நே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 4
நேசத்தில் 1
நேசத்தின் 1
நேசம் 14
நேசம்_இலாய் 1
நேசம்_உடையீரே 1
நேசர் 1
நேசர்-தமை 1
நேசரே 1
நேசன் 8
நேசனும் 1
நேசனே 1
நேசிக்க 1
நேசிக்கும் 2
நேசித்த 1
நேசித்தேன் 1
நேடக 1
நேடி 3
நேடிய 2
நேடியும் 3
நேடில் 1
நேடுவதே 1
நேத்திரங்கள் 2
நேம் 1
நேமி 2
நேய 12
நேய_மொழியாள் 1
நேயத்தவர் 1
நேயத்தவர்க்கும் 1
நேயத்தால் 1
நேயத்து 1
நேயம் 27
நேயம்-அது 1
நேயமாம் 1
நேயமுடன் 1
நேயமும் 7
நேயமே 4
நேயமொடு 1
நேயர் 10
நேயர்-தம்மோடு 1
நேயர்கள்-தம் 1
நேயரே 2
நேயரை 1
நேயவனே 1
நேயன் 2
நேயனடி 1
நேயனே 10
நேயனை 1
நேயனோடு 1
நேயா 2
நேயானுகூல 1
நேர் 123
நேர்_இலா 1
நேர்_இழையவர்-தம் 1
நேர்கண்டு 1
நேர்கிலா 1
நேர்கிலை 1
நேர்கின்ற 2
நேர்கின்றதால் 1
நேர்ந்த 3
நேர்ந்தது 2
நேர்ந்தபடி 1
நேர்ந்தவர்க்கும் 1
நேர்ந்தவர்கள் 1
நேர்ந்தனையே 1
நேர்ந்தார் 2
நேர்ந்தார்க்கு 1
நேர்ந்தாலும் 1
நேர்ந்திட்டேன் 1
நேர்ந்திட 1
நேர்ந்திடா 2
நேர்ந்திடில் 1
நேர்ந்திடிலோ 1
நேர்ந்திடும் 2
நேர்ந்திடுமோ 2
நேர்ந்திலனே 1
நேர்ந்திலை 1
நேர்ந்து 16
நேர்ந்துகொண்டு 1
நேர்ந்துளேன் 1
நேர்ந்தேன் 1
நேர்படுமோ 1
நேர்மை 2
நேர்மை-தனை 1
நேர்மைகள் 1
நேர்மையும் 1
நேர 1
நேரம் 3
நேரா 5
நேராய் 3
நேரார் 1
நேராவே 1
நேரிட்டதால் 1
நேரிடில் 1
நேரில் 1
நேரினும் 3
நேரீர் 3
நேருதியே 1
நேரும் 4
நேரும்_இல்லார் 1
நேருற 2
நேருறும் 1
நேரே 1
நேற்று 3
நேற்றை 2

நேச (4)

நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை2:87 1640/1
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/2
வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – திருமுறை6:115 5196/2

மேல்


நேசத்தில் (1)

கூச தெரியேன் குணம் அறியேன் நேசத்தில்
கொள்ளுவார் உன் அடிமை கூட்டத்தார் அல்லாதார் – திருமுறை3:4 2059/2,3

மேல்


நேசத்தின் (1)

பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின்
பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை – திருமுறை3:3 1965/1064,1065

மேல்


நேசம் (14)

நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலா பொய்_அடியேன் – திருமுறை2:16 744/1
நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய் – திருமுறை2:52 1140/1
நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் – திருமுறை2:61 1242/1
நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் – திருமுறை2:98 1863/2
பேசும் துறையூர் பிறை_சூடீ நேசம் உறவு – திருமுறை3:2 1962/458
நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே – திருமுறை3:2 1962/619
நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை – திருமுறை3:2 1962/684
ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் – திருமுறை3:3 1965/792
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் – திருமுறை3:21 2517/3
நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி – திருமுறை4:12 2704/1
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை4:15 2744/3
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/2
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/2
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:134 5584/4

மேல்


நேசம்_இலாய் (1)

ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய்
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை3:3 1965/792,793

மேல்


நேசம்_உடையீரே (1)

அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:134 5584/4

மேல்


நேசர் (1)

ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் – திருமுறை6:70 4390/1

மேல்


நேசர்-தமை (1)

பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2

மேல்


நேசரே (1)

நேசரே நீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4389/3

மேல்


நேசன் (8)

நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை3:3 1965/386
நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக – திருமுறை3:3 1965/388
நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் – திருமுறை3:3 1965/390
நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் – திருமுறை3:3 1965/392
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து – திருமுறை3:3 1965/394
நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலா – திருமுறை3:3 1965/396
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை3:3 1965/398
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை3:3 1965/400

மேல்


நேசனும் (1)

நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை4:15 2753/1

மேல்


நேசனே (1)

தேவ நேசனே சிறக்கும் ஈசனே – திருமுறை1:10 169/1

மேல்


நேசிக்க (1)

கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க
எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் – திருமுறை3:4 2002/1,2

மேல்


நேசிக்கும் (2)

நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லாத நெஞ்ச புலையனேன் இ உலகில் – திருமுறை2:16 727/1,2
நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல் – திருமுறை3:2 1962/657

மேல்


நேசித்த (1)

நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை3:3 1965/423

மேல்


நேசித்தேன் (1)

நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன்
மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே – திருமுறை1:17 249/1,2

மேல்


நேடக (1)

ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – திருமுறை6:118 5246/1

மேல்


நேடி (3)

நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி
மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் – திருமுறை3:5 2162/2,3
நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடி செல்வோர் – திருமுறை3:6 2275/1
பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி
ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் – திருமுறை3:16 2492/1,2

மேல்


நேடிய (2)

நாடிய மாதவர் நேடிய பாதம் – திருமுறை6:68 4321/3
நேடிய கீதம் பாடிய பாதம் – திருமுறை6:116 5218/2

மேல்


நேடியும் (3)

நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை5:2 3067/1
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை5:2 3079/1
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:39 3874/2

மேல்


நேடில் (1)

நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் – திருமுறை2:16 753/1

மேல்


நேடுவதே (1)

நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை3:6 2264/4

மேல்


நேத்திரங்கள் (2)

நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் – திருமுறை6:129 5515/2
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:129 5515/2,3

மேல்


நேம் (1)

ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த – திருமுறை3:2 1962/64

மேல்


நேமி (2)

நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் – திருமுறை2:15 721/3
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – திருமுறை6:61 4242/2,3

மேல்


நேய (12)

கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை1:7 120/1
நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை2:78 1506/3
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – திருமுறை2:100 1938/2
நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து – திருமுறை3:3 1965/113
அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேய
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த – திருமுறை3:3 1965/1322,1323
நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3030/1
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/3
நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற – திருமுறை6:89 4691/3
ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே – திருமுறை6:115 5185/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – திருமுறை6:118 5243/1
தூய துரிய பதியில் நேய மறை ஓது – திருமுறை6:121 5264/2
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:134 5582/1

மேல்


நேய_மொழியாள் (1)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை2:78 1506/3

மேல்


நேயத்தவர் (1)

மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞான – திருமுறை3:5 2097/1

மேல்


நேயத்தவர்க்கும் (1)

சுத்த மன் நேயத்தவர்க்கும் எனை போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே – திருமுறை5:1 3032/4

மேல்


நேயத்தால் (1)

நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை3:24 2544/1

மேல்


நேயத்து (1)

அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2489/4

மேல்


நேயம் (27)

நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை1:8 132/2
நேயம் நின் புடை நின்றிடாத என் – திருமுறை1:10 177/1
நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் – திருமுறை1:42 452/1
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை1:42 453/1
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:69 1334/2
மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1392/4
நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ – திருமுறை2:75 1405/3
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1866/4
வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண – திருமுறை3:2 1962/376
நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என – திருமுறை3:3 1965/386
உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் – திருமுறை3:3 1965/815
கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம்
என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் – திருமுறை3:3 1965/840,841
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் – திருமுறை3:3 1965/1340
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு – திருமுறை3:3 1965/1350
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை3:7 2409/1
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை3:7 2409/1
அவ நேயம் மேற்கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் – திருமுறை3:7 2409/2
நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் – திருமுறை3:7 2409/3
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/3
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை5:7 3214/3
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3214/4
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 3381/3
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 3504/2
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:31 3793/2
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம் – திருமுறை6:35 3832/3
தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – திருமுறை6:64 4273/3
வியந்து மற்றை தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:140 5690/2

மேல்


நேயம்-அது (1)

நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை5:1 3041/3

மேல்


நேயமாம் (1)

நேயமாம் சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 487/3

மேல்


நேயமுடன் (1)

சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன்
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடு-தொறும் – திருமுறை3:3 1965/222,223

மேல்


நேயமும் (7)

நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை – திருமுறை3:2 1962/622
உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும்
கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே – திருமுறை4:9 2653/3,4
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ என பெற்றே – திருமுறை6:13 3487/3
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே – திருமுறை6:27 3747/2
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் – திருமுறை6:89 4691/1
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் – திருமுறை6:89 4691/1
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:89 4691/2

மேல்


நேயமே (4)

நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை – திருமுறை3:2 1962/530
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:22 3669/2
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:127 5475/3

மேல்


நேயமொடு (1)

நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:141 5711/3

மேல்


நேயர் (10)

தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க – திருமுறை2:38 1000/2
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:69 1334/2
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 3418/2
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பை – திருமுறை6:13 3419/2,3
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் – திருமுறை6:13 3425/2
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் – திருமுறை6:13 3430/3
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே – திருமுறை6:13 3438/2,3
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் – திருமுறை6:13 3440/3
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் – திருமுறை6:35 3835/3

மேல்


நேயர்-தம்மோடு (1)

நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை2:83 1580/3

மேல்


நேயர்கள்-தம் (1)

நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை3:4 1967/2

மேல்


நேயரே (2)

ஒள் நுதல் நேயரே வாரும் – திருமுறை1:51 541/3
பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே
நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ – திருமுறை6:112 5043/2,3

மேல்


நேயரை (1)

நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரை தீயரை தரும_நாசரை – திருமுறை2:31 906/3

மேல்


நேயவனே (1)

சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே – திருமுறை6:33 3812/1

மேல்


நேயன் (2)

அடியன் ஆக்கி பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே – திருமுறை6:112 5035/1
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே – திருமுறை6:112 5059/3

மேல்


நேயனடி (1)

சவுந்தரி நேயனடி
மா மறை ஓது செவ் வாயனடி மணி – திருமுறை4:31 2966/2,3

மேல்


நேயனே (10)

சாதல் போக்கும் நல் தணிகை நேயனே – திருமுறை1:10 176/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:34 3825/2
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:34 3830/2
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:50 4017/2
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே – திருமுறை6:51 4028/4
சற்றும் வருந்த பாராது என்னை தாங்கும் நேயனே
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே – திருமுறை6:112 5048/1,2
தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – திருமுறை6:112 5048/2,3
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – திருமுறை6:112 5048/3,4
முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே – திருமுறை6:112 5048/4

மேல்


நேயனை (1)

நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3979/4

மேல்


நேயனோடு (1)

ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா – திருமுறை6:13 3485/1

மேல்


நேயா (2)

ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_நேயா – திருமுறை3:6 2199/3
நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே – திருமுறை6:112 5049/1

மேல்


நேயானுகூல (1)

நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் – திருமுறை2:75 1485/1

மேல்


நேர் (123)

பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை1:2 33/3
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை1:4 77/1
சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 82/4
மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகி – திருமுறை1:5 85/1
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 85/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 91/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 120/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை1:8 135/1
கச்சி நேர் தணிகை கடம்பனே – திருமுறை1:10 166/4
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 179/3
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை1:25 323/1
தன் நேர் தணிகை தட மலை வாழும் நல் தந்தை அருள் – திருமுறை1:34 378/3
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை1:39 426/4
தூண நேர் புய சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும் – திருமுறை1:39 427/3
சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர் – திருமுறை1:47 496/1
துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா – திருமுறை2:9 655/1
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 692/3
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:13 701/3
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:13 701/4
நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே – திருமுறை2:16 743/3
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:20 784/3
வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் – திருமுறை2:21 798/1
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:27 858/3
உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ள துயரும் தவிர்த்திலையே – திருமுறை2:32 916/2
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:32 916/3
நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன் – திருமுறை2:32 917/4
கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:40 1020/2
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:41 1032/3
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:43 1047/1
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/3
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:47 1090/2
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:51 1131/2
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 1173/2
செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே – திருமுறை2:58 1209/4
வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் – திருமுறை2:59 1217/1
பொன் நேர் இதழி புயம் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1217/4
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை – திருமுறை2:63 1255/3
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:69 1335/3
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:74 1380/1
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை – திருமுறை2:74 1383/1
மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே – திருமுறை2:75 1388/1
உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா – திருமுறை2:75 1391/1
வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1445/4
அந்தர நேர் இடை பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ் – திருமுறை2:75 1467/3
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1467/4
படை அன்ன நீள் விழி மின் நேர் இடை பொன் பசுங்கிளியே – திருமுறை2:75 1474/3
பிடி சேர் நடை நேர் பெண்களை போல் பின்னை யாதும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1518/3
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1518/4
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1526/4
தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் – திருமுறை2:79 1540/1
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை2:80 1546/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை2:85 1598/1
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை2:85 1598/3
கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1598/4
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1602/1
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை2:85 1602/2
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை2:85 1602/3
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1602/4
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார் – திருமுறை2:89 1657/1
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் – திருமுறை2:98 1866/1
குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் – திருமுறை2:98 1868/3
பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் – திருமுறை2:98 1928/1
தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு – திருமுறை3:2 1962/621
நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும் – திருமுறை3:2 1962/763
நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் – திருமுறை3:3 1965/398
வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று – திருமுறை3:3 1965/581
பேர் சான்ற உண்மை பிரமமே நேர் சான்றோர் – திருமுறை3:4 1968/2
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை3:4 1978/2
இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர்
நின் தாள் நினையாத நெஞ்சு – திருமுறை3:4 1996/3,4
வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா – திருமுறை3:4 2024/3
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை3:5 2156/2
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை3:5 2164/4
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4
பிடிபட்ட நேர் இடை பெண் பட்ட பாக பெருந்தகையே – திருமுறை3:6 2246/4
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே – திருமுறை3:6 2252/4
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியை – திருமுறை3:6 2288/3
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் – திருமுறை3:6 2338/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை3:6 2365/1
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை3:24 2550/3
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை4:14 2716/4
நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் – திருமுறை4:15 2753/1
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் – திருமுறை6:5 3309/1
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 3348/1
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி – திருமுறை6:13 3416/1
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 3423/1
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 3424/3
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் – திருமுறை6:13 3432/1
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 3471/3
தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 3516/1
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3542/4
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் – திருமுறை6:15 3560/2
பஞ்சு நேர் உலக பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன – திருமுறை6:15 3565/1
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 3638/2
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:29 3777/3
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியை தந்து உலகுக்கு – திருமுறை6:38 3869/2
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ – திருமுறை6:50 4018/1
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் – திருமுறை6:52 4037/3
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் – திருமுறை6:52 4039/2
ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒருமித்தாரை – திருமுறை6:53 4050/1
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:54 4064/4
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் – திருமுறை6:57 4140/1
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4
உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே – திருமுறை6:63 4253/4
தன் நேர் இல்லவனே எனை தந்த தயாநிதியே – திருமுறை6:64 4269/1
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை – திருமுறை6:94 4743/1
பொன் நேர் பதத்தை புகழ் – திருமுறை6:101 4820/4
தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே – திருமுறை6:112 5061/2
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:134 5603/2
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:141 5711/3

மேல்


நேர்_இலா (1)

பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4

மேல்


நேர்_இழையவர்-தம் (1)

நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 3348/1

மேல்


நேர்கண்டு (1)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1

மேல்


நேர்கிலா (1)

முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:56 1191/1

மேல்


நேர்கிலை (1)

அன்றின் நேர்கிலை நம்முடை பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய் – திருமுறை2:50 1127/1

மேல்


நேர்கின்ற (2)

பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:22 804/1
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் – திருமுறை2:22 805/1

மேல்


நேர்கின்றதால் (1)

நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:89 4684/4

மேல்


நேர்ந்த (3)

பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தை – திருமுறை3:3 1965/292
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை3:3 1965/400
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 3438/2

மேல்


நேர்ந்தது (2)

நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ – திருமுறை2:67 1317/2
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது – திருமுறை6:108 4908/2,3

மேல்


நேர்ந்தபடி (1)

நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:125 5374/3

மேல்


நேர்ந்தவர்க்கும் (1)

நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு – திருமுறை3:4 2006/4

மேல்


நேர்ந்தவர்கள் (1)

நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:125 5374/3

மேல்


நேர்ந்தனையே (1)

நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை3:3 1965/1200

மேல்


நேர்ந்தார் (2)

நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1553/3
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/538

மேல்


நேர்ந்தார்க்கு (1)

நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும் – திருமுறை3:2 1962/695

மேல்


நேர்ந்தாலும் (1)

புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் – திருமுறை2:23 822/2

மேல்


நேர்ந்திட்டேன் (1)

பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ – திருமுறை6:27 3748/4

மேல்


நேர்ந்திட (1)

ஏதம் நேர்ந்திட கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் – திருமுறை6:13 3424/2

மேல்


நேர்ந்திடா (2)

கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 3303/2
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 3304/3

மேல்


நேர்ந்திடில் (1)

நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க – திருமுறை2:38 1001/1

மேல்


நேர்ந்திடிலோ (1)

வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை4:38 3011/2

மேல்


நேர்ந்திடும் (2)

ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:42 1046/2
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:51 1133/3

மேல்


நேர்ந்திடுமோ (2)

ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 3382/3,4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3384/4

மேல்


நேர்ந்திலனே (1)

வாயிற்படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாய பெயர் நீண்ட மால் – திருமுறை3:4 2011/3,4

மேல்


நேர்ந்திலை (1)

நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – திருமுறை3:19 2503/1

மேல்


நேர்ந்து (16)

இன்று அரை கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 886/2
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1926/2
நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/141
நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் – திருமுறை3:2 1962/659
நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர் – திருமுறை3:3 1965/531
நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை3:3 1965/1268
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து
கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி – திருமுறை3:3 1965/1296,1297
நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற – திருமுறை3:6 2203/1
மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் – திருமுறை3:6 2298/1
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை5:2 3101/3
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிட பொதுவில் – திருமுறை6:13 3497/2
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3729/3
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே – திருமுறை6:36 3846/3
அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே – திருமுறை6:102 4850/4
நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய – திருமுறை6:129 5509/3
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் – திருமுறை6:129 5533/3

மேல்


நேர்ந்துகொண்டு (1)

நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு
பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே – திருமுறை1:52 563/3,4

மேல்


நேர்ந்துளேன் (1)

கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 3307/1

மேல்


நேர்ந்தேன் (1)

நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட – திருமுறை3:2 1962/379

மேல்


நேர்படுமோ (1)

அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 3377/2

மேல்


நேர்மை (2)

நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:137 5662/2
நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே – திருமுறை6:137 5662/2

மேல்


நேர்மை-தனை (1)

நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:36 980/4

மேல்


நேர்மைகள் (1)

நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளி பொன் பொது நாடகம் புரிவீர் – திருமுறை6:31 3799/2

மேல்


நேர்மையும் (1)

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/673,674

மேல்


நேர (1)

சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:125 5447/4

மேல்


நேரம் (3)

தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை3:6 2199/1
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/2
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/2

மேல்


நேரா (5)

நேரா அழுக்கு துணியாகில் உன்றனை நேரில் கண்டும் – திருமுறை2:26 848/1
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – திருமுறை2:96 1742/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை2:96 1751/2
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று – திருமுறை2:98 1830/3
நேரா வழக்கு தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்கு – திருமுறை2:98 1839/2

மேல்


நேராய் (3)

நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 688/3
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை2:98 1780/2
நேராய் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் – திருமுறை3:3 1965/1268

மேல்


நேரார் (1)

நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் – திருமுறை1:41 442/3

மேல்


நேராவே (1)

நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் – திருமுறை6:129 5515/2

மேல்


நேரிட்டதால் (1)

நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இ பொய்யனை நீ – திருமுறை3:6 2240/2,3

மேல்


நேரிடில் (1)

வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க – திருமுறை2:38 1001/2

மேல்


நேரில் (1)

நேரா அழுக்கு துணியாகில் உன்றனை நேரில் கண்டும் – திருமுறை2:26 848/1

மேல்


நேரினும் (3)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் – திருமுறை2:41 1033/2
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4

மேல்


நேரீர் (3)

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:132 5556/2,3
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:132 5561/3
பொட்டாலும் துகிலாலும் புனைவித்து சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை – திருமுறை6:135 5611/2,3

மேல்


நேருதியே (1)

ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை3:3 1965/678

மேல்


நேரும் (4)

நீதமோ அன்றி நேரும் அநீதமோ – திருமுறை2:48 1101/3
நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே – திருமுறை2:64 1265/4
நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை2:83 1580/3
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5565/4

மேல்


நேரும்_இல்லார் (1)

நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை2:83 1580/3

மேல்


நேருற (2)

நேருற பாடியும் ஆடியும் ஓடி – திருமுறை6:80 4600/2
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:85 4652/2

மேல்


நேருறும் (1)

நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 3277/3

மேல்


நேரே (1)

நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2

மேல்


நேற்று (3)

நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று – திருமுறை3:3 1965/955
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் – திருமுறை6:105 4882/2
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே – திருமுறை6:135 5606/3

மேல்


நேற்றை (2)

நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த – திருமுறை3:3 1965/1200
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/2

மேல்