யோ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோக 18
யோகங்கள் 1
யோகத்தர் 1
யோகத்தால் 1
யோகத்தில் 2
யோகத்தின் 2
யோகத்து 7
யோகத்தை 1
யோகபட்டம் 1
யோகம் 15
யோகமாம் 1
யோகமாய் 2
யோகமும் 2
யோகமே 8
யோகாண்ட 1
யோகாதி 1
யோகாந்த 2
யோகாந்தம் 4
யோகாந்தமும் 1
யோகி 9
யோகிக்கு 11
யோகிக்கே 2
யோகிகள் 3
யோகியர்க்கு 1
யோகியும் 2
யோகினி 2
யோகு 1
யோசனை 3
யோரும் 1
யோனி 6
யோனிக்கு 1
யோனிகட்கு 2
யோனிகள் 1
யோனியும் 2
யோனியுள் 1

யோக (18)

ஈவது யோக இயம நியமங்கள் – திருமந்:506/1
யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும் – திருமந்:1172/1
யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும் – திருமந்:1172/2
யோக நல் சத்தி உதரநடு ஆகும் – திருமந்:1172/3
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே – திருமந்:1172/4
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை – திருமந்:1444/2
யோக சமயமே யோகம் பல உன்னல் – திருமந்:1466/1
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் – திருமந்:1466/2
யோக நிர்வாணமே உற்ற பரோதயம் – திருமந்:1466/3
யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே – திருமந்:1466/4
யோக சமாதியின் உள்ளே அகல் இடம் – திருமந்:1490/1
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி – திருமந்:1490/2
யோக சமாதியின் உள்ளே உள சத்தி – திருமந்:1490/3
யோக சமாதி உகந்தவர் சித்தரே – திருமந்:1490/4
யோகத்து கேசரி யோக முத்திரையே – திருமந்:1897/4
மந்திர தந்திர மா யோக ஞானமும் – திருமந்:2045/1
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது – திருமந்:2671/2
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல் – திருமந்:2821/3
மேல்


யோகங்கள் (1)

கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை – திருமந்:1448/1
மேல்


யோகத்தர் (1)

சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் – திருமந்:1447/2
மேல்


யோகத்தால் (1)

எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும் – திருமந்:669/1,2
மேல்


யோகத்தில் (2)

சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால் – திருமந்:1455/2,3
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத்தே காண – திருமந்:2239/2,3
மேல்


யோகத்தின் (2)

குருவார் சிவதியானம் யோகத்தின் கூறே – திருமந்:598/4
யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம் – திருமந்:1897/1
மேல்


யோகத்து (7)

தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய் – திருமந்:122/2
ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று – திருமந்:709/1
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் – திருமந்:827/1,2
பரியங்க யோகத்து பஞ்ச கடிகை – திருமந்:831/1
எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்து
கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது – திருமந்:1310/1,2
சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து
சத்தியும் மந்திர சாதக போதமும் – திருமந்:1575/2,3
யோகத்து கேசரி யோக முத்திரையே – திருமந்:1897/4
மேல்


யோகத்தை (1)

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் – திருமந்:832/1
மேல்


யோகபட்டம் (1)

ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே – திருமந்:1664/4
மேல்


யோகம் (15)

அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே – திருமந்:346/4
மா சித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும் – திருமந்:581/3
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் – திருமந்:603/1
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது – திருமந்:609/2
சமாதி செய்வார்க்கு தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் – திருமந்:631/1,2
மருவிய கன்மமாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே – திருமந்:644/2,3
தராதல யோகம் தயாவாசி ஆமே – திருமந்:890/4
வாசம் இலாத மணி மந்திர யோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே – திருமந்:1086/3,4
யோகம் பராசத்தி உண்மை எட்டு ஆமே – திருமந்:1309/4
யோக சமயமே யோகம் பல உன்னல் – திருமந்:1466/1
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் – திருமந்:1466/2
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் – திருமந்:1491/2
யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து – திருமந்:1960/1
காதலினால் விடார் யோகம் கலந்தவர் – திருமந்:1961/2
பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி – திருமந்:2189/2
மேல்


யோகமாம் (1)

தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றி கைகூடா – திருமந்:1510/1,2
மேல்


யோகமாய் (2)

காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய்
ஞால கடவூர் நலமாய் இருந்ததே – திருமந்:345/3,4
தம் பர யோகமாய் தானவன் ஆகுமே – திருமந்:2442/4
மேல்


யோகமும் (2)

அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் – திருமந்:979/2
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால் – திருமந்:1491/1
மேல்


யோகமே (8)

ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே – திருமந்:709/4
பஞ்ச கடிகை பரியங்க யோகமே – திருமந்:830/4
திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே – திருமந்:862/4
அது அ கல்வியுள் ஆயுழி யோகமே – திருமந்:1171/4
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி – திருமந்:1474/3
மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே – திருமந்:1487/4
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே – திருமந்:1510/4
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும் – திருமந்:2712/3
மேல்


யோகாண்ட (1)

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட – திருமந்:2728/1,2
மேல்


யோகாதி (1)

யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர் – திருமந்:1465/1
மேல்


யோகாந்த (2)

ஓத தகும் எட்டு யோகாந்த அந்தமும் – திருமந்:2370/3
கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே – திருமந்:2376/4
மேல்


யோகாந்தம் (4)

ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அ வழி – திருமந்:419/3
ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம் – திருமந்:1664/3
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய – திருமந்:2386/2
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் – திருமந்:2400/3
மேல்


யோகாந்தமும் (1)

ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது – திருமந்:2381/2,3
மேல்


யோகி (9)

இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே – திருமந்:792/2
ஆகின்ற யோகி அறிந்த அறிவே – திருமந்:852/4
அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும் – திருமந்:1043/2
எண் திசை யோகி இறைவி பராசத்தி – திருமந்:1085/2
யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை – திருமந்:1898/1
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே – திருமந்:1902/4
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் – திருமந்:1906/1
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே – திருமந்:1937/4
பண்டு தொடர பரகாய யோகி போல் – திருமந்:2133/3
மேல்


யோகிக்கு (11)

பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலும் ஆமே – திருமந்:479/4
திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே – திருமந்:607/4
தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின் – திருமந்:612/2,3
அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே – திருமந்:731/4
தண்டுடன் ஓடி தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் – திருமந்:752/1,2
போம் வழி எங்கணும் போகாது யோகிக்கு
காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில் – திருமந்:877/2,3
யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர் – திருமந்:1465/1
யோகிக்கு இடும் அதுவுள் கட்டு கஞ்சுளி – திருமந்:1663/1
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே – திருமந்:1951/4
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் – திருமந்:2135/3
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் – திருமந்:2465/2,3
மேல்


யோகிக்கே (2)

ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே – திருமந்:1491/4
அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே – திருமந்:1959/4
மேல்


யோகிகள் (3)

யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த – திருமந்:335/1
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள் – திருமந்:874/1,2
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர் – திருமந்:1435/2,3
மேல்


யோகியர்க்கு (1)

யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால் – திருமந்:1491/1
மேல்


யோகியும் (2)

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் – திருமந்:1950/1
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் – திருமந்:1950/2
மேல்


யோகினி (2)

உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி – திருமந்:1170/1
தான் நிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயம் உடையார் அடி போற்றுவர் – திருமந்:1225/1,2
மேல்


யோகு (1)

யோகு திருந்துதல் ஒன்று அறியோமே – திருமந்:2023/4
மேல்


யோசனை (3)

தாழா நடை பல யோசனை சார்ந்திடும் – திருமந்:647/2
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் – திருமந்:1086/2
ஞாலம் அதுவாயிடும் அ பதி யோசனை
ஞாலம் அதுவாக விரிந்தது எழுத்தே – திருமந்:1259/3,4
மேல்


யோரும் (1)

அயன் தனை யோரும் பதம் அது பற்றும் – திருமந்:1115/3
மேல்


யோனி (6)

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி – திருமந்:455/1,2
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் – திருமந்:471/2
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு – திருமந்:499/2
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன் – திருமந்:966/2
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே – திருமந்:1093/4
அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே – திருமந்:2244/4
மேல்


யோனிக்கு (1)

பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற – திருமந்:580/2
மேல்


யோனிகட்கு (2)

உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:440/2
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே – திருமந்:2351/2
மேல்


யோனிகள் (1)

தாரகை பூவில் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே – திருமந்:860/3,4
மேல்


யோனியும் (2)

அக்கிரமத்தே தோன்றும் அ யோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல் – திருமந்:464/2,3
ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே – திருமந்:1249/4
மேல்


யோனியுள் (1)

கேவலம் ஆகும் சகல மா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே – திருமந்:2226/3,4

மேல்