உ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்கம் 1
உகத்தவை 1
உகளும் 1
உகிர் 1
உச்சி 1
உட்க 1
உடன் 11
உடீஇ 3
உடுக்கையர் 1
உடை 12
உண்ட 1
உண்டியர் 1
உண்ணாது 1
உண்ணார் 1
உண 1
உணா 1
உத்தியொடு 1
உதிர 2
உமை 1
உயர் 5
உயர்த்த 1
உயரிய 1
உயிர்க்கு 1
உயிர்க்கும் 1
உயிரா 1
உரம் 1
உரிஞ்சிய 1
உரியன் 3
உரிவை 1
உரீஇ 2
உரு 3
உருட்டி 1
உரும் 2
உருவ 2
உருவின் 5
உருவினர் 1
உருள் 1
உரை 2
உரைத்து 1
உரோகிணி 1
உலகத்து 1
உலகம் 3
உலந்து 1
உலறிய 2
உவந்து 2
உவப்ப 1
உழி 1
உள் 1
உள்ளமொடு 1
உள்ளி 2
உளர்ப்பு 1
உளர 1
உளி 1
உளியம் 1
உளை 2
உற்ற 1
உற்று 1
உற 3
உறழ் 6
உறழ 1
உறு 7
உறுத்து 3
உறுநர் 1
உறை 2
உறைதலும் 3
உறையும் 1

உக்கம் (1)

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108

மேல்


உகத்தவை (1)

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156

மேல்


உகளும் (1)

குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 92

மேல்


உகிர் (1)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52

மேல்


உச்சி (1)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185

மேல்


உட்க (1)

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 243,244

மேல்


உடன் (11)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 39,40
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 64,65
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 131
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 174
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன்
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 245,246
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 281,282
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன்
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 295,296
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79

மேல்


உடீஇ (3)

புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 184,185
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 204,205
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 230,231

மேல்


உடுக்கையர் (1)

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126

மேல்


உடை (12)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 138,139
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125

மேல்


உண்ட (1)

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

மேல்


உண்டியர் (1)

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 131

மேல்


உண்ணாது (1)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 46,47

மேல்


உண்ணார் (1)

தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 65,66

மேல்


உண (1)

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203

மேல்


உணா (1)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94

மேல்


உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23

மேல்


உதிர (2)

நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308

மேல்


உமை (1)

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153

மேல்


உயர் (5)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289

மேல்


உயர்த்த (1)

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158

மேல்


உயரிய (1)

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152

மேல்


உயிர்க்கு (1)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278

மேல்


உயிர்க்கும் (1)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149

மேல்


உயிரா (1)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 163,164

மேல்


உரம் (1)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121

மேல்


உரிஞ்சிய (1)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33

மேல்


உரியன் (3)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 77
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 189

மேல்


உரிவை (1)

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129

மேல்


உரீஇ (2)

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 80,81
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 110,111

மேல்


உரு (3)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273

மேல்


உருட்டி (1)

ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297

மேல்


உரும் (2)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172

மேல்


உருவ (2)

உருவ பல் பூ தூஉய் வெருவர – திரு 241
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 113

மேல்


உருவின் (5)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 83
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 287,288

மேல்


உருவினர் (1)

மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128

மேல்


உருள் (1)

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11

மேல்


உரை (2)

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154

மேல்


உரைத்து (1)

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 228,229

மேல்


உரோகிணி (1)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163

மேல்


உலகத்து (1)

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 293,294

மேல்


உலகம் (3)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161

மேல்


உலந்து (1)

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19

மேல்


உலறிய (2)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138

மேல்


உவந்து (2)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 188,189

மேல்


உவப்ப (1)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1

மேல்


உழி (1)

முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251

மேல்


உள் (1)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45

மேல்


உள்ளமொடு (1)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 62,63

மேல்


உள்ளி (2)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122

மேல்


உளர்ப்பு (1)

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198

மேல்


உளர (1)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 142,143

மேல்


உளி (1)

கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119

மேல்


உளியம் (1)

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 313,314

மேல்


உளை (2)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93

மேல்


உற்ற (1)

நரை விராவு_உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152

மேல்


உற்று (1)

முத்து உடை வான் கோடு தழீஇ தத்து_உற்று – திரு 305

மேல்


உற (3)

துணை_உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60

மேல்


உறழ் (6)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 85
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50

மேல்


உறழ (1)

முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 130

மேல்


உறு (7)

இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
செவி நேர்பு வைத்த செய்வு_உறு திவவின் – திரு 140
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112
ஊட்டு_உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

மேல்


உறுத்து (3)

மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து – திரு 25
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து_உறுத்து – நெடு 125
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு_உறுத்து – நெடு 143

மேல்


உறுநர் (1)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

மேல்


உறை (2)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45

மேல்


உறைதலும் (3)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 77
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 189
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249

மேல்


உறையும் (1)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 63,64

மேல்

Related posts