வை – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வைக்க 3
வைக்கலும் 1
வைக்கின் 2
வைக்கின்றவாறே 1
வைக்கும் 3
வைகரி 3
வைகலும் 1
வைகாதோர் 1
வைகி 2
வைகியே 1
வைகில் 1
வைகின்ற 1
வைகின்ற-போது 1
வைகுமே 1
வைச்ச 3
வைச்சன 2
வைச்சு 1
வைத்த 49
வைத்தது 10
வைத்ததே 1
வைத்தபடியே 1
வைத்தமை 1
வைத்தலும் 1
வைத்தவன் 2
வைத்தவாறு 2
வைத்தவாறும் 4
வைத்தவாறே 1
வைத்தனர் 2
வைத்தனள் 1
வைத்தனன் 3
வைத்தார் 1
வைத்தார்களே 1
வைத்தாரே 1
வைத்தான் 15
வைத்தானே 10
வைத்திட்டு 2
வைத்திட 2
வைத்திடில் 3
வைத்திடும் 4
வைத்திடே 1
வைத்து 58
வைத்தும் 2
வைத்துள 1
வைத்தேன் 3
வைத்தேனே 4
வைத்தோர் 1
வைப்பதாம் 1
வைப்பர் 2
வைப்பன் 1
வைப்பார்கட்கே 1
வைப்பாரே 1
வைப்போர்க்கே 1
வைம்-மின் 1
வைய 2
வையகத்தே 1
வையகத்தோர் 1
வையகம் 8
வையகமே 1
வையத்து 4
வையத்தே 1
வையம் 8
வையா 1
வையாரே 1
வைராக்கியமும் 1

வைக்க (3)

சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க
சத்தியம் எண் சித்தி தன்மையும் ஆமே – திருமந்:333/3,4
சீர் திகழ் கைகள் அதனை தன் மேல் வைக்க
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆகுமே – திருமந்:559/3,4
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே – திருமந்:1590/3,4
மேல்


வைக்கலும் (1)

வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே – திருமந்:2057/4
மேல்


வைக்கின் (2)

நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் – திருமந்:458/3
விரிந்த அ பூவுடன் மேல் எழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே – திருமந்:817/3,4
மேல்


வைக்கின்றவாறே (1)

வாசம்செய் பாசத்துள் வைக்கின்றவாறே – திருமந்:2408/4
மேல்


வைக்கும் (3)

ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே – திருமந்:390/4
வைக்கும் உயர் நிலை வானவர் கோனே – திருமந்:615/4
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குற பெண் குவி முலை கோமளவல்லி – திருமந்:1524/2,3
மேல்


வைகரி (3)

மா மாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் – திருமந்:1045/1,2
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு – திருமந்:1994/3
வைகரி ஆதியும் மாயா மலாதியும் – திருமந்:2007/1
மேல்


வைகலும் (1)

வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு – திருமந்:1521/3
மேல்


வைகாதோர் (1)

மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே – திருமந்:1487/3,4
மேல்


வைகி (2)

வைத்த பசு பாச மாற்று நெறி வைகி
பெத்தம் அற முத்தன் ஆகி பிறழுற்று – திருமந்:1688/1,2
வரும் அ செயல் பற்றி சத்தாதி வைகி
கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே – திருமந்:2261/3,4
மேல்


வைகியே (1)

ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்து நின்றானே – திருமந்:2284/3,4
மேல்


வைகில் (1)

வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை – திருமந்:2118/2
மேல்


வைகின்ற (1)

உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை – திருமந்:3028/3
மேல்


வைகின்ற-போது (1)

வழி சென்ற மாதவம் வைகின்ற-போது
பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே – திருமந்:1549/1,2
மேல்


வைகுமே (1)

மன்னும் மனம் பவனத்தொடு வைகுமே – திருமந்:1007/4
மேல்


வைச்ச (3)

வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே – திருமந்:1000/4
வைச்ச பதம் இது வாய் திறவாதே – திருமந்:1780/4
வைச்ச கலாதி வரு தத்துவம் கெட – திருமந்:2456/1
மேல்


வைச்சன (2)

வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து – திருமந்:1608/1
வைச்சன வச்சு வகை இருபத்தஞ்சு – திருமந்:2171/1
மேல்


வைச்சு (1)

வைச்சு அகல்வுற்றது கண்டு மனிதர்கள் – திருமந்:156/1
மேல்


வைத்த (49)

வைத்த பரிசே வகைவகை நன்னூலின் – திருமந்:100/1
வைத்த சிறப்பு தரும் இவை தானே – திருமந்:100/4
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் – திருமந்:185/3
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது – திருமந்:207/2
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே – திருமந்:259/4
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள் – திருமந்:278/2
அன்பில் கலவி செய்து ஆதி பிரான் வைத்த
முன்பு இ பிறவி முடிவது தானே – திருமந்:281/3,4
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் – திருமந்:425/2
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம் – திருமந்:426/2
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில் – திருமந்:428/2
மறையவன் வைத்த பரிசு அறியாதே – திருமந்:433/4
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண் – திருமந்:468/1
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து – திருமந்:470/2
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி – திருமந்:470/3
கடை வைத்த ஈசனை கைகலந்தேனே – திருமந்:470/4
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் – திருமந்:544/2
வைத்த கை சென்னியில் நேரிதாய் தோன்றிடில் – திருமந்:770/1
வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன் – திருமந்:835/1
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் – திருமந்:863/3
வைத்த அ கோல மதி அவள் ஆகுமே – திருமந்:1052/4
வைத்த பொருளும் மருவு உயிர் பன்மையும் – திருமந்:1059/1
வைத்த பராபரனாய பராபரை – திருமந்:1176/3
மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின் – திருமந்:1364/2
அரிது அவன் வைத்த அறநெறி தானே – திருமந்:1544/4
பவன் அவன் வைத்த பழ வழி நாடி – திருமந்:1560/2
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை – திருமந்:1583/1,2
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை – திருமந்:1586/2
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1586/4
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும் – திருமந்:1599/2
பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன் – திருமந்:1599/3
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி – திருமந்:1612/2
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை – திருமந்:1629/2
மன் எய்த வைத்த மனம் அது தானே – திருமந்:1629/4
தானத்தில் வைத்த தனி ஆலயத்தனாம் – திருமந்:1674/2
வைத்த பசு பாச மாற்று நெறி வைகி – திருமந்:1688/1
பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன் – திருமந்:1780/1
இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் – திருமந்:2037/1,2
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு – திருமந்:2093/1
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த
உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார் – திருமந்:2116/1,2
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே – திருமந்:2184/4
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு – திருமந்:2559/1
வைத்த துரியம் அதில் சொருபானந்தத்து – திருமந்:2574/1
சென்னியில் வைத்த சிவன் அருளாலே – திருமந்:2611/4
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது – திருமந்:2708/1
வைத்த சராசரம் ஆட மறை ஆட – திருமந்:2789/3
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு – திருமந்:2828/3
ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே – திருமந்:2851/3,4
வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி – திருமந்:2977/2
திரு கொன்றை வைத்த செழும் சடையானே – திருமந்:3042/4
மேல்


வைத்தது (10)

இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது – திருமந்:267/1,2
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு – திருமந்:378/2
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே – திருமந்:660/4
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில் – திருமந்:1560/1
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1586/1
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை – திருமந்:1629/1
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை – திருமந்:2070/1
தூயது வாளா வைத்தது தூ நெறி – திருமந்:2555/1
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை – திருமந்:2848/2
மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே – திருமந்:2908/4
மேல்


வைத்ததே (1)

காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே – திருமந்:769/4
மேல்


வைத்தபடியே (1)

வைத்தபடியே அடைந்து நின்றானே – திருமந்:2574/4
மேல்


வைத்தமை (1)

சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே – திருமந்:173/4
மேல்


வைத்தலும் (1)

மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே – திருமந்:2061/4
மேல்


வைத்தவன் (2)

மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு – திருமந்:430/2
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினை பஞ்ச கடிகையில் – திருமந்:832/2,3
மேல்


வைத்தவாறு (2)

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை – திருமந்:1599/1
தாள் வைத்தவாறு தரிப்பித்தவாறே – திருமந்:1599/4
மேல்


வைத்தவாறும் (4)

உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும் – திருமந்:470/1
உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து – திருமந்:470/1,2
கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும் – திருமந்:1596/3
விதி வைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே – திருமந்:1596/4
மேல்


வைத்தவாறே (1)

விரவு அறியாமலே மேல் வைத்தவாறே – திருமந்:2101/4
மேல்


வைத்தனர் (2)

கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்தி பழத்தை அறைக்கீரை வித்து உண்ண – திருமந்:160/2,3
முடி சார வைத்தனர் முன்னை முனிவர் – திருமந்:1603/2
மேல்


வைத்தனள் (1)

வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம் – திருமந்:1180/2
மேல்


வைத்தனன் (3)

மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய – திருமந்:1878/2
வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே – திருமந்:2211/4
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே – திருமந்:2413/4
மேல்


வைத்தார் (1)

அட பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் – திருமந்:148/1
மேல்


வைத்தார்களே (1)

தேடிய தீயினில் தீய வைத்தார்களே – திருமந்:162/4
மேல்


வைத்தாரே (1)

வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே – திருமந்:834/4
மேல்


வைத்தான் (15)

அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் – திருமந்:87/1
அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும் – திருமந்:87/1,2
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும் – திருமந்:87/2
தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம் – திருமந்:87/3
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே – திருமந்:87/4
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு – திருமந்:430/2
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் – திருமந்:430/3
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே – திருமந்:430/4
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி – திருமந்:1817/3
தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள் – திருமந்:2050/1
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம் – திருமந்:2050/2
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம் – திருமந்:2050/3
தவிர வைத்தான் பிறவி துயர் தானே – திருமந்:2050/4
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே – திருமந்:2150/4
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான்
வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே – திருமந்:2544/3,4
மேல்


வைத்தானே (10)

மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே – திருமந்:365/4
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே – திருமந்:430/4
சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே – திருமந்:463/4
மண் முதலாக வகுத்து வைத்தானே – திருமந்:474/4
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே – திருமந்:723/4
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1478/4
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1567/4
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே – திருமந்:2047/4
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே – திருமந்:2585/4
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே – திருமந்:2882/4
மேல்


வைத்திட்டு (2)

நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி – திருமந்:605/1,2
ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை – திருமந்:2881/2,3
மேல்


வைத்திட (2)

நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திட
தன் எழு கோயில் தலைவனும் ஆமே – திருமந்:824/3,4
முச்சதுரத்தின் முதுகாட்டில் வைத்திட
வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே – திருமந்:1000/3,4
மேல்


வைத்திடில் (3)

நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை – திருமந்:604/1,2
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில்
பாரார் உலகம் பகல் முன்னது ஆமே – திருமந்:823/3,4
வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம் – திருமந்:2299/3
மேல்


வைத்திடும் (4)

கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டி துரந்திட்டு அது வலியார் கொள – திருமந்:171/2,3
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிட – திருமந்:937/2,3
ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே – திருமந்:999/4
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் – திருமந்:1369/1
மேல்


வைத்திடே (1)

சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே – திருமந்:1368/4
மேல்


வைத்து (58)

தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த – திருமந்:113/2,3
போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார் – திருமந்:142/2
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு – திருமந்:150/3
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே – திருமந்:155/4
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன – திருமந்:216/2
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை – திருமந்:288/2
வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி – திருமந்:309/1
தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை – திருமந்:430/1
வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி – திருமந்:463/2
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி – திருமந்:470/2,3
ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற – திருமந்:559/2
துரிசு இல் வலக்காலை தோன்றவே மேல் வைத்து
அரிய முழந்தாளில் அம் கையை நீட்டி – திருமந்:560/1,2
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் – திருமந்:581/2
மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு – திருமந்:583/2
அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்து
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து – திருமந்:597/1,2
தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு – திருமந்:624/2,3
பற்றி பதத்து அன்பு வைத்து பரன் புகழ் – திருமந்:633/1
முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில் – திருமந்:673/1
அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து – திருமந்:932/1
அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து
இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும் – திருமந்:932/1,2
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் – திருமந்:985/2,3
பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே – திருமந்:1004/3,4
ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே – திருமந்:1064/4
பாதியில் வைத்து பல்-கால் பயில்விரேல் – திருமந்:1069/3
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே – திருமந்:1094/3
அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே – திருமந்:1108/4
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே – திருமந்:1137/4
சிந்தையில்வைத்து சிராதியிலே வைத்து
முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து – திருமந்:1201/1,2
முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து – திருமந்:1201/2
முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து – திருமந்:1201/2,3
நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து
சந்தையில் வைத்து சமாதி செய்வீரே – திருமந்:1201/3,4
சந்தையில் வைத்து சமாதி செய்வீரே – திருமந்:1201/4
மோனையில் வைத்து மொழிதரு கூறது – திருமந்:1226/3
குளிர்ந்த வரனை கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய-காலே – திருமந்:1288/3,4
நீ வைத்து சேமி நினைந்தது தருமே – திருமந்:1318/4
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம் – திருமந்:1433/1
பாடின் முடி வைத்து பார் வந்து தந்ததே – திருமந்:1591/4
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி – திருமந்:1597/1
பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை – திருமந்:1597/2
வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து
மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு – திருமந்:1608/1,2
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே – திருமந்:1770/4
நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி – திருமந்:1778/3
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் – திருமந்:1783/2
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து – திருமந்:1919/2,3
பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று – திருமந்:1945/1
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து
உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே – திருமந்:1993/3,4
நாதியே வைத்து அது நாடுகின்றேனே – திருமந்:2096/4
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் – திருமந்:2131/1
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே – திருமந்:2234/4
உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே – திருமந்:2490/4
வைத்து சிவத்தை மதி சொருபானந்தத்து – திருமந்:2491/1
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த – திருமந்:2575/1,2
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த – திருமந்:2575/2
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில் – திருமந்:2595/3
அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு – திருமந்:2741/1,2
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் – திருமந்:2937/2
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே – திருமந்:2991/3,4
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே – திருமந்:2995/4
மேல்


வைத்தும் (2)

இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் – திருமந்:277/2
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும் – திருமந்:1841/1
மேல்


வைத்துள (1)

விலமையில் வைத்துள வேதியர் கூறும் – திருமந்:3036/3
மேல்


வைத்தேன் (3)

ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை – திருமந்:437/1
வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான் – திருமந்:1602/1
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி – திருமந்:2034/2,3
மேல்


வைத்தேனே (4)

போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே – திருமந்:44/4
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே – திருமந்:1058/4
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே – திருமந்:1465/4
இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே – திருமந்:2742/4
மேல்


வைத்தோர் (1)

குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை – திருமந்:1920/3
மேல்


வைப்பதாம் (1)

மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து – திருமந்:1488/2,3
மேல்


வைப்பர் (2)

குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே – திருமந்:158/3,4
இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று – திருமந்:278/3
மேல்


வைப்பன் (1)

சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று – திருமந்:50/1
மேல்


வைப்பார்கட்கே (1)

அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே – திருமந்:2744/4
மேல்


வைப்பாரே (1)

மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே – திருமந்:199/4
மேல்


வைப்போர்க்கே (1)

பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே – திருமந்:2957/4
மேல்


வைம்-மின் (1)

பதியது தோற்றும் பதமது வைம்-மின்
மதியது செய்து மலர் பதம் ஓதும் – திருமந்:2430/1,2
மேல்


வைய (2)

வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே – திருமந்:1559/4
பரம் ஆகா வைய அவத்தைப்படுவானே – திருமந்:2162/4
மேல்


வையகத்தே (1)

வையகத்தே மடவாரொடும் கூடி என் – திருமந்:207/1
மேல்


வையகத்தோர் (1)

தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே – திருமந்:1864/4
மேல்


வையகம் (8)

யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் – திருமந்:85/1,2
தன் வழி ஆக தழைத்திடும் வையகம்
தன் வழி ஆக தழைத்த பொருள் எல்லாம் – திருமந்:678/2,3
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே – திருமந்:1336/4
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம் – திருமந்:1656/3
வையகம் எல்லாம் வர இருந்தாரே – திருமந்:1891/4
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம் – திருமந்:1911/3
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் – திருமந்:2070/3
மாறாத தென் திசை வையகம் சுத்தமே – திருமந்:2755/4
மேல்


வையகமே (1)

வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே – திருமந்:1910/4
மேல்


வையத்து (4)

முடுகிய வையத்து முன்னிர் என்றானே – திருமந்:337/4
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின் – திருமந்:1346/2
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1478/4
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே – திருமந்:1567/4
மேல்


வையத்தே (1)

வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே – திருமந்:2248/4
மேல்


வையம் (8)

மாறு-மின் வையம் வரும் வழி தன்னையும் – திருமந்:1332/3
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே – திருமந்:1344/4
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும் – திருமந்:1353/3
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் – திருமந்:1548/1,2
மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே – திருமந்:1657/4
வையம் புனல் அனல் மாருதம் வானகம் – திருமந்:2004/2
விதியின் பெரு வலி வேலை சூழ் வையம்
துதியின் பெரு வலி தொல்வான் உலகம் – திருமந்:2030/1,2
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு – திருமந்:2157/2
மேல்


வையா (1)

நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து – திருமந்:1201/3
மேல்


வையாரே (1)

உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே – திருமந்:158/4
மேல்


வைராக்கியமும் (1)

பத்தியும் ஞான வைராக்கியமும் பரசித்திக்கு – திருமந்:1585/1

மேல்