ய – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

ய (1)

நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான – திருப்:1165/2
மேல்


யகர (2)

கதிர் அடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் இரண்டு கால் மிசை – திருப்:511/5
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல – திருப்:691/13
மேல்


யந்திர (2)

கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் – திருப்:511/8
மூலாதாரமோடு ஏற்றி அங்கியை ஆறு ஆதாரமோடு ஓட்டி யந்திர
மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே – திருப்:783/1,2
மேல்


யந்திரித (1)

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ – திருப்:622/15
மேல்


யநமசிவ (1)

செயசெய அருணாத்திரி யநமசிவ செயசெய அருணாத்திரி வயநமசி – திருப்:425/3
மேல்


யம (12)

மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் – திருப்:68/7
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் – திருப்:75/4
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே – திருப்:78/1
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு – திருப்:103/3
அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து – திருப்:126/5
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே – திருப்:238/5
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய் – திருப்:558/8
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர் – திருப்:564/3
கால் ஆற்றும் வை வேலின் முனை கடை யம தூதர் – திருப்:578/4
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே – திருப்:928/8
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம் – திருப்:1222/3
மேல்


யமதூதர் (1)

எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில் – திருப்:1144/1
மேல்


யமபடர் (1)

காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடுபோ முன் – திருப்:1215/3
மேல்


யமபுரம் (2)

இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே – திருப்:145/12
அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய அடர்ந்து போர்புரி – திருப்:1011/11
மேல்


யமபுரமும் (1)

மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து – திருப்:1140/7
மேல்


யமன் (6)

பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர் – திருப்:276/11
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை – திருப்:374/6
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு – திருப்:374/7
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும் – திருப்:572/6
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ – திருப்:680/4
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா – திருப்:1275/7
மேல்


யமனார் (1)

எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர் – திருப்:566/13
மேல்


யமனும் (1)

யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால் – திருப்:903/4
மேல்


யமனை (1)

முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி – திருப்:1023/7
மேல்


யமுனை (2)

விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும் – திருப்:1045/5
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி – திருப்:1092/6
மேல்


யவனாளும் (1)

ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும்
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும் – திருப்:1200/5,6

மேல்