வி – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விசித்து 1
விசும்பில் 2
விசும்பின் 1
விசும்பு 1
விடர் 1
விடு 1
விடுபு 1
விடை 1
விண் 4
விதியின் 1
விதிர்ப்ப 1
வியல் 3
வியன் 2
விரல் 4
விரவு 1
விராவு 1
விராவு_உற்ற 1
விரி 2
விரித்த 1
விரிந்த 1
விரிந்தன்று 1
விரிந்து 1
விரை 3
விரைஇ 3
விரைஇய 1
வில் 3
விழவினும் 1
விழி 1
விழு 3
விழுப்புண் 1
விழுமிய 2
விளக்கத்து 1
விளக்கில் 1
விளக்கின் 1
விளக்கும்மே 1
விளங்க 3
விளங்கிய 1
விளங்கு 4
விளங்கும் 2
விளிவு 1
விளைந்த 1
விறந்து 1
விறல் 4
வினை 2
வினையே 1

விசித்து (1)

வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150

மேல்


விசும்பில் (2)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 20

மேல்


விசும்பின் (1)

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116

மேல்


விசும்பு (1)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123

மேல்


விடர் (1)

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314

மேல்


விடு (1)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94

மேல்


விடுபு (1)

செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 105,106

மேல்


விடை (1)

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி – திரு 232,233

மேல்


விண் (4)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 107
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161

மேல்


விதியின் (1)

மந்திர விதியின் மரபுளி வழாஅ – திரு 95

மேல்


விதிர்ப்ப (1)

இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 180,181

மேல்


வியல் (3)

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73

மேல்


வியன் (2)

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 129

மேல்


விரல் (4)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 52,53
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165

மேல்


விரவு (1)

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27

மேல்


விராவு (1)

நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

மேல்


விராவு_உற்ற (1)

நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

மேல்


விரி (2)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73

மேல்


விரித்த (1)

தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135

மேல்


விரிந்த (1)

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 131

மேல்


விரிந்தன்று (1)

பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92

மேல்


விரிந்து (1)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72

மேல்


விரை (3)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235

மேல்


விரைஇ (3)

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு – திரு 191
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218
ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128

மேல்


விரைஇய (1)

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி – திரு 233

மேல்


வில் (3)

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194
வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின் – நெடு 109

மேல்


விழவினும் (1)

ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 220,221

மேல்


விழி (1)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48

மேல்


விழு (3)

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82

மேல்


விழுப்புண் (1)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172

மேல்


விழுமிய (2)

உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 172,173
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 294,295

மேல்


விளக்கத்து (1)

செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 144,145

மேல்


விளக்கில் (1)

பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

மேல்


விளக்கின் (1)

இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42

மேல்


விளக்கும்மே (1)

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98

மேல்


விளங்க (3)

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 91,92
மார்பொடு விளங்க ஒரு கை – திரு 112
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 147,148

மேல்


விளங்கிய (1)

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84

மேல்


விளங்கு (4)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110

மேல்


விளங்கும் (2)

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153

மேல்


விளிவு (1)

அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292

மேல்


விளைந்த (1)

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195

மேல்


விறந்து (1)

கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97

மேல்


விறல் (4)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
செருவில் ஒருவ பொரு விறல் மள்ள – திரு 262
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167

மேல்


வினை (2)

யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

மேல்


வினையே (1)

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 66,67

மேல்