எ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

எ (1)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17

மேல்


எஃகமொடு (1)

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 176,177

மேல்


எஃகு (1)

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111

மேல்


எகின (1)

நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91

மேல்


எஞ்சிய (1)

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி – திரு 97

மேல்


எடுத்த (1)

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67

மேல்


எடுத்து (1)

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239

மேல்


எதிர (1)

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18

மேல்


எய்தி (1)

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 288,289

மேல்


எய்திய (3)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123

மேல்


எய்தினர் (1)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248

மேல்


எய்யா (1)

எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61

மேல்


எயிற்று (1)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 148,149

மேல்


எயிறு (1)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

மேல்


எரி (1)

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 103,104

மேல்


எருத்தம் (1)

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159

மேல்


எருத்தின் (1)

முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24

மேல்


எல் (1)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74

மேல்


எழில் (3)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116

மேல்


எழு (1)

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87

மேல்


எழுதரு (2)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90

மேல்


எழுந்த (1)

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19

மேல்


எழுந்து (3)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171

மேல்


எறி (1)

இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180

மேல்


எறி-தொறும் (1)

வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173

மேல்


எறிந்து (1)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 117,118

மேல்


எறுழ் (1)

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31

மேல்


என்பு (1)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130

மேல்


என்று (1)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39

மேல்


என (7)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
புரையுநர் இல்லா புலமையோய் என
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 280,281
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 285,286
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 291,292
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3
இன்னே வருகுவர் இன் துணையோர் என
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 155,156

மேல்

Related posts