சூ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூக்குமம் 1
சூக்குமமாய் 1
சூகரம் 1
சூக்ஷ்மம் 1
சூட்சி 1
சூட்சியாய் 1
சூட்சியால் 1
சூட்சியே 1
சூட்டல் 1
சூட்டி 11
சூட்டிய 6
சூட்டியே 2
சூட்டிலே 1
சூட்டினேன் 1
சூட்டினை 3
சூட்டு 1
சூட்டுகின்றேன் 4
சூட்டுதல் 1
சூட்டுதும் 5
சூட்டும் 3
சூட்டேன் 1
சூட 3
சூடல் 2
சூடா 1
சூடாமணியே 1
சூடி 2
சூடிய 1
சூடீ 1
சூடு 1
சூடுண்ட 2
சூடுண்டு 1
சூடும் 1
சூடுவர் 1
சூடுவார் 1
சூத்திரர்-தம் 1
சூத 4
சூதகமும் 1
சூதகனேன் 1
சூதம் 4
சூதர் 1
சூதாக 1
சூதாடுகின்ற 1
சூதாடுதல் 1
சூதாந்தம் 1
சூதாம் 3
சூதான 1
சூதினையே 1
சூது 18
சூதும் 1
சூதுறும் 1
சூதே 4
சூதை 1
சூதையே 1
சூர் 8
சூர்_முதலை 1
சூர 1
சூரசங்காரரே 2
சூரன் 1
சூரனை 4
சூரிட்ட 1
சூரிய 3
சூரியர் 1
சூரியன் 3
சூரியனை 1
சூல் 3
சூல 8
சூல_படையார் 1
சூல_படையான் 1
சூல_பாணி 1
சூல_பாணியீர் 1
சூலத்து 1
சூலம் 2
சூலி 1
சூலை 2
சூழ் 123
சூழ்க 2
சூழ்கிலேன் 1
சூழ்கின்ற 2
சூழ்கின்றது 1
சூழ்கின்றாய் 2
சூழ்கின்றார் 1
சூழ்கின்றிலை 1
சூழ்கினும் 1
சூழ்ச்சி 7
சூழ்ச்சியிலே 1
சூழ்ச்சியுற 1
சூழ்த்திடீரெனினும் 1
சூழ்ந்த 24
சூழ்ந்தது 3
சூழ்ந்தவர் 2
சூழ்ந்தவர்க்கு 1
சூழ்ந்தவர்க்கும் 1
சூழ்ந்தனர் 12
சூழ்ந்தனன் 1
சூழ்ந்தாய் 1
சூழ்ந்தார் 2
சூழ்ந்தாரோடு 1
சூழ்ந்தானை 1
சூழ்ந்திட 1
சூழ்ந்திடில் 1
சூழ்ந்திடு 1
சூழ்ந்திடுக 1
சூழ்ந்திடும் 3
சூழ்ந்திலையே 1
சூழ்ந்திலையோ 1
சூழ்ந்து 47
சூழ்ந்துகொண்டது 1
சூழ்ந்துசூழ்ந்து 1
சூழ்ந்தும் 1
சூழ்ந்துறு 1
சூழ்ந்தே 4
சூழ்ந்தேன் 2
சூழ்ந்தோர்க்கு 1
சூழ்வது 2
சூழ்வர் 1
சூழ்வார் 1
சூழ்விப்பேன் 1
சூழ்வீர் 1
சூழ்வு 1
சூழ்வு-அதனுக்கு 1
சூழ்வுற்றோர் 1
சூழ்வேன் 2
சூழ்வேனே 1
சூழ 9
சூழல் 3
சூழல்வாய் 1
சூழலார் 1
சூழலாள் 1
சூழலில் 5
சூழலிலே 2
சூழலுள் 1
சூழலே 1
சூழாத 1
சூழாதவரிடம் 1
சூழாது 1
சூழாதேன் 1
சூழு 1
சூழும் 17
சூழுமோ 2
சூழுற்ற 1
சூழுற 1
சூழுறு 1
சூளாத 1
சூளாமணியே 1
சூறை 1
சூறை-தான் 1
சூறைகொண்டு 1
சூறையுறு 1
சூன்றேன் 1
சூனியமே 1

சூக்குமம் (1)

தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் – திருமுறை1:1 2/60

மேல்


சூக்குமமாய் (1)

பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை1:5 6/1

மேல்


சூகரம் (1)

சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லா சூகரம் என மலம் துய்த்தேன் – திருமுறை2:50 10/2

மேல்


சூக்ஷ்மம் (1)

பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம்
பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம் – திருமுறை1:1 2/10,11

மேல்


சூட்சி (1)

சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை1:5 32/4

மேல்


சூட்சியாய் (1)

சூட்சியாய் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெற – திருமுறை1:3 1/74

மேல்


சூட்சியால் (1)

சூட்சியாய் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெற – திருமுறை1:3 1/74

மேல்


சூட்சியே (1)

சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை1:5 32/4

மேல்


சூட்டல் (1)

எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே – திருமுறை6:62 2/3

மேல்


சூட்டி (11)

தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
பாதம் தலை மேல் சூட்டி எனை பணி செய்திடவும் பணித்தனை நான் – திருமுறை6:19 7/2
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்து பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே – திருமுறை6:60 61/1,2
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:60 63/2
மலைக்கு உயர் மா தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:60 64/2
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:60 67/3
வையம் மிசை தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே – திருமுறை6:60 91/2
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:60 93/3
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:60 96/2
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தி – திருமுறை6:60 99/2
புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டி
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே – திருமுறை6:65 1/953,954

மேல்


சூட்டிய (6)

சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:60 11/3
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:60 77/3
துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே – திருமுறை6:65 1/1128
சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே – திருமுறை6:65 1/1130
ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி – கீர்த்தனை:22 33/2
உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய
அபயர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – கீர்த்தனை:35 17/1,2

மேல்


சூட்டியே (2)

நாய்க்கு தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே – கீர்த்தனை:29 59/3,4
குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே
கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே – கீர்த்தனை:29 95/3,4

மேல்


சூட்டிலே (1)

ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:25 8/1

மேல்


சூட்டினேன் (1)

உரு வளரும் மணி முடியாய் சூட்டினேன் கண்களிலே ஒற்றிக்கொண்டேன் – திருமுகம்:5 9/3

மேல்


சூட்டினை (3)

நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உற சூட்டினை அந்தோ – திருமுறை6:24 14/2
வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே – திருமுறை6:75 6/4
நாய்க்கும் ஓர் தவிசு இட்டு பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் – திருமுறை6:108 31/1

மேல்


சூட்டு (1)

தீயினில் சூட்டு இயல் சேர்தர செலவு இயல் – திருமுறை6:65 1/431

மேல்


சூட்டுகின்றேன் (4)

வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு – திருமுறை6:17 4/2
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 6/4
துதிக்கும் அன்பர் தொழ பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:60 8/4
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:91 2/4

மேல்


சூட்டுதல் (1)

நாய்க்கு தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம் – திருமுறை6:43 3/3

மேல்


சூட்டுதும் (5)

மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 1/4
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 2/4
மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 3/4
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 5/4

மேல்


சூட்டும் (3)

துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை1:6 231/2
தோயும் கமல திரு_அடிகள் சூட்டும் அதிகை தொல் நகரார் – திருமுறை3:13 11/2
சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ – திருமுறை5:22 5/3

மேல்


சூட்டேன் (1)

வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை5:24 3/3

மேல்


சூட (3)

பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை3:3 2/3
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை – திருமுறை3:7 4/1
சூட எடுத்தான் என்று சொல்கின்றேன் நாடு அறிய – திருமுறை6:100 10/2

மேல்


சூடல் (2)

பகை சேர் மதன் பூ சூடல் அன்றி பத_பூ சூட பார்த்து அறியேன் – திருமுறை3:3 2/3
சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே – கீர்த்தனை:1 95/1

மேல்


சூடா (1)

சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன் – திருமுறை3:3 3/3

மேல்


சூடாமணியே (1)

சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என் – திருமுறை6:75 6/2

மேல்


சூடி (2)

வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
அளந்த திரு_கோபுரம் கண்டு அஞ்சலிசெய்து இறைஞ்சி முகில் ஆதி சூடி
இளம் கதிர் வெண் திங்கள் அணி எம்பெருமான் சடை முடி மேல் இலங்கும் தூய – தனிப்பாசுரம்:3 9/2,3

மேல்


சூடிய (1)

இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 9/4

மேல்


சூடீ (1)

பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை1:2 1/458

மேல்


சூடு (1)

கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – தனிப்பாசுரம்:15 3/2

மேல்


சூடுண்ட (2)

துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் – திருமுறை1:6 143/3
சூடுண்ட பூஞைக்கு சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி – திருமுறை1:6 186/1

மேல்


சூடுண்டு (1)

துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர் – திருமுறை5:5 8/2

மேல்


சூடும் (1)

வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும்
கானப்பேர் ஆனந்த காளையே மோனர் உளே – திருமுறை1:2 1/403,404

மேல்


சூடுவர் (1)

எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் – திருமுறை3:16 5/2

மேல்


சூடுவார் (1)

தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார் – திருமுறை1:6 222/2

மேல்


சூத்திரர்-தம் (1)

உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/2

மேல்


சூத (4)

சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 2/4
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – கீர்த்தனை:1 53/2
சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே – கீர்த்தனை:1 53/2
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – கீர்த்தனை:1 188/2

மேல்


சூதகமும் (1)

பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 4/3

மேல்


சூதகனேன் (1)

தூங்கும் மடவார் புலை நாற்ற தூம்பில் நுழையும் சூதகனேன்
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:43 11/3,4

மேல்


சூதம் (4)

சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:24 6/1
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் – கீர்த்தனை:1 122/1
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – கீர்த்தனை:1 150/2
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – கீர்த்தனை:1 151/2

மேல்


சூதர் (1)

களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே – கீர்த்தனை:1 86/1

மேல்


சூதாக (1)

வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாக
சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை – திருமுறை6:93 30/2,3

மேல்


சூதாடுகின்ற (1)

துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2

மேல்


சூதாடுதல் (1)

கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 104/2

மேல்


சூதாந்தம் (1)

சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே – திருமுறை4:2 32/4

மேல்


சூதாம் (3)

துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் – திருமுறை1:8 76/3
சூதாம் தற்போதத்தை சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி – கீர்த்தனை:13 7/2
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன் – தனிப்பாசுரம்:11 1/3

மேல்


சூதான (1)

ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் – தனிப்பாசுரம்:16 6/2

மேல்


சூதினையே (1)

சூதினையே கொண்டு மறை சொல்லுவிப்பர் ஆசிரியர் சூழ்ந்தாரோடு – தனிப்பாசுரம்:28 5/1

மேல்


சூது (18)

சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற – திருமுறை1:2 1/728
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:3 2/1
சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை – திருமுறை2:20 6/3
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை4:1 16/1
துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி – திருமுறை5:55 3/1
சூது நினைப்பாய் எனில் யார்க்கு சொல்வேன் யாரை துணைகொள்வேன் – திருமுறை6:7 8/3
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 9/2
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாத துணை துணையே – திருமுறை6:24 50/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 17/4
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:30 15/2
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே – திருமுறை6:31 8/2
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை – திருமுறை6:64 4/1
சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர் சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலிரே – திருமுறை6:98 18/1
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே – திருமுறை6:108 44/4
சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே – திருமுறை6:108 49/1
சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே – கீர்த்தனை:1 95/1
சூது இலா மெய் சிற்றம்பலத்து சோதி வெல்கவே – கீர்த்தனை:29 100/3

மேல்


சூதும் (1)

சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை4:1 10/3

மேல்


சூதுறும் (1)

சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதி சுடரே – திருமுறை6:60 29/3

மேல்


சூதே (4)

அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை2:103 1/4
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே
&3 மூன்றாம் திருமுறை – திருமுறை3:103 2/4,5
ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை5:49 12/4
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை6:24 41/4

மேல்


சூதை (1)

இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் – கீர்த்தனை:39 4/3

மேல்


சூதையே (1)

தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள் – திருமுறை6:14 3/2

மேல்


சூர் (8)

காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை1:2 1/241
சீர் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர் புடைத்தது – திருமுறை1:2 1/468
உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 1/3
போர் குன்றொடு சூர் புய குன்றும் பொடிசெய் வேல் கை புண்ணியனே – திருமுறை5:15 6/3
உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை5:25 3/1
வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர் – திருமுறை5:32 5/3
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை5:45 1/2
பொல்லாத சூர் கிளையை தடிந்து அமரர் படும் துயர புன்மை நீக்கும் – தனிப்பாசுரம்:7 4/1

மேல்


சூர்_முதலை (1)

உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியை – திருமுறை5:25 3/1

மேல்


சூர (1)

வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை5:50 8/2

மேல்


சூரசங்காரரே (2)

சூரசங்காரரே வாரும் – திருமுறை5:54 7/2
சூரசங்காரரே வாரும் – கீர்த்தனை:16 7/2

மேல்


சூரன் (1)

கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை1:3 1/718

மேல்


சூரனை (4)

சூரனை தடிந்த வீரனை அழியா சுகத்தனை தேன் துளி கடப்பம் – திருமுறை5:40 6/3
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – திருமுறை5:53 4/3
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் – திருமுறை5:55 21/3
தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – கீர்த்தனை:10 4/3

மேல்


சூரிட்ட (1)

சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை2:100 6/1

மேல்


சூரிய (3)

சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடி துணை வருந்த நடந்து – திருமுறை4:2 43/1
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று – திருமுறை6:65 1/283
பர பாசாந்த சுகோதய சூரிய – கீர்த்தனை:1 64/2

மேல்


சூரியர் (1)

சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:26 17/1

மேல்


சூரியன் (3)

சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் – திருமுறை5:54 7/1
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் – கீர்த்தனை:12 3/1
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 7/1

மேல்


சூரியனை (1)

துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை5:55 13/2

மேல்


சூல் (3)

ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காக – திருமுறை1:3 1/289
சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னை – திருமுறை1:6 25/1
தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ – திருமுறை5:9 25/2

மேல்


சூல (8)

சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை1:1 2/39
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை1:8 18/1
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:18 4/4
படை கொள் சூல படம்பக்கநாதரே – திருமுறை2:19 4/2
மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் – திருமுறை2:24 4/3
சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 9/4
சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம் – திருமுறை3:4 10/1
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 3/4

மேல்


சூல_படையார் (1)

சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம் – திருமுறை3:4 10/1

மேல்


சூல_படையான் (1)

மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் – திருமுறை2:24 4/3

மேல்


சூல_பாணி (1)

சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை1:1 2/39

மேல்


சூல_பாணியீர் (1)

சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 9/4

மேல்


சூலத்து (1)

வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/3,4

மேல்


சூலம் (2)

சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை1:8 84/2
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் – தனிப்பாசுரம்:11 7/2

மேல்


சூலி (1)

சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 4/4

மேல்


சூலை (2)

சூலை என நோவாரை சூழ்ந்திலையோ சாலவும் இ – திருமுறை1:3 1/910
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை5:20 6/1

மேல்


சூழ் (123)

மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் – திருமுறை1:1 2/73
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் – திருமுறை1:1 2/83
வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ்
வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை – திருமுறை1:2 1/5,6
கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ்
சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை1:2 1/25,26
சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை1:2 1/81
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ்
தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார் – திருமுறை1:2 1/143,144
பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ்
சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க – திருமுறை1:2 1/161,162
தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியை – திருமுறை1:2 1/189
காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ்
மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாய – திருமுறை1:2 1/241,242
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ்
கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் – திருமுறை1:2 1/353,354
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ்
குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம – திருமுறை1:2 1/409,410
வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ்
பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய – திருமுறை1:2 1/425,426
ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர் – திருமுறை1:2 1/502
ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில் – திருமுறை1:2 1/727
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் – திருமுறை1:3 1/378
செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை1:5 87/2
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை – திருமுறை1:6 131/2
பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் – திருமுறை1:7 43/2
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை1:8 1/1
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வ பெருமான் இவர்-தமை நான் – திருமுறை1:8 26/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை1:8 50/1
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் – திருமுறை1:8 51/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – திருமுறை1:8 55/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை1:8 66/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன் – திருமுறை1:8 74/1
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை1:8 75/1
வாசம் கமழும் மலர் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் – திருமுறை1:8 92/1
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் – திருமுறை1:8 94/1
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை1:8 100/1
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை1:8 109/3
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை1:8 109/3
புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் – திருமுறை1:8 113/1
கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை1:8 113/2
மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் – திருமுறை1:8 113/3
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 113/4
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை1:8 118/1
அனம் சூழ் ஒற்றி பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே – திருமுறை1:8 119/1
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை1:8 119/2
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய் – திருமுறை1:8 119/3
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 119/4
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே – திருமுறை1:8 129/1
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை1:8 135/1
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:16 5/4
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:29 3/3
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:29 5/3
அம்_வண்ணத்தானை அணி பொழில் சூழ் ஒற்றியூர் – திருமுறை2:30 9/3
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:30 18/3
சொல்லின் ஓங்கிய சுந்தர பெருமான் சோலை சூழ் ஒற்றி தொல் நகர் பெருமான் – திருமுறை2:36 4/2
விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே – திருமுறை2:41 7/4
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:43 4/2
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:47 4/3
தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:47 5/4
நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும் – திருமுறை2:56 10/3
துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் – திருமுறை2:74 8/1
குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டை காத்து குணம்_இலியாய் – திருமுறை2:77 1/1
ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை2:82 4/4
துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்ல கேள் கடல் சூழ் உலகத்திலே – திருமுறை2:88 8/1
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாடவீதி – திருமுறை3:1 3/1
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை3:1 8/1
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி – திருமுறை3:3 5/3
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை3:3 13/1
நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் – திருமுறை3:3 16/1
வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர் கா வனம் சூழ் ஒற்றியினார் – திருமுறை3:3 29/1
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை3:3 31/1
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை3:4 3/2
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை3:4 5/2
சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:4 6/2
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை3:4 8/3
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றி கடி நகரார் – திருமுறை3:5 4/1
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை3:8 3/1
நால் ஆரணம் சூழ் வீதியிடை நாடி புகுந்து கண்டு அலது – திருமுறை3:8 3/3
பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:9 10/3
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை3:11 10/2
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 6/2
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 7/2
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 10/2
பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை3:15 1/1
தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் – திருமுறை3:15 4/3
பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:15 5/2
பைத்த அரவ பணி அணிவார் பணை சூழ் ஒற்றி பதி மகிழ்வார் – திருமுறை3:15 6/1
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை3:18 3/1
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை3:18 6/1
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ்
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால் – திருமுறை3:18 6/1,2
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை3:18 9/2
தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ் தேவே – திருமுறை5:6 8/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 9/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை5:7 10/4
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை5:14 3/4
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை5:16 7/2
கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை5:19 10/1
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை5:21 1/3
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை5:29 5/4
புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகை பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே – திருமுறை5:29 8/4
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை5:32 4/3
மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே – திருமுறை5:37 1/4
வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே – திருமுறை5:37 7/4
தூறு இலா வள சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மய தேவே – திருமுறை5:41 2/3
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை5:41 7/4
தண் அளாவிய சோலை சூழ் தணிகை தடத்து அளாவிய தரும நல் தேவே – திருமுறை5:42 9/2
தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை5:48 3/4
சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் – திருமுறை5:49 2/3
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன் – திருமுறை6:5 8/1
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 30/2
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/3
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விட தொடங்குவன் நான் – திருமுறை6:30 12/1
நாகாதிபர் சூழ் நடராசா ஏகா – திருமுறை6:38 3/2
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 18/4
தோல் எலாம் குழைந்திட சூழ் நரம்பு அனைத்தும் – திருமுறை6:65 1/1449
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலா தனி வடிவம் எனக்கு அளித்த பதியே – திருமுறை6:68 2/2,3
பூத்த சுடர் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிக காய்த்து மதி அமுது ஒழுக பழுத்து – திருமுறை6:101 41/1
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள் – திருமுறை6:103 9/3
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – கீர்த்தனை:41 8/4
கண்டல் சூழ் கடற்கரை காண உள்ளது – தனிப்பாசுரம்:2 9/4
கற்றவர் சூழ் இ தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை – தனிப்பாசுரம்:2 34/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – தனிப்பாசுரம்:10 6/1
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் – தனிப்பாசுரம்:10 11/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – தனிப்பாசுரம்:10 22/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன் – தனிப்பாசுரம்:10 30/1
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் – தனிப்பாசுரம்:10 31/1
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 12/4
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – தனிப்பாசுரம்:25 1/4
கண்_இணையாள் நெடும் கடல் சூழ் உலகில் – திருமுகம்:4 1/261

மேல்


சூழ்க (2)

தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – கீர்த்தனை:41 6/3
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் – தனிப்பாசுரம்:17 1/3

மேல்


சூழ்கிலேன் (1)

சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை – திருமுறை2:41 8/3

மேல்


சூழ்கின்ற (2)

துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் – திருமுறை2:20 17/2
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:60 33/3

மேல்


சூழ்கின்றது (1)

தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர் – தனிப்பாசுரம்:16 3/3

மேல்


சூழ்கின்றாய் (2)

சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில் – திருமுறை1:3 1/547
சோக_வாரியில் அழுந்தவும் இயற்றி சூழ்கின்றாய் எனை தொடர்ந்திடேல் தொடரில் – திருமுறை2:38 6/3

மேல்


சூழ்கின்றார் (1)

மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் – திருமுறை6:90 5/3

மேல்


சூழ்கின்றிலை (1)

துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு – திருமுறை1:3 1/503

மேல்


சூழ்கினும் (1)

சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை1:2 1/81

மேல்


சூழ்ச்சி (7)

சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம் – திருமுறை1:3 1/1121
தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து – திருமுறை2:74 6/1
சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 69/2
வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே – திருமுறை5:55 21/1
சூழ்ச்சி அறியாது உழன்றேனை சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின் – திருமுறை6:82 18/2
சூழ்ச்சி அறியாது உழன்றேனை சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின் – திருமுறை6:82 18/2
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம் – திருமுகம்:4 1/253

மேல்


சூழ்ச்சியிலே (1)

சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ – திருமுறை1:3 1/1122

மேல்


சூழ்ச்சியுற (1)

சூழ்ச்சியுற நாசிக்கு சுகந்தம் செய்குவதாய் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய் – திருமுறை6:60 40/2

மேல்


சூழ்த்திடீரெனினும் (1)

சுத்தியாகிய சொல் உடை அணுக்க தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும்
புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:54 10/2,3

மேல்


சூழ்ந்த (24)

நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை1:2 1/323
வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை1:2 1/355
வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த
நம் கருவூர் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின் – திருமுறை1:2 1/427,428
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை1:2 1/481
வீ தூரமா ஓட மெய் தவர்கள் சூழ்ந்த திருவோத்தூரில் – திருமுறை1:2 1/487
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை1:2 1/503
பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய் திருந்தாத – திருமுறை1:3 1/22
சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ் துவண்டு – திருமுறை1:3 1/661
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை1:5 36/2,3
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை1:6 68/1
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 68/2
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை1:6 68/3
சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை1:6 98/3
சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனை குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி – திருமுறை2:17 8/1
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:61 10/2
சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் – திருமுறை2:74 7/2
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை3:1 6/2
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் – திருமுறை3:3 28/1
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த – திருமுறை6:21 6/1
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே – திருமுறை6:26 15/2
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய் சுடரே – திருமுறை6:65 1/1538
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த
நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் – திருமுறை6:90 2/2,3
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:99 4/1
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:101 44/1

மேல்


சூழ்ந்தது (3)

தொண்டரொடும் கூடி சூழ்ந்தது இலை கண்டவரை – திருமுறை1:2 1/600
துள்ளி குதித்து என் மனம் அவரை சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை – திருமுறை3:14 2/3
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:25 26/1

மேல்


சூழ்ந்தவர் (2)

தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 9/2
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தை – திருமுறை6:58 3/2

மேல்


சூழ்ந்தவர்க்கு (1)

தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திட துணியேன் – திருமுறை6:9 6/3

மேல்


சூழ்ந்தவர்க்கும் (1)

வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு மற்று நமை சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு – கீர்த்தனை:1 182/2

மேல்


சூழ்ந்தனர் (12)

செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வராயரே வாரும் – திருமுறை5:54 5/1,2
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறு முகத்தோரே வாரும் – திருமுறை5:54 6/1,2
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங்காரரே வாரும் – திருமுறை5:54 7/1,2
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத்தோரே வாரும் – திருமுறை5:54 8/1,2
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் – திருமுறை5:54 10/1
நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே – திருமுறை6:90 4/3
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:90 8/2
செங்கதிர் தோன்றிற்று தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வராயரே வாரும் – கீர்த்தனை:16 5/1,2
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறு முகத்தோரே வாரும் – கீர்த்தனை:16 6/1,2
சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங்காரரே வாரும் – கீர்த்தனை:16 7/1,2
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத்தோரே வாரும் – கீர்த்தனை:16 8/1,2
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் – கீர்த்தனை:16 10/1

மேல்


சூழ்ந்தனன் (1)

தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 21/3

மேல்


சூழ்ந்தாய் (1)

நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே – கீர்த்தனை:29 14/2

மேல்


சூழ்ந்தார் (2)

பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:90 6/2,3
தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த – திருமுறை6:93 33/2

மேல்


சூழ்ந்தாரோடு (1)

சூதினையே கொண்டு மறை சொல்லுவிப்பர் ஆசிரியர் சூழ்ந்தாரோடு
வாதினையே கொண்டு அதனை வாசிப்பார் மாணாக்கர் வஞ்சம் கொண்டு – தனிப்பாசுரம்:28 5/1,2

மேல்


சூழ்ந்தானை (1)

தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1

மேல்


சூழ்ந்திட (1)

ஏல் வகை இணை_அடி ஏத்தி சூழ்ந்திட – தனிப்பாசுரம்:2 24/4

மேல்


சூழ்ந்திடில் (1)

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி – திருமுறை6:9 2/1

மேல்


சூழ்ந்திடு (1)

சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றி சூழ்ந்திடு வெம் – திருமுறை1:6 173/1

மேல்


சூழ்ந்திடுக (1)

சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க – திருமுறை1:2 1/833

மேல்


சூழ்ந்திடும் (3)

கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை – திருமுறை1:8 10/3
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான் – திருமுறை6:13 72/2
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே – திருமுறை6:101 39/1

மேல்


சூழ்ந்திலையே (1)

சொல்லி திரிந்தும் எனை சூழ்ந்திலையே வல் இயமன் – திருமுறை1:3 1/1186

மேல்


சூழ்ந்திலையோ (1)

சூலை என நோவாரை சூழ்ந்திலையோ சாலவும் இ – திருமுறை1:3 1/910

மேல்


சூழ்ந்து (47)

வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/63
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை1:2 1/221
எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் – திருமுறை1:2 1/233
துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை – திருமுறை1:2 1/249
போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் – திருமுறை1:2 1/351
நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி – திருமுறை1:2 1/411
பூ பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் – திருமுறை1:2 1/463
சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திரு தோள் அழகும் தாழ்ந்திலவாய் – திருமுறை1:3 1/442
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை1:5 56/4
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை1:5 71/1,2
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் – திருமுறை1:5 72/3
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை1:5 87/3,4
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ என சூழ்ந்து அடைந்தேன் – திருமுறை1:6 72/3
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதை சூழ்ந்து கற்று – திருமுறை1:6 161/2
தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம் – திருமுறை2:9 4/3
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 9/4
துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் – திருமுறை2:37 2/1
கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர் கோயில் சூழ்ந்து இன்பம் – திருமுறை2:37 3/3
சுத்தனை ஒற்றி தலம் வளர் ஞான சுகத்தனை சூழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 10/2
வாவி ஏர்பெற பூம் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:42 2/4
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:44 2/3
துள்ளுவார் துள் அடக்கும் தோன்றலே சூழ்ந்து நிறம் – திருமுறை2:45 7/2
சொல்லால் மலர் தொடுத்து சூழ்ந்து அணிந்து வாழேனோ – திருமுறை2:45 15/4
சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து
வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ – திருமுறை2:82 14/1,2
சோற்றுக்கே இதம் சொல்லி பேதையர் சூழல்வாய் துயர் சூழ்ந்து மேல் திசை – திருமுறை2:90 1/3
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை3:1 9/2
பல்லார் சூழ்ந்து பழி தூற்ற படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே – திருமுறை3:2 5/4
தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை3:8 1/3
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை3:11 10/4
தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி – திருமுறை3:12 4/1
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை4:2 87/1
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் – திருமுறை6:19 10/2
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:26 20/3
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா – திருமுறை6:60 14/1
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே – திருமுறை6:60 59/2
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:60 72/4
மயல் அறு மெய் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:60 74/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 13/4
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 7/4
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனை சூழ்ந்து அருளே – திருமுறை6:64 8/4
துன்னும் அனாதியே சூழ்ந்து எனை பிரியாது – திருமுறை6:65 1/1199
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:106 70/3
துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை – கீர்த்தனை:4 3/1
சூழ்ந்து இருமைக்கும் துணையாம் மருந்து – கீர்த்தனை:20 22/4
துள்ளிய நறு மணம் சூழ்ந்து அலர்ந்திடும் – தனிப்பாசுரம்:2 25/2
மருநாள் அ மலர் தடம் சூழ்ந்து எழில் பெறும் அ ஆச்சிரம வனத்துள் போந்து – தனிப்பாசுரம்:2 30/3
சோதி மலையை பழமலையில் சூழ்ந்து வணங்கி கண்டேனே – தனிப்பாசுரம்:12 10/4

மேல்


சூழ்ந்துகொண்டது (1)

குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்ற குறித்து அருளே – திருமுறை1:6 68/4

மேல்


சூழ்ந்துசூழ்ந்து (1)

துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந்து இளைத்து ஒரு தங்கள் – திருமுறை6:77 7/1

மேல்


சூழ்ந்தும் (1)

துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை – திருமுறை1:7 49/2

மேல்


சூழ்ந்துறு (1)

கவசங்கள் என சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் – திருமுறை5:32 1/3

மேல்


சூழ்ந்தே (4)

அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும் – திருமுறை1:2 1/163
என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனை சூழ்ந்தே
நன்று நாடிய நல்லோர் உயிர் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற – திருமுறை6:13 17/1,2
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்க சொல்கின்றவோ என சூழ்ந்தே
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/2,3
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:106 48/4

மேல்


சூழ்ந்தேன் (2)

சோர்ந்தேன் பதைத்து துயர்_கடலை சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் – திருமுறை3:3 31/3
காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன் – திருமுறை5:24 5/1,2

மேல்


சூழ்ந்தோர்க்கு (1)

துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:59 3/3

மேல்


சூழ்வது (2)

சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை – திருமுறை2:41 8/3
சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 69/2

மேல்


சூழ்வர் (1)

அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் என சூழ்வர்
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 146/3,4

மேல்


சூழ்வார் (1)

காண்டும் என சூழ்வார் களித்து – திருமுறை1:4 88/4

மேல்


சூழ்விப்பேன் (1)

ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை2:82 4/4

மேல்


சூழ்வீர் (1)

தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே – திருமுறை6:99 8/4

மேல்


சூழ்வு (1)

சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுக பெரும் பதி நின் – திருமுறை6:32 3/1

மேல்


சூழ்வு-அதனுக்கு (1)

சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு
எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம – திருமுறை1:3 1/1244,1245

மேல்


சூழ்வுற்றோர் (1)

வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர்
விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழ – திருமுறை1:2 1/48,49

மேல்


சூழ்வேன் (2)

சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து – திருமுறை2:82 14/1
சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தை துதித்து வாழ்த்தி – திருமுறை6:75 4/3

மேல்


சூழ்வேனே (1)

தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே – திருமுறை2:82 13/4

மேல்


சூழ (9)

கூர் இலை வேலவன் ஆதியர் சூழ
தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலைவல்லிக்கு – திருமுறை1:2 1/359,360
கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் – திருமுறை2:42 4/1
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் – திருமுறை2:42 4/3
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை4:2 31/3
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை4:8 2/2
தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே – திருமுறை6:22 9/3
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:36 7/1
பிணக்கு அறியா பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 95/4
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:105 3/3

மேல்


சூழல் (3)

கார்_இருளில் செல்ல கலங்குகின்றாய் மாதர் சூழல்
பேர்_இருளில் செல்வதனை பேர்த்திலையே பார் இடையோர் – திருமுறை1:3 1/615,616
துன்புறா தணி கதி சூழல் வாய்க்குமே – திருமுறை5:47 5/4
கரு அலகிட்டு அருள்புரியும் கண்_உடையான் விமானத்தின் கனக சூழல்
மரு அலகின் மணி திரள் மாளிகை மண்டபங்கள் முதல் வகுத்த எல்லாம் – தனிப்பாசுரம்:3 32/1,2

மேல்


சூழல்வாய் (1)

சோற்றுக்கே இதம் சொல்லி பேதையர் சூழல்வாய் துயர் சூழ்ந்து மேல் திசை – திருமுறை2:90 1/3

மேல்


சூழலார் (1)

மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் – திருமுறை5:32 2/1

மேல்


சூழலாள் (1)

ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே – திருமுறை2:22 5/1

மேல்


சூழலில் (5)

அன்பு இலா வஞ்சர்-தம் அவல சூழலில்
என்பு இலா புழு என இரங்கு நெஞ்சமே – திருமுறை5:47 5/1,2
துன்ன பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அ சூழலில் வந்தே – திருமுறை6:102 1/2
துன்பு_இலேன் இனி நான் அருள்_பெரும்_சோதி சூழலில் துலங்குகின்றேனே – திருமுறை6:108 36/4
துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்க சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே – கீர்த்தனை:11 9/1
செப்ப அரும் கோயிலை சேர்ந்த சூழலில் – தனிப்பாசுரம்:2 11/4

மேல்


சூழலிலே (2)

தோளிலே இடை சூழலிலே உந்தி சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் – திருமுறை5:3 9/2
தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான் – திருமுறை6:81 2/3

மேல்


சூழலுள் (1)

துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும் – திருமுறை5:29 5/1

மேல்


சூழலே (1)

சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் – திருமுறை6:13 107/2

மேல்


சூழாத (1)

சூழாதவரிடம் சூழாத ஒற்றி சுடர்_குன்றமே – திருமுறை2:64 8/4

மேல்


சூழாதவரிடம் (1)

சூழாதவரிடம் சூழாத ஒற்றி சுடர்_குன்றமே – திருமுறை2:64 8/4

மேல்


சூழாது (1)

துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான் – திருமுறை6:74 3/3

மேல்


சூழாதேன் (1)

துன்னிய நின் பொன்_அடியை சூழாதேன் ஆயிடினும் – திருமுறை2:20 15/2

மேல்


சூழு (1)

சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்து தொழும்புசெய்திட தோன்றி நின்று அவனை – திருமுறை2:35 7/1

மேல்


சூழும் (17)

சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் – திருமுறை1:2 1/134
தருக்கு ஆள் துப்பு அள்ளி தகை கொண்டோர் சூழும்
திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மரு காட்டும் – திருமுறை1:2 1/145,146
நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை – திருமுறை1:2 1/401
வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும்
வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும் – திருமுறை1:2 1/421,422
சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு – திருமுறை1:3 1/1244
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள – திருமுறை1:6 175/3
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை1:6 214/2
சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து – திருமுறை2:82 14/1
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை3:8 1/1
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை5:2 11/2
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 3/4
சூழும் கலப மயில் அரசை துதியா பவமும் போதாமல் – திருமுறை5:19 3/2
மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச்சை – திருமுறை5:20 7/3
சூழும் நெஞ்சு இருளை போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே – திருமுறை5:37 10/3
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 3/4
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 7/4
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/4

மேல்


சூழுமோ (2)

துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை5:55 13/2
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ
என்னை கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ – கீர்த்தனை:29 13/2,3

மேல்


சூழுற்ற (1)

ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை – திருமுறை1:3 1/329

மேல்


சூழுற (1)

சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் – திருமுறை6:106 17/3

மேல்


சூழுறு (1)

சுத்த மா நிலையில் சூழுறு விரிவை – திருமுறை6:65 1/811

மேல்


சூளாத (1)

சூளாத முக்கண் மணியே விடேல் உனை சூழ்ந்த என்னை – திருமுறை1:6 98/3

மேல்


சூளாமணியே (1)

தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை5:21 10/3

மேல்


சூறை (1)

பெரும் பேய் மாதர் பிண குழியில் பேதை மனம் போந்திட சூறை
துரும்பே என்ன சுழல்கின்றேன் துணை ஒன்று அறியேன் துனியேனே – திருமுறை2:43 3/3,4

மேல்


சூறை-தான் (1)

சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும் – திருமுறை1:3 1/1129

மேல்


சூறைகொண்டு (1)

அகழ்ந்து எனது உளத்தை சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய் – திருமுறை2:68 2/2

மேல்


சூறையுறு (1)

துட்டன் என விட துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில் – திருமுறை2:85 8/3

மேல்


சூன்றேன் (1)

துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:23 9/2

மேல்


சூனியமே (1)

ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியா சூனியமே
ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி – திருமுறை1:3 1/1235,1236

மேல்