

மேல்


ஞானம்_இலேன் (1)

ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 59/2

மேல்


ஞானம்_உடையார் (1)

தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/57

மேல்


ஞானமயமான (1)

நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை2:78 10/1

மேல்


ஞானமாம் (1)

திரு_மகள் கலை_மகள் சிறந்த ஞானமாம்
குருமகள் மூவரும் கூடி வாழ்வது – தனிப்பாசுரம்:2 10/1,2

மேல்


ஞானமும் (4)

ஞானமும் அதனால் அடை அனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி – திருமுறை6:30 6/1
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் – திருமுறை6:39 8/2
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:108 27/2
அரும் சிவ ஞானமும் அமல இன்பமும் – தனிப்பாசுரம்:2 29/1

மேல்


ஞானமே (6)

உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே – திருமுறை2:100 5/3
பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதன பொருள் வைப்பே – திருமுறை5:17 5/3
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:25 34/1
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத – திருமுறை6:42 16/1
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும் – திருமுறை6:77 9/3
புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே – கீர்த்தனை:29 52/4

மேல்


ஞானமொடு (1)

திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – தனிப்பாசுரம்:20 2/2,3

மேல்


ஞானவான் (2)

வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் – திருமுறை2:99 4/3
நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞானவான்
ஆனான் அம்பலத்து எம்மான் – திருமுறை6:74 5/3,4

மேல்


ஞானாகர (1)

ஞானாகர சுடரே ஞான மணி_விளக்கே – திருமுறை6:64 28/1

மேல்


ஞானாதீதம் (1)

பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாச பிரகாசம் – திருமுறை1:1 2/19

மேல்


ஞானாமுதம் (1)

சிதம் பெறு ஞானாமுதம் தரும் மதுரை சிதம்பர மா தபோநிதியே – தனிப்பாசுரம்:30 4/4

மேல்


ஞானானந்த (1)

சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 32/4

மேல்


ஞானானந்தம் (1)

ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம்
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 10/1,2

மேல்


ஞானானுபவ (1)

பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாச பிரகாசம் – திருமுறை1:1 2/19

மேல்


ஞானி (4)

ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:51 8/1
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை2:95 1/4
ஞான நடத்தவனே பர ஞானி இடத்தவனே – கீர்த்தனை:1 105/1
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2

மேல்


ஞானிகள் (5)

நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே – திருமுறை1:6 51/4
போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே – திருமுறை2:58 6/2
அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனை காப்பது உன் தன்மையே – திருமுறை5:20 7/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 5/4
நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே – திருமுறை6:75 7/2

மேல்


ஞானியர் (1)

நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் – திருமுறை1:2 1/444

மேல்


ஞானியர்-தம் (2)

வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை1:5 34/2
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம்
கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:64 7/2,3

மேல்


ஞானியரே (1)

தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை3:17 10/3

மேல்


ஞானோதய (1)

ஞானோதய அமுதம் நான் அருந்த ஆனா – திருமுறை6:38 5/2

மேல்