நை – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

நைந்து (17)

கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள் – திருப்:8/7
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா – திருப்:44/5
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் – திருப்:45/4
நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற – திருப்:67/9
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே – திருப்:98/2
அதில் மருண்டு துவண்டு அ ஆசையில் நைந்து பாயல் – திருப்:141/6
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே – திருப்:200/5
நகையும் உள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ – திருப்:236/8
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ – திருப்:348/4
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன் – திருப்:364/4
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் – திருப்:586/4
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா – திருப்:587/6
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/2
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே – திருப்:968/2
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ – திருப்:1017/8
விடியளவு நைந்து உருகுவேனை காப்பதும் ஒரு நாளே – திருப்:1173/8
மேல்


நைந்துவிடும் (1)

நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே – திருப்:1334/4
மேல்


நையும் (1)

கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ – திருப்:1230/3
மேல்


நைவது (2)

முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ – திருப்:476/4
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான் – திருப்:606/4

மேல்