சி – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

சிதறி (3)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 8,9
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 229,230
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 231,232

மேல்


சிதைய (1)

தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300

மேல்


சிமைய (1)

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27

மேல்


சிமையத்து (1)

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253

மேல்


சில் (4)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54

மேல்


சில (1)

செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165

மேல்


சிலம்ப (2)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245

மேல்


சிலம்பி (1)

சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59

மேல்


சிலம்பில் (1)

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238

மேல்


சிலம்பின் (1)

நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 100

மேல்


சிலம்பு (1)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40

மேல்


சிலம்பு_அகம் (1)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40

மேல்


சிலம்பும் (1)

நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 100

மேல்


சிலரொடு (1)

சிலரொடு திரிதரும் வேந்தன் – நெடு 187

மேல்


சிலைப்ப (1)

ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315

மேல்


சிவந்த (1)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 206

மேல்


சிறந்து (1)

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 33,34

மேல்


சிறப்பின் (4)

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 89,90
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 106
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய – நெடு 162

மேல்


சிறு (2)

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49

மேல்


சிறுகுடி (1)

குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து – திரு 196

மேல்


சிறுதினை (1)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218

மேல்


சிறுபறை (1)

தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 197

மேல்


சிறுவ (1)

வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 258,259

மேல்


சிறை (2)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 150,151

மேல்


சின் (1)

நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138

மேல்


சினம் (1)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135

மேல்


சினை (1)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298

மேல்


சினைய (1)

குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28

மேல்

Related posts