வா – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 1
வாக்கு 1
வாங்கிய 1
வாங்கு 2
வாங்கும் 1
வாசகமே 2
வாஞ்சியம் 1
வாட்டம் 2
வாட்டி 1
வாட 1
வாடா 1
வாடி 2
வாடிட 1
வாடியதே 1
வாடினள் 1
வாடுதிர் 1
வாடும் 1
வாணர் 2
வாம் 3
வாய் 44
வாய்க்கு 1
வாய்க்கொள்ளும் 1
வாய்ச்சி 1
வாய்த்த 3
வாய்தரின் 1
வாய்திறவாய் 1
வாய்திறவார் 1
வாய்ந்த 1
வாய்ந்து 2
வாய்மை 1
வாய்மையன் 1
வாய்மையனே 1
வாய்மையும் 1
வாய்மொழி 2
வாயான் 1
வாயில் 2
வாயின் 1
வாயும் 2
வார் 22
வார்த்தை 1
வார்த்தையின் 1
வாரண 2
வாரணம் 1
வாரி 1
வாரியை 1
வால் 1
வாவல் 1
வாவி 2
வாழ் 4
வாழ்த்தலரின் 1
வாழ்த்தார் 1
வாழ்த்தி 1
வாழ்த்தினர் 1
வாழ்த்துநர் 1
வாழ்த்தும் 1
வாழ்பதியே 1
வாழ்பவர்க்கு 1
வாழ்விப்பதே 1
வாழ்வு 1
வாழச்செய்தாய் 1
வாழலை 1
வாழி 7
வாழியரோ 2
வாழும் 3
வாழேன் 1
வாழை 1
வாழையின் 1
வாள் 31
வாள்_கண்ணி 3
வாள்_நுதல் 3
வாள்_நுதலே 2
வாளா 1
வான் 27
வான்_அரமங்கையர் 1
வான 3
வானகம் 2
வானத்து 1
வானம் 1
வானர்க்கு 1
வானவர் 1
வானவர்-தம் 1
வானவரில் 1
வானவன் 2
வானவனே 1
வானின் 1
வானோன் 1

வா (1)

சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே – திருக்கோ:60/4
மேல்


வாக்கு (1)

மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே – திருக்கோ:106/1
மேல்


வாங்கிய (1)

ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் – திருக்கோ:109/1
மேல்


வாங்கு (2)

வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன் – திருக்கோ:46/2
கான் அமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம் – திருக்கோ:274/1
மேல்


வாங்கும் (1)

வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/4
மேல்


வாசகமே (2)

வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே – திருக்கோ:158/4
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே – திருக்கோ:177/4
மேல்


வாஞ்சியம் (1)

மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை – திருக்கோ:268/3
மேல்


வாட்டம் (2)

சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே – திருக்கோ:12/4
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின் – திருக்கோ:381/2
மேல்


வாட்டி (1)

வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே – திருக்கோ:284/4
மேல்


வாட (1)

பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு – திருக்கோ:232/1
மேல்


வாடா (1)

சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே – திருக்கோ:268/4
மேல்


வாடி (2)

பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே – திருக்கோ:14/4
வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய் – திருக்கோ:282/1
மேல்


வாடிட (1)

நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள் – திருக்கோ:345/3
மேல்


வாடியதே (1)

வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே – திருக்கோ:62/4
மேல்


வாடினள் (1)

மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு – திருக்கோ:218/2
மேல்


வாடுதிர் (1)

உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம் – திருக்கோ:131/2
மேல்


வாடும் (1)

தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி – திருக்கோ:3/2
மேல்


வாணர் (2)

இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர் – திருக்கோ:15/2
இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள் – திருக்கோ:68/2
மேல்


வாம் (3)

வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன் – திருக்கோ:38/2
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் – திருக்கோ:263/3
வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே – திருக்கோ:344/4
மேல்


வாய் (44)

ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய்
சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே – திருக்கோ:7/2,3
குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள் – திருக்கோ:9/2
தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய்
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள் – திருக்கோ:30/2,3
வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம் – திருக்கோ:32/1
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய்
நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே – திருக்கோ:34/3,4
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து – திருக்கோ:36/2
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என் – திருக்கோ:41/3
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே – திருக்கோ:42/4
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று – திருக்கோ:50/1
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை – திருக்கோ:55/2
ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல் – திருக்கோ:56/3
சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே – திருக்கோ:57/4
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின் – திருக்கோ:70/3
தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து – திருக்கோ:72/3
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர் – திருக்கோ:73/3
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை – திருக்கோ:80/2
கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால் – திருக்கோ:80/3
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு – திருக்கோ:84/3
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால் – திருக்கோ:93/3
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு – திருக்கோ:94/1
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே – திருக்கோ:94/4
மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய – திருக்கோ:99/3
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய்
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/1,2
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று – திருக்கோ:138/3
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு – திருக்கோ:166/3
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை – திருக்கோ:169/1
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை – திருக்கோ:169/2
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை – திருக்கோ:170/1
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண் – திருக்கோ:170/3
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் – திருக்கோ:177/3
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன் – திருக்கோ:200/2
பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய்
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும் – திருக்கோ:238/1,2
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன் – திருக்கோ:257/1
வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே – திருக்கோ:284/4
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய – திருக்கோ:293/3
கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும் – திருக்கோ:305/3
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே – திருக்கோ:305/4
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய்
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா – திருக்கோ:322/2,3
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய்
மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் – திருக்கோ:347/2,3
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம் – திருக்கோ:366/1
வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள் – திருக்கோ:366/3
வில் ஆண்டு இலங்கு புருவம் நெரிய செ வாய் துடிப்ப – திருக்கோ:387/2
மேல்


வாய்க்கு (1)

வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன் – திருக்கோ:216/2
மேல்


வாய்க்கொள்ளும் (1)

கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த – திருக்கோ:123/2
மேல்


வாய்ச்சி (1)

கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று – திருக்கோ:132/3
மேல்


வாய்த்த (3)

நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே – திருக்கோ:171/4
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று – திருக்கோ:252/1
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே – திருக்கோ:323/4
மேல்


வாய்தரின் (1)

ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே – திருக்கோ:80/4
மேல்


வாய்திறவாய் (1)

வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய்
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/3,4
மேல்


வாய்திறவார் (1)

வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
மேல்


வாய்ந்த (1)

போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே – திருக்கோ:369/4
மேல்


வாய்ந்து (2)

மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து
உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே – திருக்கோ:1/3,4
தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து
அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா – திருக்கோ:16/1,2
மேல்


வாய்மை (1)

மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும் – திருக்கோ:278/1
மேல்


வாய்மையன் (1)

வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/2
மேல்


வாய்மையனே (1)

மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே – திருக்கோ:368/4
மேல்


வாய்மையும் (1)

மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான் – திருக்கோ:275/1
மேல்


வாய்மொழி (2)

குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/3
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே – திருக்கோ:99/4
மேல்


வாயான் (1)

வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான்
வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான் – திருக்கோ:380/2,3
மேல்


வாயில் (2)

கிளவியை என்றோ இனி கிள்ளையார் வாயில் கேட்கின்றதே – திருக்கோ:10/4
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே – திருக்கோ:204/4
மேல்


வாயின் (1)

வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற – திருக்கோ:245/3
மேல்


வாயும் (2)

வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த – திருக்கோ:241/3
வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் – திருக்கோ:289/3
மேல்


வார் (22)

தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே – திருக்கோ:38/4
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே – திருக்கோ:49/4
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ – திருக்கோ:67/1
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர் – திருக்கோ:69/3
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே – திருக்கோ:81/4
யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே – திருக்கோ:82/4
வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம் – திருக்கோ:119/3
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே – திருக்கோ:120/4
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும் – திருக்கோ:142/2
செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று – திருக்கோ:142/3
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால் – திருக்கோ:169/3
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால் – திருக்கோ:170/2
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே – திருக்கோ:170/4
எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே – திருக்கோ:223/4
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள் – திருக்கோ:293/1
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே – திருக்கோ:296/4
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே – திருக்கோ:303/4
பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய – திருக்கோ:330/1
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா – திருக்கோ:330/2
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே – திருக்கோ:333/4
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் – திருக்கோ:366/2
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் – திருக்கோ:396/3
மேல்


வார்த்தை (1)

ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து – திருக்கோ:61/1
மேல்


வார்த்தையின் (1)

பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
மேல்


வாரண (2)

முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய் – திருக்கோ:157/3
கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல் – திருக்கோ:253/1
மேல்


வாரணம் (1)

மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த – திருக்கோ:285/3
மேல்


வாரி (1)

வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர் – திருக்கோ:265/1
மேல்


வாரியை (1)

மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம் – திருக்கோ:199/1
மேல்


வால் (1)

இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால் – திருக்கோ:300/3
மேல்


வாவல் (1)

பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ – திருக்கோ:375/3
மேல்


வாவி (2)

மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே – திருக்கோ:212/4
செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி – திருக்கோ:223/1
மேல்


வாழ் (4)

மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே – திருக்கோ:2/4
மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே – திருக்கோ:178/4
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே – திருக்கோ:272/4
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே – திருக்கோ:334/4
மேல்


வாழ்த்தலரின் (1)

உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும் – திருக்கோ:5/2,3
மேல்


வாழ்த்தார் (1)

மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல் – திருக்கோ:212/3
மேல்


வாழ்த்தி (1)

மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி – திருக்கோ:178/3
மேல்


வாழ்த்தினர் (1)

மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல் – திருக்கோ:300/2
மேல்


வாழ்த்துநர் (1)

வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல் – திருக்கோ:289/3
மேல்


வாழ்த்தும் (1)

மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல் – திருக்கோ:272/2
மேல்


வாழ்பதியே (1)

பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே – திருக்கோ:149/4
மேல்


வாழ்பவர்க்கு (1)

வருங்கள் தம் ஊர் பகர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கு – திருக்கோ:55/4
மேல்


வாழ்விப்பதே (1)

வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே – திருக்கோ:344/4
மேல்


வாழ்வு (1)

கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே – திருக்கோ:116/4
மேல்


வாழச்செய்தாய் (1)

வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
மேல்


வாழலை (1)

நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான் – திருக்கோ:84/1
மேல்


வாழி (7)

அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே – திருக்கோ:50/4
வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே – திருக்கோ:186/4
இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே – திருக்கோ:208/4
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க – திருக்கோ:230/3
இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே – திருக்கோ:240/4
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன் – திருக்கோ:322/1
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே – திருக்கோ:339/4
மேல்


வாழியரோ (2)

வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று – திருக்கோ:44/2
கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழு குடியீர் – திருக்கோ:393/2,3
மேல்


வாழும் (3)

மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய் – திருக்கோ:66/3
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே – திருக்கோ:162/4
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன் – திருக்கோ:322/1
மேல்


வாழேன் (1)

வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி – திருக்கோ:269/3
மேல்


வாழை (1)

செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல் – திருக்கோ:250/2
மேல்


வாழையின் (1)

எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண் – திருக்கோ:250/1
மேல்


வாள் (31)

வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே – திருக்கோ:48/4
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல் – திருக்கோ:58/1
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே – திருக்கோ:97/4
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:101/1
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர் – திருக்கோ:108/2
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே – திருக்கோ:153/4
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின் – திருக்கோ:162/3
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய் – திருக்கோ:183/3
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே – திருக்கோ:183/4
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என் – திருக்கோ:233/1
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு – திருக்கோ:267/1
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/2
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ – திருக்கோ:320/3
சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு – திருக்கோ:334/1
எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே – திருக்கோ:334/2
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய் – திருக்கோ:348/3
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே – திருக்கோ:352/1
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன் – திருக்கோ:383/2
கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே – திருக்கோ:385/4
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண் – திருக்கோ:397/1
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே – திருக்கோ:399/2
மேல்


வாள்_கண்ணி (3)

கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய் – திருக்கோ:233/2
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த – திருக்கோ:301/2
மேல்


வாள்_நுதல் (3)

மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான் – திருக்கோ:48/3
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம் – திருக்கோ:95/3
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை – திருக்கோ:101/1
மேல்


வாள்_நுதலே (2)

வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே – திருக்கோ:43/4
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே – திருக்கோ:225/4
மேல்


வாளா (1)

மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார் – திருக்கோ:82/3
மேல்


வான் (27)

வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின் – திருக்கோ:6/1
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின் – திருக்கோ:10/2
தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து – திருக்கோ:16/1
சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் – திருக்கோ:20/1
மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும் – திருக்கோ:23/2
தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே – திருக்கோ:31/4
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான்
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே – திருக்கோ:48/3,4
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே – திருக்கோ:53/4
செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே – திருக்கோ:67/4
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே – திருக்கோ:70/4
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி – திருக்கோ:85/1
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன் – திருக்கோ:116/1
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை – திருக்கோ:138/1
மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே – திருக்கோ:146/4
வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ – திருக்கோ:147/3
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி – திருக்கோ:196/3
மாண திருத்திய வான் பதி சேரும் இருமருங்கும் – திருக்கோ:215/3
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே – திருக்கோ:254/4
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன் – திருக்கோ:257/1
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே – திருக்கோ:257/4
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் – திருக்கோ:274/3
வருவன செல்வன தூதுகள் ஏதில வான் புலியூர் – திருக்கோ:281/1
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே – திருக்கோ:321/4
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே – திருக்கோ:348/4
வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும் – திருக்கோ:368/2
அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர் – திருக்கோ:371/1
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வாயான் – திருக்கோ:380/2
மேல்


வான்_அரமங்கையர் (1)

அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_அரமங்கையர்
என வந்து அணுகும் அவள் அன்று உகிரால் – திருக்கோ:371/1,2
மேல்


வான (3)

மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப – திருக்கோ:222/1
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு – திருக்கோ:254/2
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் – திருக்கோ:335/1
மேல்


வானகம் (2)

சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே – திருக்கோ:130/2
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர் – திருக்கோ:251/2
மேல்


வானத்து (1)

எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே – திருக்கோ:166/4
மேல்


வானம் (1)

கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
மேல்


வானர்க்கு (1)

மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால் – திருக்கோ:155/1
மேல்


வானவர் (1)

சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து – திருக்கோ:173/1
மேல்


வானவர்-தம் (1)

மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள் – திருக்கோ:29/2
மேல்


வானவரில் (1)

பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன் – திருக்கோ:67/2
மேல்


வானவன் (2)

வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே – திருக்கோ:85/4
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர் – திருக்கோ:251/2
மேல்


வானவனே (1)

மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே – திருக்கோ:232/4
மேல்


வானின் (1)

மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர் – திருக்கோ:323/2
மேல்


வானோன் (1)

அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் – திருக்கோ:42/1

மேல்