வா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

வாங்கிய (2)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 105

மேல்


வாங்கு (2)

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150

மேல்


வாடா (1)

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79

மேல்


வாய் (12)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 47,48
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139
அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 143

மேல்


வாய்ப்ப (1)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 65,66

மேல்


வாய்வைத்து (1)

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246

மேல்


வாயள் (1)

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 56

மேல்


வாயில் (2)

பொருநர் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 69,70
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் – நெடு 88,89

மேல்


வாயும் (1)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17

மேல்


வாயுறை (1)

வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140

மேல்


வார் (2)

நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141

மேல்


வாரண (1)

வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 219

மேல்


வால் (5)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59

மேல்


வாழ்த்தி (2)

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 238,239
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 247,248

மேல்


வாழிய (1)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39

மேல்


வாழை (1)

வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 307

மேல்


வாள் (6)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182

மேல்


வாள்_நுதல் (1)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6

மேல்


வாளை (1)

வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 143

மேல்


வான் (6)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60

மேல்


வானம் (1)

பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 2

மேல்


வானோர் (1)

வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260

மேல்