கே – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேச 5
கேசரே 1
கேசவாய 1
கேசனே 2
கேசாந்த 1
கேட்க 14
கேட்கில் 2
கேட்கிலை 2
கேட்கிலையோ 1
கேட்கின்ற 2
கேட்கின்றவை 2
கேட்கின்றாய் 2
கேட்கின்றோம் 1
கேட்கினும் 2
கேட்கும் 8
கேட்கும்-தொறும் 1
கேட்ட 11
கேட்டது 5
கேட்டல் 1
கேட்டவரும் 1
கேட்டாய் 1
கேட்டார் 1
கேட்டாரே 1
கேட்டால் 3
கேட்டாலும் 4
கேட்டி 2
கேட்டிடவும் 3
கேட்டிடவும்_மாட்டேன் 1
கேட்டிடிலோ 1
கேட்டிடுக 1
கேட்டிருக்கின்றாள் 1
கேட்டிலாய் 1
கேட்டிலாயே 1
கேட்டிலையோ 2
கேட்டு 62
கேட்டுக்கொள்வது 1
கேட்டும் 30
கேட்டுவர 1
கேட்டே 3
கேட்டேன் 1
கேட்டை 1
கேட்ப 2
கேட்பதற்கு 1
கேட்பதற்கே 1
கேட்பதன் 2
கேட்பது 3
கேட்பது_இலாள் 1
கேட்பது_இன்று 1
கேட்பதும் 1
கேட்பவை 1
கேட்பன் 1
கேட்பாய் 1
கேட்பார் 1
கேட்பித்து 2
கேட்பிப்பாய் 1
கேட்பீர் 1
கேட்பேன் 2
கேட்பேன்_அல்லேன் 1
கேட்போர் 1
கேடரை 1
கேடு 3
கேண்-மின் 3
கேண்மை 3
கேண்மையும் 1
கேண்மையே 1
கேண்மோ 2
கேணியில் 2
கேத 1
கேதகை 1
கேதம் 6
கேது 1
கேவல 2
கேவலங்கள் 1
கேவலம் 3
கேவலமாய் 2
கேவலமும் 1
கேவலாத்துவிதம் 1
கேழ் 9
கேழ்மணி 1
கேழ்வி 1
கேழியல் 1
கேள் 31
கேள்-மதி 1
கேள்-மின் 1
கேள்-மீன்கள் 1
கேள்வர் 1
கேள்வனை 1
கேள்வி 10
கேள்வி_இலார் 1
கேள்வியில் 1
கேள்வியும் 2
கேள்வியே 1
கேளடி 1
கேளர்-பால் 1
கேளா 4
கேளாத 3
கேளாதவன் 1
கேளாது 6
கேளாமல் 3
கேளாய் 4
கேளாயோ 1
கேளார் 2
கேளான் 1
கேளீர் 2
கேளும் 1
கேளே 1
கேளேல் 1
கேளேன் 2
கேளேனோ 1

கேச (5)

வரைபடாது வளர் வல்லி கேச நீ – திருமுறை2:8 643/3
மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ – திருமுறை2:8 647/2
அடுத்து மகிழ் வல்லி கேச நீ – திருமுறை2:8 648/2
வாசி மேவிவரும் வல்லி கேச நீர் – திருமுறை2:8 650/2
செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு – திருமுறை3:4 2062/3

மேல்


கேசரே (1)

மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே
துன்னு கந்தையை சுற்றி நிற்பீரெனில் – திருமுறை2:8 649/2,3

மேல்


கேசவாய (1)

நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே – திருமுறை2:100 1938/4

மேல்


கேசனே (2)

மாலை கொண்ட வளர் வல்லி கேசனே
பாலை கொண்ட பராபர நீ பழம் – திருமுறை2:8 645/2,3
மன்னும் மா மணியே வல்லி கேசனே
உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையை – திருமுறை2:8 646/2,3

மேல்


கேசாந்த (1)

வர கேசாந்த மகோதய காரிய – திருமுறை6:113 5142/1

மேல்


கேட்க (14)

வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:24 827/3
தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க
சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:38 1000/2,3
அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் என சூழ்வர் – திருமுறை2:98 1917/3
வன்புகழை கேட்க மனம்கொண்டது அல்லாமல் – திருமுறை3:2 1962/589
நின் புகழை கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே – திருமுறை3:2 1962/590
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினை கேட்க
அஞ்சினேன் அன்பு இன்மையால் – திருமுறை3:4 2025/3,4
நினது சீர் கேட்க பண் – திருமுறை3:4 2069/4
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே – திருமுறை6:13 3413/4
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே – திருமுறை6:13 3417/4
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்க சொல்கின்றவோ என சூழ்ந்தே – திருமுறை6:13 3432/2
பாட்டு அயல் கேட்க பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் – திருமுறை6:13 3476/2
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:57 4112/3
எள்ளாது உனது புகழை கேட்க செவி நயக்குதே – திருமுறை6:112 4996/3
என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான் – திருமுறை6:125 5406/1

மேல்


கேட்கில் (2)

அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான் – திருமுறை3:3 1965/1341
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 3457/1

மேல்


கேட்கிலை (2)

கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை3:3 1965/627
சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு – திருமுறை4:14 2727/3

மேல்


கேட்கிலையோ (1)

கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை1:7 114/2

மேல்


கேட்கின்ற (2)

கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனி தந்தை வரு தருணம் இதுவே – திருமுறை6:133 5573/4

மேல்


கேட்கின்றவை (2)

நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா – திருமுறை5:1 3048/1
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை5:1 3048/2

மேல்


கேட்கின்றாய் (2)

சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:46 1080/3
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:142 5763/2

மேல்


கேட்கின்றோம் (1)

புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:137 5633/3

மேல்


கேட்கினும் (2)

இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மை கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக – திருமுறை2:38 1004/2
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா – திருமுறை3:6 2358/2

மேல்


கேட்கும் (8)

கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
பாடல் கேட்கும் படம்பக்கநாதரே – திருமுறை2:15 719/2
மேலும் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1549/4
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் – திருமுறை3:3 1965/470
போல் படும் பாடு நல்லோர் சொல கேட்கும் பொழுது மனம் – திருமுறை3:6 2195/2
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே – திருமுறை5:1 3048/3
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4

மேல்


கேட்கும்-தொறும் (1)

சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:27 3754/2

மேல்


கேட்ட (11)

மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே – திருமுறை3:6 2251/4
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – திருமுறை3:8 2420/3
கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ் பறவை சாதிகளும் – திருமுறை5:12 3266/2
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3423/3
மாந்தர்கள் இறப்பை குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3428/2
தறையுற சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் – திருமுறை6:13 3429/3
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் – திருமுறை6:13 3431/3
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 3458/3
கண்ணுற கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3459/4
கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3530/4

மேல்


கேட்டது (5)

கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை3:2 1962/624
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை5:1 3044/3
தேற்றுவாய் நின்னை கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3517/4
கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:32 3801/2
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:134 5579/1

மேல்


கேட்டல் (1)

நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2

மேல்


கேட்டவரும் (1)

இதம் மலரும் அ படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் – திருமுறை6:137 5636/3

மேல்


கேட்டாய் (1)

கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ – திருமுறை3:3 1965/964

மேல்


கேட்டார் (1)

கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள் – திருமுறை3:6 2173/2

மேல்


கேட்டாரே (1)

நான் சொன்ன பாடலும் கேட்டாரே
ஞான சிதம்பர நாட்டாரே – திருமுறை6:113 5101/1,2

மேல்


கேட்டால் (3)

கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி – திருமுறை2:79 1534/3
கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் – திருமுறை3:3 1965/470
தப்பு இலாய் நினை வேறு உரைத்திட கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி – திருமுறை6:13 3521/3

மேல்


கேட்டாலும் (4)

என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்து கேட்டாலும்
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை2:94 1711/2,3
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி – திருமுறை3:3 1965/762
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே – திருமுறை3:6 2201/3
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்க பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் – திருமுறை6:57 4115/1

மேல்


கேட்டி (2)

ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டி நீ – திருமுறை2:17 755/1
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 996/4

மேல்


கேட்டிடவும் (3)

கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:95 4747/3
துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ – திருமுறை6:140 5701/2
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4

மேல்


கேட்டிடவும்_மாட்டேன் (1)

கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:95 4747/3

மேல்


கேட்டிடிலோ (1)

பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ
நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில் – திருமுறை6:59 4207/2,3

மேல்


கேட்டிடுக (1)

இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ் – திருமுறை3:3 1965/6

மேல்


கேட்டிருக்கின்றாள் (1)

கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுற கேட்டிருக்கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடி சிரித்திருக்கின்றனர் அந்தோ – திருமுறை6:14 3549/2,3

மேல்


கேட்டிலாய் (1)

கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் – திருமுறை4:12 2696/1

மேல்


கேட்டிலாயே (1)

கேள்வி இலா துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே – திருமுறை4:12 2695/4

மேல்


கேட்டிலையோ (2)

கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை3:3 1965/718
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4

மேல்


கேட்டு (62)

முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் – திருமுறை1:52 559/3
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 676/2
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 677/1,2
கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:11 678/1
பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு என புகழ்ந்திட கேட்டு
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 681/1,2
தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை – திருமுறை2:38 997/3
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை2:98 1850/3
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை2:98 1909/3
பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் என கேட்டு உன் – திருமுறை2:98 1911/3
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை2:98 1934/2
நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டு
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை3:2 1962/603,604
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம் – திருமுறை3:3 1965/371
நான் பாட கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் – திருமுறை3:3 1965/372
கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர் – திருமுறை3:3 1965/432
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை3:3 1965/519
இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில் – திருமுறை3:3 1965/842
ஐயா அரைநாண் அவிழும் என கேட்டு நின்றும் – திருமுறை3:3 1965/999
காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும் – திருமுறை3:3 1965/1001
கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற – திருமுறை3:3 1965/1068
சொல்வோரும் கேட்டு தொழுவோரும் சொல் வாய்ந்த – திருமுறை3:3 1965/1334
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை3:6 2243/3
உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடி சீர் – திருமுறை3:6 2247/1
நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே – திருமுறை3:6 2332/2
அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே – திருமுறை3:6 2346/4
சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை3:16 2492/4
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டக தாள் முறையில் தாழ்ந்து – திருமுறை3:21 2512/2
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை3:24 2544/1,2
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2
கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2838/2
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 3411/4
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே – திருமுறை6:13 3412/4
போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ – திருமுறை6:13 3422/4
நன்று நாடிய நல்லோர் உயிர் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற – திருமுறை6:13 3426/2
வல்லிய குரல் கேட்டு அயர் பசு போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3432/4
காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3433/1
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 3434/2
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3469/3
வைப்பில் வேறு ஒருவர் வைதிட கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் – திருமுறை6:13 3521/2
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 3576/2
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:56 4079/1
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4080/1
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4081/1
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/1
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4084/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:56 4085/1
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/1
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் – திருமுறை6:56 4087/1
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் – திருமுறை6:56 4088/1
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:56 4089/1
பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை – திருமுறை6:96 4765/1
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் – திருமுறை6:125 5342/1
துன் பாட்டு சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையை சூழ அலங்கரிப்பாய் – திருமுறை6:141 5706/3
உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையை – திருமுறை6:141 5708/2
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:141 5711/2
பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டு புந்தி மயக்கு அடையேல் – திருமுறை6:141 5712/2
இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே – திருமுறை6:141 5713/2
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:142 5731/2
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:142 5760/4
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:142 5762/4

மேல்


கேட்டுக்கொள்வது (1)

நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்து – திருமுறை3:6 2198/1

மேல்


கேட்டும் (30)

வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ – திருமுறை1:7 124/1,2
சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் – திருமுறை2:46 1080/3
பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மை பேசுகின்றவர் பேச்சினை கேட்டும்
இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர் – திருமுறை2:56 1189/1,2
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி – திருமுறை2:79 1534/3
வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தம் கேட்டும் மாலை-தனை – திருமுறை2:82 1570/3
மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/479
பேதம் அற கேட்டும் பிறழ்ந்தனையே அன்பு அடைய – திருமுறை3:3 1965/487
சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/491
மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/495
மாண உரைப்ப கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு – திருமுறை3:3 1965/499
சொல்லி நின்றார் கேட்டும் துதிக்கின்றிலை அன்பு – திருமுறை3:3 1965/507
சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் – திருமுறை3:3 1965/511
சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது – திருமுறை3:3 1965/950
என கேட்டும் வெட்கிலையே தட்டாமல் – திருமுறை3:3 1965/952
கொண்டார் என கேட்டும் கூசிலையே வண் தாரார் – திருமுறை3:3 1965/954
சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் – திருமுறை3:3 1965/956
சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு – திருமுறை3:3 1965/958
அன்னே என கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே – திருமுறை3:3 1965/960
இ கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு என கேட்டும்
முக்கட்டும் தேட முயன்றனையே இ கட்டு – திருமுறை3:3 1965/995,996
கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு – திருமுறை3:3 1965/1009
ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில் – திருமுறை3:3 1965/1197
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த – திருமுறை3:4 1990/3
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்க – திருமுறை3:4 2017/2
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும்
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை3:5 2161/1,2
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை4:1 2577/1
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/2
கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 3408/2
மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 3548/2
வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்க சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர் – திருமுறை6:135 5610/2,3

மேல்


கேட்டுவர (1)

கேட்டுவர காணேனையோ பாங்கிமாரே – திருமுறை4:26 2837/2

மேல்


கேட்டே (3)

துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே
இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே – திருமுறை2:83 1581/2,3
கலங்காமல் பாடிட கேட்டே இரங்கி கருணைசெய்த – திருமுறை3:6 2387/3
ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 3517/3

மேல்


கேட்டேன் (1)

சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன்
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/1,2

மேல்


கேட்டை (1)

கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:23 305/3

மேல்


கேட்ப (2)

தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை5:3 3160/2,3
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1

மேல்


கேட்பதற்கு (1)

கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ – திருமுறை6:14 3544/3

மேல்


கேட்பதற்கே (1)

தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4

மேல்


கேட்பதன் (2)

கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே – திருமுறை4:26 2836/2
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:125 5347/4

மேல்


கேட்பது (3)

யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 1152/1
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:27 3749/2
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:59 4208/3

மேல்


கேட்பது_இலாள் (1)

அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:59 4208/3

மேல்


கேட்பது_இன்று (1)

யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் – திருமுறை2:53 1152/1

மேல்


கேட்பதும் (1)

கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர் – திருமுறை2:75 1475/1

மேல்


கேட்பவை (1)

கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே – திருமுறை6:81 4615/1057

மேல்


கேட்பன் (1)

கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே – திருமுறை3:6 2201/3

மேல்


கேட்பாய் (1)

காட்டா குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலை – திருமுறை3:3 1965/761

மேல்


கேட்பார் (1)

கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே – திருமுறை6:125 5408/4

மேல்


கேட்பித்து (2)

காப்பான் புகழ் உன் கழல் புகழை கேட்பித்து
காப்பாய் இஃது என் கருத்து – திருமுறை3:4 2046/3,4
கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே – திருமுறை6:81 4615/1057

மேல்


கேட்பிப்பாய் (1)

கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை1:7 114/2

மேல்


கேட்பீர் (1)

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:125 5452/1,2

மேல்


கேட்பேன் (2)

கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:32 913/3
உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே – திருமுறை6:142 5729/4

மேல்


கேட்பேன்_அல்லேன் (1)

கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி – திருமுறை2:32 913/3

மேல்


கேட்போர் (1)

போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் – திருமுறை1:1 11/2

மேல்


கேடரை (1)

கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா – திருமுறை6:13 3474/2

மேல்


கேடு (3)

கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை3:3 1965/718
கிடந்த பச்சை பெரு மலைக்கு கேடு இல் அருள்தந்து அகம் புறமும் – திருமுறை3:13 2478/3
கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் – திருமுறை4:12 2696/1

மேல்


கேண்-மின் (3)

எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:134 5588/2
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:134 5595/1
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின்
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:144 5816/1,2

மேல்


கேண்மை (3)

கேண்மை குல தொண்டர் கீர்த்திபெற கொண்ட – திருமுறை3:2 1962/705
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ – திருமுறை3:6 2268/2
கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே – திருமுறை4:26 2839/2

மேல்


கேண்மையும் (1)

இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:38 3865/4

மேல்


கேண்மையே (1)

கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ் கோட்ட – திருமுறை3:2 1962/184

மேல்


கேண்மோ (2)

தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை1:6 102/2
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ
சொல்லின் ஓங்கிய சுந்தர பெருமான் சோலை சூழ் ஒற்றி தொல் நகர் பெருமான் – திருமுறை2:29 881/1,2

மேல்


கேணியில் (2)

ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை1:40 437/1
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 3396/2

மேல்


கேத (1)

வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – திருமுறை6:111 4957/1

மேல்


கேதகை (1)

மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன் – திருமுறை2:98 1794/1

மேல்


கேதம் (6)

மன கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே – திருமுறை1:3 54/4
கீள் கொண்ட கோவண பேர்_அழகா எனை கேதம் அற – திருமுறை3:6 2309/3
மன கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே – திருமுறை3:6 2394/1
கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மன கேதம் அற – திருமுறை4:6 2621/1
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே – திருமுறை6:38 3865/1
கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயை கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ – திருமுறை6:125 5329/2

மேல்


கேது (1)

கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற – திருமுறை3:6 2394/2

மேல்


கேவல (2)

கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி – திருமுறை3:22 2527/1
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1

மேல்


கேவலங்கள் (1)

கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் – திருமுறை3:3 1965/72

மேல்


கேவலம் (3)

மலைவுஅறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை1:1 7/2
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே – திருமுறை3:18 2501/18
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2

மேல்


கேவலமாய் (2)

கேவலமாய் சுத்த சகலமாய் கீழ் சகல – திருமுறை3:3 1965/71
சகலமாய் கேவலமாய் சுத்தம் ஆகி சராசரமாய் அல்லவாய் தானே தானாய் – திருமுறை3:5 2085/1

மேல்


கேவலமும் (1)

சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3108/1

மேல்


கேவலாத்துவிதம் (1)

தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்துவிதமாய் கேவலாத்துவிதம் ஆகி – திருமுறை3:5 2075/1

மேல்


கேழ் (9)

வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர் – திருமுறை2:98 1916/1
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை2:98 1916/2
கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர் – திருமுறை3:3 1965/432
கேழ் கோலம் மேவு திரு கீள் அழகும் அ கீளின் – திருமுறை3:3 1965/455
செம் கேழ் இதழி சடை கனியே சிவமே அடிமை சிறு நாயேன் – திருமுறை6:7 3328/3
வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க – திருமுறை6:35 3838/2
கேழ் ஆர் மணி அம்பலம் போற்ற கிடைத்துளேன் நான் – திருமுறை6:91 4710/2
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:125 5344/4
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4

மேல்


கேழ்மணி (1)

புன கேழ்மணி வல்லியை புணர்ந்து ஆண்டருள் புண்ணியனே – திருமுறை1:3 54/3

மேல்


கேழ்வி (1)

கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுற கிடைத்த அருள் பெரு வாழ்வே – திருமுறை1:15 229/3

மேல்


கேழியல் (1)

கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர் – திருமுறை2:24 827/2

மேல்


கேள் (31)

துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்ல கேள் கடல் சூழ் உலகத்திலே – திருமுறை2:26 852/1
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1699/4
வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ – திருமுறை3:3 1965/1188
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை3:5 2151/4
ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்போட்டாலும் – திருமுறை3:6 2201/1
போதல் நையாநின்று உனை கூவும் ஏழையை போதனை கேள்
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலர – திருமுறை3:6 2362/2,3
கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மன கேதம் அற – திருமுறை4:6 2621/1
கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான் – திருமுறை4:26 2836/1
மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் – திருமுறை4:37 3005/3
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள்
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3018/3,4
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:81 4615/1357
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:102 4842/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:102 4843/1
மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசன பெண் வகை_தொகைகள் உடனே – திருமுறை6:102 4844/1
பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:102 4848/1
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:102 4849/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே – திருமுறை6:103 4857/1
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:103 4858/1
வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் – திருமுறை6:111 4952/1
அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் – திருமுறை6:140 5695/1,2
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:140 5700/2
இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ – திருமுறை6:140 5701/1
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி – திருமுறை6:142 5717/1
புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள்
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:142 5759/2,3
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்று கேள் அசையாது தோழி – திருமுறை6:142 5764/1
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:142 5775/1
என்னுடைய தனி தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் – திருமுறை6:142 5787/1
நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் – திருமுறை6:142 5788/1
இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள்
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:142 5789/1,2
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:142 5791/2

மேல்


கேள்-மதி (1)

ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:50 1126/3

மேல்


கேள்-மின் (1)

சுடுகாட்டு பிணங்காள் இ சுகம் அனைத்தும் கண சுகமே சொல்ல கேள்-மின்
முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:125 5332/2,3

மேல்


கேள்-மீன்கள் (1)

வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் – திருமுறை6:125 5454/1

மேல்


கேள்வர் (1)

கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் – திருமுறை2:79 1531/3

மேல்


கேள்வனை (1)

ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனை கிளர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 901/2

மேல்


கேள்வி (10)

கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை1:7 114/2
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை1:7 114/2
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 658/4
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே – திருமுறை2:97 1768/4
கேள்வி_இலார் போல் அதனை கேளாய் கெடுகின்றாய் – திருமுறை3:3 1965/535
மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறி கேள்வி மீது ஏறி தெளிந்து இச்சை விடுதல் ஏறி – திருமுறை3:5 2120/1
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை3:5 2163/2
என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் – திருமுறை3:6 2172/1
கேள்வி இலா துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே – திருமுறை4:12 2695/4
படிப்பு அடக்கி கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கி பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கி – திருமுறை6:96 4764/1

மேல்


கேள்வி_இலார் (1)

கேள்வி_இலார் போல் அதனை கேளாய் கெடுகின்றாய் – திருமுறை3:3 1965/535

மேல்


கேள்வியில் (1)

பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – திருமுறை4:4 2606/1

மேல்


கேள்வியும் (2)

கல்வியும் குற்றம் இல் கேள்வியும்
பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும் – திருமுறை4:9 2651/2,3
படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:125 5427/1

மேல்


கேள்வியே (1)

கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1

மேல்


கேளடி (1)

துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:142 5761/4

மேல்


கேளர்-பால் (1)

தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் – திருமுறை3:6 2394/3

மேல்


கேளா (4)

வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை1:26 332/1
கேளா சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத – திருமுறை3:2 1962/624
கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை3:4 1994/3
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளா பிள்ளைகளை பெற்ற தோஷம் – திருமுறை4:15 2781/3

மேல்


கேளாத (3)

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை1:1 9/1
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ – திருமுறை1:7 114/2

மேல்


கேளாதவன் (1)

கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ – திருமுறை3:6 2268/2

மேல்


கேளாது (6)

கேளாது போல் இருக்கின்றனை ஏழை இ கீழ்நடையில் – திருமுறை1:3 58/1
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 653/4
கேளாது அலைகின்றதால் ஒற்றி மேவும் கிளர் ஒளியே – திருமுறை2:62 1243/4
பாழ் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ் கதுவும் – திருமுறை3:3 1965/628
ஏன் செய்தனை என கேளாது மேலும் இரங்குகின்றாய் – திருமுறை4:11 2690/3
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:142 5727/2

மேல்


கேளாமல் (3)

எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 661/4
சொல்லை கல் என்று நல்லோர் சொன்ன புத்தி கேளாமல்
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை – திருமுறை3:2 1962/633,634
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1

மேல்


கேளாய் (4)

கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதை – திருமுறை2:79 1540/3
கேள்வி_இலார் போல் அதனை கேளாய் கெடுகின்றாய் – திருமுறை3:3 1965/535
வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இ – திருமுறை3:3 1965/1116
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை5:2 3079/4

மேல்


கேளாயோ (1)

கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை1:6 99/2

மேல்


கேளார் (2)

கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் – திருமுறை2:79 1531/3
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை3:6 2312/1

மேல்


கேளான் (1)

இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் – திருமுறை1:1 22/3

மேல்


கேளீர் (2)

செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்ப கேளீர்
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை4:41 3028/3,4
நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே – திருமுறை6:113 5106/1

மேல்


கேளும் (1)

பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும்
பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன் – திருமுறை6:76 4502/1,2

மேல்


கேளே (1)

நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:140 5696/4

மேல்


கேளேல் (1)

கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல்
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனை நீ அம்மை இம்மையும் அகன்றிடாமையினால் – திருமுறை2:29 887/1,2

மேல்


கேளேன் (2)

வேறு இடம் கேளேன் என் நாணை புறம்விடுத்து – திருமுறை3:6 2201/2
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே – திருமுறை3:6 2237/4

மேல்


கேளேனோ (1)

தெய்வ புகழ் என் செவி நிறைய கேளேனோ – திருமுறை2:36 954/4

மேல்