இ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 11
இகழும் 1
இங்கு 5
இங்கே 2
இங்ஙன் 4
இசை 2
இசைப்ப 2
இசைப்பார் 1
இசையானால் 1
இசையும் 1
இசையுமாறு 1
இசையே 1
இஞ்சி 11
இட்டிகை 1
இட்டு 1
இட 2
இடப்பெற்றேன் 1
இடபம் 1
இடம் 23
இடம்கொண்டனவே 5
இடம்கொண்டிருந்த 1
இடமாக 1
இடர் 5
இடர்படா 1
இடறி 1
இடா 1
இடிந்து 2
இடிய 1
இடு 4
இடுக 1
இடுகின்றார் 1
இடுதல் 1
இடுவது 1
இடை 5
இடையறா 1
இடையாள் 1
இடையீர் 1
இணங்கிலா 1
இணர் 1
இணை 5
இதயம் 1
இதயமாம் 1
இதழி 1
இதழும் 2
இதற்கு 1
இதனின் 1
இதனை 1
இது 5
இதுவோ 2
இந்தன 1
இந்திரசால 1
இந்திரலோகம் 1
இந்திரன் 4
இந்திரனாம் 1
இந்திரனும் 1
இந்துவே 1
இப்பால் 1
இம்பர் 1
இமவான் 2
இமைக்கும் 1
இமைப்ப 1
இமையவர்க்கு 1
இமையோர் 1
இயக்கர் 1
இயங்க 1
இயம்ப 1
இயம்பே 2
இயல் 4
இயல்பில் 1
இயல்பும் 1
இரங்காய் 1
இரங்கி 1
இரங்கும் 2
இரண்டு 1
இரண்டும் 1
இரண்டொடு 1
இரந்திரந்து 1
இரவி 3
இரவிக்கு 1
இரவியும் 1
இரவு 2
இராசராசேச்சரத்திவர்க்கே 9
இராசராசேச்சரத்திவரை 1
இராசாராசேச்சரத்திவர்க்கே 1
இரி 1
இரு 11
இருக்க 3
இருக்கலாம் 1
இருக்கலாமே 1
இருக்கின்ற 1
இருக்கும் 2
இருக்கை 4
இருக்கையில் 7
இருடியர் 1
இருந்த 13
இருந்தவர்-தம் 1
இருந்தவன் 1
இருந்தவா 1
இருந்தவாறு 2
இருந்தாலும் 1
இருந்திடாய் 1
இருந்து 4
இருந்தே 1
இருந்தேயும் 2
இருநான்கு 1
இருப்பதற்கு 1
இருப்பரே 1
இருப்பாரே 1
இருபது 1
இரும் 5
இருவர் 1
இருவரும் 1
இருவரே 1
இருவரோடு 1
இருவா 1
இருள் 18
இருளரை 1
இருளை 1
இல் 20
இல்லா 2
இல்லாமை 2
இல்லை 1
இலங்கினவே 1
இலங்கு 3
இலங்கும் 2
இலங்கை 1
இலங்கையர் 1
இலங்கையர்_கோன் 1
இலய 1
இலள் 1
இலன் 1
இலா 10
இலாதார் 1
இலாமையாலே 1
இலை 4
இவ் 1
இவண் 1
இவர் 2
இவர்-தம் 2
இவரும் 1
இவரே 2
இவள் 8
இவளுடைய 1
இவளே 2
இவளை 1
இவன் 1
இவை 7
இழந்தது 1
இழி 3
இழிந்து 1
இழியும் 2
இழிவு 1
இழுது 1
இழைத்தீர் 1
இழையார்க்கு 2
இள 9
இள_மான் 1
இள_வல்லி 1
இளங்கிளையே 1
இளம் 15
இளவேனல் 1
இளையாள் 1
இற 1
இறந்ததோர் 1
இறந்தமை 1
இறப்பு 2
இறப்பொடு 1
இறுத்து 1
இறுமாக்கும் 1
இறைஞ்ச 2
இறைஞ்சு 1
இறையவனே 1
இறையும் 1
இறையை 3
இறைவரே 1
இறைவன் 2
இறைவனே 1
இறைவனை 2
இன் 8
இன்ப 3
இன்பம் 1
இன்பருக்கு 1
இன்பன் 1
இன்பனே 1
இன்று 4
இன்றும் 1
இன்றேனும் 1
இன்னம் 3
இன்னமும் 1
இன 1
இனம் 2
இனி 8
இனிதா 2
இனிய 3
இனியது 1
இனியர் 2
இனியராய் 1
இனியே 1
இனியை 1
இனைபவள் 1

இ (11)

செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1
இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/3
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே – 3.கருவூர்:4 5/2
நையாத மனத்தினனை நைவிப்பான் இ தெருவே – 3.கருவூர்:5 2/1
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் – 3.கருவூர்:5 4/2
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் – 3.கருவூர்:5 6/1
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 7/2
பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் – 6.வேணாட்டடிகள்:1 4/3
முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இ முத்தரே – 8.புருடோத்தம:2 8/4

மேல்

இகழும் (1)

பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் – 6.வேணாட்டடிகள்:1 4/3

மேல்

இங்கு (5)

அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள – 7.திருவாலி:2 8/1
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய – 8.புருடோத்தம:1 7/1
அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை – 8.புருடோத்தம:1 11/1

மேல்

இங்கே (2)

மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் – 1.திருமாளிகை:3 8/2
புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 3/2,3

மேல்

இங்ஙன் (4)

திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி – 3.கருவூர்:7 1/1
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன்
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து – 3.கருவூர்:10 3/1,2
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் – 3.கருவூர்:10 5/3
முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் – 4.பூந்துருத்தி:1 1/2

மேல்

இசை (2)

தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே – 7.திருவாலி:1 7/3,4
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட – 7.திருவாலி:3 10/3

மேல்

இசைப்ப (2)

அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் – 4.பூந்துருத்தி:2 7/2,3
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/2,3

மேல்

இசைப்பார் (1)

பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் – 3.கருவூர்:5 11/3

மேல்

இசையானால் (1)

இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் – 6.வேணாட்டடிகள்:1 3/3

மேல்

இசையும் (1)

தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 2/2

மேல்

இசையுமாறு (1)

ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4

மேல்

இசையே (1)

ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4

மேல்

இஞ்சி (11)

இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 1/4
எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 2/4
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 3/4
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 4/4
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 5/4
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 6/4
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 7/4
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 8/4
எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 9/4
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 10/4
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை – 3.கருவூர்:9 11/2

மேல்

இட்டிகை (1)

வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/2

மேல்

இட்டு (1)

பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/3,4

மேல்

இட (2)

துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி – 3.கருவூர்:2 5/3
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் – 6.வேணாட்டடிகள்:1 6/1

மேல்

இடப்பெற்றேன் (1)

ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2

மேல்

இடபம் (1)

எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி – 1.திருமாளிகை:4 9/1

மேல்

இடம் (23)

இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே – 1.திருமாளிகை:1 10/2
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் – 2.சேந்தனார்:3 9/2
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி – 3.கருவூர்:2 3/1
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 1/4
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 2/4
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 3/4
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 4/4
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 5/4
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/4
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 7/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 8/4
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 9/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 10/4
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே – 4.பூந்துருத்தி:2 6/2
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/2

மேல்

இடம்கொண்டனவே (5)

செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 1/4
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 2/4
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 3/4
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 5/4
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 6/4

மேல்

இடம்கொண்டிருந்த (1)

நேசமுடையவர்கள் நெஞ்சுளே இடம்கொண்டிருந்த
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/1,2

மேல்

இடமாக (1)

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 9/3,4

மேல்

இடர் (5)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ – 2.சேந்தனார்:3 5/1
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே – 2.சேந்தனார்:3 11/4
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:1 6/1

மேல்

இடர்படா (1)

தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 7/3

மேல்

இடறி (1)

பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3

மேல்

இடா (1)

திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி – 1.திருமாளிகை:3 10/1

மேல்

இடிந்து (2)

திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2

மேல்

இடிய (1)

இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று – 9.சேதிராயர்:1 7/3

மேல்

இடு (4)

ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் – 3.கருவூர்:2 8/1
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை – 3.கருவூர்:9 2/3
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1

மேல்

இடுக (1)

பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார் – 8.புருடோத்தம:2 9/2

மேல்

இடுகின்றார் (1)

போர் ஏடி என்று புருவம் இடுகின்றார்
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 4/2,3

மேல்

இடுதல் (1)

இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல்
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 6/3,4

மேல்

இடுவது (1)

இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் – 6.வேணாட்டடிகள்:1 6/3

மேல்

இடை (5)

தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே – 2.சேந்தனார்:3 8/4
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி – 3.கருவூர்:2 5/3
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை – 3.கருவூர்:5 10/1
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 3/4

மேல்

இடையறா (1)

பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே – 3.கருவூர்:4 5/4

மேல்

இடையாள் (1)

மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/4

மேல்

இடையீர் (1)

கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர்
பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை – 7.திருவாலி:4 1/1,2

மேல்

இணங்கிலா (1)

இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு – 1.திருமாளிகை:4 1/1

மேல்

இணர் (1)

குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2

மேல்

இணை (5)

நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் – 3.கருவூர்:4 10/2
அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2
இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய் – 3.கருவூர்:10 2/1
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே – 7.திருவாலி:2 10/4

மேல்

இதயம் (1)

ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4

மேல்

இதயமாம் (1)

இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 4/4

மேல்

இதழி (1)

இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2

மேல்

இதழும் (2)

கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி – 3.கருவூர்:3 2/2
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1

மேல்

இதற்கு (1)

வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4

மேல்

இதனின் (1)

அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் – 3.கருவூர்:6 3/1

மேல்

இதனை (1)

வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை
தோளார கையார துணையார தொழுதாலும் – 6.வேணாட்டடிகள்:1 9/1,2

மேல்

இது (5)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன – 2.சேந்தனார்:3 7/2
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் – 6.வேணாட்டடிகள்:1 8/2
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/2
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4

மேல்

இதுவோ (2)

நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 5/4
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 6/4

மேல்

இந்தன (1)

இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் – 3.கருவூர்:2 2/3

மேல்

இந்திரசால (1)

இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த – 2.சேந்தனார்:1 5/1,2

மேல்

இந்திரலோகம் (1)

இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய் – 3.கருவூர்:10 2/1

மேல்

இந்திரன் (4)

திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி – 1.திருமாளிகை:2 9/1
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் – 2.சேந்தனார்:1 10/1
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன – 10.சேந்தனார்:1 6/1

மேல்

இந்திரனாம் (1)

சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் – 3.கருவூர்:6 5/1,2

மேல்

இந்திரனும் (1)

நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/2,3

மேல்

இந்துவே (1)

அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி – 3.கருவூர்:4 9/1

மேல்

இப்பால் (1)

துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/1,2

மேல்

இம்பர் (1)

உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று – 3.கருவூர்:1 10/1

மேல்

இமவான் (2)

கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே – 1.திருமாளிகை:1 4/2
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை – 3.கருவூர்:8 5/2

மேல்

இமைக்கும் (1)

கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் – 3.கருவூர்:10 10/2

மேல்

இமைப்ப (1)

மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 4/4

மேல்

இமையவர்க்கு (1)

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1

மேல்

இமையோர் (1)

தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 2/3

மேல்

இயக்கர் (1)

சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை – 7.திருவாலி:3 7/1

மேல்

இயங்க (1)

இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – 3.கருவூர்:7 3/2

மேல்

இயம்ப (1)

துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப – 3.கருவூர்:1 4/1

மேல்

இயம்பே (2)

இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 6/4
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 7/4

மேல்

இயல் (4)

வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் – 3.கருவூர்:7 4/1
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/3
சீர் இயல் தில்லையாய் சிவனே என்று – 9.சேதிராயர்:1 3/3

மேல்

இயல்பில் (1)

சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 4/3

மேல்

இயல்பும் (1)

எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும்
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/2,3

மேல்

இரங்காய் (1)

இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே – 3.கருவூர்:5 10/2

மேல்

இரங்கி (1)

நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 3/2

மேல்

இரங்கும் (2)

தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் – 3.கருவூர்:1 3/1
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா – 3.கருவூர்:4 1/2

மேல்

இரண்டு (1)

ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4

மேல்

இரண்டும் (1)

அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2

மேல்

இரண்டொடு (1)

மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள் – 7.திருவாலி:1 9/3

மேல்

இரந்திரந்து (1)

இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2

மேல்

இரவி (3)

செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை – 1.திருமாளிகை:4 8/1
அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 9/1,2
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் – 7.திருவாலி:3 8/3

மேல்

இரவிக்கு (1)

இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து – 4.பூந்துருத்தி:2 9/3

மேல்

இரவியும் (1)

நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் – 10.சேந்தனார்:1 12/2

மேல்

இரவு (2)

என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3

மேல்

இராசராசேச்சரத்திவர்க்கே (9)

இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 1/4
எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 2/4
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 3/4
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 4/4
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 5/4
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 6/4
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 7/4
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 8/4
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 10/4

மேல்

இராசராசேச்சரத்திவரை (1)

இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/2,3

மேல்

இராசாராசேச்சரத்திவர்க்கே (1)

எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 9/4

மேல்

இரி (1)

வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி – 1.திருமாளிகை:2 3/1

மேல்

இரு (11)

அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/3
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி – 2.சேந்தனார்:1 7/1
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் – 3.கருவூர்:2 9/1
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப – 3.கருவூர்:6 4/3
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – 3.கருவூர்:7 3/2
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1

மேல்

இருக்க (3)

ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:7 2/2
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/1,2
ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய் – 6.வேணாட்டடிகள்:1 5/2

மேல்

இருக்கலாம் (1)

அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1

மேல்

இருக்கலாமே (1)

அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4

மேல்

இருக்கின்ற (1)

நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே – 6.வேணாட்டடிகள்:1 4/2

மேல்

இருக்கும் (2)

ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் – 3.கருவூர்:8 10/2
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2

மேல்

இருக்கை (4)

எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/4
தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே – 3.கருவூர்:8 9/3,4
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் – 3.கருவூர்:8 10/2
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/4

மேல்

இருக்கையில் (7)

இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 4/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 6/4
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 7/4

மேல்

இருடியர் (1)

துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப – 3.கருவூர்:1 4/1

மேல்

இருந்த (13)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ – 1.திருமாளிகை:3 3/2,3
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/2
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு – 1.திருமாளிகை:4 1/1
இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே – 3.கருவூர்:5 10/2
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 10/4
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 4/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4
மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தை – 7.திருவாலி:4 6/2
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2

மேல்

இருந்தவர்-தம் (1)

புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/4

மேல்

இருந்தவன் (1)

ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் – 3.கருவூர்:8 10/2

மேல்

இருந்தவா (1)

தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2

மேல்

இருந்தவாறு (2)

இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 6/4
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 7/4

மேல்

இருந்தாலும் (1)

ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய் – 6.வேணாட்டடிகள்:1 5/2

மேல்

இருந்திடாய் (1)

இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – 3.கருவூர்:7 3/2

மேல்

இருந்து (4)

நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 3/2
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் – 3.கருவூர்:8 8/3
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன் – 6.வேணாட்டடிகள்:1 5/1

மேல்

இருந்தே (1)

மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல் – 3.கருவூர்:6 11/1

மேல்

இருந்தேயும் (2)

போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே – 2.சேந்தனார்:1 8/4
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் – 7.திருவாலி:2 6/1,2

மேல்

இருநான்கு (1)

ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4

மேல்

இருப்பதற்கு (1)

எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2

மேல்

இருப்பரே (1)

ஆய இன்பம் எய்தி இருப்பரே – 9.சேதிராயர்:1 10/4

மேல்

இருப்பாரே (1)

எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே
&9 சேதிராயர் – 9.சேதிராயர்:2 11/4,5

மேல்

இருபது (1)

இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1

மேல்

இரும் (5)

பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் – 2.சேந்தனார்:1 8/2
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/3
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3

மேல்

இருவர் (1)

கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 5/3

மேல்

இருவரும் (1)

இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை – 8.புருடோத்தம:1 10/2

மேல்

இருவரே (1)

இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/3

மேல்

இருவரோடு (1)

நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் – 3.கருவூர்:6 7/3

மேல்

இருவா (1)

முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் – 3.கருவூர்:6 1/3

மேல்

இருள் (18)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் – 1.திருமாளிகை:3 11/3
இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா – 1.திருமாளிகை:4 3/2
இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:1 6/1
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:2 8/3
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/3
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 6/4
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை – 3.கருவூர்:9 11/2
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 1/1
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் – 3.கருவூர்:10 3/3
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே – 3.கருவூர்:10 6/2
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 7/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1

மேல்

இருளரை (1)

தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை – 1.திருமாளிகை:4 10/3

மேல்

இருளை (1)

ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் – 4.பூந்துருத்தி:2 7/3

மேல்

இல் (20)

குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட – 1.திருமாளிகை:4 1/3
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2
ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/2
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/4
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் – 3.கருவூர்:10 5/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான – 8.புருடோத்தம:1 4/1
முத்தர் முதுபகலே வந்து என்றன் இல் புகுந்து – 8.புருடோத்தம:2 9/1
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் – 10.சேந்தனார்:1 5/3
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

இல்லா (2)

அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா
தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை – 1.திருமாளிகை:4 10/2,3
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 6/2,3

மேல்

இல்லாமை (2)

எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி – 6.வேணாட்டடிகள்:1 1/3
எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவே அறிந்து ஒழிந்தேன் – 6.வேணாட்டடிகள்:1 2/2

மேல்

இல்லை (1)

பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை – 3.கருவூர்:9 2/2,3

மேல்

இலங்கினவே (1)

நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் – 3.கருவூர்:2 6/1,2

மேல்

இலங்கு (3)

விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத – 1.திருமாளிகை:4 2/2
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1
இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து – 4.பூந்துருத்தி:2 9/3

மேல்

இலங்கும் (2)

புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/4
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/2

மேல்

இலங்கை (1)

இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1

மேல்

இலங்கையர் (1)

என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன் – 8.புருடோத்தம:2 8/1

மேல்

இலங்கையர்_கோன் (1)

என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன்
மன்னு முடிகள் நெரித்த மணவாளர் – 8.புருடோத்தம:2 8/1,2

மேல்

இலய (1)

சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 4/3

மேல்

இலள் (1)

வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4

மேல்

இலன் (1)

செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 4/4

மேல்

இலா (10)

ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே – 1.திருமாளிகை:1 1/1
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை – 1.திருமாளிகை:4 6/2
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் – 2.சேந்தனார்:2 8/1
மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் – 2.சேந்தனார்:2 8/2
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/3
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு – 3.கருவூர்:9 10/3
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ – 8.புருடோத்தம:2 1/2
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் – 10.சேந்தனார்:1 3/1
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 5/4

மேல்

இலாதார் (1)

ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3

மேல்

இலாமையாலே (1)

நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/3,4

மேல்

இலை (4)

இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 1/4
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் – 6.வேணாட்டடிகள்:1 1/2

மேல்

இவ் (1)

இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த – 3.கருவூர்:1 2/1

மேல்

இவண் (1)

செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண்
மயலுற்றாள் என்றன் மாது இவளே – 9.சேதிராயர்:1 5/3,4

மேல்

இவர் (2)

எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/2

மேல்

இவர்-தம் (2)

தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/2
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன் – 8.புருடோத்தம:2 7/1

மேல்

இவரும் (1)

இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 5/4

மேல்

இவரே (2)

ஏ இவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் – 8.புருடோத்தம:2 6/1
தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் – 8.புருடோத்தம:2 6/2

மேல்

இவள் (8)

பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே – 2.சேந்தனார்:2 10/4
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் – 3.கருவூர்:5 3/1
வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் – 3.கருவூர்:5 9/3
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4
சால நாள் அயல் சார்வதினால் இவள்
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று – 9.சேதிராயர்:1 1/2,3
வேரி நல் குழலாள் இவள் விம்முமே – 9.சேதிராயர்:1 3/4
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள்
ஒன்றும் ஆகிலள் உம் பொருட்டே – 9.சேதிராயர்:1 9/3,4

மேல்

இவளுடைய (1)

துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் – 3.கருவூர்:5 7/3

மேல்

இவளே (2)

வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
மயலுற்றாள் என்றன் மாது இவளே – 9.சேதிராயர்:1 5/4

மேல்

இவளை (1)

இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை – 2.சேந்தனார்:3 2/1

மேல்

இவன் (1)

இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் – 3.கருவூர்:5 4/2

மேல்

இவை (7)

பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 8/2
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/2
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே – 4.பூந்துருத்தி:2 10/4
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே – 7.திருவாலி:1 11/3,4
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ – 8.புருடோத்தம:1 1/2
ஆரே இவை படுவார் ஐயம்கொள வந்து – 8.புருடோத்தம:2 4/1

மேல்

இழந்தது (1)

இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4

மேல்

இழி (3)

மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 1/3
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 5/3
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/3

மேல்

இழிந்து (1)

எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே – 7.திருவாலி:2 5/2

மேல்

இழியும் (2)

உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை – 7.திருவாலி:3 4/2
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் – 7.திருவாலி:4 6/3

மேல்

இழிவு (1)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4

மேல்

இழுது (1)

இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4

மேல்

இழைத்தீர் (1)

கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் – 9.சேதிராயர்:1 9/2

மேல்

இழையார்க்கு (2)

சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1

மேல்

இள (9)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4
என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் – 2.சேந்தனார்:2 10/2
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை – 2.சேந்தனார்:3 2/1
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 2/3
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை – 3.கருவூர்:9 8/3
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல் – 7.திருவாலி:3 3/1
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் – 8.புருடோத்தம:1 9/1

மேல்

இள_மான் (1)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4

மேல்

இள_வல்லி (1)

என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் – 2.சேந்தனார்:2 10/2

மேல்

இளங்கிளையே (1)

கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே – 2.சேந்தனார்:3 5/4

மேல்

இளம் (15)

நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா – 1.திருமாளிகை:2 5/1
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை – 2.சேந்தனார்:3 2/1
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 6/3
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே – 2.சேந்தனார்:3 6/4
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் – 3.கருவூர்:1 1/3
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் – 3.கருவூர்:1 3/3
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை – 3.கருவூர்:5 10/1
மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல் – 3.கருவூர்:6 11/1
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/3
கொடியை கோமள சாதியை கொம்பு இளம்
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம் – 9.சேதிராயர்:1 7/1,2
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் – 10.சேந்தனார்:1 8/1

மேல்

இளவேனல் (1)

அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2

மேல்

இளையாள் (1)

இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால் – 7.திருவாலி:4 10/1

மேல்

இற (1)

இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் – 5.கண்டராதித்:1 7/1,2

மேல்

இறந்ததோர் (1)

கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே – 1.திருமாளிகை:1 5/1

மேல்

இறந்தமை (1)

நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் – 3.கருவூர்:7 4/2

மேல்

இறப்பு (2)

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1

மேல்

இறப்பொடு (1)

இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும் – 1.திருமாளிகை:4 11/3

மேல்

இறுத்து (1)

அன்று அருக்கனை பல் இறுத்து ஆனையை – 9.சேதிராயர்:1 9/1

மேல்

இறுமாக்கும் (1)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4

மேல்

இறைஞ்ச (2)

முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 5/3
பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான் – 5.கண்டராதித்:1 6/1

மேல்

இறைஞ்சு (1)

சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 3/3

மேல்

இறையவனே (1)

எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே – 7.திருவாலி:4 4/4

மேல்

இறையும் (1)

வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும்
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 2/3,4

மேல்

இறையை (3)

எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே – 7.திருவாலி:4 1/4
நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே – 7.திருவாலி:4 5/4

மேல்

இறைவரே (1)

இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/3

மேல்

இறைவன் (2)

இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் – 2.சேந்தனார்:3 9/2
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே – 7.திருவாலி:4 9/4

மேல்

இறைவனே (1)

எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/4

மேல்

இறைவனை (2)

இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற – 7.திருவாலி:4 5/1
இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால் – 7.திருவாலி:4 10/1

மேல்

இன் (8)

அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 8/4
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி – 3.கருவூர்:10 7/1
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் – 5.கண்டராதித்:1 10/3
பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை – 7.திருவாலி:4 1/2
புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர் திருச்சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 4/3
இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால் – 7.திருவாலி:4 10/1

மேல்

இன்ப (3)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 3/3
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் – 2.சேந்தனார்:2 8/1

மேல்

இன்பம் (1)

ஆய இன்பம் எய்தி இருப்பரே – 9.சேதிராயர்:1 10/4

மேல்

இன்பருக்கு (1)

இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா – 1.திருமாளிகை:4 3/2

மேல்

இன்பன் (1)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4

மேல்

இன்பனே (1)

இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 7/4

மேல்

இன்று (4)

எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் – 3.கருவூர்:5 1/2,3
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை – 3.கருவூர்:5 2/2
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 7/1,2

மேல்

இன்றும் (1)

பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 2/4

மேல்

இன்றேனும் (1)

நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2

மேல்

இன்னம் (3)

வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம்
தேறாள் தென் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 9/3,4
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை – 8.புருடோத்தம:1 10/2
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் – 10.சேந்தனார்:1 5/1

மேல்

இன்னமும் (1)

எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே – 7.திருவாலி:2 5/2

மேல்

இன (1)

கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே – 8.புருடோத்தம:2 7/4

மேல்

இனம் (2)

புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் – 3.கருவூர்:1 9/3
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/3

மேல்

இனி (8)

பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே – 2.சேந்தனார்:1 4/4
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே – 6.வேணாட்டடிகள்:1 10/4
நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே – 7.திருவாலி:4 5/4
நினைத்தேன் இனி போக்குவனோ நிமல திரளை நினைப்பார் – 7.திருவாலி:4 6/1
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1
நாணம் அற்றனள் நான் அறியேன் இனி
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 2/2,3

மேல்

இனிதா (2)

நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4
எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே – 8.புருடோத்தம:2 11/4

மேல்

இனிய (3)

விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/4
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்து அமர்ந்து இனிய
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் – 3.கருவூர்:4 10/1,2
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 6/4

மேல்

இனியது (1)

திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி – 3.கருவூர்:7 1/1

மேல்

இனியர் (2)

எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 9/4
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 10/4

மேல்

இனியராய் (1)

இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும் – 1.திருமாளிகை:4 11/3

மேல்

இனியே (1)

மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே – 2.சேந்தனார்:1 7/4

மேல்

இனியை (1)

கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே – 3.கருவூர்:4 8/4

மேல்

இனைபவள் (1)

எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/2

மேல்