தோ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

தோட்டு (1)

வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22

மேல்


தோடு (1)

தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135

மேல்


தோய் (1)

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288

மேல்


தோயா (1)

கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 15

மேல்


தோள் (9)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள்
கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 14,15
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 106,107
வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 152,153
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 31,32
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 36,37
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182

மேல்


தோளன் (1)

கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 211,212

மேல்


தோன்ற (1)

ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294

மேல்


தோன்றல (1)

வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108

மேல்


தோன்றலர் (1)

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 169

மேல்


தோன்றி (2)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 163,164
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி
அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 283,284

மேல்


தோன்றும் (1)

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166

மேல்