வே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

வேஎள் (1)

பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 273,274

மேல்


வேங்கை (1)

வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 36

மேல்


வேட்டம் (1)

வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 129

மேல்


வேட்டன்றே (1)

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100

மேல்


வேண்டி (1)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248

மேல்


வேண்டு (1)

இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35

மேல்


வேண்டுநர் (1)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248

மேல்


வேந்தன் (1)

சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 187,188

மேல்


வேம்பு (1)

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176

மேல்


வேர் (1)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298

மேல்


வேரல் (1)

ஆர முழு_முதல் உருட்டி வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 297,298

மேல்


வேல் (3)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 46,47
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265

மேல்


வேலன் (2)

பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு – திரு 190,191
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222

மேல்


வேழம் (2)

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

மேல்


வேள்வி (2)

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 156

மேல்


வேறு (9)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 83
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178
யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105

மேல்


வேறுபடு (1)

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198

மேல்


வேனில் (1)

வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61

மேல்