மூ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 11
மூக்கறுத்து 1
மூக்கு 2
மூக்குக்கு 1
மூக்கை 1
மூகம் 1
மூகம்தனில் 1
மூகர் 4
மூகன் 2
மூங்கர் 1
மூங்கில் 2
மூச்சு 2
மூச 1
மூசி 1
மூஷிகம் 1
மூஷிகாரூட 1
மூசிய 1
மூசு 2
மூசும் 2
மூஞ்சால் 1
மூட்டர் 1
மூட்டவும் 1
மூட்டி 6
மூட்டிகள் 1
மூட்டிடும் 1
மூட்டியே 2
மூட்டு 2
மூட 3
மூடம் 1
மூடர் 12
மூடர்தம் 1
மூடரை 1
மூடவே 1
மூடன் 6
மூடனாய் 1
மூடனை 10
மூடா 2
மூடார் 1
மூடி 18
மூடிக 1
மூடிகள் 1
மூடிய 7
மூடியும் 1
மூடியே 1
மூடு 5
மூடுக 1
மூடுகின்ற 1
மூடும் 2
மூண்ட 3
மூண்டிட 1
மூண்டு 2
மூணிடை 1
மூணு 5
மூணும் 3
மூத்த 5
மூத்தவர் 1
மூத்து 1
மூத்தோன் 1
மூத்ரம் 1
மூதறிவு 1
மூதாதார 1
மூதுடை 1
மூதுர 1
மூதுரை 2
மூதூர் 5
மூதூரில் 1
மூதேவி 2
மூதேவிகள் 4
மூதேவிகளொடு 1
மூதேவியை 1
மூப்பும் 1
மூப்புற்று 1
மூர்க்க 2
மூர்க்கத்தனங்கள் 1
மூர்க்கர் 2
மூர்க்கர்கள் 1
மூர்க்கரை 1
மூர்க்கரையே 1
மூர்த்தம் 1
மூர்த்தனும் 1
மூர்த்தி 1
மூர்த்திகள் 2
மூரல் 3
மூரலின் 1
மூரி 6
மூல 17
மூலக 1
மூலத்தோடே 1
மூலத்தோனை 1
மூலம் 11
மூலமுடன் 1
மூலமும் 1
மூலமே 4
மூலவியாதியொடு 1
மூலா 3
மூலாதாரமோடு 1
மூலாதாரனு 1
மூலி 1
மூலிகள் 1
மூவர் 9
மூவர்க்கு 1
மூவர்க்கும் 2
மூவருக்கு 1
மூவரும் 1
மூவரை 1
மூவா 8
மூவாதி 1
மூவாது 1
மூவாயிரம் 1
மூவாறினில் 1
மூழ்க 5
மூழ்கவே 1
மூழ்கா 5
மூழ்காதே 1
மூழ்கி 51
மூழ்கிட 2
மூழ்கிய 5
மூழ்கியெ 1
மூழ்கியே 2
மூழ்கினும் 1
மூழ்கு 2
மூழ்கும் 4
மூழ்குவேன் 1
மூழ்குற்றிடு 1
மூழ்குற்று 1
மூள் 2
மூள 7
மூளவே 1
மூளனை 1
மூளா 1
மூளி 2
மூளிகள் 1
மூளியர்பால் 1
மூளில் 1
மூளும் 3
மூளை 9
மூளைகள் 3
மூளையொடு 1

மூ (11)

முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண – திருப்:6/2
மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே – திருப்:582/10
மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய – திருப்:582/11
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி – திருப்:607/1
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ – திருப்:715/4
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா – திருப்:915/5
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/6
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ – திருப்:935/4
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான் – திருப்:1133/15
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை – திருப்:1137/10
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி – திருப்:1141/9
மேல்


மூக்கறுத்து (1)

நிருதரை மூக்கறுத்து எழு பார நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே – திருப்:1288/3
மேல்


மூக்கு (2)

மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன் – திருப்:608/12
மேல்


மூக்குக்கு (1)

மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
மேல்


மூக்கை (1)

அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து – திருப்:732/3
மேல்


மூகம் (1)

மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி – திருப்:746/1
மேல்


மூகம்தனில் (1)

வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும் – திருப்:1150/5
மேல்


மூகர் (4)

பீலி வெந்து உயர் ஆலி வெந்து அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை – திருப்:189/9
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ – திருப்:279/4
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே – திருப்:306/5,6
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே – திருப்:603/6
மேல்


மூகன் (2)

மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத – திருப்:189/4
தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன்
தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய் – திருப்:289/3,4
மேல்


மூங்கர் (1)

கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத – திருப்:774/7
மேல்


மூங்கில் (2)

மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும் – திருப்:832/5
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி – திருப்:933/6
மேல்


மூச்சு (2)

அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் – திருப்:811/4
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான் – திருப்:1055/4
மேல்


மூச (1)

சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார் – திருப்:840/1,2
மேல்


மூசி (1)

முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல் – திருப்:1193/3
மேல்


மூஷிகம் (1)

குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன் – திருப்:40/12
மேல்


மூஷிகாரூட (1)

கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை – திருப்:1047/7
மேல்


மூசிய (1)

புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை உர கால் அணி கோல மென் மாலைய – திருப்:809/11
மேல்


மூசு (2)

மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
மூசு கானகத்து மீது வாழ் முத்த மூரல் வேடிச்சி தன பார – திருப்:1212/5
மேல்


மூசும் (2)

திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும் – திருப்:289/7
வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும் – திருப்:371/2
மேல்


மூஞ்சால் (1)

மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை – திருப்:89/1
மேல்


மூட்டர் (1)

இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா – திருப்:1199/7
மேல்


மூட்டவும் (1)

அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும்
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள் – திருப்:778/1,2
மேல்


மூட்டி (6)

ஆட்டி வடவரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின் – திருப்:617/9
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு – திருப்:756/1
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர – திருப்:785/13
உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி – திருப்:1090/2
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக – திருப்:1199/2
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே – திருப்:1279/8
மேல்


மூட்டிகள் (1)

மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல் பொர நேரே போர் முலை – திருப்:920/5
மேல்


மூட்டிடும் (1)

பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட – திருப்:748/3
மேல்


மூட்டியே (2)

விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம – திருப்:890/3
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு – திருப்:890/5
மேல்


மூட்டு (2)

தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி – திருப்:349/5
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி – திருப்:890/13
மேல்


மூட (3)

இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான – திருப்:205/1,2
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ – திருப்:216/2
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட – திருப்:1158/4
மேல்


மூடம் (1)

மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே – திருப்:583/2
மேல்


மூடர் (12)

புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ – திருப்:60/3,4
முயற்று பொட்டிகள் மோகாவலம் உறுகின்ற மூடர் – திருப்:438/4
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர் – திருப்:694/1
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி – திருப்:749/6
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற – திருப்:765/5
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர் – திருப்:796/2
பாடல் தோற்ற இரு நாலாயிரம் சமண் மூடர் – திருப்:920/10
மேல்


மூடர்தம் (1)

வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் – திருப்:306/1
மேல்


மூடரை (1)

ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
மேல்


மூடவே (1)

சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி – திருப்:520/13
மேல்


மூடன் (6)

ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி – திருப்:169/7
பஞ்சபாதகன் பாவி முழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி – திருப்:174/1
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய் – திருப்:232/6
புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன்
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன் – திருப்:435/1,2
விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன் – திருப்:443/2
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை – திருப்:569/7
மேல்


மூடனாய் (1)

தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் அதி மோக – திருப்:651/1
மேல்


மூடனை (10)

ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா – திருப்:36/1
வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம் – திருப்:171/14
தூசின் பொன் சரமோடு குலாவு உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள்தாராய் – திருப்:196/7,8
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே – திருப்:307/4
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி – திருப்:385/7
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய் – திருப்:479/7,8
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை
காரீர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே – திருப்:486/7,8
உளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை அருளாகி – திருப்:849/6
தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை வெறியனை நிறை பொறை வேண்டிடா மத – திருப்:874/1
சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை – திருப்:1314/7
மேல்


மூடா (2)

முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ – திருப்:1061/2
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத – திருப்:1159/3
மேல்


மூடார் (1)

வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன் – திருப்:783/13
மேல்


மூடி (18)

மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார – திருப்:94/2
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட – திருப்:155/5
கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே – திருப்:160/6
பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி – திருப்:232/4
சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி – திருப்:448/5
ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு – திருப்:498/5
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் – திருப்:503/1
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர – திருப்:741/1
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல் – திருப்:756/6
மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ – திருப்:779/2
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி – திருப்:982/10
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள – திருப்:1069/5
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் – திருப்:1109/3
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான – திருப்:1110/1
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே – திருப்:1126/2
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல் – திருப்:1203/1,2
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி – திருப்:1273/2
மேல்


மூடிக (1)

முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர் – திருப்:720/13
மேல்


மூடிகள் (1)

தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொளு மாதர் – திருப்:649/1,2
மேல்


மூடிய (7)

மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே – திருப்:36/3
தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி – திருப்:69/1
கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும் – திருப்:470/5,6
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை – திருப்:625/3
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம் – திருப்:697/12
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு – திருப்:815/1
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர் – திருப்:975/1
மேல்


மூடியும் (1)

உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும் – திருப்:385/3
மேல்


மூடியே (1)

வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில் – திருப்:1271/3
மேல்


மூடு (5)

மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த மழுங்கிகள் – திருப்:88/1
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே – திருப்:694/3
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம் உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே – திருப்:1053/7
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
மேல்


மூடுக (1)

திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம் – திருப்:427/16
மேல்


மூடுகின்ற (1)

அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே – திருப்:711/4
மேல்


மூடும் (2)

அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும் – திருப்:728/2
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும்
சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை – திருப்:912/1,2
மேல்


மூண்ட (3)

முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட – திருப்:365/13
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ – திருப்:696/13
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா – திருப்:832/6
மேல்


மூண்டிட (1)

விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே – திருப்:338/8
மேல்


மூண்டு (2)

செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன – திருப்:410/5
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத – திருப்:528/1
மேல்


மூணிடை (1)

மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண – திருப்:511/2
மேல்


மூணு (5)

அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர் – திருப்:740/1
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா – திருப்:780/6
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில் – திருப்:785/1
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி – திருப்:1313/3
மேல்


மூணும் (3)

மூணும் பிரகாசம்அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை – திருப்:188/3
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும்
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா – திருப்:1203/5,6
மேல்


மூத்த (5)

மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை – திருப்:272/11
இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத – திருப்:574/2
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி – திருப்:747/11
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர் – திருப்:890/9
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி – திருப்:1250/3
மேல்


மூத்தவர் (1)

மோக வினையில் நெடுநாளின் மூத்தவர் இளையோர்கள் – திருப்:1196/4
மேல்


மூத்து (1)

மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலா பொருள் தந்திடாதோ – திருப்:1057/4
மேல்


மூத்தோன் (1)

ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி – திருப்:1326/7
மேல்


மூத்ரம் (1)

மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம் – திருப்:510/1
மேல்


மூதறிவு (1)

மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத – திருப்:921/15
மேல்


மூதாதார (1)

மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம் – திருப்:783/3
மேல்


மூதுடை (1)

மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி – திருப்:1186/2
மேல்


மூதுர (1)

மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண – திருப்:762/3
மேல்


மூதுரை (2)

இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ – திருப்:849/7
மேல்


மூதூர் (5)

திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர்
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே – திருப்:665/7,8
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர்
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே – திருப்:728/7,8
மக தாபத சீலமுமே புனை வள மூதூர் – திருப்:809/14
செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சை நல் – திருப்:1306/7
காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை – திருப்:1313/14
மேல்


மூதூரில் (1)

கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே – திருப்:637/7
மேல்


மூதேவி (2)

கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய – திருப்:470/5
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு – திருப்:577/5
மேல்


மூதேவிகள் (4)

புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்
புலையர் மாட்டும் அறாதே கூடிகள் நெஞ்ச மாயம் – திருப்:559/3,4
சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள்
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ – திருப்:666/7,8
காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள் போக பாத்திரம் மா மூதேவிகள்
காசு கேட்டிடும் மாயா ரூபிகள் அதி மோக – திருப்:920/3,4
அறவு நெஞ்சு பொலா மா பாவிகள் வறுமை தந்திடு பாழ் மூதேவிகள்
அணி நெருங்கிகள் ஆசா பாஷண மட மாதர் – திருப்:1141/5,6
மேல்


மூதேவிகளொடு (1)

திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அபகடத்து சட்டைகள் மூதேவிகளொடு
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன் – திருப்:438/7,8
மேல்


மூதேவியை (1)

விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை
விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ – திருப்:29/7,8
மேல்


மூப்பும் (1)

நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும் – திருப்:1194/6
மேல்


மூப்புற்று (1)

மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி – திருப்:93/1
மேல்


மூர்க்க (2)

மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும் – திருப்:93/2
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி – திருப்:272/10
மேல்


மூர்க்கத்தனங்கள் (1)

மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே – திருப்:732/6
மேல்


மூர்க்கர் (2)

முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர் – திருப்:349/1
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ – திருப்:535/4
மேல்


மூர்க்கர்கள் (1)

சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி – திருப்:747/9
மேல்


மூர்க்கரை (1)

செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு – திருப்:548/11
மேல்


மூர்க்கரையே (1)

பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ – திருப்:748/4
மேல்


மூர்த்தம் (1)

இந்த்ரகோட்டி மயக்கத்தால் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து தாமதம் – திருப்:547/11
மேல்


மூர்த்தனும் (1)

அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும் – திருப்:509/14
மேல்


மூர்த்தி (1)

மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத – திருப்:921/15
மேல்


மூர்த்திகள் (2)

முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1057/8
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே – திருப்:1058/8
மேல்


மூரல் (3)

திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா – திருப்:124/5
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும் – திருப்:733/3
மூசு கானகத்து மீது வாழ் முத்த மூரல் வேடிச்சி தன பார – திருப்:1212/5
மேல்


மூரலின் (1)

நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது – திருப்:226/3
மேல்


மூரி (6)

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ – திருப்:503/11
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட – திருப்:504/10
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா – திருப்:915/6
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ – திருப்:983/15
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே – திருப்:1212/6
மூரி மால் யானை மணந்த மார்பா மூவர் தேவாதிகள் தம்பிரானே – திருப்:1303/4
மேல்


மூல (17)

ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே – திருப்:70/7
மூல பர யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி – திருப்:94/4
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை – திருப்:189/1
மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம் – திருப்:196/2
சால உடைய தவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவு இன்றி நின்றது – திருப்:359/5
நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே – திருப்:506/1
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா – திருப்:579/6
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச – திருப்:733/5
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார – திருப்:762/1
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது – திருப்:813/7
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல – திருப்:829/14
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல – திருப்:860/4
சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ – திருப்:983/8
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள – திருப்:1045/1
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும் – திருப்:1127/6
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் – திருப்:1313/7
மேல்


மூலக (1)

எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி – திருப்:496/2
மேல்


மூலத்தோடே (1)

ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே – திருப்:1034/6
மேல்


மூலத்தோனை (1)

நாதத்து ஓசை காண் துணையே சுடர் மூலத்தோனை தூண்டிடவே உயிர் – திருப்:498/13
மேல்


மூலம் (11)

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம் – திருப்:2/6
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த – திருப்:82/13
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை – திருப்:188/1
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி – திருப்:188/4
அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் மந்தர மா முலை சற்று அசைக்கவும் – திருப்:353/3
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன் – திருப்:665/6
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே – திருப்:704/6
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே – திருப்:790/4
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் – திருப்:894/1
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
மேல்


மூலமுடன் (1)

வாதமொடு பித்தம் மூலமுடன் மற்றும் ஆய பிணி சற்றும் அணுகாதே – திருப்:1027/3
மேல்


மூலமும் (1)

கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி – திருப்:452/3
மேல்


மூலமே (4)

தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன் – திருப்:25/14
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என – திருப்:175/9
காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி – திருப்:484/9
வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி – திருப்:935/5
மேல்


மூலவியாதியொடு (1)

இரைப்பு கேவல மூலவியாதியொடு அண்டவாதம் – திருப்:485/4
மேல்


மூலா (3)

பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய் – திருப்:584/4
மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே – திருப்:783/2
மூலா நிலம் அதின் மேலே மனதுறு மோகாடவி சுடர்தனை நாடி – திருப்:1275/1
மேல்


மூலாதாரமோடு (1)

மூலாதாரமோடு ஏற்றி அங்கியை ஆறு ஆதாரமோடு ஓட்டி யந்திர – திருப்:783/1
மேல்


மூலாதாரனு (1)

ஞாலம் உண்ட பிராணாதாரனும் யோக மந்திர மூலாதாரனு
நாடி நின்ற ப்ரபாவாகாரனு நடுவாக – திருப்:998/3,4
மேல்


மூலி (1)

அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை – திருப்:355/2
மேல்


மூலிகள் (1)

மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள்
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக – திருப்:966/1,2
மேல்


மூவர் (9)

கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர் – திருப்:176/4
தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே – திருப்:411/8
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர்
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் – திருப்:714/1,2
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே – திருப்:780/8
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே – திருப்:921/16
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர் – திருப்:1129/10
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர் – திருப்:1141/10
மூரி மால் யானை மணந்த மார்பா மூவர் தேவாதிகள் தம்பிரானே – திருப்:1303/4
மேல்


மூவர்க்கு (1)

மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே – திருப்:904/8
மேல்


மூவர்க்கும் (2)

பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா – திருப்:741/6
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும் – திருப்:1166/9
மேல்


மூவருக்கு (1)

அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி – திருப்:1132/13
மேல்


மூவரும் (1)

நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை – திருப்:1326/4
மேல்


மூவரை (1)

தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர் – திருப்:783/11
மேல்


மூவா (8)

வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே – திருப்:135/14
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா – திருப்:372/2
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே – திருப்:554/6
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே – திருப்:705/6
சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள்கூரும் – திருப்:1039/1
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம் – திருப்:1061/1
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன் – திருப்:1077/1,2
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா – திருப்:1193/4
மேல்


மூவாதி (1)

தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே – திருப்:411/8
மேல்


மூவாது (1)

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை – திருப்:1326/2
மேல்


மூவாயிரம் (1)

வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம்
மேன்மை வேதியர் மிகவே பூசனைபுரி கோவே – திருப்:484/13,14
மேல்


மூவாறினில் (1)

திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ – திருப்:1060/5
மேல்


மூழ்க (5)

கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க – திருப்:373/10
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும் – திருப்:492/13
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே – திருப்:1051/4
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே – திருப்:1106/7,8
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம் – திருப்:1244/3
மேல்


மூழ்கவே (1)

கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே – திருப்:1048/8
மேல்


மூழ்கா (5)

உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா
உடல் பஞ்ச பாதகமாய் ஆய் நோயால் அழிவேனோ – திருப்:546/5,6
வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ – திருப்:992/4
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன் – திருப்:1041/3
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ – திருப்:1136/4
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை – திருப்:1151/7
மேல்


மூழ்காதே (1)

இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன் – திருப்:135/7
மேல்


மூழ்கி (51)

கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய – திருப்:5/3
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே – திருப்:31/3,4
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா – திருப்:39/5,6
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி
குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு – திருப்:47/1,2
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க – திருப்:108/9
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி – திருப்:115/6
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே – திருப்:277/1
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி – திருப்:301/2
சால மயலாகி கால திரிசூலத்தால் இறுகு பாச துன்ப மூழ்கி
தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ – திருப்:382/3,4
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த – திருப்:403/3
தேமல் பார வெற்பில் மூழ்கி தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய் – திருப்:482/4
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை – திருப்:486/7
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே – திருப்:492/16
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான – திருப்:533/2
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி – திருப்:566/2
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி – திருப்:576/6
உடன் பிரியா கலவியில் மூழ்கி – திருப்:582/6
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/1,2
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ – திருப்:619/3
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே – திருப்:686/2
தரு இயல் உலுத்தர்கள் மாடா மா மதி மிக மூழ்கி – திருப்:697/4
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ – திருப்:701/4
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி – திருப்:744/6
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி – திருப்:746/2
விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி
விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய் – திருப்:765/3,4
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான – திருப்:784/7
மேலை வெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய் – திருப்:786/3,4
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ – திருப்:841/3,4
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே – திருப்:863/3,4
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே – திருப்:870/6
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ – திருப்:893/4
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி – திருப்:917/12
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய் – திருப்:924/3,4
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே – திருப்:932/1
தாவி மூழ்கி மதி கெட்டு அலம் உற்றவனை பாவமான பிறவிக்கடல் உழப்பவனை – திருப்:960/7
தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு சீதள தனங்களினில் மூழ்கி
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ – திருப்:970/3,4
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி – திருப்:1022/4
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் – திருப்:1047/1,2
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி – திருப்:1069/3
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே – திருப்:1069/3,4
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே – திருப்:1082/1
அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி – திருப்:1137/6
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி – திருப்:1153/4
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி – திருப்:1167/6
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும் – திருப்:1218/3
பாவையர் உந்தியில் மூழ்கி நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயில் – திருப்:1262/2
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும் – திருப்:1265/3,4
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ – திருப்:1308/4
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே – திருப்:1322/4
கரு எனும் மாயை உருவினில் மூழ்கி வயதளவாக நிலம் மீதில் – திருப்:1323/1
சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ – திருப்:1323/4
மேல்


மூழ்கிட (2)

அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட – திருப்:340/13
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா – திருப்:480/11,12
மேல்


மூழ்கிய (5)

காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள் – திருப்:481/7
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் – திருப்:503/7
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை – திருப்:1009/7
பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக – திருப்:1181/4
கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர் – திருப்:1331/7
மேல்


மூழ்கியெ (1)

அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ
அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய் – திருப்:541/3,4
மேல்


மூழ்கியே (2)

மினுக்கு மாதர்களிட காமம் மூழ்கியே மயல் ஊறி – திருப்:650/2
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி – திருப்:1054/3
மேல்


மூழ்கினும் (1)

கொண்டுற்று பாயலில் மூழ்கினும் மண்டி செச்சே என வானவர் – திருப்:944/7
மேல்


மூழ்கு (2)

தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே – திருப்:103/3,4
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே – திருப்:1212/6
மேல்


மூழ்கும் (4)

சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும் – திருப்:272/2
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும்
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே – திருப்:551/3,4
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும்
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத – திருப்:758/5,6
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே – திருப்:884/2
மேல்


மூழ்குவேன் (1)

மோக வாரிதிதனிலே நாள்தொறு மூழ்குவேன் உனது அடியார் ஆகிய – திருப்:484/7
மேல்


மூழ்குற்றிடு (1)

தந்திட மாலு ததும்பியும் மூழ்குற்றிடு போது உன் – திருப்:972/6
மேல்


மூழ்குற்று (1)

மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய் – திருப்:975/3
மேல்


மூள் (2)

மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள் – திருப்:188/2
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர – திருப்:783/7
மேல்


மூள (7)

மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே – திருப்:299/2
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள – திருப்:301/6
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும் – திருப்:577/6
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள – திருப்:663/6
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள
அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/1,2
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற – திருப்:1049/5
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் – திருப்:1050/7
மேல்


மூளவே (1)

கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
மேல்


மூளனை (1)

கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
மேல்


மூளா (1)

அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1
மேல்


மூளி (2)

மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி – திருப்:272/9
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர் – திருப்:439/11
மேல்


மூளிகள் (1)

விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள்
வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ – திருப்:550/7,8
மேல்


மூளியர்பால் (1)

சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய் – திருப்:491/8
மேல்


மூளில் (1)

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது – திருப்:1049/3
மேல்


மூளும் (3)

மூளும் வினை சேர மேல் கொண்டிடா ஐந்து பூத வெகுவாய மாயங்கள் தான் நெஞ்சில் – திருப்:94/1
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல் – திருப்:566/3
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு – திருப்:1196/3
மேல்


மூளை (9)

திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை – திருப்:4/10
உந்துஉந்துஉந்து என்றிடவே தசை நிணம் மூளை – திருப்:95/10
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை – திருப்:217/2
குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய – திருப்:362/2
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே – திருப்:790/3
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு – திருப்:843/1
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ – திருப்:894/2
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா – திருப்:1316/7
மேல்


மூளைகள் (3)

எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு – திருப்:248/1
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள்
இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை – திருப்:485/1,2
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள்
கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா – திருப்:746/11,12
மேல்


மூளையொடு (1)

அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில – திருப்:480/1

மேல்