ரா – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரா 1
ராக்கத 1
ராக்கதர் 2
ராக்கதர்தங்களில் 1
ராக்கதன் 1
ராக 2
ராகத்தின் 1
ராகம் 2
ராகமும் 1
ராகவர் 1
ராகவன் 3
ராச்சிய 1
ராச்சியம் 1
ராச 3
ராஜ 9
ராஜகுமரர் 1
ராஜத 3
ராஜதத்தினை 1
ராஜபுரத்து 1
ராஜர் 2
ராஜராஜன் 1
ராஜராஜனே 1
ராஜன் 13
ராஜன்தனக்கு 1
ராஜனுக்கும் 2
ராஜனும் 1
ராஜனை 1
ராக்ஷத 2
ராக்ஷதர் 2
ராசத 1
ராசதம் 1
ராசர் 1
ராசன் 5
ராசனுமே 1
ராசா 1
ராசி 7
ராசியர் 1
ராசீகம் 1
ராசீப 1
ராசீவ 1
ராசே 1
ராசை 1
ராட்சதர் 1
ராதையை 1
ராப்பகல் 1
ராம 2
ராமர் 1
ராமருக்கு 1
ராமன் 3
ராமெசுர 1
ராமெசுரம் 1
ராமேசுரத்தில் 1
ராமேசுரம் 1
ராயன் 1
ராவண 3
ராவணற்கு 1
ராவணன் 13
ராவணனார் 3
ராவணனும் 2
ராவணனை 4
ராவணார் 1
ராவணேசை 1
ராவி 1
ராவுத்த 1

ரா (1)

தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே – திருப்:995/6
மேல்


ராக்கத (1)

அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ – திருப்:929/7
மேல்


ராக்கதர் (2)

திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா – திருப்:554/7
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே – திருப்:995/8
மேல்


ராக்கதர்தங்களில் (1)

இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி – திருப்:1194/10
மேல்


ராக்கதன் (1)

சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து – திருப்:959/11
மேல்


ராக (2)

அன்புடை மெய் கோல ராக விரகினில் உறவாடி – திருப்:807/6
விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால – திருப்:1043/5
மேல்


ராகத்தின் (1)

சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே – திருப்:641/2
மேல்


ராகம் (2)

வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே – திருப்:647/3
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர – திருப்:1258/2
மேல்


ராகமும் (1)

அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி – திருப்:852/5
மேல்


ராகவர் (1)

அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே – திருப்:750/10
மேல்


ராகவன் (3)

இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே – திருப்:128/6
நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே – திருப்:876/12
ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல் – திருப்:1218/6
மேல்


ராச்சிய (1)

இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல் – திருப்:562/11
மேல்


ராச்சியம் (1)

தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில் – திருப்:1196/10
மேல்


ராச (3)

ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே – திருப்:608/16
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச – திருப்:993/14
மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப – திருப்:1052/1
மேல்


ராஜ (9)

உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே – திருப்:134/6
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ – திருப்:170/6
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா – திருப்:170/12
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண் – திருப்:450/7
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா – திருப்:686/6
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:885/16
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு – திருப்:916/1
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ – திருப்:935/2
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள – திருப்:1153/5
மேல்


ராஜகுமரர் (1)

வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர் – திருப்:1196/13
மேல்


ராஜத (3)

ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே – திருப்:234/16
நிராச சிவ ராஜத வராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா – திருப்:571/2
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/8
மேல்


ராஜதத்தினை (1)

ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி – திருப்:1129/6
மேல்


ராஜபுரத்து (1)

கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே – திருப்:935/8
மேல்


ராஜர் (2)

அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே – திருப்:210/8
தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர் – திருப்:260/14
மேல்


ராஜராஜன் (1)

அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
மேல்


ராஜராஜனே (1)

அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே – திருப்:641/7,8
மேல்


ராஜன் (13)

பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை – திருப்:76/7
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய் – திருப்:210/2
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் – திருப்:387/2
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே – திருப்:789/1
ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன் – திருப்:952/2
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே – திருப்:1053/8
மரு மலர் புனுகு தரித்து பூ அணை மத ராஜன் – திருப்:1135/6
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல் – திருப்:1144/3
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன் – திருப்:1308/2
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் – திருப்:1326/10
மேல்


ராஜன்தனக்கு (1)

குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் – திருப்:289/5
மேல்


ராஜனுக்கும் (2)

மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:380/2
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே – திருப்:430/3
மேல்


ராஜனும் (1)

மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும்
மநு நெறி உடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும் – திருப்:470/9,10
மேல்


ராஜனை (1)

மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம் – திருப்:1177/12
மேல்


ராக்ஷத (2)

குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா – திருப்:1060/7
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா – திருப்:1248/7
மேல்


ராக்ஷதர் (2)

திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய – திருப்:562/13
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள – திருப்:1000/7
மேல்


ராசத (1)

தோடுற்று காதளவு ஓடிய வேலுக்கு தான் நிகராய் எழு சூதத்தில் காமனி ராசத விழியாலே – திருப்:877/1
மேல்


ராசதம் (1)

ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே – திருப்:202/6
மேல்


ராசர் (1)

அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே – திருப்:619/5
மேல்


ராசன் (5)

கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே – திருப்:362/14
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன்
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா – திருப்:909/5,6
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன் – திருப்:915/2
பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி – திருப்:1046/5
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன்
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/1,2
மேல்


ராசனுமே (1)

வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர் – திருப்:683/14
மேல்


ராசா (1)

பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா – திருப்:149/6
மேல்


ராசி (7)

தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட – திருப்:398/14
கை கபோல கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரிய பானு – திருப்:773/3
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே – திருப்:824/7
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற – திருப்:946/5
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி – திருப்:1211/5
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி – திருப்:1220/6
ஏழைதனக்கும் அனுபூதி ராசி தழைக்க அருள்வாயே – திருப்:1294/2
மேல்


ராசியர் (1)

பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா – திருப்:496/6
மேல்


ராசீகம் (1)

உருகி ஆரியாசார பரம யோகி ஆம் ஆறும் உன் உபய பாத ராசீகம் அருள்வாயே – திருப்:1044/4
மேல்


ராசீப (1)

மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப – திருப்:1052/1
மேல்


ராசீவ (1)

ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா – திருப்:946/6
மேல்


ராசே (1)

பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே – திருப்:949/3,4
மேல்


ராசை (1)

அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
மேல்


ராட்சதர் (1)

படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால் – திருப்:1204/7
மேல்


ராதையை (1)

குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா – திருப்:884/6
மேல்


ராப்பகல் (1)

சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி மாதா ராப்பகல் காத்து அமைந்த அனை – திருப்:783/9
மேல்


ராம (2)

ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே – திருப்:707/12
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே – திருப்:757/5
மேல்


ராமர் (1)

சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் – திருப்:761/14
மேல்


ராமருக்கு (1)

வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண் – திருப்:450/3
மேல்


ராமன் (3)

மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன்
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா – திருப்:381/5,6
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே – திருப்:655/2
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன்
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும் – திருப்:1280/5,6
மேல்


ராமெசுர (1)

ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே – திருப்:983/16
மேல்


ராமெசுரம் (1)

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல் – திருப்:1313/13
மேல்


ராமேசுரத்தில் (1)

நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே – திருப்:984/8
மேல்


ராமேசுரம் (1)

கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர் – திருப்:1306/3
மேல்


ராயன் (1)

குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் – திருப்:40/12
மேல்


ராவண (3)

நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா – திருப்:570/6
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம் – திருப்:750/9
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக – திருப்:983/14
மேல்


ராவணற்கு (1)

திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த – திருப்:1132/9
மேல்


ராவணன் (13)

தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் – திருப்:200/9
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன்
அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான – திருப்:364/13,14
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து – திருப்:485/13
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு – திருப்:633/5
மதி கொடு அழிந்திட்டு இடும்பை ராவணன் மதியாமே – திருப்:788/10
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய – திருப்:806/11
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/14
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட – திருப்:838/9
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் – திருப்:874/9
தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக – திருப்:893/5
மறித்த வாரிதி கோகோ எனும்படி வெறுத்த ராவணன் வாழ்நாளை அம்பினில் – திருப்:1151/13
பொடிபட்டிட ராவணன் மா முடி சிதறி சிலை வாளிகளே கொடு – திருப்:1197/5
மேல்


ராவணனார் (3)

வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய – திருப்:481/13
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே – திருப்:490/12
தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக – திருப்:529/14
மேல்


ராவணனும் (2)

வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி – திருப்:95/1
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன் – திருப்:707/10
மேல்


ராவணனை (4)

அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை – திருப்:166/9
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன் – திருப்:248/11
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே – திருப்:597/7
சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே – திருப்:703/5
மேல்


ராவணார் (1)

சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை – திருப்:435/5
மேல்


ராவணேசை (1)

திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா – திருப்:1271/6
மேல்


ராவி (1)

உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே – திருப்:248/12
மேல்


ராவுத்த (1)

கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே – திருப்:773/7

மேல்