அ – முதல் சொற்கள்- திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 3
அகம் 1
அகல் 5
அகலத்து 1
அகலா 1
அகவ 1
அகவும் 1
அகில் 1
அகிலொடு 1
அங்குசம் 1
அங்கை 1
அசைதலும் 1
அசைஇ 1
அசைஇயது 1
அஞ்சல் 1
அஞ்சுவர 1
அஞ்சுவரு 2
அட்டி 1
அடக்கிய 1
அடங்க 1
அடி 4
அடு 3
அடுக்கத்து 1
அடுக்கிய 1
அணங்கு 1
அணி 4
அணிந்த 1
அணை 2
அணைத்த 1
அதாஅன்று 5
அந்தணர் 2
அந்தர 2
அப்பி 2
அப்பிய 1
அம் 8
அம்பணம் 1
அம்ம 1
அமயத்து 1
அமர் 2
அமர்ந்த 1
அமர்ந்தன்றே 1
அமர்ந்து 5
அமை 6
அமைத்த 1
அமைத்து 3
அமைவர 2
அயர் 2
அயர 2
அயல 1
அயிர் 1
அர 2
அர_மகளிர்க்கு 1
அரி 2
அரிசி 1
அரிவைக்கு 1
அரு 3
அருகு 1
அரும் 4
அரும்பின் 1
அரும்பு 1
அருமையின் 1
அருவி 2
அருவியொடு 1
அரை 1
அரைநாள் 1
அல்குல் 4
அல்லது 1
அலங்கு 1
அலந்தோர்க்கு 1
அலர் 2
அலை 1
அலைக்கும் 1
அலைவாய் 1
அவிர் 5
அவிர்-தொறும் 1
அவிர்வன 1
அவிழ் 2
அவிழ்ந்த 4
அவுணர் 1
அழல் 1
அழல 1
அழுத்திய 1
அளந்து 1
அளவு 1
அளவையின் 2
அளிக்கும் 1
அளியன்தானே 1
அளை 1
அளைஇ 1
அற 2
அறல் 1
அறன் 1
அறி 3
அறிதல் 1
அறிந்த 1
அறிந்து 2
அறிந்தோர் 1
அறியா 3
அறிவல் 1
அறிவினர் 1
அறு 4
அறு_நான்கு 1
அறு_அறு_காலை-தோறு 1
அறுத்த 1
அறுத்து 2
அறும் 1
அறுவர் 1
அறுவையர் 1
அன்பு 1
அன்ன 20
அன்னமோடு 1


அ (3)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41

மேல்


அகம் (1)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40

மேல்


அகல் (5)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 20
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102

மேல்


அகலத்து (1)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 272,273

மேல்


அகலா (1)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 88

மேல்


அகவ (1)

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 122,123

மேல்


அகவும் (1)

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99

மேல்


அகில் (1)

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296

மேல்


அகிலொடு (1)

இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56

மேல்


அங்குசம் (1)

அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110

மேல்


அங்கை (1)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 254

மேல்


அசைதலும் (1)

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176

மேல்


அசைஇ (1)

தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 185

மேல்


அசைஇயது (1)

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109

மேல்


அஞ்சல் (1)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291

மேல்


அஞ்சுவர (1)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58

மேல்


அஞ்சுவரு (2)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149

மேல்


அட்டி (1)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 28,29

மேல்


அடக்கிய (1)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186

மேல்


அடங்க (1)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59

மேல்


அடி (4)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151

மேல்


அடு (3)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 156

மேல்


அடுக்கத்து (1)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் – திரு 42,43

மேல்


அடுக்கிய (1)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155

மேல்


அணங்கு (1)

அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289

மேல்


அணி (4)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 211
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86

மேல்


அணிந்த (1)

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193

மேல்


அணை (2)

இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133

மேல்


அணைத்த (1)

இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 200

மேல்


அதாஅன்று (5)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 77,78
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 125,126
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 176,177
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 189,190
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 217,218

மேல்


அந்தணர் (2)

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263

மேல்


அந்தர (2)

அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 119
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 174

மேல்


அப்பி (2)

வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 36
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து – திரு 228

மேல்


அப்பிய (1)

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86

மேல்


அம் (8)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 104
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு – திரு 191
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்
கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 210,211
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
புடை வீழ் அம் துகில் இட_வயின் தழீஇ – நெடு 181

மேல்


அம்பணம் (1)

கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96

மேல்


அம்ம (1)

இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 168

மேல்


அமயத்து (1)

ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 75,76

மேல்


அமர் (2)

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272

மேல்


அமர்ந்த (1)

பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38

மேல்


அமர்ந்தன்றே (1)

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே
ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 102,103

மேல்


அமர்ந்து (5)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 77
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153
முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 183,184

மேல்


அமை (6)

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137

மேல்


அமைத்த (1)

சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 183

மேல்


அமைத்து (3)

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 55,56
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 83,84
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 122,123

மேல்


அமைவர (2)

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து – திரு 227,228
அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104

மேல்


அயர் (2)

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283

மேல்


அயர (2)

தொண்டக_சிறுபறை குரவை அயர
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 197,198
மல்லல் ஆவணம் மாலை அயர
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 44,45

மேல்


அயல (1)

கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 97,98

மேல்


அயிர் (1)

இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56

மேல்


அர (2)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117

மேல்


அர_மகளிர்க்கு (1)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117

மேல்


அரி (2)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164

மேல்


அரிசி (1)

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 233,234

மேல்


அரிவைக்கு (1)

புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 166,167

மேல்


அரு (3)

பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186

மேல்


அருகு (1)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

மேல்


அரும் (4)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167

மேல்


அரும்பின் (1)

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40

மேல்


அரும்பு (1)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு
இணைப்பு_உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 29,30

மேல்


அருமையின் (1)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 278,279

மேல்


அருவி (2)

இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 316,317
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97

மேல்


அருவியொடு (1)

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240

மேல்


அரை (1)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 206,207

மேல்


அரைநாள் (1)

ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75

மேல்


அல்குல் (4)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 16,17
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 146,147
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 145,146

மேல்


அல்லது (1)

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107

மேல்


அலங்கு (1)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298

மேல்


அலந்தோர்க்கு (1)

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 271

மேல்


அலர் (2)

தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136

மேல்


அலை (1)

நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6

மேல்


அலைக்கும் (1)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50

மேல்


அலைவாய் (1)

அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125

மேல்


அவிர் (5)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 144
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 168,169

மேல்


அவிர்-தொறும் (1)

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 144,145

மேல்


அவிர்வன (1)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 88

மேல்


அவிழ் (2)

அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83

மேல்


அவிழ்ந்த (4)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை – திரு 72,73
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24

மேல்


அவுணர் (1)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59

மேல்


அழல் (1)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149

மேல்


அழல (1)

பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 175,176

மேல்


அழுத்திய (1)

வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140

மேல்


அளந்து (1)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278

மேல்


அளவு (1)

பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123

மேல்


அளவையின் (2)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 281

மேல்


அளிக்கும் (1)

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 271

மேல்


அளியன்தானே (1)

அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284

மேல்


அளை (1)

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314

மேல்


அளைஇ (1)

அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292

மேல்


அற (2)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128

மேல்


அறல் (1)

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18

மேல்


அறன் (1)

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180

மேல்


அறி (3)

மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76

மேல்


அறிதல் (1)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278

மேல்


அறிந்த (1)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249

மேல்


அறிந்து (2)

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 182
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 41,42

மேல்


அறிந்தோர் (1)

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263

மேல்


அறியா (3)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 133
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136

மேல்


அறிவல் (1)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291

மேல்


அறிவினர் (1)

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 133

மேல்


அறு (4)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104

மேல்


அறு_நான்கு (1)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179

மேல்


அறு_அறு_காலை-தோறு (1)

அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104

மேல்


அறுத்த (1)

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275

மேல்


அறுத்து (2)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து
வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 218,219
துணை_உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237

மேல்


அறும் (1)

துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 26

மேல்


அறுவர் (1)

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255

மேல்


அறுவையர் (1)

இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35

மேல்


அன்பு (1)

அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292

மேல்


அன்ன (20)

கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 15
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 169
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின் – நெடு 109
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
செம்பு இயன்று அன்ன செய்வு_உறு நெடும் சுவர் – நெடு 112
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132

மேல்


அன்னமோடு (1)

குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 92

மேல்

Related posts