வெ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெகுள்வர் 1
வெங்கடத்து 1
வெண் 13
வெண்ணெயும் 1
வெதிர் 1
வெதுப்பு 1
வெப்புற்று 1
வெம் 12
வெம்மை 1
வெய்து 2
வெய்யோன் 1
வெயில் 1
வெரீஇ 2
வெருவரல் 1
வெல்ல 1
வெல்லும் 2
வெவ் 1
வெள் 9
வெள்_வளையே 2
வெள்கி 2
வெள்ளத்திடை 1
வெள்ளத்து 2
வெள்ளம் 1
வெள்ளி 3
வெள்ளை 4
வெளிப்பட்ட 1
வெளிறு 1
வெளுத்து 1
வெற்பக 1
வெற்பர் 1
வெற்பன் 2
வெற்பா 2
வெற்பில் 4
வெற்பின் 4
வெற்பு 1
வெறி 4
வெறியாடுக 1
வெறியுறு 1
வெறுப்ப 1
வென்ற 2
வென்றதற்கும் 1
வென்றவர் 1
வென்றி 1
வென்றோன் 1

வெகுள்வர் (1)

வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த – திருக்கோ:390/2
மேல்


வெங்கடத்து (1)

மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா – திருக்கோ:247/1
மேல்


வெண் (13)

தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி – திருக்கோ:130/1
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண்
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து – திருக்கோ:161/2,3
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம் – திருக்கோ:183/1
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று – திருக்கோ:193/3
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண்
பொத்திய கோலத்தினீர் புலியூர் அம்பலவர்க்கு உற்ற – திருக்கோ:242/1,2
சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும் – திருக்கோ:248/1
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க – திருக்கோ:286/1
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய – திருக்கோ:286/3
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து – திருக்கோ:336/1
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு – திருக்கோ:364/3
மேல்


வெண்ணெயும் (1)

நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே – திருக்கோ:315/1
மேல்


வெதிர் (1)

வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ – திருக்கோ:243/1
மேல்


வெதுப்பு (1)

மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க – திருக்கோ:398/2,3
மேல்


வெப்புற்று (1)

வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா – திருக்கோ:354/3
மேல்


வெம் (12)

கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன் – திருக்கோ:101/3
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான் – திருக்கோ:206/2
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை – திருக்கோ:216/1
விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ – திருக்கோ:218/1
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம் – திருக்கோ:238/3
அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால் – திருக்கோ:240/3
மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான் – திருக்கோ:275/1
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த – திருக்கோ:314/1
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கானின் – திருக்கோ:342/1
பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான் – திருக்கோ:344/2
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர் – திருக்கோ:351/2
தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது – திருக்கோ:358/1
மேல்


வெம்மை (1)

கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
மேல்


வெய்து (2)

வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா – திருக்கோ:354/3
மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து – திருக்கோ:384/3
மேல்


வெய்யோன் (1)

வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன்
தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல் – திருக்கோ:116/1,2
மேல்


வெயில் (1)

வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர் – திருக்கோ:351/2
மேல்


வெரீஇ (2)

சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர் – திருக்கோ:207/2
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா – திருக்கோ:255/2
மேல்


வெருவரல் (1)

விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே – திருக்கோ:279/4
மேல்


வெல்ல (1)

ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து – திருக்கோ:349/2
மேல்


வெல்லும் (2)

பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர் – திருக்கோ:349/1
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய் – திருக்கோ:349/3
மேல்


வெவ் (1)

வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள் – திருக்கோ:366/3
மேல்


வெள் (9)

கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே – திருக்கோ:15/4
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் – திருக்கோ:69/1
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய் – திருக்கோ:183/3
விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே – திருக்கோ:279/4
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே – திருக்கோ:295/4
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
மேல்


வெள்_வளையே (2)

விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே – திருக்கோ:148/4
விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே – திருக்கோ:279/4
மேல்


வெள்கி (2)

வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி
தொல்வினையால் துயரும் எனது ஆருயிர் துப்புறவே – திருக்கோ:26/3,4
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள் – திருக்கோ:399/3
மேல்


வெள்ளத்திடை (1)

ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர் – திருக்கோ:307/2
மேல்


வெள்ளத்து (2)

ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு – திருக்கோ:307/1
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின் – திருக்கோ:307/3
மேல்


வெள்ளம் (1)

ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே – திருக்கோ:307/4
மேல்


வெள்ளி (3)

வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும் – திருக்கோ:128/3
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர் – திருக்கோ:167/3
வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி
குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று – திருக்கோ:280/1,2
மேல்


வெள்ளை (4)

செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/4
துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார் – திருக்கோ:221/3
வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ – திருக்கோ:243/1
மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன – திருக்கோ:246/1
மேல்


வெளிப்பட்ட (1)

குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/2
மேல்


வெளிறு (1)

வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/4
மேல்


வெளுத்து (1)

பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம் – திருக்கோ:109/3
மேல்


வெற்பக (1)

வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற – திருக்கோ:168/3
மேல்


வெற்பர் (1)

வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/3
மேல்


வெற்பன் (2)

துடிக்கின்றவா வெற்பன் சொல் பரிசே யான் தொடர்ந்து விடா – திருக்கோ:32/2
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி – திருக்கோ:156/2
மேல்


வெற்பா (2)

இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல் – திருக்கோ:35/3
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை – திருக்கோ:133/2
மேல்


வெற்பில் (4)

பொற்பு ஆர் அறிவார் புலியூர் புனிதன் பொதியில் வெற்பில்
கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே – திருக்கோ:8/3,4
விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில்
தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/3,4
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில்
பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன் – திருக்கோ:99/1,2
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில்
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே – திருக்கோ:118/3,4
மேல்


வெற்பின் (4)

வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே – திருக்கோ:61/2
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின்
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே – திருக்கோ:262/3,4
பட களியா வண்டு அறை பொழில் தில்லை பரமன் வெற்பின்
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ – திருக்கோ:297/2,3
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த – திருக்கோ:327/2
மேல்


வெற்பு (1)

விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்பு கரப்ப – திருக்கோ:75/1
மேல்


வெறி (4)

மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள் – திருக்கோ:125/3
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே – திருக்கோ:163/4
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ – திருக்கோ:256/1
அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார் – திருக்கோ:287/1
மேல்


வெறியாடுக (1)

வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க – திருக்கோ:286/1
மேல்


வெறியுறு (1)

விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது – திருக்கோ:152/3
மேல்


வெறுப்ப (1)

எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே – திருக்கோ:243/4
மேல்


வென்ற (2)

காமரை வென்ற கண்ணோன் தில்லை பல் கதிரோன் அடைத்த – திருக்கோ:164/1
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய் – திருக்கோ:273/2
மேல்


வென்றதற்கும் (1)

தோலா கரி வென்றதற்கும் துவள்விற்கும் இல்லின் தொன்மைக்கு – திருக்கோ:110/1
மேல்


வென்றவர் (1)

வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி – திருக்கோ:280/1
மேல்


வென்றி (1)

உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/4
மேல்


வென்றோன் (1)

பல் இலன் ஆக பகலை வென்றோன் தில்லை பாடலர் போல் – திருக்கோ:60/1

மேல்