மொ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொய்ம்பின் 3
மொழி 3
மொழியவும் 1
மொழியா 1

மொய்ம்பின் (3)

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 81,82
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 105
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275

மேல்


மொழி (3)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே – திரு 268
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292

மேல்


மொழியவும் (1)

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156

மேல்


மொழியா (1)

குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 281

மேல்