பே – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

பேச்சின்மை (1)

விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல் – திருக்கோ:57/3
மேல்


பேச்சு (1)

பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று – திருக்கோ:97/2
மேல்


பேசில் (1)

பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து – திருக்கோ:115/3
மேல்


பேசு (1)

பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே – திருக்கோ:109/4
மேல்


பேசும் (1)

குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே – திருக்கோ:224/2
மேல்


பேசுவ (2)

பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர் – திருக்கோ:287/2
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர் – திருக்கோ:353/2
மேல்


பேண (1)

பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம் – திருக்கோ:215/1
மேல்


பேதுற (1)

அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார் – திருக்கோ:377/1
மேல்


பேதை (4)

அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர் – திருக்கோ:229/2
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின் – திருக்கோ:230/1
பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால் – திருக்கோ:239/1
பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும் – திருக்கோ:359/2
மேல்


பேதையரே (1)

பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே – திருக்கோ:56/4
மேல்


பேய் (2)

பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே – திருக்கோ:84/4
கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த – திருக்கோ:389/1
மேல்


பேய்-வயினும் (1)

பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து – திருக்கோ:343/3
மேல்


பேய்த்தேரினை (1)

பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால் – திருக்கோ:202/1
மேல்


பேயொடும் (1)

பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி – திருக்கோ:144/3
மேல்


பேர் (9)

பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால் – திருக்கோ:10/3
பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே – திருக்கோ:56/4
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர் – திருக்கோ:58/3
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல் – திருக்கோ:160/2
பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம் – திருக்கோ:215/1
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில் – திருக்கோ:279/2
பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன – திருக்கோ:311/3
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர் – திருக்கோ:353/2
பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு – திருக்கோ:373/3
மேல்


பேர்த்தும் (1)

பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே – திருக்கோ:173/4
மேல்


பேர்ந்து (3)

மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து – திருக்கோ:224/1
பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய் – திருக்கோ:224/3
பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர் – திருக்கோ:287/2
மேல்


பேரும் (2)

மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே – திருக்கோ:160/4
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே – திருக்கோ:224/4

மேல்