செ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்கர் 2
செக 1
செகுத்தோன் 1
செங்கணா 2
செங்கமல 1
செங்கயல் 1
செங்கழுநீர் 1
செங்கையோடு 1
செங்கோல் 1
செஞ்சாலி 1
செடி 1
செண்டடித்து 1
செண்பக 1
செண்பகம் 1
செத்தல் 1
செது 1
செந்தமிழ் 1
செந்நிறத்து 1
செந்நெல் 4
செப்பு 1
செப்புறை 1
செம் 25
செம்பியன் 1
செம்பொன் 9
செம்பொனால் 1
செம்பொனின் 3
செம்பொனே 1
செம்மலோர் 1
செய் 11
செய்கேன் 1
செய்கேனோ 1
செய்கை 1
செய்கோம் 1
செய்ஞ்ஞன்றி 1
செய்த்-தலை 1
செய்த 3
செய்தது 1
செய்தன 1
செய்தார் 1
செய்திட்டீர் 1
செய்திடினும் 1
செய்து 1
செய்ய 5
செய்யரே 1
செய்யாயோ 1
செய்யாளுக்கு 1
செய்யும் 1
செய்வது 2
செய்வாரை 1
செய 1
செயலுற்று 1
செரு 1
செருந்தி 1
செருப்பு 1
செல் 1
செல்ல 1
செல்லும் 1
செல்வ 4
செல்வம் 2
செல்வமே 3
செல்வர் 1
செல்வன் 2
செல்வன்-பால் 1
செல்வனே 1
செல்வு 1
செல்வு_இல் 1
செவி 3
செவியும் 1
செழு 3
செழும் 10
செற்ற 2
செற்றவர் 1
செற்று 1
சென்று 5
சென்றுசென்று 1
சென்னி 5

செக்கர் (2)

செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை – 1.திருமாளிகை:4 8/1
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே – 7.திருவாலி:2 2/3

மேல்

செக (1)

உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3

மேல்

செகுத்தோன் (1)

மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன்
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 10/2,3

மேல்

செங்கணா (2)

செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 8/1
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 9/1

மேல்

செங்கமல (1)

கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே – 1.திருமாளிகை:2 9/4

மேல்

செங்கயல் (1)

செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து – 8.புருடோத்தம:1 9/3

மேல்

செங்கழுநீர் (1)

பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 3/2

மேல்

செங்கையோடு (1)

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/4

மேல்

செங்கோல் (1)

செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த – 5.கண்டராதித்:1 8/2

மேல்

செஞ்சாலி (1)

செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 7/4

மேல்

செடி (1)

செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 10/2

மேல்

செண்டடித்து (1)

எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி – 1.திருமாளிகை:4 9/1

மேல்

செண்பக (1)

வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை – 8.புருடோத்தம:1 1/1

மேல்

செண்பகம் (1)

செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 5/4

மேல்

செத்தல் (1)

சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை – 1.திருமாளிகை:4 4/3

மேல்

செது (1)

செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 6/3

மேல்

செந்தமிழ் (1)

பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி – 2.சேந்தனார்:1 12/1

மேல்

செந்நிறத்து (1)

விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் – 3.கருவூர்:4 7/1

மேல்

செந்நெல் (4)

பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 3/2
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 4/3
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை – 7.திருவாலி:4 10/3
செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 8/3

மேல்

செப்பு (1)

சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை – 10.சேந்தனார்:1 13/2

மேல்

செப்புறை (1)

செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/2

மேல்

செம் (25)

கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் – 1.திருமாளிகை:2 8/1
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே – 1.திருமாளிகை:2 10/4
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் – 2.சேந்தனார்:2 3/1
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் – 2.சேந்தனார்:2 6/1
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் – 2.சேந்தனார்:3 7/1
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் – 3.கருவூர்:1 1/1
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் – 3.கருவூர்:1 2/3
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம்
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 3/3,4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 6/4
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் – 3.கருவூர்:1 7/1
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/3
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 1/1
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் – 3.கருவூர்:10 1/2
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 1/4
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/2
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் – 7.திருவாலி:1 5/3
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/3
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று – 9.சேதிராயர்:1 7/3
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன – 10.சேந்தனார்:1 6/1
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் – 10.சேந்தனார்:1 8/1

மேல்

செம்பியன் (1)

செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த – 5.கண்டராதித்:1 8/2

மேல்

செம்பொன் (9)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 5/3
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற – 1.திருமாளிகை:4 3/1
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/2
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் – 1.திருமாளிகை:4 11/1
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/4
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற – 5.கண்டராதித்:1 6/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை – 5.கண்டராதித்:1 10/1

மேல்

செம்பொனால் (1)

செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 10/4

மேல்

செம்பொனின் (3)

தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 4/3
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 5/3
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 7/3

மேல்

செம்பொனே (1)

செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து – 3.கருவூர்:8 7/1

மேல்

செம்மலோர் (1)

செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் – 9.சேதிராயர்:1 4/3

மேல்

செய் (11)

ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய – 2.சேந்தனார்:2 1/2
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 2/4
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 10/3
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/3
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 5/4
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை – 3.கருவூர்:9 8/3
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/4
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் – 6.வேணாட்டடிகள்:1 8/2
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி – 7.திருவாலி:2 10/3
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க – 10.சேந்தனார்:1 1/2

மேல்

செய்கேன் (1)

வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4

மேல்

செய்கேனோ (1)

அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4

மேல்

செய்கை (1)

ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே – 2.சேந்தனார்:2 6/4

மேல்

செய்கோம் (1)

என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1

மேல்

செய்ஞ்ஞன்றி (1)

செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 4/4

மேல்

செய்த்-தலை (1)

செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை – 7.திருவாலி:2 5/3

மேல்

செய்த (3)

தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் – 3.கருவூர்:3 5/1
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4
முடியும் நீர் செய்த மூச்சறவே – 9.சேதிராயர்:1 7/4

மேல்

செய்தது (1)

இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் – 3.கருவூர்:5 4/2

மேல்

செய்தன (1)

நாயனாரை நயந்து உரை செய்தன
தூயவாறு உரைப்பார் துறக்கத்திடை – 9.சேதிராயர்:1 10/2,3

மேல்

செய்தார் (1)

இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார்
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு – 3.கருவூர்:5 4/2,3

மேல்

செய்திட்டீர் (1)

பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம் – 9.சேதிராயர்:1 7/2

மேல்

செய்திடினும் (1)

துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார் – 6.வேணாட்டடிகள்:1 1/1

மேல்

செய்து (1)

அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4

மேல்

செய்ய (5)

அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே – 1.திருமாளிகை:2 8/4
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 1/3
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 1/4
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ – 7.திருவாலி:1 8/1
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு – 7.திருவாலி:1 8/3

மேல்

செய்யரே (1)

கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி – 3.கருவூர்:2 3/1

மேல்

செய்யாயோ (1)

செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 2/4

மேல்

செய்யாளுக்கு (1)

திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/3,4

மேல்

செய்யும் (1)

பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும்
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/1,2

மேல்

செய்வது (2)

சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் – 3.கருவூர்:3 10/2
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/2

மேல்

செய்வாரை (1)

தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே – 8.புருடோத்தம:2 4/4

மேல்

செய (1)

இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2

மேல்

செயலுற்று (1)

செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் – 9.சேதிராயர்:1 5/3

மேல்

செரு (1)

செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 9/3

மேல்

செருந்தி (1)

செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 11/4

மேல்

செருப்பு (1)

உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2

மேல்

செல் (1)

செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 1/4

மேல்

செல்ல (1)

செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை – 4.பூந்துருத்தி:2 3/2

மேல்

செல்லும் (1)

திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2

மேல்

செல்வ (4)

செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 6/3
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 11/3
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி – 2.சேந்தனார்:1 7/3
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/3

மேல்

செல்வம் (2)

பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் – 2.சேந்தனார்:2 4/2
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே – 4.பூந்துருத்தி:2 3/4

மேல்

செல்வமே (3)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே – 2.சேந்தனார்:1 6/1
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் – 2.சேந்தனார்:2 9/2,3
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த – 3.கருவூர்:4 5/1

மேல்

செல்வர் (1)

சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3

மேல்

செல்வன் (2)

கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன்
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/1,2
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3

மேல்

செல்வன்-பால் (1)

திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2

மேல்

செல்வனே (1)

சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1

மேல்

செல்வு (1)

திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2

மேல்

செல்வு_இல் (1)

திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல்
அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ – 1.திருமாளிகை:4 7/2,3

மேல்

செவி (3)

கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் – 3.கருவூர்:1 1/1
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் – 3.கருவூர்:2 9/1
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1

மேல்

செவியும் (1)

குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2

மேல்

செழு (3)

முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் – 3.கருவூர்:4 3/2
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 6/4

மேல்

செழும் (10)

சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 1/3
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 5/3
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/2
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 11/3
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த – 3.கருவூர்:7 10/3
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் – 3.கருவூர்:10 10/2
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/3

மேல்

செற்ற (2)

சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற – 1.திருமாளிகை:3 1/2
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த – 2.சேந்தனார்:1 2/3

மேல்

செற்றவர் (1)

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த – 2.சேந்தனார்:1 2/3

மேல்

செற்று (1)

செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் – 7.திருவாலி:1 9/1

மேல்

சென்று (5)

சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற – 1.திருமாளிகை:3 1/2
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து – 3.கருவூர்:6 9/2
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே – 7.திருவாலி:2 5/4
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/2

மேல்

சென்றுசென்று (1)

பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி – 3.கருவூர்:10 5/1

மேல்

சென்னி (5)

சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 10/3
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 8/4
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் – 5.கண்டராதித்:1 4/2
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே – 7.திருவாலி:1 10/4

மேல்