நோ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

நோக்க (1)

தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு – திருமந்:1540/2
மேல்


நோக்கப்படும் (1)

நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது – திருமந்:2854/2
மேல்


நோக்கம் (1)

உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ – திருமந்:3007/1
மேல்


நோக்கமும் (1)

முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே – திருமந்:1116/4
மேல்


நோக்கல் (1)

உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை – திருமந்:1444/2
மேல்


நோக்கலும் (1)

நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள் – திருமந்:1283/3
மேல்


நோக்கால் (1)

கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால்
பிரத்தியாகார பெருமை அது ஆமே – திருமந்:585/3,4
மேல்


நோக்கி (23)

நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி
அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின் – திருமந்:18/2,3
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதி ஆக அமருகின்றானே – திருமந்:19/3,4
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு – திருமந்:127/2,3
பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே – திருமந்:155/3,4
மேலை துவாரத்து மேலுற நோக்கி முன் – திருமந்:345/2
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகி – திருமந்:347/1,2
குலம் தரும் கீழ் அங்கி கோளுற நோக்கி
சிவந்த பரம் இது சென்று கதுவ – திருமந்:357/2,3
வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி
காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு – திருமந்:588/2,3
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி – திருமந்:591/2
பெருக்கின்ற கால பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க – திருமந்:716/2,3
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி
படர்ந்தது தானே பங்கயம் ஆக – திருமந்:718/2,3
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே – திருமந்:1002/3,4
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி
தெளியுறு வித்து சிவகதி காட்டி – திருமந்:1064/2,3
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி
அலைத்த பூங்கொம்பினள் அங்கு இருந்தாளே – திருமந்:1112/3,4
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோ முகம் அம்பே – திருமந்:1146/3,4
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே – திருமந்:1147/4
தரித்திருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி
விரித்திருந்தாள் அவள் வேதப்பொருளை – திருமந்:1156/1,2
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் – திருமந்:1162/2,3
தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் – திருமந்:1379/1,2
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி
பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை – திருமந்:1597/1,2
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே – திருமந்:1630/3,4
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி – திருமந்:1692/2,3
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி
தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால் – திருமந்:2407/2,3
மேல்


நோக்கிடில் (7)

காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும் – திருமந்:712/2,3
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே – திருமந்:755/3,4
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே – திருமந்:757/3,4
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் – திருமந்:772/1,2
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில்
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே – திருமந்:942/3,4
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே – திருமந்:959/3,4
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்து எழு கன்னியை – திருமந்:1369/1,2
மேல்


நோக்கிடும் (1)

கை அவை ஆறும் கருத்துற நோக்கிடும்
மெய் அது செம்மை விளங்கு வயிரவன் – திருமந்:1294/1,2
மேல்


நோக்கியே (1)

சாதகமான அ தன்மையை நோக்கியே
மாதவம் ஆன வழிபாடு செய்திடும் – திருமந்:717/1,2
மேல்


நோக்கில் (7)

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை – திருமந்:11/1,2
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அ பொருள் காணலும் ஆமே – திருமந்:762/3,4
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே – திருமந்:1009/3,4
துதி அது செய்து சுழியுற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும் – திருமந்:1186/2,3
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும் – திருமந்:1373/1,2
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே – திருமந்:1641/3,4
குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே – திருமந்:2039/3,4
மேல்


நோக்கின் (1)

வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின்
நரை உருவா செல்லும் நாள் இலவாமே – திருமந்:2100/3,4
மேல்


நோக்கினன் (1)

வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் – திருமந்:1623/3
மேல்


நோக்கினால் (3)

உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
கண்ணாடி போல கலந்து நின்றானே – திருமந்:603/3,4
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் – திருமந்:937/1,2
பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே – திருமந்:2919/3,4
மேல்


நோக்கினும் (1)

மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார் – திருமந்:2565/1
மேல்


நோக்கு (1)

நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே – திருமந்:2254/4
மேல்


நோக்கு-மின் (2)

மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின்
பார்த்த அ பார்வை பசுமரத்தாணி போல் – திருமந்:1631/2,3
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது – திருமந்:2854/2
மேல்


நோக்குதல் (1)

நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே – திருமந்:2254/4
மேல்


நோக்கும் (7)

செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே – திருமந்:359/3,4
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை – திருமந்:1103/2
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே – திருமந்:1227/4
குறியது கூடி குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே – திருமந்:1240/3,4
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் – திருமந்:2265/3
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு – திருமந்:2316/3
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் – திருமந்:3033/1
மேல்


நோய் (2)

ஊழி அகலும் உறுவினை நோய் பல – திருமந்:219/2
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி – திருமந்:517/1
மேல்


நோவ (1)

பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை – திருமந்:707/2
மேல்


நோற்று (1)

நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர் – திருமந்:1642/3
மேல்


நோன் (1)

நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் – திருமந்:2265/3
மேல்


நோன்பும் (1)

சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து – திருமந்:505/3

மேல்