வி – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விகிர்தன் 1
விசயற்கு 1
விசிறு 1
விசும்பின் 3
விசும்பு 1
விசும்பும் 1
விட்டிட்ட 1
விட்டு 3
விட 2
விடங்கராய் 2
விடங்கன் 1
விடங்கனே 1
விடம் 3
விடயம் 1
விடலையே 1
விடு 1
விடுவனோ 1
விடை 7
விடையது 1
விடையாற்கு 1
விடையான் 1
விடையும் 1
விடையோன் 1
விண் 4
விண்டு 2
விண்ணவர் 1
விண்ணும் 1
வித்துமாய் 1
விதி 1
விதிவழியோர் 1
விநாயக 1
விம்மா 1
விம்மி 2
விம்மியே 1
விம்முமே 1
விமலமே 1
விமானம் 1
விமானமே 1
விரலால் 1
விரவி 1
விரி 5
விரித்த 1
விரித்து 2
விரிதரு 2
விரிய 1
விரியா 1
விரியும் 1
விரும்பி 2
விரும்பிய 1
விரும்பும் 1
விரும்புமா 1
விரும்பே 1
விரைந்து 2
வில் 4
வில்லி 1
வில்லி-தன் 1
வில்லில் 1
வில்லின் 1
விலக்கி 1
விலங்கல் 2
விழவில் 1
விழவின் 1
விழவு 3
விழியார்க்கு 1
விழியும் 3
விழுங்க 1
விழுங்கு 1
விழுங்கும் 1
விழுந்து 2
விழுமிய 1
விழுமியோன் 1
விளக்கம் 1
விளக்கரே 1
விளக்கினுள் 1
விளக்கு 3
விளக்கே 1
விளக்கை 1
விளங்க 2
விளங்கலின் 1
விளங்கியாங்கு 1
விளங்கிற்றால் 1
விளங்கு 4
விளங்கும் 1
விளம்பும் 1
விளம்புமா 1
விளம்பே 1
விளி 1
விளித்தாலும் 1
விளை 1
விளைத்த 1
விளைத்து 1
விளைந்த 1
விளைந்து 1
விளையா 1
விளையாடும் 1
விளைவது 1
வினை 3
வினைபடு 2
வினைபடும் 1
வினையேன் 1
வினையேனை 1

விகிர்தன் (1)

மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/4

மேல்

விசயற்கு (1)

வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1

மேல்

விசிறு (1)

கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் – 1.திருமாளிகை:2 8/1

மேல்

விசும்பின் (3)

பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின்
முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே – 3.கருவூர்:3 11/3,4
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் – 3.கருவூர்:6 5/1
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி – 3.கருவூர்:10 7/1

மேல்

விசும்பு (1)

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1

மேல்

விசும்பும் (1)

பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 7/4

மேல்

விட்டிட்ட (1)

சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் – 3.கருவூர்:6 4/2

மேல்

விட்டு (3)

விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத – 1.திருமாளிகை:4 2/2
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் – 7.திருவாலி:2 8/3
ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம – 8.புருடோத்தம:1 2/1

மேல்

விட (2)

கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் – 1.திருமாளிகை:2 8/1
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2

மேல்

விடங்கராய் (2)

மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 2/4

மேல்

விடங்கன் (1)

வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் – 10.சேந்தனார்:1 4/3

மேல்

விடங்கனே (1)

விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4

மேல்

விடம் (3)

விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே – 7.திருவாலி:1 7/4
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று – 9.சேதிராயர்:1 1/3

மேல்

விடயம் (1)

வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த – 3.கருவூர்:9 4/1

மேல்

விடலையே (1)

வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/2

மேல்

விடு (1)

சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய – 3.கருவூர்:9 4/2

மேல்

விடுவனோ (1)

பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே – 2.சேந்தனார்:1 4/4

மேல்

விடை (7)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை – 2.சேந்தனார்:1 11/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2
கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக – 4.பூந்துருத்தி:2 3/3
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் – 7.திருவாலி:1 1/1
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/2
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் – 10.சேந்தனார்:1 4/3

மேல்

விடையது (1)

விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/2

மேல்

விடையாற்கு (1)

மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த – 10.சேந்தனார்:1 11/3

மேல்

விடையான் (1)

மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே – 7.திருவாலி:1 11/4

மேல்

விடையும் (1)

கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/4

மேல்

விடையோன் (1)

பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன்
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/1,2

மேல்

விண் (4)

மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 1/3
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 5/3
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும் – 6.வேணாட்டடிகள்:1 7/1
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/2

மேல்

விண்டு (2)

ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே – 1.திருமாளிகை:1 9/2
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 3/3

மேல்

விண்ணவர் (1)

விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் – 1.திருமாளிகை:4 10/1

மேல்

விண்ணும் (1)

மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த – 7.திருவாலி:4 5/2

மேல்

வித்துமாய் (1)

வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 2/4

மேல்

விதி (1)

திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 2/3

மேல்

விதிவழியோர் (1)

சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் – 2.சேந்தனார்:2 2/2

மேல்

விநாயக (1)

அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே – 1.திருமாளிகை:1 7/3

மேல்

விம்மா (1)

வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் – 1.திருமாளிகை:3 2/2

மேல்

விம்மி (2)

விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா – 9.சேதிராயர்:1 4/1
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/2

மேல்

விம்மியே (1)

விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா – 9.சேதிராயர்:1 4/1

மேல்

விம்முமே (1)

வேரி நல் குழலாள் இவள் விம்முமே – 9.சேதிராயர்:1 3/4

மேல்

விமலமே (1)

விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் – 3.கருவூர்:2 9/2

மேல்

விமானம் (1)

வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/4

மேல்

விமானமே (1)

மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/2

மேல்

விரலால் (1)

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று – 7.திருவாலி:3 8/1

மேல்

விரவி (1)

எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி – 1.திருமாளிகை:4 2/1

மேல்

விரி (5)

கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் – 3.கருவூர்:1 1/1
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை – 3.கருவூர்:9 11/2

மேல்

விரித்த (1)

செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 9/3

மேல்

விரித்து (2)

உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை – 2.சேந்தனார்:1 11/1
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1

மேல்

விரிதரு (2)

மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் – 3.கருவூர்:1 1/3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள – 3.கருவூர்:9 3/1

மேல்

விரிய (1)

சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள – 3.கருவூர்:9 3/1

மேல்

விரியா (1)

பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் – 3.கருவூர்:1 7/1

மேல்

விரியும் (1)

விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் – 3.கருவூர்:4 7/1

மேல்

விரும்பி (2)

மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து – 3.கருவூர்:2 7/2
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:6 1/2

மேல்

விரும்பிய (1)

வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3

மேல்

விரும்பும் (1)

தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1

மேல்

விரும்புமா (1)

விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4

மேல்

விரும்பே (1)

விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4

மேல்

விரைந்து (2)

வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் – 3.கருவூர்:5 9/3
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் – 10.சேந்தனார்:1 2/1

மேல்

வில் (4)

வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/2
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் – 1.திருமாளிகை:3 6/2
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் – 2.சேந்தனார்:2 6/1
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் – 10.சேந்தனார்:1 4/3

மேல்

வில்லி (1)

சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 7/3

மேல்

வில்லி-தன் (1)

புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் – 2.சேந்தனார்:3 8/2

மேல்

வில்லில் (1)

கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3

மேல்

வில்லின் (1)

செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 9/3

மேல்

விலக்கி (1)

மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை – 2.சேந்தனார்:1 3/1

மேல்

விலங்கல் (2)

இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் – 3.கருவூர்:2 2/3
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை – 3.கருவூர்:9 8/3

மேல்

விழவில் (1)

தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் – 1.திருமாளிகை:2 4/1

மேல்

விழவின் (1)

விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3

மேல்

விழவு (3)

திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 10/4
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 4/3
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/2

மேல்

விழியார்க்கு (1)

வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/2

மேல்

விழியும் (3)

திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் – 3.கருவூர்:6 4/1
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும்
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/1,2

மேல்

விழுங்க (1)

பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் – 8.புருடோத்தம:2 3/2

மேல்

விழுங்கு (1)

விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/4

மேல்

விழுங்கும் (1)

கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை – 2.சேந்தனார்:1 2/1

மேல்

விழுந்து (2)

ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் – 3.கருவூர்:5 1/3
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை – 3.கருவூர்:5 5/1

மேல்

விழுமிய (1)

வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/4

மேல்

விழுமியோன் (1)

வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/2

மேல்

விளக்கம் (1)

கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் – 3.கருவூர்:10 10/2

மேல்

விளக்கரே (1)

மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் – 3.கருவூர்:2 8/1

மேல்

விளக்கினுள் (1)

சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ – 1.திருமாளிகை:1 2/2

மேல்

விளக்கு (3)

நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4
தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப – 4.பூந்துருத்தி:2 1/2

மேல்

விளக்கே (1)

ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே – 1.திருமாளிகை:1 1/1

மேல்

விளக்கை (1)

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த – 2.சேந்தனார்:1 2/2,3

மேல்

விளங்க (2)

மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ – 5.கண்டராதித்:1 1/1
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/2,3

மேல்

விளங்கலின் (1)

வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த – 3.கருவூர்:9 4/1

மேல்

விளங்கியாங்கு (1)

உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று – 3.கருவூர்:1 10/1

மேல்

விளங்கிற்றால் (1)

முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால்
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் – 3.கருவூர்:5 3/2,3

மேல்

விளங்கு (4)

மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/3
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் – 2.சேந்தனார்:1 11/3
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/3
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே – 3.கருவூர்:8 10/4

மேல்

விளங்கும் (1)

சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ – 1.திருமாளிகை:1 2/2

மேல்

விளம்பும் (1)

மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/2

மேல்

விளம்புமா (1)

வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே – 1.திருமாளிகை:1 1/4

மேல்

விளம்பே (1)

வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே – 1.திருமாளிகை:1 1/4

மேல்

விளி (1)

உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2

மேல்

விளித்தாலும் (1)

அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 7/3,4

மேல்

விளை (1)

செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 8/3

மேல்

விளைத்த (1)

வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் – 2.சேந்தனார்:3 8/1

மேல்

விளைத்து (1)

வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி – 1.திருமாளிகை:3 12/1

மேல்

விளைந்த (1)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே – 3.கருவூர்:4 5/1,2

மேல்

விளைந்து (1)

மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 4/3

மேல்

விளையா (1)

விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள – 4.பூந்துருத்தி:2 5/2

மேல்

விளையாடும் (1)

அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 5/4

மேல்

விளைவது (1)

அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1

மேல்

வினை (3)

கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் – 2.சேந்தனார்:3 3/1
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் – 3.கருவூர்:4 2/1
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் – 3.கருவூர்:7 5/1

மேல்

வினைபடு (2)

வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே – 3.கருவூர்:4 6/2
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து – 3.கருவூர்:10 3/2

மேல்

வினைபடும் (1)

வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/4

மேல்

வினையேன் (1)

வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் – 1.திருமாளிகை:3 2/2

மேல்

வினையேனை (1)

விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே – 7.திருவாலி:1 7/4

மேல்