கட்டுருபன்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


-கண் (2)

கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் – 3.கருவூர்:4 3/1
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2

மேல்

-கொல் (6)

முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே – 2.சேந்தனார்:3 6/4
என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே – 7.திருவாலி:4 1/4
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை – 7.திருவாலி:4 2/1
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1

மேல்

-கொலோ (11)

கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 2/4
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 4/4
கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4
கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/4
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 5/4
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 7/4
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/4
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ – 7.திருவாலி:4 7/4
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை – 7.திருவாலி:4 8/1

மேல்

-தம் (19)

புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/4
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம்
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே – 2.சேந்தனார்:2 9/3,4
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 3/2
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 4/2
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/2
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க – 3.கருவூர்:1 11/3
கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே – 3.கருவூர்:2 1/1
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே – 3.கருவூர்:3 7/4
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும் – 3.கருவூர்:5 10/3
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை – 3.கருவூர்:8 5/2
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் – 7.திருவாலி:4 4/2
கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த – 7.திருவாலி:4 7/1
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன் – 8.புருடோத்தம:2 7/1

மேல்

-தலை (1)

செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை – 7.திருவாலி:2 5/3

மேல்

-தன் (6)

மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் – 2.சேந்தனார்:3 1/2
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே – 2.சேந்தனார்:3 5/4
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் – 2.சேந்தனார்:3 8/2
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன்
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி – 4.பூந்துருத்தி:2 10/1,2
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன்
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/1,2

மேல்

-தனை (3)

திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே – 1.திருமாளிகை:1 8/1
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் – 7.திருவாலி:4 7/3

மேல்

-தன்னினொடு (1)

சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு
தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே – 7.திருவாலி:1 4/3,4

மேல்

-தன்னுள் (10)

திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 3/2
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு – 7.திருவாலி:3 2/2,3
திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள்
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று – 7.திருவாலி:3 3/2,3
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே – 7.திருவாலி:3 4/3,4
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க – 7.திருவாலி:3 5/2,3
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த – 7.திருவாலி:3 6/2,3
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள்
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் – 7.திருவாலி:3 8/2,3
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 9/3,4
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள்
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட – 7.திருவாலி:3 10/2,3
மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக – 10.சேந்தனார்:1 9/2,3

மேல்

-தன்னை (6)

கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/4
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த – 3.கருவூர்:7 10/3
கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/4
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/1,2
போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் – 7.திருவாலி:1 4/1
கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன – 8.புருடோத்தம:2 11/2

மேல்

-தன்னையும் (1)

சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/2

மேல்

-தன்னொடு (1)

முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் – 7.திருவாலி:1 10/3

மேல்

-தொறும் (3)

ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் – 3.கருவூர்:10 2/2
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே – 7.திருவாலி:2 1/4
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே – 7.திருவாலி:2 2/4

மேல்

-தோறு (2)

பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே – 4.பூந்துருத்தி:1 2/1
உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் – 4.பூந்துருத்தி:2 9/1

மேல்

-தோறும் (1)

நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாள்-தோறும்
ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 8/3,4

மேல்

-நின்று (2)

கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 2/4
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் – 3.கருவூர்:9 2/1

மேல்

-பால் (5)

திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 8/2
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் – 3.கருவூர்:5 3/1
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 3/4

மேல்

-பாலே (2)

ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் – 3.கருவூர்:5 1/3
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை – 3.கருவூர்:5 5/1

மேல்

-மின் (2)

மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/1,2
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2

மேல்

-மினே (1)

வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/4

மேல்

-மின்கள் (1)

மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் – 10.சேந்தனார்:1 2/1

மேல்

-வாய் (3)

விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 3/3
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும – 3.கருவூர்:9 4/3
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ – 7.திருவாலி:1 2/1

மேல்

-வாய (1)

அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ – 1.திருமாளிகை:4 7/3

மேல்