ஊ – முதல் சொற்கள், திருப்புகழ் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கு 1
ஊக 1
ஊங்கி 1
ஊசல் 5
ஊசலாட 1
ஊசலாடும் 1
ஊசலாம் 1
ஊசலில் 1
ஊசலை 1
ஊசாடு 2
ஊசி 3
ஊசிடும் 1
ஊசியுமே 1
ஊசிவாசியாய் 1
ஊட்டி 6
ஊட்டியும் 1
ஊட்டு 2
ஊட்டும் 2
ஊடலிலே 1
ஊடலுற்று 1
ஊடலே 1
ஊடற்குள்ளே 1
ஊடா 1
ஊடாடா 1
ஊடாடாது 1
ஊடாடி 5
ஊடாடு 2
ஊடாடும் 1
ஊடான 1
ஊடி 2
ஊடு 16
ஊடும் 2
ஊடுருவ 2
ஊடுருவப்படாவரு 1
ஊடுருவி 1
ஊடுற்று 1
ஊடுற்றே 1
ஊடுற 2
ஊடுறு 1
ஊடூடு 1
ஊடே 11
ஊண் 4
ஊணனை 1
ஊணா 1
ஊணாக 1
ஊணி 3
ஊணிகள் 1
ஊணினால் 1
ஊணும் 1
ஊணை 1
ஊத்தை 2
ஊத 2
ஊதா 1
ஊதாரி 2
ஊதாரியாய் 1
ஊதி 10
ஊதிய 1
ஊதியம் 2
ஊது 6
ஊதுகாமாலை 1
ஊதுகின்ற 1
ஊதும் 5
ஊதை 3
ஊதைக்கு 1
ஊதையும் 1
ஊமர் 2
ஊமரை 1
ஊமை 4
ஊமைகள் 1
ஊமையேனை 1
ஊய்ந்தும் 1
ஊர் 40
ஊர்கள் 1
ஊர்தற்கு 1
ஊர்தனக்கு 1
ஊர்தி 3
ஊர்ந்த 2
ஊர்ந்திட 1
ஊர்ந்து 4
ஊர்பவன் 1
ஊர்வாய் 1
ஊர்வார் 1
ஊர 3
ஊரர் 1
ஊரல் 1
ஊரா 4
ஊராக 1
ஊரார் 2
ஊரார்கள் 1
ஊராரும் 1
ஊரில் 2
ஊரினும் 1
ஊரு 5
ஊருக்கு 1
ஊரும் 13
ஊரூர் 1
ஊரே 1
ஊரை 3
ஊரோடு 2
ஊழ் 4
ஊழ்வினை 2
ஊழலும் 1
ஊழி 6
ஊழிடு 1
ஊழியம் 1
ஊழியமே 1
ஊளை 2
ஊற 6
ஊறல் 15
ஊறல்கள் 2
ஊறலே 1
ஊறலை 1
ஊறாய் 1
ஊறி 20
ஊறிய 7
ஊறில் 1
ஊறினர் 1
ஊறு 16
ஊறுக 1
ஊறும் 10
ஊன் 11
ஊன்றிய 1
ஊன்றுதற்கு 1
ஊன்றும் 1
ஊன 2
ஊனங்கள் 1
ஊனம் 2
ஊனமுற்று 1
ஊனரை 1
ஊனாலே 1
ஊனுக்கா 1
ஊனும் 3
ஊனே 1
ஊனை 2
ஊனொடு 1
ஊனோடு 3

ஊக்கு (1)

வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் – திருப்:681/11
மேல்


ஊக (1)

கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி – திருப்:643/7
மேல்


ஊங்கி (1)

ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன் – திருப்:899/3
மேல்


ஊசல் (5)

தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல் – திருப்:15/2
சேர்ந்து குழையோடு ஊசல் ஆடிய விழியாலே – திருப்:351/4
மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை – திருப்:487/2
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா – திருப்:1038/1
மேல்


ஊசலாட (1)

வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட – திருப்:1277/1
மேல்


ஊசலாடும் (1)

ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ – திருப்:1104/4
மேல்


ஊசலாம் (1)

சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம் – திருப்:427/8
மேல்


ஊசலில் (1)

ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள் – திருப்:1146/2
மேல்


ஊசலை (1)

ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற – திருப்:437/7
மேல்


ஊசாடு (2)

ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா – திருப்:1038/1
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
மேல்


ஊசி (3)

சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால் – திருப்:501/2
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி – திருப்:933/1,2
ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான் – திருப்:1169/2
மேல்


ஊசிடும் (1)

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை – திருப்:158/5
மேல்


ஊசியுமே (1)

காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும் – திருப்:351/15
மேல்


ஊசிவாசியாய் (1)

அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய்
அவியுறு சுடர் போலே – திருப்:858/7,8
மேல்


ஊட்டி (6)

வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன் ஆள்வாய் – திருப்:783/8
தலைநாளில் பதம் ஏத்தி அன்புற உபதேச பொருள் ஊட்டி மந்திர – திருப்:810/1
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக – திருப்:810/3
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி – திருப்:901/5
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே – திருப்:1199/6
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே – திருப்:1279/4
மேல்


ஊட்டியும் (1)

வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும் – திருப்:509/2
மேல்


ஊட்டு (2)

பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா – திருப்:1089/6
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம் – திருப்:1279/1
மேல்


ஊட்டும் (2)

இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ – திருப்:538/4
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே – திருப்:810/12
மேல்


ஊடலிலே (1)

வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார்பால் – திருப்:1197/2
மேல்


ஊடலுற்று (1)

உறு மலர் பாயலில் துயர் விளைத்து ஊடலுற்று உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர் – திருப்:377/3
மேல்


ஊடலே (1)

மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப – திருப்:1271/1
மேல்


ஊடற்குள்ளே (1)

ஊடற்குள்ளே புக்கு வாடி கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே – திருப்:1033/3
மேல்


ஊடா (1)

ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர் – திருப்:37/2
மேல்


ஊடாடா (1)

என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே – திருப்:1136/2
மேல்


ஊடாடாது (1)

மாசு ஊடாடாது ஊடே பாராய் மாறா ஞான சுடர் தான் நின்று – திருப்:1042/2
மேல்


ஊடாடி (5)

போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட – திருப்:412/5
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல் – திருப்:412/8
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே – திருப்:418/2
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த – திருப்:568/11
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் – திருப்:746/13
மேல்


ஊடாடு (2)

சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம் – திருப்:244/3
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி – திருப்:486/13
மேல்


ஊடாடும் (1)

மாசு ஊடாடும் பகையை பகை சூராளோடே வன் செருவை செறு – திருப்:626/13
மேல்


ஊடான (1)

வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன – திருப்:1153/7
மேல்


ஊடி (2)

ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே – திருப்:413/4
உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று – திருப்:1274/3
மேல்


ஊடு (16)

செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே – திருப்:20/7
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள வென்று வான் உலகு ஆளும் – திருப்:82/11
பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை – திருப்:174/2
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு – திருப்:381/1
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு – திருப்:511/12
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே – திருப்:545/6
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா – திருப்:630/7
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக – திருப்:728/3
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து – திருப்:749/13
வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே – திருப்:783/14
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி – திருப்:786/2
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர் – திருப்:859/1
ஆலையான மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆலகால விழிக்கும் உறு காதல் – திருப்:990/1
ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு – திருப்:997/11
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி – திருப்:1108/6
மேல்


ஊடும் (2)

சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத – திருப்:284/2
பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர் – திருப்:398/17
மேல்


ஊடுருவ (2)

ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா – திருப்:786/5
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும் – திருப்:870/13,14
மேல்


ஊடுருவப்படாவரு (1)

வெற்பை ஊடுருவப்படாவரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி – திருப்:950/6
மேல்


ஊடுருவி (1)

நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே – திருப்:419/3
மேல்


ஊடுற்று (1)

அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று
அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி – திருப்:394/1,2
மேல்


ஊடுற்றே (1)

கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே – திருப்:1123/4
மேல்


ஊடுற (2)

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் – திருப்:506/2
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா – திருப்:997/12
மேல்


ஊடுறு (1)

பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு – திருப்:1010/15
மேல்


ஊடூடு (1)

அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று – திருப்:394/1
மேல்


ஊடே (11)

உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா – திருப்:546/5
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே – திருப்:546/13
ஊடே பால் ஒளி ஆத்துமன்தனை விலகாமல் – திருப்:783/4
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே – திருப்:817/6
வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய் தலை ஊடே பாய் தரு – திருப்:849/15
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே – திருப்:981/3,4
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே – திருப்:984/2
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே – திருப்:984/5
மாசு ஊடாடாது ஊடே பாராய் மாறா ஞான சுடர் தான் நின்று – திருப்:1042/2
இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே – திருப்:1133/3
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு – திருப்:1168/5
மேல்


ஊண் (4)

சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில் – திருப்:351/5
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி – திருப்:402/1
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் – திருப்:673/4
ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம் – திருப்:888/7
மேல்


ஊணனை (1)

அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத – திருப்:470/4
மேல்


ஊணா (1)

கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா – திருப்:126/2
மேல்


ஊணாக (1)

கார் விடம்தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை – திருப்:197/11
மேல்


ஊணி (3)

காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த – திருப்:94/9
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு – திருப்:1167/1,2
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி – திருப்:1308/6
மேல்


ஊணிகள் (1)

கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்
கருணை நோக்கம் இலா மா பாவிகள் இன்பம் ஆமோ – திருப்:559/7,8
மேல்


ஊணினால் (1)

உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே – திருப்:1316/3
மேல்


ஊணும் (1)

அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே – திருப்:655/1
மேல்


ஊணை (1)

மெய்க்கு ஊணை தேடி பூமிக்கே வித்தாரத்தில் பலகாலும் – திருப்:1123/1
மேல்


ஊத்தை (2)

அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில் – திருப்:574/3
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள் – திருப்:890/1
மேல்


ஊத (2)

தெய்வீக பரமா குருவே என விருது ஊத – திருப்:767/14
சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக – திருப்:898/6
மேல்


ஊதா (1)

குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே – திருப்:1059/7
மேல்


ஊதாரி (2)

நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன் – திருப்:435/3
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் – திருப்:981/1
மேல்


ஊதாரியாய் (1)

ஊதாரியாய் விடு சமத்தில் நிற்பதும் ஆராத காதலை மனத்தில் வைப்பதும் – திருப்:1142/3
மேல்


ஊதி (10)

கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள – திருப்:211/1,2
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே – திருப்:611/8
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே – திருப்:612/15
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் – திருப்:614/5,6
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி – திருப்:1048/5
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் – திருப்:1053/6
மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து – திருப்:1140/7
பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே – திருப்:1170/7
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே – திருப்:1204/5,6
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும் – திருப்:1280/6
மேல்


ஊதிய (1)

ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி – திருப்:993/4
மேல்


ஊதியம் (2)

இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே – திருப்:490/8
ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் இரவோருக்கு – திருப்:1146/4
மேல்


ஊது (6)

தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே – திருப்:355/5
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும் – திருப்:437/6
காதோடு தாது கையில் பிடித்து அழுது இனிது ஊது – திருப்:580/12
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு – திருப்:608/3
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம் – திருப்:1188/11
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே – திருப்:1189/2
மேல்


ஊதுகாமாலை (1)

வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய் – திருப்:858/17
மேல்


ஊதுகின்ற (1)

பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே – திருப்:989/6
மேல்


ஊதும் (5)

ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் – திருப்:490/14
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும்
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா – திருப்:607/5,6
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே – திருப்:629/2
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று – திருப்:665/5
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும் – திருப்:1087/1
மேல்


ஊதை (3)

உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும் – திருப்:573/2
நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் மாட மா மாளிகையில் மேலாம் – திருப்:1051/1
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசை – திருப்:1250/1
மேல்


ஊதைக்கு (1)

செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத – திருப்:773/1
மேல்


ஊதையும் (1)

அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர – திருப்:764/1
மேல்


ஊமர் (2)

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த – திருப்:568/11
வெட்காமல் பாய் சுற்று ஊமர் சேர் விக்கானத்தை தரி மாறன் – திருப்:768/5
மேல்


ஊமரை (1)

ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
மேல்


ஊமை (4)

யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே – திருப்:59/8
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை – திருப்:485/6
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு – திருப்:487/3
ஓத சூதம் எறிந்த வேலா ஊமை தேவர்கள் தம்பிரானே – திருப்:1290/4
மேல்


ஊமைகள் (1)

வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி – திருப்:727/2
மேல்


ஊமையேனை (1)

ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர் – திருப்:1313/7
மேல்


ஊய்ந்தும் (1)

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே – திருப்:800/2
மேல்


ஊர் (40)

ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர் – திருப்:21/15
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர் – திருப்:33/10
ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா – திருப்:59/7
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர் – திருப்:87/1
மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று – திருப்:94/15
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே – திருப்:102/8
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள் – திருப்:104/13
தோகை என்றிட வாகாக ஊர் அன நடை மானார் – திருப்:197/6
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி – திருப்:211/5
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல – திருப்:267/4
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக – திருப்:387/11
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி – திருப்:416/7
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே – திருப்:472/8
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே – திருப்:511/16
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர்
குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி – திருப்:546/3,4
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் – திருப்:568/5
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ – திருப்:577/4
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா – திருப்:635/3
கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை – திருப்:642/7
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா – திருப்:746/10
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே – திருப்:788/16
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள் – திருப்:809/1
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை – திருப்:822/4
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று – திருப்:828/1
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா – திருப்:834/14
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து – திருப்:837/15
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே – திருப்:949/2
மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை – திருப்:987/3
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே – திருப்:1028/2
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே – திருப்:1033/4
சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே சீமானே செச்சைய மார்பா – திருப்:1039/7
பாழூடே வானூடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா – திருப்:1040/6
திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே – திருப்:1060/6
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும் – திருப்:1061/4
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும் – திருப்:1113/7
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே – திருப்:1119/6
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி – திருப்:1153/13
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா – திருப்:1310/6
மேல்


ஊர்கள் (1)

வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் – திருப்:306/1
மேல்


ஊர்தற்கு (1)

பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர – திருப்:1174/2
மேல்


ஊர்தனக்கு (1)

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள் ஆர்தனக்கும் உதாசினதாரிகள் – திருப்:1146/3
மேல்


ஊர்தி (3)

தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா – திருப்:243/7
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா – திருப்:901/5,6
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம் உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே – திருப்:1053/7
மேல்


ஊர்ந்த (2)

தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா – திருப்:60/6
மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார் – திருப்:1258/3
மேல்


ஊர்ந்திட (1)

தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம் – திருப்:1079/6
மேல்


ஊர்ந்து (4)

களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து – திருப்:338/2
ஊர்ந்து உற்பல ஓடையில் நீடிய உகள் சேலை – திருப்:351/2
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா – திருப்:634/6
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே – திருப்:696/14
மேல்


ஊர்பவன் (1)

விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே – திருப்:747/14
மேல்


ஊர்வாய் (1)

சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே – திருப்:942/3
மேல்


ஊர்வார் (1)

சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர் – திருப்:1040/7
மேல்


ஊர (3)

மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட – திருப்:346/1
ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ – திருப்:990/4
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே – திருப்:1250/6
மேல்


ஊரர் (1)

பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா – திருப்:940/7
மேல்


ஊரல் (1)

தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா – திருப்:231/6
மேல்


ஊரா (4)

கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா
கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா – திருப்:56/5,6
விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே – திருப்:571/7,8
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச – திருப்:584/2
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் – திருப்:834/13
மேல்


ஊராக (1)

ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே – திருப்:418/2
மேல்


ஊரார் (2)

ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது – திருப்:412/11
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய – திருப்:981/2
மேல்


ஊரார்கள் (1)

கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள் – திருப்:873/5
மேல்


ஊராரும் (1)

உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற – திருப்:1140/1
மேல்


ஊரில் (2)

மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும் – திருப்:610/1
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே – திருப்:968/6
மேல்


ஊரினும் (1)

வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு – திருப்:725/15
மேல்


ஊரு (5)

வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும் – திருப்:587/1
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர் – திருப்:886/2
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில் – திருப்:1160/6
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி – திருப்:1250/5
மேல்


ஊருக்கு (1)

பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர் – திருப்:115/8
மேல்


ஊரும் (13)

தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன்தனை – திருப்:109/3
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே – திருப்:397/1
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே – திருப்:413/3
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண் – திருப்:515/5
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும்
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே – திருப்:664/1,2
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே – திருப்:967/3,4
ஊரும் அந்தரம் நானா தேவரும் அடி பேண – திருப்:997/10
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே – திருப்:1000/8
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும் – திருப்:1023/14
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும் – திருப்:1072/2
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும்
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி – திருப்:1165/5,6
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
மேல்


ஊரூர் (1)

புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும் – திருப்:666/14
மேல்


ஊரே (1)

நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என் – திருப்:950/3
மேல்


ஊரை (3)

உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே – திருப்:123/2
சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார்தம் – திருப்:817/7
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு – திருப்:1173/15
மேல்


ஊரோடு (2)

வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட – திருப்:822/11
ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே – திருப்:1142/4
மேல்


ஊழ் (4)

தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ – திருப்:382/4
கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே – திருப்:417/2
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே – திருப்:638/4
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன் – திருப்:1221/2
மேல்


ஊழ்வினை (2)

தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே – திருப்:480/6
சூதகம்தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்வினை
சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே – திருப்:997/3,4
மேல்


ஊழலும் (1)

செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய – திருப்:869/1
மேல்


ஊழி (6)

ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர – திருப்:611/7
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான் – திருப்:739/2
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா – திருப்:786/7
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே – திருப்:1086/8
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ – திருப்:1170/4
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே – திருப்:1205/4
மேல்


ஊழிடு (1)

ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு – திருப்:997/11
மேல்


ஊழியம் (1)

அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ – திருப்:454/8
மேல்


ஊழியமே (1)

கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை – திருப்:877/3
மேல்


ஊளை (2)

அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள் – திருப்:480/3
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என – திருப்:504/7
மேல்


ஊற (6)

வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற – திருப்:197/4
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக – திருப்:496/3
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி – திருப்:518/1,2
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே – திருப்:714/4
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே – திருப்:796/4
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும் – திருப்:1129/5
மேல்


ஊறல் (15)

அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு – திருப்:185/3
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு – திருப்:193/3
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என – திருப்:364/1
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற – திருப்:503/5
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள் – திருப்:746/15
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே – திருப்:765/1
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல் – திருப்:862/2
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை – திருப்:870/3
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே – திருப்:940/3
ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ – திருப்:990/4
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர – திருப்:990/7
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி – திருப்:1047/1
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் – திருப்:1051/3
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு – திருப்:1151/3
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ – திருப்:1214/4
மேல்


ஊறல்கள் (2)

இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே – திருப்:529/6
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள் – திருப்:666/13
மேல்


ஊறலே (1)

வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன் – திருப்:746/4
மேல்


ஊறலை (1)

வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர – திருப்:1197/1
மேல்


ஊறாய் (1)

மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானை கழியாதே – திருப்:705/3
மேல்


ஊறி (20)

விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ – திருப்:100/1
கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி – திருப்:137/2
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே – திருப்:212/2
செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திரு மாது கெர்ப்பம் உடல் ஊறி
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி – திருப்:218/1,2
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் – திருப்:252/3
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி – திருப்:277/3
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும் – திருப்:457/1
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே – திருப்:536/3,4
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா – திருப்:542/2
மினுக்கு மாதர்களிட காமம் மூழ்கியே மயல் ஊறி – திருப்:650/2
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே – திருப்:653/1,2
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர் – திருப்:730/1
அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை – திருப்:865/6
ஓடு வெம் கதிரோடே சோமனும் ஊறி அண்டமும் லோகா லோகமும் – திருப்:997/9
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து – திருப்:1170/1,2
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி
தாய் போல் பரிந்த தேனோடு உகந்து தானே தழைந்து சிவமாகி – திருப்:1221/5,6
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார் – திருப்:1265/1,2
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி – திருப்:1272/1,2
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம் – திருப்:1277/2
கருப்பத்து ஊறி பிறவாதே கனக்க பாடுற்று உழலாதே – திருப்:1283/1
மேல்


ஊறிய (7)

சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே – திருப்:430/2
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே – திருப்:701/2
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள் – திருப்:746/15
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம் – திருப்:809/5
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய – திருப்:837/11
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே – திருப்:877/6
ஆடத்தக்கார் உமை பாதியர் வேத பொன் கோவண ஆடையர் ஆலித்து தான் அருள் ஊறிய முருகோனே – திருப்:877/7
மேல்


ஊறில் (1)

கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட – திருப்:776/9
மேல்


ஊறினர் (1)

ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே – திருப்:1146/7,8
மேல்


ஊறு (16)

நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் – திருப்:88/7
முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு – திருப்:90/2
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே – திருப்:306/4
அமுதமே ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளார் உரை என் ஆணை உன் ஆணை என் – திருப்:384/1
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி – திருப்:573/6
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் – திருப்:629/5
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு – திருப்:687/2
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி – திருப்:885/5
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல் – திருப்:936/4
ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ – திருப்:990/4
ஆடு வெம் பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் – திருப்:997/5
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம் – திருப்:1051/3
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான – திருப்:1106/6
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே – திருப்:1160/1
சேறு ஊறு தோல் பை யானாக நோக்கும் மா மாயை தீர்க்க அறியாத – திருப்:1250/2
மேல்


ஊறுக (1)

குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி – திருப்:452/2
மேல்


ஊறும் (10)

நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல் – திருப்:94/6
ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண் – திருப்:515/7
சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே – திருப்:677/7
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் – திருப்:845/2
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும் – திருப்:913/2
வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும்
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே – திருப்:976/3,4
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும் – திருப்:1142/5
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும் – திருப்:1183/10
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும் – திருப்:1185/4
மேல்


ஊன் (11)

குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல் – திருப்:48/1
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து – திருப்:355/1
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே – திருப்:518/3
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ – திருப்:561/4
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் – திருப்:858/19
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால் – திருப்:981/1
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல் – திருப்:1054/1
ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி உயர் கால் கரத்தின் உருவாகி – திருப்:1068/1
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ – திருப்:1170/4
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம் – திருப்:1211/7
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம் – திருப்:1221/1
மேல்


ஊன்றிய (1)

ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே – திருப்:899/4
மேல்


ஊன்றுதற்கு (1)

ஊன்றுதற்கு மெய் ஞானாசாரம் வழங்குவாயே – திருப்:888/8
மேல்


ஊன்றும் (1)

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே – திருப்:800/1
மேல்


ஊன (2)

ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை – திருப்:437/5
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும் – திருப்:766/1
மேல்


ஊனங்கள் (1)

ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும் – திருப்:162/3
மேல்


ஊனம் (2)

குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன் – திருப்:485/7
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி – திருப்:1170/3
மேல்


ஊனமுற்று (1)

ஊனமுற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி – திருப்:993/2
மேல்


ஊனரை (1)

ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல் – திருப்:828/2
மேல்


ஊனாலே (1)

தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாச குடில் மாசு – திருப்:433/3
மேல்


ஊனுக்கா (1)

கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய் – திருப்:768/4
மேல்


ஊனும் (3)

ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம் – திருப்:359/4
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே – திருப்:611/8
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி – திருப்:1035/1
மேல்


ஊனே (1)

ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா – திருப்:1038/1
மேல்


ஊனை (2)

எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல் – திருப்:247/2
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம் – திருப்:873/2
மேல்


ஊனொடு (1)

மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும் – திருப்:783/5
மேல்


ஊனோடு (3)

பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான – திருப்:822/2
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி – திருப்:1142/1
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன் – திருப்:1221/2

மேல்