யு – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யுக 6
யுகங்களாம் 1
யுகளம் 1
யுத்த 1
யுத்தம் 2

யுக (6)

வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட – திருப்:370/5
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி – திருப்:536/3
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல் – திருப்:939/6
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும் – திருப்:951/1
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே – திருப்:1099/5
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ – திருப்:1137/11
மேல்


யுகங்களாம் (1)

அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள – திருப்:1010/3
மேல்


யுகளம் (1)

குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ – திருப்:211/4
மேல்


யுத்த (1)

பீறலுற்ற அ யுத்த களத்திடை மடியாத – திருப்:357/10
மேல்


யுத்தம் (2)

சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம்
சாதகம் செய் திரு கை விதிர்க்கும் தனி வேலா – திருப்:152/11,12
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை – திருப்:541/11

மேல்