சே – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

நெடுநல்வாடை

திருமுருகாற்றுப்படை

சேஎய் (2)

எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 61,62
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 271,272

மேல்


சேக்கை (2)

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 131
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 135,136

மேல்


சேண் (5)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87

மேல்


சேணின்று (1)

ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று
இழுமென இழிதரும் அருவி – திரு 315,316

மேல்


சேர்த்தி (1)

செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165

மேல்


சேர்த்தியது (1)

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108

மேல்


சேர்பு (2)

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 169,170
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின் – நெடு 108,109

மேல்


சேவடி (1)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 62

மேல்


சேவல் (2)

தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210
மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46

மேல்


சேற்று (2)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180

மேல்


சேறலும் (1)

அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125

மேல்


சேறு (2)

தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157

மேல்

Related posts