சோ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகம் 3
சோகமுற்று 1
சோகமோடு 1
சோகாம்பரம் 1
சோகுகள் 1
சோகை 6
சோகைகள் 1
சோங்கு 2
சோடுற்று 1
சோடை 1
சோண 5
சோணகிரி 3
சோணாசல 2
சோணாசலாதி 1
சோணாசலேச 1
சோணாடர் 1
சோணாடு 4
சோதர 1
சோதரனே 1
சோதரி 2
சோதி 59
சோதித்து 1
சோதிப்பான் 1
சோதிய 3
சோதியர் 2
சோதியின் 2
சோதியும் 1
சோதியே 1
சோதியொடு 1
சோதீ 3
சோதை 1
சோபம் 2
சோபனம் 1
சோபானம் 1
சோபித 3
சோபிதாகார 1
சோபை 1
சோபையில் 1
சோம்பிடுவார் 1
சோம்பினில் 1
சோம 3
சோமநாதன் 1
சோமன் 8
சோமனும் 1
சோமனொடு 1
சோமாசிகள் 1
சோமாசிமார் 1
சோமாசியா 1
சோமீசர் 1
சோர் 2
சோர்தல் 1
சோர்ந்த 1
சோர்ந்து 2
சோர்வது 1
சோர்வாய் 1
சோர்வினால் 1
சோர்வு 4
சோர்வுற 1
சோர 31
சோரச்சோர 1
சோரம் 2
சோரர்க்கே 1
சோரவும் 1
சோரன் 2
சோரனுக்கும் 1
சோரா 4
சோரி 7
சோரிக்கே 1
சோரிகள் 1
சோருதல் 1
சோரும் 3
சோலி 2
சோலிகள் 2
சோலை 47
சோலைகள் 3
சோலைதனிலே 1
சோலைமலை 6
சோலையங்கிரி 1
சோலையின் 1
சோலையும் 2
சோழ 2
சோற்றையே 1
சோறவை 1
சோறினால் 1
சோறினை 1
சோறு 1
சோறோ 1
சோனம் 1
சோனை 4

சோகம் (3)

காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி – திருப்:69/7
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல் – திருப்:855/7
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
மேல்


சோகமுற்று (1)

தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள் – திருப்:426/4
மேல்


சோகமோடு (1)

சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே – திருப்:784/14
மேல்


சோகாம்பரம் (1)

கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே – திருப்:338/1
மேல்


சோகுகள் (1)

சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா – திருப்:481/12
மேல்


சோகை (6)

தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகுசலம் – திருப்:166/1
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே – திருப்:243/2
சூது கொலைகாரர் ஆசை பண மாதர் தூவையர்கள் சோகை முகம் நீலர் – திருப்:609/1
வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல் – திருப்:983/7
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா – திருப்:1027/2
மேல்


சோகைகள் (1)

இளைப்பு சோகைகள் வாதம் விலாவலி உளைப்பு சூலையொடே வலுவாகிய – திருப்:485/3
மேல்


சோங்கு (2)

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு – திருப்:402/2
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும் – திருப்:634/5
மேல்


சோடுற்று (1)

சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார் – திருப்:877/2
மேல்


சோடை (1)

சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ – திருப்:805/15
மேல்


சோண (5)

திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே – திருப்:392/8
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா – திருப்:414/3
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே – திருப்:431/8
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர – திருப்:720/7
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே – திருப்:1182/3,4
மேல்


சோணகிரி (3)

சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே – திருப்:417/7
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப – திருப்:437/14
மேல்


சோணாசல (2)

பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே – திருப்:394/6
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே – திருப்:442/6
மேல்


சோணாசலாதி (1)

சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே – திருப்:1126/7
மேல்


சோணாசலேச (1)

சோணாசலேச பூண் ஆரம் நீடு தோள் ஆறும்ஆறும் விளங்கு நாதா – திருப்:411/5
மேல்


சோணாடர் (1)

மநு நெறி உடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும் – திருப்:470/10
மேல்


சோணாடு (4)

மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும் – திருப்:355/7
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே – திருப்:418/4
மநு நியாய சோணாடு தலைமையாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே – திருப்:912/8
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே – திருப்:1306/8
மேல்


சோதர (1)

போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர – திருப்:725/9
மேல்


சோதரனே (1)

தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே – திருப்:151/13
மேல்


சோதரி (2)

கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த – திருப்:117/9
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி – திருப்:272/10
மேல்


சோதி (59)

வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல் – திருப்:94/13
பரம மய சோதி சிவமயமா நின் – திருப்:104/6
ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி – திருப்:189/13
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே – திருப்:226/5,6
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம் – திருப்:236/6
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே – திருப்:356/8
திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே – திருப்:358/8
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே – திருப்:382/6
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே – திருப்:395/4
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே – திருப்:395/6
சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே – திருப்:417/7
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே – திருப்:418/4
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே – திருப்:433/5
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே – திருப்:436/8
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி – திருப்:445/2
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண் – திருப்:449/2
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண் – திருப்:449/4
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண் – திருப்:450/1
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே – திருப்:507/7
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே – திருப்:507/8
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா – திருப்:514/14
கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே – திருப்:515/8
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர் – திருப்:542/1
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு – திருப்:583/7
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய் – திருப்:592/12
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே – திருப்:610/6
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே – திருப்:646/4
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு – திருப்:683/1
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே – திருப்:741/8
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும் – திருப்:760/5
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம் – திருப்:762/4
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே – திருப்:765/7
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி – திருப்:805/1
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி – திருப்:810/5
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என – திருப்:813/11
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி – திருப்:822/6
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது – திருப்:898/11
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய – திருப்:906/5
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும் – திருப்:916/6
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே – திருப்:939/10
ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி – திருப்:980/9
சோதி காலை போத கூவ தூவல் சேவல் கொடியோனே – திருப்:988/6
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே – திருப்:996/4
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே – திருப்:1031/7
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான – திருப்:1111/1
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே – திருப்:1111/3
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே – திருப்:1111/4
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா – திருப்:1111/7
ஆனை முகவன் தேடி ஓடியெ அண அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே – திருப்:1111/8
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே – திருப்:1165/8
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
திரு கை சேவல் கொடியோனே செகத்தில் சோதி பெருமாளே – திருப்:1283/4
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி – திருப்:1313/3
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய் – திருப்:1318/7
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே – திருப்:1322/8
மேல்


சோதித்து (1)

வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி – திருப்:115/22
மேல்


சோதிப்பான் (1)

தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை – திருப்:1150/14
மேல்


சோதிய (3)

கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர் – திருப்:511/7
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா – திருப்:546/11
குடியிலே மயிலை கோடு சோதிய உரவோனே – திருப்:1192/12
மேல்


சோதியர் (2)

பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர் – திருப்:179/12
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர்
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா – திருப்:448/11,12
மேல்


சோதியின் (2)

தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும் – திருப்:468/4
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/8
மேல்


சோதியும் (1)

செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே – திருப்:35/14
மேல்


சோதியே (1)

சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே – திருப்:1303/3
மேல்


சோதியொடு (1)

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகம் – திருப்:1240/3
மேல்


சோதீ (3)

ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே – திருப்:469/7,8
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே – திருப்:817/6
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே – திருப்:1275/8
மேல்


சோதை (1)

தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே – திருப்:629/6
மேல்


சோபம் (2)

தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக – திருப்:882/10
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச – திருப்:993/14
மேல்


சோபனம் (1)

சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே – திருப்:612/12
மேல்


சோபானம் (1)

அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே – திருப்:1045/2
மேல்


சோபித (3)

அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி – திருப்:474/15
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி – திருப்:1043/7
மேல்


சோபிதாகார (1)

வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி – திருப்:1052/2
மேல்


சோபை (1)

சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே – திருப்:417/7
மேல்


சோபையில் (1)

கொங்கையில் நீராவி மேல் வளர் செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையில் ஆதாரம் சோபையில் மருளாதே – திருப்:53/2
மேல்


சோம்பிடுவார் (1)

ஓடி தேடி சோம்பிடுவார் சில விலைமாதர் – திருப்:498/6
மேல்


சோம்பினில் (1)

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ – திருப்:1240/4
மேல்


சோம (3)

காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா – திருப்:775/13
ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன் – திருப்:805/9
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ – திருப்:963/4
மேல்


சோமநாதன் (1)

அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும் – திருப்:824/6
மேல்


சோமன் (8)

வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன் – திருப்:608/10
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே – திருப்:676/5
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய – திருப்:734/6
பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம் – திருப்:1032/5
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே – திருப்:1048/3
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும் – திருப்:1088/7
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே – திருப்:1111/3
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா – திருப்:1272/7
மேல்


சோமனும் (1)

ஓடு வெம் கதிரோடே சோமனும் ஊறி அண்டமும் லோகா லோகமும் – திருப்:997/9
மேல்


சோமனொடு (1)

சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா – திருப்:911/7
மேல்


சோமாசிகள் (1)

செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி – திருப்:1159/1
மேல்


சோமாசிமார் (1)

சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல் – திருப்:569/11
மேல்


சோமாசியா (1)

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா – திருப்:556/5
மேல்


சோமீசர் (1)

மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் – திருப்:870/15
மேல்


சோர் (2)

நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி – திருப்:424/11
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் கடல் ஞாலத்து – திருப்:1141/4
மேல்


சோர்தல் (1)

அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் – திருப்:940/6
மேல்


சோர்ந்த (1)

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை – திருப்:365/7
மேல்


சோர்ந்து (2)

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே – திருப்:800/2
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும் – திருப்:1079/2
மேல்


சோர்வது (1)

சோர்வது இலை யான் அடிமை ஆவேன் உம் ஆணை மிக மயலானேன் – திருப்:169/4
மேல்


சோர்வாய் (1)

தோயா மாயா ஓயா நோயால் சோர்வாய் மாளக்கடவேனோ – திருப்:433/4
மேல்


சோர்வினால் (1)

தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன் – திருப்:996/3
மேல்


சோர்வு (4)

இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே – திருப்:210/3
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற – திருப்:412/22
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா – திருப்:741/7
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் – திருப்:1034/2
மேல்


சோர்வுற (1)

முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே – திருப்:764/5,6
மேல்


சோர (31)

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர
ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/1,2
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர – திருப்:77/12
தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள் ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு – திருப்:80/15
இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர – திருப்:118/2
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா – திருப்:234/12
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர் – திருப்:346/2
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே – திருப்:393/3,4
நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே – திருப்:411/3
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி – திருப்:439/6
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர – திருப்:503/6
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர – திருப்:524/4
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர – திருப்:549/6
புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர – திருப்:560/2
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர – திருப்:563/2
மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர – திருப்:582/2
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள் – திருப்:741/1,2
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர
சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ – திருப்:758/3,4
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே – திருப்:791/3
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில் – திருப்:805/6
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே – திருப்:850/1,2
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற – திருப்:850/7
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர – திருப்:880/6
ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி – திருப்:882/6
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர – திருப்:902/6
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர – திருப்:917/18
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே – திருப்:934/3
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக – திருப்:952/6
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக – திருப்:1103/1,2
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர உருக்கிகள் தெரு மீதே – திருப்:1214/1
மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல் – திருப்:1214/3
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாக – திருப்:1262/1
மேல்


சோரச்சோர (1)

துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல் – திருப்:108/7
மேல்


சோரம் (2)

சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி – திருப்:196/6
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே – திருப்:839/2
மேல்


சோரர்க்கே (1)

வெட்காமல் சேரி சோரர்க்கே வித்து ஆசை சொல்களை ஓதி – திருப்:1123/2
மேல்


சோரவும் (1)

அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை – திருப்:1210/2
மேல்


சோரன் (2)

தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே – திருப்:121/5
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா – திருப்:842/6
மேல்


சோரனுக்கும் (1)

துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ – திருப்:460/8
மேல்


சோரா (4)

கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே – திருப்:37/3
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே – திருப்:112/4
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி – திருப்:364/6
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி – திருப்:569/10
மேல்


சோரி (7)

பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா – திருப்:300/10
சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி – திருப்:347/6
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா – திருப்:592/18
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான – திருப்:715/1
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால் – திருப்:1032/7
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி – திருப்:1129/15
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி – திருப்:1315/14
மேல்


சோரிக்கே (1)

சோரிக்கே வெகு ரூபமதா அடு தான தானன தானன தானன – திருப்:481/11
மேல்


சோரிகள் (1)

நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள் – திருப்:1135/13
மேல்


சோருதல் (1)

அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல்
அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே – திருப்:1141/7,8
மேல்


சோரும் (3)

சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே – திருப்:397/2
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற – திருப்:715/2
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும்
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ – திருப்:927/3,4
மேல்


சோலி (2)

சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு – திருப்:683/3
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
மேல்


சோலிகள் (2)

பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ – திருப்:346/4
மவுன சுட்டு ஆடி சோலிகள் இசலிப்பித்து ஆசைக்காரிகள் – திருப்:776/3
மேல்


சோலை (47)

சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே – திருப்:18/7,8
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:45/7
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு – திருப்:113/15
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் – திருப்:174/15
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா – திருப்:215/6
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா – திருப்:219/7
சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே – திருப்:228/7
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக – திருப்:232/7
மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே தேவர் பெருமாளே – திருப்:355/8
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே – திருப்:361/7
சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள் – திருப்:366/5
காரும் மருவும் பெருகும் சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே – திருப்:413/1
நேச பாளித சோலை மா மயில் என ஏகி – திருப்:486/4
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா – திருப்:497/7
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே – திருப்:516/8
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே – திருப்:532/5
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை – திருப்:569/14
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி – திருப்:574/7
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான் – திருப்:579/7
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே – திருப்:583/8
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா – திருப்:619/6
பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே – திருப்:620/7,8
குனித்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே – திருப்:621/7,8
மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே – திருப்:662/6
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே – திருப்:694/7
கோல சாலி சோலை சீல கோடை தேவ பெருமாளே – திருப்:708/8
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குற மாதினுடன் உறவாடி – திருப்:842/5
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி – திருப்:864/2
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை – திருப்:880/13
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே – திருப்:894/8
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா – திருப்:911/7
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே – திருப்:934/2
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே – திருப்:940/8
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள் – திருப்:948/11
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் – திருப்:963/3
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே – திருப்:968/8
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே – திருப்:974/7
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட – திருப்:1231/7
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே – திருப்:1285/2
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே – திருப்:1291/2
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே – திருப்:1313/16
அழகான பொன் மேடை உயர்த்திடு முகில் தாவிய சோலை வியப்புறு – திருப்:1314/15
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள் – திருப்:1315/15
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே – திருப்:1316/8
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே – திருப்:1318/8
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ – திருப்:1334/7
மேல்


சோலைகள் (3)

பரவி தனி உதிர் சோலைகள் மேவிய வகையாலே – திருப்:136/14
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர் – திருப்:151/15
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல் – திருப்:809/13
மேல்


சோலைதனிலே (1)

சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/8
மேல்


சோலைமலை (6)

சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே – திருப்:1309/4
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே – திருப்:1310/8
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே – திருப்:1311/8
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே – திருப்:1312/8
ஆதி சோலைமலை பதியில் திகழ் பெருமாளே – திருப்:1317/16
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே – திருப்:1319/8
மேல்


சோலையங்கிரி (1)

செம்புகேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி
தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம் – திருப்:1306/5,6
மேல்


சோலையின் (1)

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே – திருப்:36/8
மேல்


சோலையும் (2)

செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ் – திருப்:35/15
ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே – திருப்:144/8
மேல்


சோழ (2)

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர – திருப்:170/11
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே – திருப்:805/16
மேல்


சோற்றையே (1)

இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர் – திருப்:890/4
மேல்


சோறவை (1)

திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி – திருப்:886/13
மேல்


சோறினால் (1)

மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய – திருப்:782/1
மேல்


சோறினை (1)

திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு – திருப்:947/13
மேல்


சோறு (1)

கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே – திருப்:1155/2
மேல்


சோறோ (1)

பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம் – திருப்:785/6
மேல்


சோனம் (1)

வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ – திருப்:102/3
மேல்


சோனை (4)

சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே – திருப்:202/7
சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர் – திருப்:395/3
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே – திருப்:417/8
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத – திருப்:437/13

மேல்