நூ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்கி 1
நூண் 1
நூபுர 14
நூபுரத்தின் 1
நூபுரம் 16
நூபுரமும் 3
நூபுரமொடு 1
நூபுராரிய 1
நூபுரி 1
நூல் 72
நூல்கள் 5
நூல்களில் 1
நூல்களும் 5
நூல்களை 2
நூலாடை 1
நூலாம் 1
நூலாய் 1
நூலார் 1
நூலால் 1
நூலியலும் 1
நூலில் 2
நூலின் 14
நூலினர் 1
நூலினை 1
நூலும் 4
நூலே 2
நூலை 3
நூலோ 1
நூலோடு 1
நூற்ற 1
நூற்று 1
நூற்றுப்பத்து 1
நூற்றுவர் 3
நூற்றுவர்க்கு 1
நூற்றுவரும் 1
நூற 1
நூறாயிரம் 3
நூறி 2
நூறிட 3
நூறிய 1
நூறியே 1
நூறு 10
நூறும் 5

நூக்கி (1)

அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் – திருப்:987/9
மேல்


நூண் (1)

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே – திருப்:800/2
மேல்


நூபுர (14)

மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே – திருப்:36/4
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும் – திருப்:268/12
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என – திருப்:340/1
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள் – திருப்:439/5
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத – திருப்:448/7
தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர – திருப்:484/1
காலில் நூபுர ஓசை கோ என ஆடி மால் கொடு நாணியே வியர் – திருப்:486/5
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ – திருப்:701/4
பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை – திருப்:746/5
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய் – திருப்:809/8
நிறத்த நூபுர பாதாரவிந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர் தனங்களும் – திருப்:1151/9
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா – திருப்:1175/7
ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன் – திருப்:1181/7
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி – திருப்:1325/13
மேல்


நூபுரத்தின் (1)

சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என – திருப்:1315/1
மேல்


நூபுரம் (16)

பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு – திருப்:80/1
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு – திருப்:153/5
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன – திருப்:160/13
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே – திருப்:188/7
காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய ஓசையும் உக – திருப்:188/13
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண் – திருப்:207/7
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை – திருப்:504/5
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி – திருப்:592/23
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது – திருப்:696/5
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக – திருப்:699/3
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி – திருப்:721/6
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள் – திருப்:769/7
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும் – திருப்:841/1
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள் – திருப்:1177/15
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய – திருப்:1200/2
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர – திருப்:1312/6
மேல்


நூபுரமும் (3)

நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய – திருப்:236/5
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும்
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை – திருப்:784/3,4
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும் – திருப்:1140/4
மேல்


நூபுரமொடு (1)

காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
மேல்


நூபுராரிய (1)

கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள – திருப்:1157/7
மேல்


நூபுரி (1)

பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி – திருப்:53/5
மேல்


நூல் (72)

நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை – திருப்:36/5
களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு – திருப்:40/3
நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை – திருப்:70/3
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே – திருப்:70/4
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என – திருப்:130/5
இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன் – திருப்:135/7
மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே – திருப்:182/1
சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத – திருப்:194/3
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ – திருப்:197/5
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே – திருப்:221/7
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக – திருப்:223/2
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல – திருப்:235/3
திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய் – திருப்:358/7
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக – திருப்:365/15
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே – திருப்:398/3
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர் – திருப்:427/9
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே – திருப்:427/24
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி – திருப்:445/3
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல் – திருப்:478/5
ஆய தூசினை மேவிய நூல் இடை மட மாதர் – திருப்:481/2
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம் – திருப்:484/13
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை – திருப்:486/3
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல் – திருப்:495/8
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல் – திருப்:504/3
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி – திருப்:527/2
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர் – திருப்:546/3
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே – திருப்:581/3
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு – திருப்:592/6
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே – திருப்:678/4
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார் – திருப்:681/1
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல் மறை சத கோடி – திருப்:696/10
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை – திருப்:699/1
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக – திருப்:709/1
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே – திருப்:712/6
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை – திருப்:721/3
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ – திருப்:727/7
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ – திருப்:741/4
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத – திருப்:749/4
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட – திருப்:759/5
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள் – திருப்:761/2
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் – திருப்:763/4
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் – திருப்:765/6
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல்
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் – திருப்:799/1,2
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள – திருப்:806/3
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி – திருப்:808/6
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு – திருப்:816/1
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை – திருப்:823/1
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என – திருப்:846/1
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ் – திருப்:913/11
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும் – திருப்:998/5
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம – திருப்:998/15
காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழப்பெறுவோரும் – திருப்:1028/1
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே – திருப்:1030/2
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம் – திருப்:1050/3
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே – திருப்:1069/2
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி – திருப்:1130/9
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என – திருப்:1134/9
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர் – திருப்:1139/5
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே – திருப்:1155/4
ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும் – திருப்:1175/3
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே – திருப்:1203/8
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான – திருப்:1212/2
கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே – திருப்:1256/4
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி – திருப்:1261/5
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி – திருப்:1261/5
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே – திருப்:1311/1
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட – திருப்:1324/4
மேல்


நூல்கள் (5)

கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே – திருப்:138/2
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற – திருப்:766/5
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான் – திருப்:935/3
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே – திருப்:1316/2
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி – திருப்:1323/2
மேல்


நூல்களில் (1)

ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும் – திருப்:1129/1
மேல்


நூல்களும் (5)

பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல் – திருப்:76/2
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் – திருப்:171/5
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி – திருப்:279/2
பூராயமதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர் – திருப்:775/3
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த – திருப்:1016/5
மேல்


நூல்களை (2)

ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும் – திருப்:882/7
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி – திருப்:1176/2
மேல்


நூலாடை (1)

நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே – திருப்:411/3
மேல்


நூலாம் (1)

உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம்
உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள் – திருப்:711/1,2
மேல்


நூலாய் (1)

பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் வாய் சொல் கொடியார் தாம் – திருப்:433/1
மேல்


நூலார் (1)

பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார் – திருப்:781/2
மேல்


நூலால் (1)

அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே – திருப்:1287/2
மேல்


நூலியலும் (1)

வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல் – திருப்:474/5
மேல்


நூலில் (2)

தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும் – திருப்:962/4
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம் – திருப்:972/5
மேல்


நூலின் (14)

கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை – திருப்:153/3
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின் – திருப்:224/2
கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின் – திருப்:339/2
ஐயும் உறு நோயும் மையலும் அவாவின் ஐவரும் உபாய பல நூலின்
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை – திருப்:531/1,2
பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின் – திருப்:555/6
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின் – திருப்:589/2
மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கில் ஆடை – திருப்:631/2
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே – திருப்:698/1
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட – திருப்:759/5
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் – திருப்:874/11
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின் – திருப்:941/6
விபுதர் பதி அங்க தலம் மேவி சாற்றிய தமிழ் நூலின் – திருப்:1173/6
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின்
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார – திருப்:1230/1,2
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே – திருப்:1322/3
மேல்


நூலினர் (1)

சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே – திருப்:772/4
மேல்


நூலினை (1)

நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும் – திருப்:841/1
மேல்


நூலும் (4)

புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா – திருப்:809/12
குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும் – திருப்:1016/4
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும் – திருப்:1074/2
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும் – திருப்:1278/12
மேல்


நூலே (2)

சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல் – திருப்:161/1,2
கலவி சாத்திர நூலே ஓதிகள் தங்கள் ஆசை – திருப்:559/6
மேல்


நூலை (3)

துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை – திருப்:275/2
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா – திருப்:651/7
கலக காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் – திருப்:906/2
மேல்


நூலோ (1)

இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் – திருப்:834/4
மேல்


நூலோடு (1)

வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர் – திருப்:439/4
மேல்


நூற்ற (1)

வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில் – திருப்:921/3
மேல்


நூற்று (1)

மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு – திருப்:921/13
மேல்


நூற்றுப்பத்து (1)

கொத்து நூற்றுப்பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய – திருப்:601/5
மேல்


நூற்றுவர் (3)

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள் – திருப்:928/9
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது – திருப்:1055/6
திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ – திருப்:1060/5
மேல்


நூற்றுவர்க்கு (1)

புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி – திருப்:1208/6
மேல்


நூற்றுவரும் (1)

விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள – திருப்:574/5
மேல்


நூற (1)

அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற – திருப்:398/20
மேல்


நூறாயிரம் (3)

விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ம்ருகமத கோலாகல முலை தோய – திருப்:442/2
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம – திருப்:442/5
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான் – திருப்:664/4
மேல்


நூறி (2)

அவுணர் கிளை கெட நூறி ஆலாலம் மா கோப நிருதேசன் – திருப்:1153/14
பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே – திருப்:1170/8
மேல்


நூறிட (3)

கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா – திருப்:721/10
அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா – திருப்:763/11,12
சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா – திருப்:966/12
மேல்


நூறிய (1)

கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய
கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே – திருப்:887/11,12
மேல்


நூறியே (1)

வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என – திருப்:736/9
மேல்


நூறு (10)

நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை – திருப்:70/3
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் – திருப்:76/13
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு – திருப்:130/7
அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள் – திருப்:710/2
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும் – திருப்:841/2
அசுரர் வீடுகள் நூறு பொடிபட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட – திருப்:886/11
உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒரு நூறு – திருப்:930/12
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப – திருப்:1271/1
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி – திருப்:1313/3
சேகரத்தின் வாலை சிலோர்சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால்மயால் கொடு – திருப்:1315/3
மேல்


நூறும் (5)

துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும்
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே – திருப்:204/7,8
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய – திருப்:675/3
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் – திருப்:1036/3
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும் – திருப்:1036/3
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும்
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ – திருப்:1036/3,4

மேல்