மா – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

மா (11)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179

மேல்


மாக்கள் (1)

முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 32,33

மேல்


மாசு (4)

மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146

மேல்


மாடம் (2)

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29

மேல்


மாண் (4)

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 81
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124

மேல்


மாண்டு (2)

துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 81,82
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 124,125

மேல்


மாதிரம் (1)

கூதிர் நின்றன்றால் போதே மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 72,73

மேல்


மாந்தி (1)

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

மேல்


மார்ப (1)

மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261

மேல்


மார்பின் (3)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 104,105
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 129,130
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 193,194

மேல்


மார்பினன் (1)

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன்
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 11,12

மேல்


மார்பொடு (1)

மார்பொடு விளங்க ஒரு கை – திரு 112

மேல்


மால் (2)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256

மேல்


மாலை (5)

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை
துணை_உற அறுத்து தூங்க நாற்றி – திரு 236,237
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184

மேல்


மாவின் (1)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 143,144

மேல்


மாற்று (1)

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81

மேல்


மாற்றோர் (1)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257

மேல்


மாறுவன (1)

மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 48

மேல்


மான் (1)

ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128

மேல்


மானின் (1)

மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 128,129

மேல்

Related posts