மூ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


மூச்சறவே (1)

முடியும் நீர் செய்த மூச்சறவே – 9.சேதிராயர்:1 7/4

மேல்

மூத்தனை (1)

மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற – 7.திருவாலி:4 7/2

மேல்

மூதறிவாளர் (1)

மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/3

மேல்

மூதூர் (2)

அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/3,4
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/3,4

மேல்

மூர்க்கனேன் (1)

முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் – 1.திருமாளிகை:1 11/2

மேல்

மூர்த்தியும் (1)

மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும்
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/2,3

மேல்

மூலமாய் (1)

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்து அமர்ந்து இனிய – 3.கருவூர்:4 10/1

மேல்

மூவா (1)

மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/2

மேல்

மூவாயிரர் (1)

சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3

மேல்

மூவாயிரவர் (4)

தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ – 1.திருமாளிகை:3 3/3
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற – 1.திருமாளிகை:3 8/3
மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற – 5.கண்டராதித்:1 2/3
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு – 5.கண்டராதித்:1 3/1

மேல்

மூவாயிரவரையும் (1)

மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் – 1.திருமாளிகை:3 12/2

மேல்

மூவாயிரவரொடும் (2)

முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/3,4
முளையா மதி சூடி மூவாயிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 5/3,4

மேல்

மூவுருவின் (1)

மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற – 7.திருவாலி:4 7/2

மேல்

மூவுலகில் (1)

கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2

மேல்

மூன்றினுள் (1)

என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2

மேல்

மூன்று (7)

கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே – 1.திருமாளிகை:1 7/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 6/3
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/3
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 7/3

மேல்

மூன்றும் (1)

செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/3

மேல்