ஏ – முதல் சொற்கள், திருமந்திரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 7
ஏக 7
ஏகத்த 1
ஏகத்துள் 1
ஏகம் 2
ஏகமாய் 1
ஏகமும் 2
ஏகலாம் 1
ஏகாச 1
ஏகாசம் 1
ஏகாந்தத்து 1
ஏகாந்தமாம் 1
ஏகாந்தன் 1
ஏகாமை 1
ஏகிடில் 1
ஏகிய 1
ஏகில் 2
ஏகின்ற 3
ஏகுதல் 1
ஏகும் 1
ஏங்க 1
ஏங்கி 1
ஏசாத 1
ஏட்டின் 3
ஏடு 3
ஏணி 2
ஏணியாய் 1
ஏத்த 5
ஏத்தகிலாவே 1
ஏத்தார் 2
ஏத்தி 8
ஏத்திடு 1
ஏத்திடும் 1
ஏத்தியும் 4
ஏத்தினர் 1
ஏத்தினால் 1
ஏத்தினும் 1
ஏத்து-மின் 9
ஏத்தும் 5
ஏத்துவர் 8
ஏத்துவன் 4
ஏதம் 7
ஏதர் 1
ஏதல் 1
ஏதாகிலும் 1
ஏது 7
ஏதும் 9
ஏதெனில் 1
ஏதேனும் 1
ஏதொன்றை 1
ஏந்த 1
ஏந்தி 7
ஏந்திய 1
ஏந்திலன் 1
ஏந்திழை 7
ஏந்திழையாளும் 1
ஏந்திழையாளே 1
ஏந்து 2
ஏம் 1
ஏமத்து 1
ஏமது 1
ஏமம் 2
ஏமாப்பது 1
ஏமுற்ற 1
ஏமுறு 1
ஏய் 2
ஏய்ந்த 8
ஏய்ந்தவைத்து 1
ஏய்ந்திடும் 1
ஏய்ந்து 1
ஏய்முறை 1
ஏய 6
ஏயம் 1
ஏயா 1
ஏயும் 6
ஏர் 7
ஏரதாம் 1
ஏரியும் 1
ஏரினை 1
ஏரும் 1
ஏருறு 1
ஏரொளி 4
ஏல 3
ஏலம் 2
ஏவர் 1
ஏவல் 3
ஏவன 2
ஏவனும் 1
ஏவிடே 1
ஏழ் 30
ஏழ்மூன்றின் 1
ஏழதாய் 1
ஏழா 1
ஏழாம் 1
ஏழாய் 2
ஏழாயிரத்து 1
ஏழாயிரத்தும் 1
ஏழாயிரம் 1
ஏழாயிரமாய் 1
ஏழாயிரமே 1
ஏழானதில் 1
ஏழிரண்டு 1
ஏழில் 3
ஏழின் 2
ஏழின்-கண் 1
ஏழினில் 3
ஏழினுக்கு 1
ஏழினும் 1
ஏழு 11
ஏழுக்கும் 3
ஏழும் 53
ஏழுள் 1
ஏழேழ் 2
ஏழை 2
ஏழைகள் 4
ஏழைகாள் 1
ஏழையர் 1
ஏழையும் 6
ஏற்க 1
ஏற்ப 1
ஏற்பட 1
ஏற்ற 1
ஏற்றம் 3
ஏற்றல் 1
ஏற்றவள் 1
ஏற்றான் 4
ஏற்றி 14
ஏற்றிய 2
ஏற்றியே 1
ஏற்றின் 1
ஏற்று 1
ஏற்றுகின்றேன் 1
ஏற 5
ஏறட்டு 1
ஏறலுற்றேன் 2
ஏறற்கு 1
ஏறாவாறு 1
ஏறி 31
ஏறிட்டு 5
ஏறிய 3
ஏறியவாறே 1
ஏறியே 2
ஏறினான் 1
ஏறு 6
ஏறுதல் 1
ஏறும் 9
ஏன் 1
ஏன்ற 2
ஏன்றனள் 1
ஏன்றனன் 1
ஏன்று 3
ஏனம் 1
ஏனமும் 1
ஏனை 10
ஏனைய 3
ஏனையோர் 1
ஏனோர் 3

ஏ (7)

ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில் – திருமந்:778/1
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் – திருமந்:910/2
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் – திருமந்:911/3
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே – திருமந்:911/4
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும் – திருமந்:912/2
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும் – திருமந்:912/3
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே – திருமந்:912/4
மேல்


ஏக (7)

இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக
நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்கு – திருமந்:1024/1,2
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே – திருமந்:1309/1
சிவம் ஆன ஞானம் சிவபரத்தே ஏக
சிவம் ஆன ஞானம் சிவானந்தம் நல்குமே – திருமந்:1587/3,4
பசைந்து எழும் ஈசரை பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க – திருமந்:1590/2,3
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே – திருமந்:1621/4
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக
ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே – திருமந்:2487/3,4
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தமாய் – திருமந்:2638/2
மேல்


ஏகத்த (1)

ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால் – திருமந்:1897/2
மேல்


ஏகத்துள் (1)

ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து – திருமந்:465/3
மேல்


ஏகம் (2)

ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம் – திருமந்:1217/2
ஏகம் பராசத்தியாக சிவகுரு – திருமந்:1309/3
மேல்


ஏகமாய் (1)

பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்
திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று – திருமந்:2511/1,2
மேல்


ஏகமும் (2)

ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் – திருமந்:1714/3
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே – திருமந்:1898/4
மேல்


ஏகலாம் (1)

நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே – திருமந்:551/3,4
மேல்


ஏகாச (1)

ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் – திருமந்:2809/2
மேல்


ஏகாசம் (1)

ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள் – திருமந்:2774/2
மேல்


ஏகாந்தத்து (1)

இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே – திருமந்:1885/4
மேல்


ஏகாந்தமாம் (1)

ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே – திருமந்:2728/4
மேல்


ஏகாந்தன் (1)

எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும் – திருமந்:763/2
மேல்


ஏகாமை (1)

எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் – திருமந்:2029/3
மேல்


ஏகிடில் (1)

அண்டத்துள் உற்று அடுத்தடுத்து ஏகிடில்
வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார் – திருமந்:736/2,3
மேல்


ஏகிய (1)

ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு – திருமந்:2493/3
மேல்


ஏகில் (2)

சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் – திருமந்:631/2,3
எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் – திருமந்:2029/2
மேல்


ஏகின்ற (3)

ஏகின்ற காலம் வெளியுற நின்றது – திருமந்:680/3
ஏகின்ற அ கலை எல்லாம் இடைவழி – திருமந்:852/3
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் – திருமந்:1498/3
மேல்


ஏகுதல் (1)

இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே – திருமந்:2489/4
மேல்


ஏகும் (1)

ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே – திருமந்:2132/4
மேல்


ஏங்க (1)

ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட – திருமந்:1386/3
மேல்


ஏங்கி (1)

ஏங்கி உலகில் இருந்து அழுவாரே – திருமந்:1551/4
மேல்


ஏசாத (1)

ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே – திருமந்:2163/4
மேல்


ஏட்டின் (3)

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி – திருமந்:1001/1
எண்ணா கருடணை ஏட்டின் யகாரம் இட்டு – திருமந்:1002/1
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை – திருமந்:2885/1
மேல்


ஏடு (3)

நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே – திருமந்:1066/4
ஏடு அங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி – திருமந்:1067/1
ஏடு அற நாலைந்து இடவகை ஆமே – திருமந்:1298/4
மேல்


ஏணி (2)

வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே – திருமந்:296/4
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை – திருமந்:2868/3
மேல்


ஏணியாய் (1)

முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு – திருமந்:126/1,2
மேல்


ஏத்த (5)

சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே – திருமந்:1198/4
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அ இடம் ஆரமுது ஆக – திருமந்:1235/2,3
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே – திருமந்:1833/3,4
சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான் – திருமந்:2971/1,2
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் – திருமந்:2973/2
மேல்


ஏத்தகிலாவே (1)

இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே – திருமந்:2629/4
மேல்


ஏத்தார் (2)

பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற-போது அறியார் அவர் தாமே – திருமந்:187/3,4
பரவப்படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் – திருமந்:264/1,2
மேல்


ஏத்தி (8)

பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – திருமந்:4/3,4
சமைக்க வல்லானை சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே – திருமந்:365/1,2
வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்பு – திருமந்:1068/2
பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின் – திருமந்:1103/3
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே – திருமந்:1190/3,4
நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் – திருமந்:1212/3
பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி
நால் பால நாரதாய சுவாகா என்று – திருமந்:1317/2,3
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை – திருமந்:1838/2
மேல்


ஏத்திடு (1)

நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்-தொறும் – திருமந்:3/2
மேல்


ஏத்திடும் (1)

நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை – திருமந்:1122/2,3
மேல்


ஏத்தியும் (4)

ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும் – திருமந்:39/3
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் – திருமந்:277/2,3
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் – திருமந்:1841/1,2
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் – திருமந்:1841/2
மேல்


ஏத்தினர் (1)

ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை – திருமந்:1715/1
மேல்


ஏத்தினால் (1)

எ பரிசு ஆயினும் ஏத்து-மின் ஏத்தினால்
அ பரிசு ஈசன் அருள் பெறலாமே – திருமந்:36/3,4
மேல்


ஏத்தினும் (1)

தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும் – திருமந்:275/1,2
மேல்


ஏத்து-மின் (9)

எ பரிசு ஆயினும் ஏத்து-மின் ஏத்தினால் – திருமந்:36/3
எய்திய நாளில் இசையினால் ஏத்து-மின்
எய்திய நாளில் எறிவது அறியாமல் – திருமந்:186/2,3
எ குழி தூர்த்தும் இறைவனை ஏத்து-மின்
அ குழி தூரும் அழுக்கு அற்ற போதே – திருமந்:210/3,4
இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின்
வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே – திருமந்:269/3,4
என் அன்பு உருக்கி இறைவனை ஏத்து-மின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடு-மின் – திருமந்:274/1,2
எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை – திருமந்:293/3
கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின்
ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும் – திருமந்:1453/1,2
எய்தி அவனை இசையினால் ஏத்து-மின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய – திருமந்:2043/2,3
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின்
மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என – திருமந்:2606/1,2
மேல்


ஏத்தும் (5)

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே – திருமந்:80/3
சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர் – திருமந்:376/1
சிறந்தவர் ஏத்தும் சிரீம் தனம் ஆமே – திருமந்:1378/4
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து – திருமந்:1423/1
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை – திருமந்:2984/2
மேல்


ஏத்துவர் (8)

ஏத்துவர் பத்தினில் எண் திசை தோன்றிட – திருமந்:757/2
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள் – திருமந்:1245/1,2
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூ அடி இட்டு பொலிய இருந்தவர் – திருமந்:1333/2,3
சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள் – திருமந்:1762/2
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று – திருமந்:1837/1
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை – திருமந்:2115/2
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை – திருமந்:2837/2,3
எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த – திருமந்:2942/2,3
மேல்


ஏத்துவன் (4)

நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை – திருமந்:37/1
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே – திருமந்:58/4
என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை – திருமந்:1762/3
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை – திருமந்:2980/2,3
மேல்


ஏதம் (7)

ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம் – திருமந்:1664/3
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே – திருமந்:2031/4
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை – திருமந்:2146/2
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் – திருமந்:2190/2
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே – திருமந்:2748/4
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே – திருமந்:2864/4
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது – திருமந்:2931/3
மேல்


ஏதர் (1)

எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே – திருமந்:2721/3,4
மேல்


ஏதல் (1)

ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே – திருமந்:1664/4
மேல்


ஏதாகிலும் (1)

பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி – திருமந்:1865/1
மேல்


ஏது (7)

ஏது பணி என்று இசையும் இருவருக்கு – திருமந்:408/3
ஏது உகந்தான் இவன் என்று அருள்செய்திடும் – திருமந்:632/3
மெய்ப்பொருளாக விளைந்தது ஏது எனின் – திருமந்:688/1
திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே – திருமந்:1820/4
அப்பும் அனலும் அகலத்துளே ஏது எனில் – திருமந்:2266/3
ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம் – திருமந்:2354/1
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக – திருமந்:2521/2
மேல்


ஏதும் (9)

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் – திருமந்:716/1
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் – திருமந்:870/1
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் – திருமந்:870/2
ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி – திருமந்:1311/1
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் – திருமந்:1589/2
ஆதியும் ஏதும் அறியகிலானே – திருமந்:1694/4
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் – திருமந்:1782/2
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2209/2
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் – திருமந்:2366/2
மேல்


ஏதெனில் (1)

செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில் – திருமந்:1907/1,2
மேல்


ஏதேனும் (1)

இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் – திருமந்:163/2
மேல்


ஏதொன்றை (1)

நானே விடப்படும் ஏதொன்றை நாடாது – திருமந்:237/2
மேல்


ஏந்த (1)

மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த
சிறந்தவர் ஏத்தும் சிரீம் தனம் ஆமே – திருமந்:1378/3,4
மேல்


ஏந்தி (7)

எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த – திருமந்:371/1
பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே – திருமந்:1252/3,4
பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி
குவிந்த கரம் இரு கொய் தளிர் பாணி – திருமந்:1376/1,2
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு – திருமந்:1774/2,3
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் – திருமந்:1830/2,3
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் – திருமந்:1833/1,2
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி – திருமந்:1839/1,2
மேல்


ஏந்திய (1)

ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை – திருமந்:1072/3
மேல்


ஏந்திலன் (1)

எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் – திருமந்:371/3
மேல்


ஏந்திழை (7)

இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி – திருமந்:972/1
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடை முடி சூலினி சுந்தரி – திருமந்:1104/2,3
இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி – திருமந்:1113/1
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி – திருமந்:1115/1
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன் – திருமந்:1123/3
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி – திருமந்:1185/1
இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக – திருமந்:1190/1
மேல்


ஏந்திழையாளும் (1)

ஏந்திழையாளும் இறைவர்கள் மூவரும் – திருமந்:1198/1
மேல்


ஏந்திழையாளே (1)

இடு முதல் ஆறங்கம் ஏந்திழையாளே – திருமந்:1197/4
மேல்


ஏந்து (2)

ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே – திருமந்:1382/4
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் – திருமந்:1740/1
மேல்


ஏம் (1)

விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம்
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் – திருமந்:1535/2,3
மேல்


ஏமத்து (1)

ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி – திருமந்:1091/2
மேல்


ஏமது (1)

ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட – திருமந்:1223/3
மேல்


ஏமம் (2)

ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி – திருமந்:2436/2
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் – திருமந்:2987/2
மேல்


ஏமாப்பது (1)

ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை – திருமந்:2846/3
மேல்


ஏமுற்ற (1)

ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்து – திருமந்:573/2
மேல்


ஏமுறு (1)

உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி – திருமந்:1925/3
மேல்


ஏய் (2)

ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே – திருமந்:1104/4
ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள் – திருமந்:1682/1
மேல்


ஏய்ந்த (8)

ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்கு – திருமந்:296/3
ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் – திருமந்:833/1
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி – திருமந்:1001/1
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்து இட்டு – திருமந்:1001/2
ஏய்ந்த மரவுரி-தன்னில் எழுதிய – திருமந்:1366/1
நேய இராகாதி ஏய்ந்த துரியத்து – திருமந்:2168/2
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து – திருமந்:2309/3
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து – திருமந்:2510/2
மேல்


ஏய்ந்தவைத்து (1)

ஏய்ந்தவைத்து எண்பதினாயிரம் வேண்டிலே – திருமந்:1001/4
மேல்


ஏய்ந்திடும் (1)

ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே – திருமந்:2131/4
மேல்


ஏய்ந்து (1)

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் – திருமந்:2440/1,2
மேல்


ஏய்முறை (1)

முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில் – திருமந்:1989/2,3
மேல்


ஏய (6)

ஏய குழலி இளம்பிறை ஏந்திழை – திருமந்:1104/2
ஏய வார் குழலி இனிது நின்றாளே – திருமந்:1220/4
இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும் – திருமந்:1721/2
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே – திருமந்:2243/4
ஏய பெருமான் இருந்து பொருகின்ற – திருமந்:2866/3
ஏய பரிய புரியும் தனது எய்தும் – திருமந்:3026/3
மேல்


ஏயம் (1)

ஏயம் கலந்த இருவர்-தம் சாயத்து – திருமந்:459/1
மேல்


ஏயா (1)

ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு – திருமந்:1939/3
மேல்


ஏயும் (6)

சீர் ஏயும் சேவடி சிந்தைவைத்தாளே – திருமந்:1200/4
ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே – திருமந்:2131/4
ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி – திருமந்:2268/3
ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே – திருமந்:2839/4
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு – திருமந்:2936/3
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி – திருமந்:3026/1
மேல்


ஏர் (7)

ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி – திருமந்:648/2
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே – திருமந்:648/4
ஏர் அணி கன்னியர் எழுநூற்றைந்து ஆக்கினார் – திருமந்:663/2
ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் – திருமந்:823/3
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே – திருமந்:928/4
ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி – திருமந்:1049/3
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன – திருமந்:1200/3
மேல்


ஏரதாம் (1)

எவ்வினம் மூன்றும் கிளர் தரு ஏரதாம்
சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டதாம் – திருமந்:1269/2,3
மேல்


ஏரியும் (1)

ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து – திருமந்:65/2
மேல்


ஏரினை (1)

என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார் – திருமந்:1236/1
மேல்


ஏரும் (1)

மூவணை ஏரும் உழுவது முக்காணி – திருமந்:2872/1
மேல்


ஏருறு (1)

ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள – திருமந்:636/3
மேல்


ஏரொளி (4)

ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ் – திருமந்:1255/1
ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம் – திருமந்:1255/2
ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின் – திருமந்:1255/3
ஏரொளி சக்கரம் அ நடு வன்னியே – திருமந்:1255/4
மேல்


ஏல (3)

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே – திருமந்:182/4
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க – திருமந்:590/3
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே – திருமந்:1211/4
மேல்


ஏலம் (2)

இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும் – திருமந்:19/1
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை – திருமந்:2173/1
மேல்


ஏவர் (1)

ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி – திருமந்:1765/3
மேல்


ஏவல் (3)

பொருவாத புந்தி புலன் போகம் ஏவல்
உரு ஆய சத்தி பர தியான முன்னும் – திருமந்:598/2,3
இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே – திருமந்:668/3,4
இனம் என கூறும் இரும் காயம் ஏவல்
தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில் – திருமந்:2609/2,3
மேல்


ஏவன (2)

ஏவன செய்யும் இளங்கிளையோனே – திருமந்:504/4
ஏவன செய்யும் இளங்கிளையோனே – திருமந்:2175/4
மேல்


ஏவனும் (1)

ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் – திருமந்:3032/2
மேல்


ஏவிடே (1)

கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே – திருமந்:1943/4
மேல்


ஏழ் (30)

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர் – திருமந்:1/3
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே – திருமந்:120/4
ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும் – திருமந்:373/1
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் – திருமந்:373/2
வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை – திருமந்:373/3
உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம் – திருமந்:423/2
எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர் – திருமந்:494/3
தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும் – திருமந்:638/1
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று – திருமந்:648/3
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட – திருமந்:703/2
படி ஏழ் உலகும் பரந்த சுடரை – திருமந்:1040/3
என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ – திருமந்:1061/2
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் – திருமந்:1252/2
நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம் – திருமந்:1358/1
நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம் – திருமந்:1358/1
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் – திருமந்:1934/1
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் – திருமந்:1976/3
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ் கோடி – திருமந்:2184/1
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே – திருமந்:2194/4
உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் – திருமந்:2383/2
வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட – திருமந்:2387/1
மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன் – திருமந்:2387/3
காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட – திருமந்:2495/1
காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட – திருமந்:2495/2
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட – திருமந்:2729/2
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே – திருமந்:2783/4
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் – திருமந்:3004/2
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் – திருமந்:3033/1
நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல் – திருமந்:3038/3
மேல்


ஏழ்மூன்றின் (1)

அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளரும் காயத்திலே – திருமந்:1934/3,4
மேல்


ஏழதாய் (1)

ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி – திருமந்:2783/1,2
மேல்


ஏழா (1)

இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர் – திருமந்:165/3
மேல்


ஏழாம் (1)

நண்ணுவர் ஏழாம் நரக குழியிலே – திருமந்:508/4
மேல்


ஏழாய் (2)

ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே – திருமந்:899/4
ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் – திருமந்:2783/1
மேல்


ஏழாயிரத்து (1)

ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம் – திருமந்:899/3
மேல்


ஏழாயிரத்தும் (1)

ஏழாயிரத்தும் எழு கோடி தான் ஆகி – திருமந்:899/2
மேல்


ஏழாயிரம் (1)

இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் – திருமந்:900/1
மேல்


ஏழாயிரமாய் (1)

ஏழாயிரமாய் இருபதாய் முப்பதாய் – திருமந்:899/1
மேல்


ஏழாயிரமே (1)

இணையார் கழல் இணை ஏழாயிரமே – திருமந்:898/4
மேல்


ஏழானதில் (1)

ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம் – திருமந்:647/1
மேல்


ஏழிரண்டு (1)

ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே – திருமந்:1187/4
மேல்


ஏழில் (3)

தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில் – திருமந்:774/2
காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு – திருமந்:2505/1
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் – திருமந்:2505/2
மேல்


ஏழின் (2)

ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே – திருமந்:1498/4
எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக – திருமந்:2297/2
மேல்


ஏழின்-கண் (1)

அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம் – திருமந்:2299/1
மேல்


ஏழினில் (3)

ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் – திருமந்:2783/1
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி – திருமந்:2783/2
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி – திருமந்:2783/3
மேல்


ஏழினுக்கு (1)

அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் – திருமந்:2732/1
மேல்


ஏழினும் (1)

இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட – திருமந்:2782/3
மேல்


ஏழு (11)

வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின் – திருமந்:101/1
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு – திருமந்:563/2,3
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல் – திருமந்:594/3
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக – திருமந்:1353/1
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – திருமந்:2267/2
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு – திருமந்:2753/1,2
இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட – திருமந்:2782/3
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள – திருமந்:2873/1
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள – திருமந்:2874/2
ஏழு வளைகடல் எட்டு குலவரை – திருமந்:2907/1
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே – திருமந்:3034/4
மேல்


ஏழுக்கும் (3)

நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை – திருமந்:2518/1,2
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன் – திருமந்:3037/1
மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர் – திருமந்:3037/2,3
மேல்


ஏழும் (53)

இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முது பதி செய்தவன் மூதறிவாளன் – திருமந்:19/1,2
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ – திருமந்:221/3
ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே – திருமந்:297/3,4
பார் போகம் ஏழும் படைத்து உடையானே – திருமந்:367/4
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி – திருமந்:389/1
ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் – திருமந்:404/1
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான் – திருமந்:404/2
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான் – திருமந்:404/3
ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும் – திருமந்:407/1
ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும் – திருமந்:407/2
ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும் – திருமந்:407/3
உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி – திருமந்:445/1,2
படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே – திருமந்:446/1,2
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி – திருமந்:448/1
ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற – திருமந்:639/2
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட – திருமந்:659/3
ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும் – திருமந்:723/1
நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
தான் கண்ட வாயு சரீரம் முழுதொடும் – திருமந்:738/1,2
உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும்
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும் – திருமந்:741/1,2
வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே – திருமந்:768/1
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட – திருமந்:913/2
சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள் – திருமந்:1181/2
இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும் – திருமந்:1221/2
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை – திருமந்:1430/1,2
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன் – திருமந்:1570/1
மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி – திருமந்:1637/1
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் – திருமந்:1871/1
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை – திருமந்:1888/1
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும்
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை – திருமந்:2287/1,2
அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும் – திருமந்:2388/1
செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை – திருமந்:2501/1,2
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை – திருமந்:2501/2
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் – திருமந்:2507/1
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி – திருமந்:2507/2
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் – திருமந்:2520/1
மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே – திருமந்:2522/4
ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில் – திருமந்:2532/1
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று – திருமந்:2626/1
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ – திருமந்:2663/1
கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி – திருமந்:2702/1
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் – திருமந்:2738/1
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும் – திருமந்:2738/1,2
தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும் – திருமந்:2738/2
தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் – திருமந்:2738/2,3
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் – திருமந்:2738/3
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே – திருமந்:2738/3,4
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக – திருமந்:2749/1
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே – திருமந்:2771/3
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே – திருமந்:2868/4
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின் – திருமந்:2905/3
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி – திருமந்:3000/2
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி – திருமந்:3011/1
தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன் – திருமந்:3023/1
மேல்


ஏழுள் (1)

வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள்
பேறு ஆன வேதாகமமே பிறத்தலான் – திருமந்:2755/2,3
மேல்


ஏழேழ் (2)

எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும் – திருமந்:1523/2
என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும் – திருமந்:1876/1
மேல்


ஏழை (2)

விழ கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே – திருமந்:254/4
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர் – திருமந்:2708/2
மேல்


ஏழைகள் (4)

என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது – திருமந்:170/2,3
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே – திருமந்:1547/4
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள்
துன்னி மனமே தொழு-மின் துணை_இலி – திருமந்:1555/2,3
இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து – திருமந்:2149/1,2
மேல்


ஏழைகாள் (1)

இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில் – திருமந்:163/2,3
மேல்


ஏழையர் (1)

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என – திருமந்:986/2,3
மேல்


ஏழையும் (6)

மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை – திருமந்:32/2,3
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம் – திருமந்:87/2,3
மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும்
உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின் – திருமந்:1037/1,2
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி – திருமந்:1170/1
ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று – திருமந்:2352/1
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் – திருமந்:3032/2,3
மேல்


ஏற்க (1)

இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன – திருமந்:282/2
மேல்


ஏற்ப (1)

பாங்குடன் ஏற்ப பராசத்தி போற்றே – திருமந்:1244/4
மேல்


ஏற்பட (1)

ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே – திருமந்:2881/4
மேல்


ஏற்ற (1)

சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால் – திருமந்:2717/2,3
மேல்


ஏற்றம் (3)

இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே – திருமந்:614/4
கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும் – திருமந்:845/2
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள – திருமந்:2873/1
மேல்


ஏற்றல் (1)

ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் – திருமந்:2422/3
மேல்


ஏற்றவள் (1)

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் – திருமந்:486/1
மேல்


ஏற்றான் (4)

பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில் – திருமந்:1887/1
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய – திருமந்:1887/2
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி – திருமந்:1887/3
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே – திருமந்:1887/4
மேல்


ஏற்றி (14)

உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி
தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே – திருமந்:212/3,4
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர் – திருமந்:246/1,2
இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன் – திருமந்:467/1
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றி
தொக்க அறிந்து துளங்காது இருந்திடல் – திருமந்:561/2,3
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் – திருமந்:571/1
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி – திருமந்:602/1,2
ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இரு கண் சிகாரமாய் – திருமந்:921/2,3
விளக்கினை ஏற்றி வெளியை அறி-மின் – திருமந்:1818/1
வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி
உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று – திருமந்:1949/1,2
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி
சந்திரன் சார்புற தண் அமுது ஆமே – திருமந்:1958/3,4
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் – திருமந்:2422/3
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக – திருமந்:2521/2
களம் கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே – திருமந்:2634/3,4
விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி – திருமந்:2816/1,2
மேல்


ஏற்றிய (2)

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணை – திருமந்:443/1
ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி – திருமந்:1962/2
மேல்


ஏற்றியே (1)

அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே
பொன் செய் விளக்கும் புகை தீபம் திசை-தொறும் – திருமந்:1005/1,2
மேல்


ஏற்றின் (1)

ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் – திருமந்:2937/2
மேல்


ஏற்று (1)

ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர் – திருமந்:537/2
மேல்


ஏற்றுகின்றேன் (1)

ஏற்றுகின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே – திருமந்:884/4
மேல்


ஏற (5)

நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் – திருமந்:295/1
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும் – திருமந்:458/1
மத்தில் ஏற வழி அதுவாமே – திருமந்:1230/4
தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி – திருமந்:1747/3
வானகம் ஏற வழி எளிது ஆமே – திருமந்:2316/4
மேல்


ஏறட்டு (1)

தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு – திருமந்:744/3
மேல்


ஏறலுற்றேன் (2)

கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண் – திருமந்:2522/3
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே – திருமந்:2868/4
மேல்


ஏறற்கு (1)

ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை – திருமந்:2868/3
மேல்


ஏறாவாறு (1)

விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி – திருமந்:2409/1
மேல்


ஏறி (31)

காட்டு சிவிகை ஒன்று ஏறி கடைமுறை – திருமந்:153/2
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி
பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி – திருமந்:155/2,3
பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி
கருத்து அறியாதவர் கால் அற்றவாறே – திருமந்:202/3,4
நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய் – திருமந்:226/3
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் – திருமந்:455/2,3
ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு – திருமந்:559/1
அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார் – திருமந்:625/3
கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே – திருமந்:626/4
ஏறி இழியும் இடைபிங்கலை இடை – திருமந்:793/2
எய்தும் கலை போல ஏறி இறங்குமாம் – திருமந்:851/3
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும் – திருமந்:1140/2
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை-பாலே – திருமந்:1192/3,4
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என – திருமந்:1206/1
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே – திருமந்:1538/4
வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் – திருமந்:1623/3
கூம்பு ஏறி கோயிலில் பூக்கின்றவாறே – திருமந்:1623/4
காய தேர் ஏறி மன பாகன் கை கூட்ட – திருமந்:1651/1
மாய தேர் ஏறி மங்கும் அவை உணர் – திருமந்:1651/2
நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் – திருமந்:1651/3
ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே – திருமந்:1651/4
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே – திருமந்:1885/4
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே – திருமந்:2024/3
தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே – திருமந்:2086/3,4
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடியுடை மாநகர் தான் வரும்-போது – திருமந்:2165/1,2
தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி
தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே – திருமந்:2346/3,4
குறவம் சிலம்ப குளிர் வரை ஏறி
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் – திருமந்:2629/2,3
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்தி-தன் நாமமே – திருமந்:2699/3,4
அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு – திருமந்:2719/2
தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு – திருமந்:2915/1
கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில் – திருமந்:2921/1
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி
போயின நாடு அறியாதே புலம்புவர் – திருமந்:2982/1,2
மேல்


ஏறிட்டு (5)

ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றி – திருமந்:561/1,2
நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும் – திருமந்:806/1,2
ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு
கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட – திருமந்:808/2,3
ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு
தேன் நீர் பருகி சிவாய நம என்று – திருமந்:809/1,2
ஏறிட்டு அதன் மேல் விந்துவும் நாதமும் – திருமந்:930/2
மேல்


ஏறிய (3)

ஏறிய வானில் எண்பது சென்றிடும் – திருமந்:774/1
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால் – திருமந்:2082/3
ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே – திருமந்:2680/4
மேல்


ஏறியவாறே (1)

ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து – திருமந்:2478/1
மேல்


ஏறியே (2)

விடை ஒன்றில் ஏறியே வீற்றிருந்தானே – திருமந்:715/4
எய்து மதி கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகை பக்கத்துள் – திருமந்:851/1,2
மேல்


ஏறினான் (1)

மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் – திருமந்:149/2,3
மேல்


ஏறு (6)

மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி – திருமந்:672/1
ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு – திருமந்:1739/3
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:1862/1
ஏறு நெறியே மலத்தை எரித்தலால் – திருமந்:2066/1
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று – திருமந்:2111/1
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் – திருமந்:2884/1
மேல்


ஏறுதல் (1)

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் – திருமந்:568/1
மேல்


ஏறும் (9)

பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே – திருமந்:231/4
அடல் விடை ஏறும் அமரர்கள் நாதன் – திருமந்:299/3
உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு – திருமந்:564/2
போது உகந்து ஏறும் புரிசடையான் அடி – திருமந்:632/1
உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே – திருமந்:1562/3,4
ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும் – திருமந்:1940/3
எதிர் அற நாளும் எருது வந்து ஏறும்
பதி எனும் நந்தி பதம் அது கூட – திருமந்:2497/1,2
ஏறும் சுழுனை இவை சிவபூமியே – திருமந்:2747/4
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின் – திருமந்:2905/3
மேல்


ஏன் (1)

இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை – திருமந்:488/3
மேல்


ஏன்ற (2)

ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் – திருமந்:728/2
ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன் – திருமந்:2437/2
மேல்


ஏன்றனள் (1)

ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே – திருமந்:1187/4
மேல்


ஏன்றனன் (1)

ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே – திருமந்:2437/4
மேல்


ஏன்று (3)

ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி – திருமந்:323/2
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில் – திருமந்:1187/2
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி – திருமந்:2445/3
மேல்


ஏனம் (1)

ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும் – திருமந்:1472/2
மேல்


ஏனமும் (1)

ஏனமும் நந்தி பதம் முத்தி பெற்றதே – திருமந்:1675/4
மேல்


ஏனை (10)

ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே – திருமந்:541/4
ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும் – திருமந்:988/3
ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை – திருமந்:1072/3
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் – திருமந்:1426/3
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே – திருமந்:1674/4
ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட – திருமந்:1895/3
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் – திருமந்:2134/3
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே – திருமந்:2222/4
ஏனை அருள்செய் தெரி நனாவத்தையில் – திருமந்:2310/2
ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த – திருமந்:2851/3
மேல்


ஏனைய (3)

ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி – திருமந்:1592/3
ஏனைய அ சிவம் ஆன இயற்கையும் – திருமந்:1675/2
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது – திருமந்:2381/3
மேல்


ஏனையோர் (1)

அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர்
பித்தன் இவன் என்று பேசுகின்றாரே – திருமந்:2984/3,4
மேல்


ஏனோர் (3)

ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை – திருமந்:490/1
ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை – திருமந்:2012/1
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை – திருமந்:3024/1

மேல்