வெ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

வெட்சி (1)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21

மேல்


வெண் (4)

செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95

மேல்


வெண்குடை (1)

நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 184,185

மேல்


வெண்கூதாளம் (1)

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 192

மேல்


வெம்மையில் (1)

கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 69

மேல்


வெரீஇ (1)

மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ
கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 310,311

மேல்


வெருவர (2)

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 54,55
உருவ பல் பூ தூஉய் வெருவர
குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 241,242

மேல்


வெல் (2)

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258

மேல்


வெள் (3)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி – திரு 233
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56

மேல்


வெள்ளி (2)

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110

மேல்


வெள்ளில் (1)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37

மேல்


வெளிற்றின் (1)

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312

மேல்


வெற்பில் (1)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 12,13

மேல்


வெற்றி (1)

வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258

மேல்


வெறி (1)

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222

மேல்


வெறுக்கை (1)

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263

மேல்


வென்று (5)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 156
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

மேல்