நொ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

நொடிக்கின்றார் (3)

தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1665/4
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4222/4

மேல்


நொடிக்கும்படிக்கு (1)

நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை2:78 1505/4

மேல்


நொடிக்குளே (1)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:28 875/2

மேல்


நொடித்தனன் (1)

நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 3564/2

மேல்


நொடித்தான்மலையில் (1)

சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற – திருமுறை3:2 1962/553

மேல்


நொடித்தீர் (1)

இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:139 5687/4

மேல்


நொடிப்பார் (1)

ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார்
கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ – திருமுறை6:142 5763/3,4

மேல்


நொடிப்பு (1)

நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை1:43 463/3

மேல்


நொந்தது (1)

வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது – திருமுறை6:108 4912/2,3

மேல்


நொந்ததும் (3)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:28 875/2
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3451/4
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3451/4

மேல்


நொந்தனன் (1)

நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் – திருமுறை2:28 875/2

மேல்


நொந்தால் (1)

நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை3:3 1965/1015

மேல்


நொந்திடவே (1)

செம்மை மா மலர் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் – திருமுறை2:37 990/3

மேல்


நொந்திடுவேனோ (1)

ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:69 1331/1

மேல்


நொந்து (20)

பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய் பார்க்கின்றேன் நின் – திருமுறை1:7 130/1
தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா – திருமுறை1:15 229/2
நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம் – திருமுறை1:21 286/1
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:11 677/1
ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் – திருமுறை2:27 860/1
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1082/2
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 1140/2
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனை – திருமுறை2:60 1224/2
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை2:86 1631/3
மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்கு – திருமுறை3:2 1962/615
நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத – திருமுறை3:4 2054/2
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணி – திருமுறை3:6 2209/2
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்கண்ணாலும் – திருமுறை3:6 2353/2
சிந்தை நொந்து இ சிறிய அடியனேன் – திருமுறை4:9 2658/1
உடையாரிடை என் உளம் நொந்து வாடி – திருமுறை4:14 2723/3
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 3432/3
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் – திருமுறை6:13 3449/2
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே – திருமுறை6:13 3453/4
பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3472/3
விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே – திருமுறை6:93 4733/2

மேல்


நொந்துநொந்து (3)

நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ – திருமுறை1:21 282/4
சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் – திருமுறை2:44 1057/1
சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரை – திருமுறை2:66 1302/2

மேல்


நொந்தே (1)

வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே – திருமுறை1:37 409/4

மேல்


நொந்தேன் (2)

நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை1:6 98/2
நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை1:47 497/4

மேல்


நொய்ய (1)

வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே – திருமுறை6:115 5195/1

மேல்


நொய்யவனேன் (1)

நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன்
தாயானவனே என் தந்தையே அன்பர்-தமை – திருமுறை2:59 1216/1,2

மேல்


நொறில் (2)

நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை – திருமுறை3:3 1965/583
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் – திருமுறை3:3 1965/758

மேல்