கொ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

முழு நூல்களைக் காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

நெடுநல்வாடை

திருமுருகாற்றுப்படை

கொக்கின் (1)

பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15

மேல்


கொட்டி (1)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35

மேல்


கொட்ப (1)

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114

மேல்


கொட்பினர் (1)

அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 174

மேல்


கொடி (9)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 38,39
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி
வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 67,68
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 309
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 113

மேல்


கொடிய (1)

வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின் – நெடு 109

மேல்


கொடியன் (1)

கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 211

மேல்


கொடியொடு (3)

வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 219
மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

மேல்


கொடு (2)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246

மேல்


கொடுத்தன்றே (1)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94

மேல்


கொடும் (4)

பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 3
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58

மேல்


கொண்ட (5)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183
குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் – திரு 213
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126
காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

மேல்


கொண்டு (1)

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77

மேல்


கொம்மை (1)

கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 69

மேல்


கொலைஇய (1)

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194

மேல்


கொழியா (1)

நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா
வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 306,307

மேல்


கொழு (3)

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 229
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24

மேல்


கொள் (8)

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 28
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50

மேல்


கொள்-மார் (1)

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174

மேல்


கொள்கை (5)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 89
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 161,162
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 180,181

மேல்


கொள்ளியர் (1)

கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8

மேல்


கொள்ளும் (1)

நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95

மேல்


கொள (2)

தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67

மேல்


கொளீஇ (2)

இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 42,43
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 127

மேல்


கொளீஇய (3)

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158

மேல்


கொற்றத்து (3)

மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 60,61
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 156,157
குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 266,267

மேல்


கொற்றவை (1)

வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258

மேல்


கொன்ற (1)

குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து – திரு 266

மேல்

Related posts