வீ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீங்க 2
வீங்கி 1
வீங்கிய 1
வீங்கு 2
வீங்கும் 3
வீச்சு 1
வீச 1
வீசத்தை 1
வீசம் 2
வீசமும் 3
வீசமே 1
வீசி 2
வீசிட 1
வீசிடின் 1
வீசில் 1
வீசு-மின் 1
வீசும் 4
வீட்கும் 1
வீட்டினை 1
வீட்டு 1
வீட்டும் 1
வீட 2
வீடல் 1
வீடலும் 1
வீடவே 1
வீடாகும் 1
வீடார் 1
வீடு 14
வீடுக 1
வீடுபேறு 1
வீடும் 2
வீடுற்றான் 1
வீடுற்று 2
வீடே 1
வீணாத்தண்டு 1
வீணை 1
வீணையும் 1
வீதி 1
வீதியும் 1
வீதியுள் 1
வீதியே 1
வீய 2
வீயத்தை 1
வீயம் 1
வீயமே 1
வீயா 1
வீர 2
வீரம் 2
வீரர்-பால் 1
வீவித்துளானே 1
வீவு 1
வீழ் 4
வீழ்கை 1
வீழ்ந்தன 1
வீழ்ந்தனர் 1
வீழ்ந்தார் 1
வீழ்ந்து 4
வீழ்வர் 2
வீழ்வர்கள் 1
வீழ்வார் 1
வீழ்வார்கள் 1
வீழ 3
வீழாமல் 2
வீழி 2
வீழின் 1
வீழும் 1
வீற்றிருந்தானே 1
வீறான 1
வீறு 1

வீங்க (2)

வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை – திருமந்:842/2
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும் – திருமந்:842/3
மேல்


வீங்கி (1)

இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே – திருமந்:654/4
மேல்


வீங்கிய (1)

வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய் – திருமந்:655/3
மேல்


வீங்கு (2)

வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே – திருமந்:655/4
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே – திருமந்:1012/4
மேல்


வீங்கும் (3)

வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன் – திருமந்:390/3
வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும் – திருமந்:655/1
வீங்கும் வியாதிகள் சோகை பல அதாய் – திருமந்:655/2
மேல்


வீச்சு (1)

மருவம் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும் – திருமந்:2798/1,2
மேல்


வீச (1)

அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே – திருமந்:93/3,4
மேல்


வீசத்தை (1)

விந்து என் வீசத்தை மேவிய மூலத்து – திருமந்:1958/1
மேல்


வீசம் (2)

வீசம் இரண்டு உள நாதத்து எழுவன – திருமந்:1277/1
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில் – திருமந்:1278/1,2
மேல்


வீசமும் (3)

வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற – திருமந்:1277/2
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின் – திருமந்:1277/3
வீசமும் விந்து விரிந்தது காணுமே – திருமந்:1277/4
மேல்


வீசமே (1)

விந்துவை எண்மடி கொண்டது வீசமே – திருமந்:1276/4
மேல்


வீசி (2)

வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை – திருமந்:565/2
படு வழி செய்கின்ற பற்று அற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் – திருமந்:2616/2,3
மேல்


வீசிட (1)

ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில் – திருமந்:1749/1,2
மேல்


வீசிடின் (1)

கால் அது கொண்டு கலந்துற வீசிடின்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் – திருமந்:1355/2,3
மேல்


வீசில் (1)

அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞான துறவியன் ஆமே – திருமந்:2694/3,4
மேல்


வீசு-மின் (1)

ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின்
ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே – திருமந்:1564/1,2
மேல்


வீசும் (4)

உணர் விந்து சோணி உறவினன் வீசும்
புணர் விந்து வீசும் கதிரில் குறையில் – திருமந்:879/1,2
புணர் விந்து வீசும் கதிரில் குறையில் – திருமந்:879/2
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி – திருமந்:1091/2
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும்
பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே – திருமந்:2682/2,3
மேல்


வீட்கும் (1)

வீட்கும் பதி பசு பாசமும் மீதுற – திருமந்:2420/1
மேல்


வீட்டினை (1)

முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை
உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே – திருமந்:1432/3,4
மேல்


வீட்டு (1)

வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும் – திருமந்:1489/3
மேல்


வீட்டும் (1)

விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை – திருமந்:2285/3
மேல்


வீட (2)

நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட
கனவகத்தே உள் கரணங்களோடு – திருமந்:2216/1,2
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை – திருமந்:2794/2
மேல்


வீடல் (1)

வியர்ப்புறும் ஆணவம் வீடல் செய்யாவே – திருமந்:2504/4
மேல்


வீடலும் (1)

வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் – திருமந்:2557/2
மேல்


வீடவே (1)

கூறிய ஞான குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே – திருமந்:2382/3,4
மேல்


வீடாகும் (1)

மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்ய அ வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி – திருமந்:2238/2,3
மேல்


வீடார் (1)

சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள் – திருமந்:318/2
மேல்


வீடு (14)

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே – திருமந்:51/4
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே – திருமந்:240/4
மயக்குறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே – திருமந்:329/3,4
இட்டது அ வீடு இளகாது இரேசித்து – திருமந்:574/1
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே – திருமந்:683/4
கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே – திருமந்:880/3,4
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள் – திருமந்:1591/3
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் – திருமந்:1606/2
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே – திருமந்:1929/4
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே – திருமந்:2419/4
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே – திருமந்:2425/4
வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார் – திருமந்:2557/3
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/3
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் – திருமந்:2852/3
மேல்


வீடுக (1)

மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே – திருமந்:2066/3,4
மேல்


வீடுபேறு (1)

அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக – திருமந்:173/3
மேல்


வீடும் (2)

வீடும் அளவும் விடுகின்றிலேனே – திருமந்:1654/4
பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர் – திருமந்:2045/2
மேல்


வீடுற்றான் (1)

வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள் – திருமந்:2345/3
மேல்


வீடுற்று (2)

ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே – திருமந்:2061/3,4
வேறும் என முச்சொரூபத்து வீடுற்று அங்கு – திருமந்:2478/3
மேல்


வீடே (1)

அருள் தங்கி அ சிவம் ஆவது வீடே – திருமந்:979/4
மேல்


வீணாத்தண்டு (1)

வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி – திருமந்:588/2
மேல்


வீணை (1)

அட எழும் வீணை அண்டர் அண்டத்து – திருமந்:607/2
மேல்


வீணையும் (1)

வீணையும் தண்டும் விரவி இசை முரல் – திருமந்:2929/1
மேல்


வீதி (1)

பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி
ஏடு அற நாலைந்து இடவகை ஆமே – திருமந்:1298/3,4
மேல்


வீதியும் (1)

கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி – திருமந்:1298/2
மேல்


வீதியுள் (1)

நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய் – திருமந்:1299/2
மேல்


வீதியே (1)

மேலை பிரணவம் வேதாந்த வீதியே – திருமந்:2675/4
மேல்


வீய (2)

விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீய
சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே – திருமந்:361/3,4
வீய தகா விந்து ஆக விளையுமே – திருமந்:1812/4
மேல்


வீயத்தை (1)

வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே – திருமந்:90/4
மேல்


வீயம் (1)

வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால் – திருமந்:1928/1
மேல்


வீயமே (1)

தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே – திருமந்:1927/4
மேல்


வீயா (1)

வீயா பரகாயம் மேவலும் ஆமே – திருமந்:643/4
மேல்


வீர (2)

வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும் – திருமந்:850/1
விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம் – திருமந்:2996/1
மேல்


வீரம் (2)

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம் – திருமந்:63/2
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு – திருமந்:563/2
மேல்


வீரர்-பால் (1)

தக்கன்-தன் வேள்வி தகர்த்த நல் வீரர்-பால்
தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும் – திருமந்:370/1,2
மேல்


வீவித்துளானே (1)

மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே – திருமந்:2121/4
மேல்


வீவு (1)

வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை – திருமந்:2384/3
மேல்


வீழ் (4)

அயின்றது வீழ் அளவும் துயில் இன்றி – திருமந்:872/1
பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று – திருமந்:872/2
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே – திருமந்:875/4
பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின் – திருமந்:1506/2
மேல்


வீழ்கை (1)

திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது – திருமந்:2779/1
மேல்


வீழ்ந்தன (1)

எட்டி பழுத்த இரும் கனி வீழ்ந்தன
ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம் – திருமந்:260/1,2
மேல்


வீழ்ந்தனர் (1)

எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி – திருமந்:1464/2
மேல்


வீழ்ந்தார் (1)

இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும் – திருமந்:3030/2
மேல்


வீழ்ந்து (4)

மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே – திருமந்:266/4
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம்செய்ய – திருமந்:354/3
வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தை – திருமந்:967/1
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த – திருமந்:2099/2
மேல்


வீழ்வர் (2)

சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே – திருமந்:185/4
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே – திருமந்:863/4
மேல்


வீழ்வர்கள் (1)

குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே – திருமந்:2048/3
மேல்


வீழ்வார் (1)

குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே – திருமந்:2048/4
மேல்


வீழ்வார்கள் (1)

முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின் – திருமந்:2048/2
மேல்


வீழ (3)

பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர் – திருமந்:1822/3
பழிப்படுவார் பலரும் பழி வீழ
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே – திருமந்:1835/3,4
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் – திருமந்:2882/2,3
மேல்


வீழாமல் (2)

அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே – திருமந்:363/4
கட்ட கழன்று கீழ் நான்று வீழாமல்
அட்டத்தை கட்டி அடுப்பை அணைகோலி – திருமந்:799/1,2
மேல்


வீழி (2)

வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே – திருமந்:219/4
வீழி தலை நீர் விதித்தது தா என – திருமந்:380/3
மேல்


வீழின் (1)

விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் – திருமந்:143/3
மேல்


வீழும் (1)

அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும் – திருமந்:2078/2,3
மேல்


வீற்றிருந்தானே (1)

விடை ஒன்றில் ஏறியே வீற்றிருந்தானே – திருமந்:715/4
மேல்


வீறான (1)

வீறான தொந்த தசி தத்துவ மசியே – திருமந்:2569/4
மேல்


வீறு (1)

வீறு பரநெறி இல்லா நெறி அன்றே – திருமந்:1537/4

மேல்