கொ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 1
கொங்கு 4
கொங்கே 1
கொங்கை 7
கொங்கைகள் 2
கொச்சையார் 1
கொஞ்சிட்ட 1
கொட்ட 2
கொட்டகத்து 1
கொட்டனம் 1
கொட்டி 2
கொட்டியும் 1
கொட்டிலில் 1
கொட்டுக்கும் 3
கொட்டை 1
கொடர்ந்து 1
கொடாது 1
கொடானே 1
கொடி 24
கொடியது 2
கொடியாளுடை 1
கொடியும் 1
கொடியே 1
கொடு 5
கொடு-மின் 1
கொடுக்க 1
கொடுக்கவே 1
கொடுக்கின்ற 1
கொடுக்கினும் 1
கொடுக்கும் 5
கொடுத்த 1
கொடுத்தது 1
கொடுத்தவர் 1
கொடுத்தனன் 3
கொடுத்தான் 1
கொடுத்தானே 1
கொடுத்தானை 1
கொடுத்திடும் 2
கொடுத்து 5
கொடுபோய் 1
கொடுவந்து 1
கொடுவினை 1
கொடுவினையாளர் 1
கொடை 4
கொண்-மின் 2
கொண்ட 70
கொண்ட-போதே 1
கொண்டது 10
கொண்டதும் 1
கொண்டதே 2
கொண்டல் 4
கொண்டவர்-தமை 1
கொண்டவன் 1
கொண்டவாறு 1
கொண்டவாறே 2
கொண்டவை 2
கொண்டன 1
கொண்டனள் 1
கொண்டனன் 1
கொண்டாட்டம் 1
கொண்டாட்டி 1
கொண்டாடு 1
கொண்டார் 1
கொண்டாரும் 2
கொண்டாரே 1
கொண்டால் 2
கொண்டாளே 1
கொண்டான் 13
கொண்டானே 7
கொண்டிட 2
கொண்டிடு 1
கொண்டிடும் 2
கொண்டிருந்து 1
கொண்டு 85
கொண்டுகொண்டு 1
கொண்டுபோய் 1
கொண்டுற்றோர் 1
கொண்டே 5
கொண்டேன் 1
கொண்டேனே 6
கொண்டோம் 1
கொண்டோர் 1
கொணர் 1
கொணர்ந்த 2
கொணர்ந்தான் 1
கொணர்ந்து 2
கொணர்ந்தேன் 1
கொத்தி 3
கொத்தும் 2
கொதிக்கின்ற 1
கொதிக்கின்றவாறும் 1
கொதிக்கினும் 1
கொதித்து 2
கொந்தார் 1
கொந்து 1
கொம்பிடை 1
கொம்பில் 1
கொம்பின் 2
கொம்பு 11
கொம்புக்கும் 1
கொம்பே 1
கொம்மட்டி 1
கொய் 3
கொய்தல் 1
கொய்திட்டும் 1
கொய்யும் 1
கொய்வன 1
கொல் 2
கொல்ல 1
கொல்லன் 1
கொல்லாமை 1
கொல்லான் 1
கொல்லிடு 1
கொல்லும் 1
கொல்லை 5
கொல்லையில் 3
கொல்லையும் 1
கொல்வது 1
கொலை 3
கொலையில் 1
கொலையே 2
கொழு 1
கொழுத்தன 1
கொழுந்தின் 1
கொழுந்தினை 1
கொழுந்து 5
கொழும் 3
கொள் 24
கொள்க 1
கொள்கையராய் 1
கொள்கையன் 2
கொள்கையான் 2
கொள்கையில் 1
கொள்கையே 2
கொள்வர் 2
கொள்வன் 2
கொள்வனே 1
கொள்வார் 1
கொள்வார்க்கு 3
கொள்வார்க்கே 8
கொள்வார்கட்கு 2
கொள்வார்கட்கே 2
கொள்வார்களுக்கு 2
கொள்வான் 1
கொள்வீரே 3
கொள்ள 10
கொள்ளலும் 2
கொள்ளா 1
கொள்ளாதார் 1
கொள்ளார் 3
கொள்ளி 2
கொள்ளில் 1
கொள்ளிவட்டம் 1
கொள்ளின் 1
கொள்ளினும் 1
கொள்ளீரே 7
கொள்ளுக 1
கொள்ளும் 6
கொள 4
கொளாது 1
கொளில் 2
கொளீரே 2
கொளீஇ 1
கொளுந்தாமல் 1
கொளும் 3
கொளுவி 9
கொற்ற 2
கொறுக்கை 1
கொன்ற 1
கொன்றானே 1
கொன்று 2
கொன்றை 7
கொன்றையன் 1
கொன்றையான் 1
கொன்றையினான் 1

கொக்கு (1)

மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு – திருமந்:591/3
மேல்


கொங்கு (4)

கோர நெறி கொடு கொங்கு புக்காரே – திருமந்:273/4
கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி – திருமந்:1177/1
குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின் – திருமந்:2892/1
கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது – திருமந்:2930/1
மேல்


கொங்கே (1)

சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே – திருமந்:1176/4
மேல்


கொங்கை (7)

வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி – திருமந்:402/1
சரி வளை முன்கைச்சி சந்தன கொங்கை
உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே – திருமந்:831/3,4
வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில் – திருமந்:1049/2
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும் – திருமந்:1191/3
கைச்சிறு கொங்கை கலந்து எழு கன்னியை – திருமந்:1369/2
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து – திருமந்:1393/3
வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே – திருமந்:1945/2
மேல்


கொங்கைகள் (2)

பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம் – திருமந்:1376/3
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய் – திருமந்:1394/3
மேல்


கொச்சையார் (1)

கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் – திருமந்:1394/2
மேல்


கொஞ்சிட்ட (1)

கொஞ்சிட்ட வன்னியை கூடுதல் முத்தியே – திருமந்:1034/4
மேல்


கொட்ட (2)

நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே – திருமந்:153/3,4
பருந்தும் கிளியும் படு பறை கொட்ட
திருந்திய மாதர் திருமணப்பட்டார் – திருமந்:2896/1,2
மேல்


கொட்டகத்து (1)

கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து
ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு – திருமந்:2881/1,2
மேல்


கொட்டனம் (1)

கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவலுள் – திருமந்:2906/1
மேல்


கொட்டி (2)

கொட்டி பிராணன் அபானனும் கும்பித்து – திருமந்:574/3
கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார – திருமந்:2733/1
மேல்


கொட்டியும் (1)

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை – திருமந்:2901/1
மேல்


கொட்டிலில் (1)

குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள் – திருமந்:1643/3
மேல்


கொட்டுக்கும் (3)

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் – திருமந்:2909/1
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர் – திருமந்:2909/2
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் – திருமந்:2909/3
மேல்


கொட்டை (1)

குரங்கினை கொட்டை பொதியலும் ஆமே – திருமந்:595/4
மேல்


கொடர்ந்து (1)

கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி – திருமந்:1298/2
மேல்


கொடாது (1)

மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய் – திருமந்:564/3
மேல்


கொடானே (1)

நீங்கல் கொடானே நெடுந்தகையானே – திருமந்:871/4
மேல்


கொடி (24)

கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற – திருமந்:562/3
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே – திருமந்:665/4
நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே – திருமந்:689/4
நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன் – திருமந்:690/1
அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு – திருமந்:690/2
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் – திருமந்:690/3
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே – திருமந்:690/4
கால் அது அ கொடி நாயகி தன்னுடன் – திருமந்:694/2
கொடி ஆறு சென்று குலாவிய குண்டம் – திருமந்:1040/1
திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம் – திருமந்:1142/2
விண் கொடி ஆகி விளங்கி வருதலால் – திருமந்:1142/3
பெண் கொடி ஆக நடந்தது உலகே – திருமந்:1142/4
மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி
பல் இசை பாவை பயன் தரு பைங்கொடி – திருமந்:1152/1,2
கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே – திருமந்:1196/4
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை – திருமந்:1209/2
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர் – திருமந்:1245/1
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை – திருமந்:1245/3
வில் கொடி மாதை விரும்பி விளங்கே – திருமந்:1245/4
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே – திருமந்:1412/4
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே – திருமந்:1717/4
பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் – திருமந்:1756/3
செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே – திருமந்:2455/4
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை – திருமந்:2535/3
பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல – திருமந்:2640/2
மேல்


கொடியது (2)

குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே – திருமந்:359/4
கொடியது இரேகை குரு உள்ளிருப்ப – திருமந்:1197/1
மேல்


கொடியாளுடை (1)

பொன் கொடியாளுடை பூசனை செய்திட – திருமந்:1413/1
மேல்


கொடியும் (1)

கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து – திருமந்:2917/3
மேல்


கொடியே (1)

சத்திமான் ஆக தழைத்த கொடியே – திருமந்:1039/4
மேல்


கொடு (5)

தவ்வி கொடு உண்-மின் தலைப்பட்ட-போதே – திருமந்:196/4
கோர நெறி கொடு கொங்கு புக்காரே – திருமந்:273/4
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே – திருமந்:1292/4
கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார – திருமந்:2733/1
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம் – திருமந்:2768/3
மேல்


கொடு-மின் (1)

அடுத்து எரியாமல் கொடு-மின் அரிசி – திருமந்:193/3
மேல்


கொடுக்க (1)

தங்கி கொடுக்க தலைவனும் ஆமே – திருமந்:828/4
மேல்


கொடுக்கவே (1)

சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியும் – திருமந்:726/1
மேல்


கொடுக்கின்ற (1)

வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே – திருமந்:2993/4
மேல்


கொடுக்கினும் (1)

நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே – திருமந்:178/3,4
மேல்


கொடுக்கும் (5)

மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய் – திருமந்:564/3
உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு – திருமந்:726/3
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ – திருமந்:1639/2
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம் – திருமந்:1639/3
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன் – திருமந்:2114/1
மேல்


கொடுத்த (1)

மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு – திருமந்:2933/3
மேல்


கொடுத்தது (1)

காட்டி கொடுத்தது கைவிட்டவாறே – திருமந்:171/4
மேல்


கொடுத்தவர் (1)

காட்டி கொடுத்தவர் கைவிட்டவாறே – திருமந்:175/4
மேல்


கொடுத்தனன் (3)

ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அ வழி – திருமந்:349/3
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்கு – திருமந்:369/2
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்கு – திருமந்:369/3
மேல்


கொடுத்தான் (1)

தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே – திருமந்:379/4
மேல்


கொடுத்தானே (1)

வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே – திருமந்:349/4
மேல்


கொடுத்தானை (1)

வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் – திருமந்:379/1
மேல்


கொடுத்திடும் (2)

விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே – திருமந்:277/4
பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும்
கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும் – திருமந்:2114/2,3
மேல்


கொடுத்து (5)

போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர் – திருமந்:215/2
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே – திருமந்:284/4
ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர் – திருமந்:379/2
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக – திருமந்:379/3
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக – திருமந்:379/3
மேல்


கொடுபோய் (1)

கூவி கருதி கொடுபோய் சிவத்திடை – திருமந்:1842/3
மேல்


கொடுவந்து (1)

பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து
நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில் – திருமந்:865/2,3
மேல்


கொடுவினை (1)

ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம் – திருமந்:538/3
மேல்


கொடுவினையாளர் (1)

குறி அது கண்டும் கொடுவினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே – திருமந்:1554/3,4
மேல்


கொடை (4)

கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/3
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும் – திருமந்:444/3
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில் – திருமந்:465/2
சொல் வழியாளர் சுருங்கா பெரும் கொடை
இல்வழியாளர் இமையவர் எண் திசை – திருமந்:637/2,3
மேல்


கொண்-மின் (2)

கோது இல் பரானந்தம் என்றே குறி கொண்-மின்
நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் – திருமந்:582/2,3
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே – திருமந்:1709/2,3
மேல்


கொண்ட (70)

கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி – திருமந்:116/2
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது – திருமந்:144/3
பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும் – திருமந்:203/1
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் – திருமந்:203/2
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே – திருமந்:203/4
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார் – திருமந்:330/3
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே – திருமந்:482/4
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் – திருமந்:483/1
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும் – திருமந்:483/2
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் – திருமந்:483/3
கோல்_வளை உந்தியில் கொண்ட குழவியும் – திருமந்:484/1
பேர் கொண்ட பார்ப்பான் பிரான்-தன்னை அர்ச்சித்தால் – திருமந்:519/1
போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம் – திருமந்:519/2
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே – திருமந்:519/3
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே – திருமந்:519/4
கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி – திருமந்:612/1
நடம் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே – திருமந்:666/4
கால் அது வேண்டி கொண்ட இ ஆறே – திருமந்:694/4
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக – திருமந்:738/3
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே – திருமந்:739/4
கொண்ட இ சக்கரத்துள்ளே குணம் பல – திருமந்:949/1
கொண்ட இ சக்கரத்துள்ளே குறி ஐந்தும் – திருமந்:949/2
கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும் – திருமந்:949/3
கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே – திருமந்:949/4
கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய் – திருமந்:1018/1
இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக – திருமந்:1024/1
நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்கு – திருமந்:1024/2
சகம் கொண்ட கை இரண்டாறும் தழைப்ப – திருமந்:1024/3
முகம் கொண்ட செஞ்சுடர் முக்கணனார்க்கே – திருமந்:1024/4
கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ – திருமந்:1029/3
பயம் கண்டு கொண்ட இ பாய் கரு ஒப்ப – திருமந்:1043/3
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் – திருமந்:1050/2
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன் – திருமந்:1123/3
அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே – திருமந்:1243/4
கொண்ட இ மந்திரம் கூத்தன் எழுத்ததாய் – திருமந்:1290/1
கொண்ட இ மந்திரம் கூத்தன் குறி அதாம் – திருமந்:1336/2
கொண்ட கனகம் குழை முடி ஆடையாய் – திருமந்:1372/1
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின் – திருமந்:1390/3
கொண்ட இ தத்துவநாயகி ஆனவள் – திருமந்:1391/2
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும் – திருமந்:1402/3
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா – திருமந்:1537/3
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம் – திருமந்:1653/3
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே – திருமந்:1653/4
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே – திருமந்:1782/4
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி – திருமந்:1833/1
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் – திருமந்:1833/2
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த – திருமந்:1833/3
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி – திருமந்:1839/3
கொண்ட குறியும் குலவரை உச்சியும் – திருமந்:1870/1
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் – திருமந்:1871/2
கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற – திருமந்:1930/1
கொண்ட குணனே நலனே நல் கோமளம் – திருமந்:1943/1
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே – திருமந்:1997/4
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து – திருமந்:2002/3
படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல – திருமந்:2009/1
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய – திருமந்:2009/2
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி – திருமந்:2009/3
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே – திருமந்:2009/4
வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே – திருமந்:2042/4
ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின் – திருமந்:2384/1
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற – திருமந்:2433/2
பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான் – திருமந்:2433/3
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே – திருமந்:2634/4
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின் – திருமந்:2646/1
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின் – திருமந்:2651/1
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் – திருமந்:2768/1
கொண்ட குறியை குலைத்தது தானே – திருமந்:2806/4
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி – திருமந்:2810/3
குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும் – திருமந்:2902/2
கொண்ட சுழியும் குலவரை உச்சியும் – திருமந்:2966/1
மேல்


கொண்ட-போதே (1)

எழிலால் இறைவன் இடம் கொண்ட-போதே
விழலார் விறலாம் வினை அது போக – திருமந்:1695/2,3
மேல்


கொண்டது (10)

இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ – திருமந்:137/2
கூறா உபதேசம் கொண்டது காணுமே – திருமந்:733/4
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே – திருமந்:1043/4
விந்துவை எண்மடி கொண்டது வீசமே – திருமந்:1276/4
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு – திருமந்:1410/3
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று – திருமந்:1858/3
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று – திருமந்:1858/3
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை – திருமந்:1879/2
துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே – திருமந்:2037/4
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை – திருமந்:2931/1,2
மேல்


கொண்டதும் (1)

கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே – திருமந்:483/4
மேல்


கொண்டதே (2)

கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே – திருமந்:627/4
சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே – திருமந்:873/4
மேல்


கொண்டல் (4)

வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர் – திருமந்:21/1
பெயல் கொண்டல் போல பெரும் செல்வம் ஆமே – திருமந்:169/4
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி – திருமந்:424/1
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே – திருமந்:1839/4
மேல்


கொண்டவர்-தமை (1)

அறை மணி வாள் கொண்டவர்-தமை போல – திருமந்:2512/2
மேல்


கொண்டவன் (1)

கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே – திருமந்:2388/4
மேல்


கொண்டவாறு (1)

மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே – திருமந்:2121/4
மேல்


கொண்டவாறே (2)

என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே – திருமந்:1023/4
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே – திருமந்:1759/4
மேல்


கொண்டவை (2)

கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில் – திருமந்:679/3
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில் – திருமந்:684/3
மேல்


கொண்டன (1)

வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன
வாழைக்கு சூரை வலிது வலிது என்பர் – திருமந்:2922/1,2
மேல்


கொண்டனள் (1)

கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள் – திருமந்:1102/1
மேல்


கொண்டனன் (1)

கூறா வியோமம் பரம் என கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே – திருமந்:2172/3,4
மேல்


கொண்டாட்டம் (1)

கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை – திருமந்:209/3
மேல்


கொண்டாட்டி (1)

பாவிய பூதம் கொண்டாட்டி படைப்பாதி – திருமந்:2344/2
மேல்


கொண்டாடு (1)

கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து – திருமந்:2779/3
மேல்


கொண்டார் (1)

மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இட பக்கமே இறை நொந்தது என்றார் – திருமந்:148/2,3
மேல்


கொண்டாரும் (2)

பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை – திருமந்:178/2
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை – திருமந்:2605/2
மேல்


கொண்டாரே (1)

கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே – திருமந்:2900/4
மேல்


கொண்டால் (2)

புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள் உண்ண வேண்டாம் தானே களி தரும் – திருமந்:566/1,2
தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக – திருமந்:1728/3
மேல்


கொண்டாளே (1)

ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே – திருமந்:1101/4
மேல்


கொண்டான் (13)

இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர் – திருமந்:164/1,2
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று – திருமந்:725/3
கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை – திருமந்:1729/1
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள – திருமந்:1729/2
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு – திருமந்:1729/3
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே – திருமந்:1729/4
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள – திருமந்:1784/1
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை – திருமந்:1784/2
கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால் – திருமந்:1784/3
கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே – திருமந்:1784/4
காலம் கொண்டான் அடி காணலுமாமே – திருமந்:2173/4
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள – திருமந்:2641/2
கொண்டான் அறிவன் குணம் பல தானே – திருமந்:2946/4
மேல்


கொண்டானே (7)

அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே – திருமந்:341/4
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே – திருமந்:1594/4
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே – திருமந்:1722/4
உயலார் குருபரன் உய்ய கொண்டானே – திருமந்:1779/4
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே – திருமந்:1875/4
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே – திருமந்:2624/4
அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே – திருமந்:3013/4
மேல்


கொண்டிட (2)

கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் – திருமந்:623/2
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின் – திருமந்:703/3
மேல்


கொண்டிடு (1)

கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே – திருமந்:1840/4
மேல்


கொண்டிடும் (2)

கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை – திருமந்:1323/2
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும் – திருமந்:1353/3
மேல்


கொண்டிருந்து (1)

கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை – திருமந்:502/2
மேல்


கொண்டு (85)

நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து – திருமந்:73/1,2
சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு – திருமந்:145/3
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான் – திருமந்:158/2
குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அ காலம் இருந்து நடுவே – திருமந்:166/1,2
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் – திருமந்:203/2
மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள் – திருமந்:203/3
குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா – திருமந்:204/2
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல் – திருமந்:204/3
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி – திருமந்:246/1
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி – திருமந்:246/1
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர் – திருமந்:246/2
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை – திருமந்:246/3
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே – திருமந்:246/4
வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் – திருமந்:260/3
ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் – திருமந்:349/1
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி – திருமந்:363/2,3
கொண்டு குதிரை குசை செறுத்தாரே – திருமந்:621/4
இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில் – திருமந்:696/2
ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில் – திருமந்:698/2
ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் – திருமந்:703/1
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட – திருமந்:703/2
ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை – திருமந்:722/1
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு
கடிந்தனன் மூள கதுவ வல்லார்க்கு – திருமந்:749/2,3
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் – திருமந்:827/2
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால் – திருமந்:838/1
நட்டம் அது ஆடும் நடுவே நிலயம் கொண்டு
அட்ட தேசு அ பொருள் ஆகி நின்றாளே – திருமந்:974/3,4
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து – திருமந்:992/2
சிகை நின்ற அந்த கவசம் கொண்டு ஆதி – திருமந்:1093/1
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு
வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு – திருமந்:1095/2,3
கூசிய விந்து உடன் கொண்டு கூவே – திருமந்:1095/4
ஓதி குருவின் உபதேசம் கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம்-தனை பண்ணி – திருமந்:1311/2,3
தன்னுளும் ஆகி தரணி முழுதும் கொண்டு
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள் – திருமந்:1351/1,2
கால் அது கொண்டு கலந்துற வீசிடின் – திருமந்:1355/2
கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு – திருமந்:1392/3
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு
கால் அம் பூ பாசம் மழு கத்தி கைக்கொண்டு – திருமந்:1398/2,3
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே – திருமந்:1407/4
கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை – திருமந்:1416/1
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் – திருமந்:1522/3
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் – திருமந்:1538/3
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தலால் – திருமந்:1576/3
அரிய பொருள் முத்திரை ஆக கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று – திருமந்:1594/2,3
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன் – திருமந்:1655/1
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் – திருமந்:1655/2
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே – திருமந்:1679/2
குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு
உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே – திருமந்:1700/3,4
குறை அது கூறி குணம் கொண்டு போற்ற – திருமந்:1701/2
கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும் – திருமந்:1728/1
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் – திருமந்:1728/2
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே – திருமந்:1728/4
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கைவைத்து – திருமந்:1778/1,2
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே – திருமந்:1826/4
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு
கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார் – திருமந்:1834/2,3
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட – திருமந்:1863/1
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் – திருமந்:1921/2
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும் – திருமந்:2013/2
பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் – திருமந்:2064/3
கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி – திருமந்:2086/1
மேவும் தடி கொண்டு சொல்லும் விழி பெற – திருமந்:2169/3
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை – திருமந்:2173/1
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு – திருமந்:2173/2
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் – திருமந்:2173/3
கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற – திருமந்:2219/2
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே – திருமந்:2222/4
குருவினை கொண்டு அருள் சத்தி முன் கூட்டி – திருமந்:2262/3
மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான் – திருமந்:2332/3
கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்கட்டற – திருமந்:2433/1
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே – திருமந்:2433/4
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் – திருமந்:2454/2
அம்பு கொண்டு எய்திட்டு அகல துரத்திடில் – திருமந்:2607/3
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் – திருமந்:2629/3
அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை – திருமந்:2719/2,3
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே – திருமந்:2729/4
கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே – திருமந்:2732/4
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே – திருமந்:2749/4
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட – திருமந்:2760/3
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் – திருமந்:2768/2
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே – திருமந்:2771/4
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே – திருமந்:2810/4
தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள் – திருமந்:2869/3
இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி – திருமந்:2878/1
கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை – திருமந்:2878/2
மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் – திருமந்:2878/3
கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே – திருமந்:2878/4
வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே – திருமந்:2922/4
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி – திருமந்:3028/2
மேல்


கொண்டுகொண்டு (1)

கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம் – திருமந்:578/2
மேல்


கொண்டுபோய் (1)

மூக்கினில் கைவைத்து மூடிட்டு கொண்டுபோய்
காக்கைக்கு பலி காட்டியவாறே – திருமந்:147/3,4
மேல்


கொண்டுற்றோர் (1)

யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர்
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம் – திருமந்:1465/1,2
மேல்


கொண்டே (5)

இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே – திருமந்:1371/4
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே – திருமந்:1415/4
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே – திருமந்:1929/4
கடுங்கால் கரணம் கருத்துற கொண்டே – திருமந்:1942/4
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் – திருமந்:2968/1
மேல்


கொண்டேன் (1)

மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன் – திருமந்:1640/2
மேல்


கொண்டேனே (6)

நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே – திருமந்:1017/4
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே – திருமந்:1782/4
அன்னமயம் என்று அறிந்து கொண்டேனே – திருமந்:2005/4
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே – திருமந்:2323/4
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே – திருமந்:2947/4
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே – திருமந்:2982/4
மேல்


கொண்டோம் (1)

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி – திருமந்:1522/1
மேல்


கொண்டோர் (1)

சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர – திருமந்:125/2,3
மேல்


கொணர் (1)

கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து – திருமந்:2460/3
மேல்


கொணர்ந்த (2)

கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில் – திருமந்:465/2
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே – திருமந்:1126/4
மேல்


கொணர்ந்தான் (1)

நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும் – திருமந்:2892/2,3
மேல்


கொணர்ந்து (2)

கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும் – திருமந்:171/2
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே – திருமந்:2031/3,4
மேல்


கொணர்ந்தேன் (1)

கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம் – திருமந்:1748/2
மேல்


கொத்தி (3)

கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர் – திருமந்:160/2
கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள் – திருமந்:1671/2
கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் – திருமந்:2897/1
மேல்


கொத்தும் (2)

கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம் – திருமந்:1719/2
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம் – திருமந்:2819/2
மேல்


கொதிக்கின்ற (1)

கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே – திருமந்:2099/4
மேல்


கொதிக்கின்றவாறும் (1)

கொதிக்கின்றவாறும் குளிர்கின்றவாறும் – திருமந்:2621/1
மேல்


கொதிக்கினும் (1)

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அ வழி – திருமந்:17/1,2
மேல்


கொதித்து (2)

கொதித்து எழும் வல்வினை கூடகிலாவே – திருமந்:1019/4
கொதித்து அங்கு எழுந்தவை கூடகிலாவே – திருமந்:1286/4
மேல்


கொந்தார் (1)

கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் – திருமந்:405/3
மேல்


கொந்து (1)

கொந்து அணியும் குழலாளொடு கோனையும் – திருமந்:1242/3
மேல்


கொம்பிடை (1)

கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும் – திருமந்:171/2
மேல்


கொம்பில் (1)

தழைக்கின்ற செந்தளிர் தண் மலர் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் – திருமந்:187/1,2
மேல்


கொம்பின் (2)

கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி – திருமந்:1177/1
நூறு பறவை நுனி கொம்பின் மேலன – திருமந்:2905/2
மேல்


கொம்பு (11)

பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி – திருமந்:202/3
கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே – திருமந்:626/4
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் – திருமந்:950/3
படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும் – திருமந்:1030/3
கொம்பு அனையாளை குவி முலை மங்கையை – திருமந்:1058/1
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய – திருமந்:1147/2
குறி ஒன்றி நின்றிடும் கோமள கொம்பு
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே – திருமந்:1182/2,3
கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம் – திருமந்:1719/2
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும் – திருமந்:2530/3
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு – திருமந்:2928/1
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும் – திருமந்:2979/3
மேல்


கொம்புக்கும் (1)

கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு – திருமந்:2928/2
மேல்


கொம்பே (1)

பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே – திருமந்:1057/4
மேல்


கொம்மட்டி (1)

குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே – திருமந்:2904/4
மேல்


கொய் (3)

கொய் தளிர் மேனி குமரி குலாம் கன்னி – திருமந்:1204/2
குவிந்த கரம் இரு கொய் தளிர் பாணி – திருமந்:1376/2
கூடும் சிவனது கொய் மலர் சேவடி – திருமந்:2651/2
மேல்


கொய்தல் (1)

எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் – திருமந்:1502/1,2
மேல்


கொய்திட்டும் (1)

வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும்
பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின் – திருமந்:1506/1,2
மேல்


கொய்யும் (1)

குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் – திருமந்:2898/3
மேல்


கொய்வன (1)

குறுகா நறு மலர் கொய்வன கண்டும் – திருமந்:1497/3
மேல்


கொல் (2)

கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான் – திருமந்:238/3
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே – திருமந்:520/4
மேல்


கொல்ல (1)

கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே – திருமந்:2028/4
மேல்


கொல்லன் (1)

உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன்
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே – திருமந்:2882/3,4
மேல்


கொல்லாமை (1)

மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர் – திருமந்:197/2
மேல்


கொல்லான் (1)

கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன் – திருமந்:554/1
மேல்


கொல்லிடு (1)

கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை – திருமந்:198/1
மேல்


கொல்லும் (1)

கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன – திருமந்:2567/2
மேல்


கொல்லை (5)

கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை – திருமந்:1729/1
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே – திருமந்:2016/4
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி – திருமந்:2890/1
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே – திருமந்:2903/4
கொல்லை முக்காதமும் காடு அரை காதமும் – திருமந்:2912/1
மேல்


கொல்லையில் (3)

கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு – திருமந்:542/3
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் – திருமந்:2016/1
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் – திருமந்:2903/1
மேல்


கொல்லையும் (1)

ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே – திருமந்:1515/4
மேல்


கொல்வது (1)

குகை இல்லை கொல்வது இலாமையினாலே – திருமந்:1347/2
மேல்


கொலை (3)

காமம் களவு கொலை என காண்பவை – திருமந்:556/3
குண்டலகாதி கொலை வில் புருவத்தாள் – திருமந்:1050/1
அவம் மிக்கவரே அதி கொலை வேடர் – திருமந்:1661/2
மேல்


கொலையில் (1)

கொலையில் பிழைத்த பிரசாபதியை – திருமந்:340/1
மேல்


கொலையே (2)

கொலையே களவுகள் காமம் பொய்கூறல் – திருமந்:200/1
அ தீயின் உள் எழுந்தன்று கொலையே – திருமந்:344/4
மேல்


கொழு (1)

புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன் – திருமந்:2923/2
மேல்


கொழுத்தன (1)

கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே – திருமந்:2034/4
மேல்


கொழுந்தின் (1)

நினை குறியாளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன்நெறி ஆமே – திருமந்:1565/3,4
மேல்


கொழுந்தினை (1)

கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும் – திருமந்:1769/1
மேல்


கொழுந்து (5)

கொழுந்து அன்பு செய்து அருள்கூர வல்லார்க்கு – திருமந்:280/3
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் – திருமந்:420/2
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே – திருமந்:815/4
கண்டிடும் வன்னி கொழுந்து அன ஒத்த பின் – திருமந்:1273/3
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் – திருமந்:1526/1
மேல்


கொழும் (3)

கொழும் தண் பவள குளிர் சடையோடே – திருமந்:72/3
கொழும் தண் பவள குளிர் சடையோடே – திருமந்:553/3
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ – திருமந்:2882/2
மேல்


கொள் (24)

இது பதி கொள் என்ற எம் பெருமானே – திருமந்:18/4
புலம் கொள் பரமானம் தர்போக தேவர் – திருமந்:102/3
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே – திருமந்:135/4
கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள்
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே – திருமந்:207/3,4
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே – திருமந்:338/4
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள்
மறியார் வளை கை வரு புனல் கங்கை – திருமந்:512/2,3
ஒன்று அது வென்றி கொள் ஆயிரமாயிரம் – திருமந்:698/3
கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே – திருமந்:737/3
உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே – திருமந்:794/4
அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே – திருமந்:1031/4
களம் கொள் மணியுடன் காம வினோதம் – திருமந்:1246/3
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே – திருமந்:1246/4
விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை – திருமந்:1247/3
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் – திருமந்:1365/2
கால் அது ஆக கலந்து கொள் என்று – திருமந்:1395/2
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் – திருமந்:1761/2
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து – திருமந்:1926/2
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே – திருமந்:1926/4
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில் – திருமந்:2038/3
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே – திருமந்:2038/4
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே – திருமந்:2055/4
தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால் – திருமந்:2177/2
குறி அறியாதவர் கொள் அறியாரே – திருமந்:2580/4
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து – திருமந்:2591/2
மேல்


கொள்க (1)

விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை – திருமந்:2668/2,3
மேல்


கொள்கையராய் (1)

கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர் – திருமந்:935/3
மேல்


கொள்கையன் (2)

குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே – திருமந்:948/4
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் – திருமந்:1763/3
மேல்


கொள்கையான் (2)

கூடும் தவம் செய்த கொள்கையான் தானே – திருமந்:1618/4
குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன் – திருமந்:2805/2
மேல்


கொள்கையில் (1)

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் – திருமந்:2377/1
மேல்


கொள்கையே (2)

குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே – திருமந்:1603/4
கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே – திருமந்:2376/4
மேல்


கொள்வர் (2)

கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே – திருமந்:2013/4
பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே – திருமந்:2095/3,4
மேல்


கொள்வன் (2)

சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே – திருமந்:1855/4
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே – திருமந்:2928/4
மேல்


கொள்வனே (1)

கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே – திருமந்:1445/4
மேல்


கொள்வார் (1)

குருட்டினை நீக்கா குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி – திருமந்:1680/2,3
மேல்


கொள்வார்க்கு (3)

ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும் – திருமந்:296/1
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை – திருமந்:442/2
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு
விளைந்து கிடந்தது மேவு முக்காதமே – திருமந்:2879/3,4
மேல்


கொள்வார்க்கே (8)

கதித்து அனல் உள் எழ கண்டு கொள்வார்க்கே
கொதித்து எழும் வல்வினை கூடகிலாவே – திருமந்:1019/3,4
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே – திருமந்:1283/4
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே – திருமந்:1285/4
தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே – திருமந்:1287/4
மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே – திருமந்:1289/4
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2036/4
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2854/4
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே – திருமந்:2924/4
மேல்


கொள்வார்கட்கு (2)

கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே – திருமந்:683/3,4
நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே – திருமந்:1020/4
மேல்


கொள்வார்கட்கே (2)

ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:1718/4
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே – திருமந்:2411/4
மேல்


கொள்வார்களுக்கு (2)

அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் – திருமந்:766/2,3
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் – திருமந்:2660/2,3
மேல்


கொள்வான் (1)

ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன் – திருமந்:222/2
மேல்


கொள்வீரே (3)

அ திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே – திருமந்:854/4
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே – திருமந்:1647/4
தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே – திருமந்:1859/4
மேல்


கொள்ள (10)

பொருளும் பிறர் கொள்ள போவதன் முன்னம் – திருமந்:168/2
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள – திருமந்:245/3
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள
பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே – திருமந்:245/3,4
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
எம் பொன் தலைவன் இவனாம் என சொல்ல – திருமந்:635/2,3
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியாம் – திருமந்:911/1,2
கொள்ள தவநெறி கூடிய இன்பத்து – திருமந்:1183/3
கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே – திருமந்:1196/4
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மையாளனை வானவர் தேவர் – திருமந்:1844/2,3
பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான் – திருமந்:2433/3
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும் – திருமந்:2641/2,3
மேல்


கொள்ளலும் (2)

குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே – திருமந்:561/4
கூம்பகில்லார் வந்து கொள்ளலும் ஆமே – திருமந்:2352/4
மேல்


கொள்ளா (1)

கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து – திருமந்:2881/1
மேல்


கொள்ளாதார் (1)

உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே – திருமந்:1677/3,4
மேல்


கொள்ளார் (3)

குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வார் – திருமந்:1680/1,2
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார்
புற கடை இச்சித்து போகின்றவாறே – திருமந்:1681/3,4
தமக்குற பேசின தாரணை கொள்ளார்
சிணக்குற பேசின தீவினையாளர் – திருமந்:2565/2,3
மேல்


கொள்ளி (2)

கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம் – திருமந்:611/2
கொள்ளி பறிய குழல் வழியே சென்று – திருமந்:834/3
மேல்


கொள்ளில் (1)

மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில்
வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் – திருமந்:241/1,2
மேல்


கொள்ளிவட்டம் (1)

கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை – திருமந்:2313/1
மேல்


கொள்ளின் (1)

நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை – திருமந்:739/2
மேல்


கொள்ளினும் (1)

கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக – திருமந்:1693/1
மேல்


கொள்ளீரே (7)

விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே – திருமந்:204/4
மாதனம் ஆக மதித்து கொள்ளீரே – திருமந்:721/4
நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே – திருமந்:963/4
மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே – திருமந்:1026/4
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே – திருமந்:1329/4
முகத்துளும் முன் எழ கண்டு கொள்ளீரே – திருமந்:1335/4
செப்பும் சிவம் ஈறாய் தேர்ந்து கொள்ளீரே – திருமந்:2143/4
மேல்


கொள்ளுக (1)

கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக – திருமந்:1693/1,2
மேல்


கொள்ளும் (6)

ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே – திருமந்:179/4
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே – திருமந்:259/4
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை – திருமந்:502/2
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு – திருமந்:542/3
கண்டும் கொள்ளும் தனிநாயகி-தன்னையும் – திருமந்:1330/1
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை – திருமந்:2957/2
மேல்


கொள (4)

நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து – திருமந்:29/2,3
ஓட்டி துரந்திட்டு அது வலியார் கொள
காட்டி கொடுத்தது கைவிட்டவாறே – திருமந்:171/3,4
மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே – திருமந்:365/4
நாறா நலங்கினார் ஞாலம் அங்கு அவர் கொள
பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டும் – திருமந்:853/2,3
மேல்


கொளாது (1)

நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது – திருமந்:830/3
மேல்


கொளில் (2)

கூடி கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே – திருமந்:576/4
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன – திருமந்:2884/3
மேல்


கொளீரே (2)

ஈவ பெரும் பிழை என்று கொளீரே – திருமந்:506/4
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே – திருமந்:2430/4
மேல்


கொளீஇ (1)

பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகையானே – திருமந்:871/3,4
மேல்


கொளுந்தாமல் (1)

கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம் – திருமந்:611/2
மேல்


கொளும் (3)

மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும் – திருமந்:1330/2
பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர் – திருமந்:1330/3
நின்று கொளும் நிலை பேறுடையாளே – திருமந்:1330/4
மேல்


கொளுவி (9)

முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள் – திருமந்:344/1
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம் – திருமந்:423/3
என்பில் கொளுவி இசைந்துறு தோல் தசை – திருமந்:432/3
முன்பில் கொளுவி முடிகுவது ஆமே – திருமந்:432/4
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவி
பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி – திருமந்:452/2,3
நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி
உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே – திருமந்:467/3,4
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி
கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு – திருமந்:880/2,3
வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி – திருமந்:1949/1
ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு – திருமந்:2316/2
மேல்


கொற்ற (2)

குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு – திருமந்:166/1
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் – திருமந்:2015/2
மேல்


கொறுக்கை (1)

அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே – திருமந்:346/4
மேல்


கொன்ற (1)

தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க – திருமந்:2037/3
மேல்


கொன்றானே (1)

குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே – திருமந்:339/4
மேல்


கொன்று (2)

காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு – திருமந்:161/2
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட – திருமந்:1985/3
மேல்


கொன்றை (7)

கோது குலாவிய கொன்றை குழல் சடை – திருமந்:16/1
தேன் அமர் கொன்றை சிவன் அருள் அல்லது – திருமந்:109/2
தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன் – திருமந்:275/3
கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே – திருமந்:610/4
பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி – திருமந்:1551/1
மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே – திருமந்:2950/4
திரு கொன்றை வைத்த செழும் சடையானே – திருமந்:3042/4
மேல்


கொன்றையன் (1)

ஆகின்ற தன்மையில் அக்கு அணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன் – திருமந்:395/1,2
மேல்


கொன்றையான் (1)

மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த – திருமந்:165/1
மேல்


கொன்றையினான் (1)

கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி – திருமந்:285/1

மேல்