போ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ-மின்கள் 1
போக்குவனே 1
போக்குவனோ 1
போக 2
போகமாம் 1
போகமுமாய் 1
போகமே 1
போதின் 1
போது 3
போது-மினே 1
போதும் 1
போந்த 2
போந்தன 1
போந்து 1
போம் 1
போய் 5
போய்வரும் 1
போயினேன் 1
போர் 1
போர்த்த 1
போர்வை 1
போர்வையினீர் 1
போல் 12
போல 2
போலும் 6
போலுமே 1
போழ்தில் 1
போழ்ந்து 1
போற்ற 2
போற்றி 10
போற்றியே 1
போற்றுவார் 2
போன்றதுவே 1
போன்று 3
போனகமும் 1

போ-மின்கள் (1)

மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் – 10.சேந்தனார்:1 2/1

மேல்

போக்குவனே (1)

நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே – 7.திருவாலி:4 5/4

மேல்

போக்குவனோ (1)

நினைத்தேன் இனி போக்குவனோ நிமல திரளை நினைப்பார் – 7.திருவாலி:4 6/1

மேல்

போக (2)

போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த – 2.சேந்தனார்:1 1/2
பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே – 2.சேந்தனார்:1 4/4

மேல்

போகமாம் (1)

போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/2

மேல்

போகமுமாய் (1)

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1

மேல்

போகமே (1)

வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/2

மேல்

போதின் (1)

மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் – 3.கருவூர்:9 9/1

மேல்

போது (3)

போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 8/4
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே – 8.புருடோத்தம:2 2/4

மேல்

போது-மினே (1)

வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/4

மேல்

போதும் (1)

குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2

மேல்

போந்த (2)

போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர் – 2.சேந்தனார்:2 6/2
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை – 3.கருவூர்:5 2/2

மேல்

போந்தன (1)

பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை – 3.கருவூர்:9 2/2

மேல்

போந்து (1)

முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் – 4.பூந்துருத்தி:1 1/2

மேல்

போம் (1)

என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1

மேல்

போய் (5)

போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே – 2.சேந்தனார்:1 8/4
இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய்
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் – 3.கருவூர்:10 2/1,2
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/2
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய்
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/3,4
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல – 10.சேந்தனார்:1 1/1

மேல்

போய்வரும் (1)

புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே – 3.கருவூர்:3 3/2

மேல்

போயினேன் (1)

அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 3/1

மேல்

போர் (1)

போர் ஏடி என்று புருவம் இடுகின்றார் – 8.புருடோத்தம:2 4/2

மேல்

போர்த்த (1)

போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/2

மேல்

போர்வை (1)

கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் – 3.கருவூர்:8 3/2

மேல்

போர்வையினீர் (1)

ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு – 9.சேதிராயர்:1 3/2

மேல்

போல் (12)

கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் – 2.சேந்தனார்:2 7/3
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே – 3.கருவூர்:4 6/2
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/2
தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப – 4.பூந்துருத்தி:2 1/2
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் – 6.வேணாட்டடிகள்:1 5/3
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று – 7.திருவாலி:3 3/3
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த – 7.திருவாலி:3 6/3
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் – 7.திருவாலி:3 8/3
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே – 7.திருவாலி:4 8/4

மேல்

போல (2)

வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து – 3.கருவூர்:10 3/2
பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் – 6.வேணாட்டடிகள்:1 3/1,2

மேல்

போலும் (6)

சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/2
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும்
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து – 3.கருவூர்:2 1/2,3
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும்
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் – 3.கருவூர்:2 2/2,3
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா – 5.கண்டராதித்:1 1/2
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/2

மேல்

போலுமே (1)

போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் – 3.கருவூர்:2 6/2

மேல்

போழ்தில் (1)

உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் – 7.திருவாலி:3 8/3

மேல்

போழ்ந்து (1)

போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் – 7.திருவாலி:1 4/1

மேல்

போற்ற (2)

புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/1,2
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4

மேல்

போற்றி (10)

பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் – 3.கருவூர்:5 11/3
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 8/1
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 8/1
அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/2
அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/2
அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் – 3.கருவூர்:8 8/2,3
எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/4
எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/4
அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப – 4.பூந்துருத்தி:2 7/2
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/2

மேல்

போற்றியே (1)

எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/4

மேல்

போற்றுவார் (2)

போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே – 2.சேந்தனார்:1 8/4
போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே – 2.சேந்தனார்:1 8/4

மேல்

போன்றதுவே (1)

மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே – 3.கருவூர்:3 7/4

மேல்

போன்று (3)

வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 1/3
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி – 3.கருவூர்:10 6/3

மேல்

போனகமும் (1)

பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி – 10.சேந்தனார்:1 10/2

மேல்