நி – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

நெடுநல்வாடை

திருமுருகாற்றுப்படை

நிணம் (1)

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 56

மேல்


நிமிர் (2)

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103

மேல்


நியமத்து (1)

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 70,71

மேல்


நிரை (1)

ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4

மேல்


நிரைத்த (1)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

மேல்


நிரைத்து (1)

முல்லை பல் போது உறழ பூ நிரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 130,131

மேல்


நிலம் (1)

நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170

மேல்


நிலவு (1)

நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95

மேல்


நிலன் (1)

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214

மேல்


நிலை (10)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 62,63
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 86,87
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160

மேல்


நிலைபெற்ற (1)

திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் – நெடு 89

மேல்


நிலையினும் (2)

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 221,222
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்
மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 226,227

மேல்


நிலைஇய (4)

அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 160,161
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 162,163

மேல்


நிவந்த (2)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60

மேல்


நிவப்பின் (1)

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288

மேல்


நிற (5)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132

மேல்


நிறம் (1)

நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 306

மேல்


நிறீஇ (1)

வாரண கொடியொடு வயின் பட நிறீஇ
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 219,220

மேல்


நிறுத்து (1)

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243

மேல்


நிறுப்ப (1)

கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 70,71

மேல்


நிறைந்த (1)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31

மேல்


நிறைந்து (1)

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106

மேல்


நிறைய (2)

கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 96,97
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102

மேல்


நின் (5)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291

மேல்


நின்ற (1)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217

மேல்


நின்றன்றால் (1)

கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் – நெடு 72

மேல்


நின்னொடு (1)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லா புலமையோய் என – திரு 279,280

மேல்


நினைவனள் (1)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163

மேல்

Related posts